


ஸ வாஸுதேவோ ரங்கேச:ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமாநம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம்மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:||
அநந்தானந்த சயன! புராண புருஷோத்தம!
ரங்கநாத! ஜகந்நாத! நாததுப்யம் நமோ நம:||
கற்பக மரமாக இருந்து அடியார்கள் வேண்டுவனவற்றை அருளும் ஸ்ரீரங்கநாதனைப் பின்னிப் பிணைந்து விளங்கும் கற்பகக் கொடி போன்று ஸ்ரீரங்கநாச்சியார் திகழ்கிறாள் ..
மஹாலக்ஷ்மியாகிய ஸ்ரீரங்கநாச்சியார் இல்லாமல் அரங்கனை அடையாளம் காண இயலாமல் திருக்கல்யாண குணங்கள் வெளிப்படாமல் உள்ளதோடு, தேயவும் செய்துவிடும்.
தனது பார்வையை, அரும்பானது மெல்ல விரிவது போன்று, மெதுவாகத் திருக்கண்களைத் திறந்து பார்க்கிறாள். அந்தப் பார்வையின் காரணமாக ஏழு உலகங்களும் மலர்ந்து தளிர்த்து காணப்படுகின்றன ..
ஸ்ரீரங்கத்தில் பெரிய பெருமாள் சயனித்துக் கொண்டுள்ள விமானத்தில் இருக்கும் மங்கள விளக்காக ஒளிவீசித்திகழ்கிறாள்...
விமானத்தில் விளக்காக நின்று, தன்னை மட்டும் அல்லாது பெரிய பெருமாளையும் அனைவருக்கும் காட்டித்தரும் உயர்ந்த தன்மைகளை உடையவள் பெரியபெருமாளான ஸ்ரீரங்கநாதனின் பட்டமஹிஷியாக உள்ள ஸ்ரீரங்கநாச்சியார் ஆவாள் .
.


ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே!
தேவலோகத்தில் உள்ள வண்டுகள், தேவர்கள் திருவரங்கனின் திருவடிகளில் பொழிகின்ற மலர்களுடன் இணைந்தபடி திருவரங்கம் வந்து சேர்ந்து விடுகின்றன.
அவை நறுமணம் வீசும் உன்னிடம் வந்து சேர்ந்து விடுகின்றன. அதன் பின்னர் எப்போதும் தேன் பெருகும் ஸ்ரீரங்கநாதனின் நாபிக் கமலத்தைக் கூட அடைய முனைவது இல்லை.
Srirangam puja flowers







ரங்கா! ரங்கா! ரங்கா!
ReplyDeleteஅரங்கனின் தரிசனம் கிடைத்தது உங்களின் புண்ணியத்தில்.
ஶ்ரீரங்கத்திற்கு வந்து விட்டோமோ என்ற உண்ர்வை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு.
பகிர்விற்கு நன்றி.
ராஜி
மலர்கள் மட்டும் இல்லை , நாமும் நம் மனத்தை ரங்கனின் பாதங்களில் சேர்த்து விட்டால் எல்லாம் நலமே!.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமை.
வாழ்த்துக்கள்.
ஸ்ரீரங்கம் வந்துவிட்டேன் இன்று. அரவத்தணைப் பள்ளியானையும் அவனுடைய பட்டமகிஷியையும் கண்டு பேரானந்தம். மிக மிக நன்றி. அற்புதமான படங்கள். அதை அளித்த விதமும் நன்று.
ReplyDeleteஅரங்கனையும், அரங்கநாச்சியாரையும் ஒரு சேர தரிசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. படங்களும் அருமை விளக்கங்களும் அருமை!
ReplyDelete”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி...”
ReplyDeleteஅழகிய அருமையான பதிவு.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
ரங்கநாதரின் தரிசனம்.. நன்றி..
ReplyDeleteதிருவரங்க தரிசனம் கண்டேன்! மெய் சிலிர்த்தேன்! நன்றி!
ReplyDeleteஅரங்கத்து அமுதத்தின் தரிசனம் அவனுடைய அரவணை போலவே இனித்தது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
அருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
நன்றி அம்மா.
காணக்கிடைக்காத காட்சிகள் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteவைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு பதிவு தயாராகி வரும் என்று நினைகின்றேன்.
ReplyDeleteபார்த்தேன்
ReplyDeleteபடித்தேன்
ரஸித்தேன்
பருகினேன்
அரங்கத்து
அமுதம்
மனமார்ந்த
பாராட்டுக்கள்