Saturday, February 8, 2014

கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயம்..!



அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ |
http://www.kaduhanuman.org/old-html/index-2.html

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோகநாசனம் |
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் |

விஜயநகரப் பேரரசின் மன்னன் கிருஷ்ண தேவராயரின் 
நல்லாட்சியின் கீழ் கிருஷ்ணகிரி பல சைவ, 
வைணவ கோயில்களைக் கொண்டு விளங்கியது. 

அப்போது கல் பாறைகளிலெல்லாம் ஆஞ்சநேயரின் வீரம் ததும்பும் உருவங்கள் செதுக்கப்பட்டன..அப்படி கற்பாறை மீது செதுக்கப்பட்ட ஓரு உருவத்திற்கு எழுப்பப்பட்டதே ஸ்ரீ 
 காட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்.

 ஆஞ்சநேயர் சிறுவயதில் கானகத்தில் வளர்ந்ததாலும், இக்கோயில் ஆரம்பத்தில் வனமாக இருந்ததாலும் இங்குள்ள ஆஞ்சநேயர் 
ஸ்ரீ காட்டு வீரஆஞ்சநேயர் என்ற திருநாமம் பெற்றார்.

மூலவர் ஒரே கற்பாறை மீது செதுக்கப்பட்டவர் என்ற சிறப்பு பெற்றவர்.

கற்பாறையின் எதிர்புறத்தில் இருந்த சிறிய மலைக் குன்றின் மீது வளர்ந்து கொண்டே இருந்த நந்தியின் சிலையும், நாகங்களின் சிலைகளும் செதுக்கப்பட்ட பாறைகளும் இருக்கின்றன

ஸ்ரீ ஆஞ்சனேயர் பெரிய பாறையில் ஒரு மரத்தின் கீழ் வலது பக்கம் திரும்பி நின்றபடி மேல் நோக்கிப்  பார்த்தபடி அற்புதமான காட்சியில் தரிசனம் தருவது கண்கொள்ளாக்காட்சி.. 
ஸ்ரீ அனுமன் மேநோக்கி பார்த்தபடி நின்றருளும் பகுதியில்  பொன்மலை எனப்படும் சிறிய மலைக் குன்றின் மீது பெருமாள் கோவிலும் உள்ளதால் ஹனுமான் அந்த பெருமாளை துதித்தபடி நின்றுள்ளதாக நம்பிக்கை உண்டு..!

மூலவரின் கர்ப்பகிரகமும், கோபுரமும், மகாலட்சுமி தாயாருக்கு கோயிலும் ஒரு பெரிய மண்டபத்தில் கட்டப்பட்டது. 
ஸ்ரீ அனுமனுக்கு தங்கத்தேர்..!
அதன் பின் தீபஸ்தம்பம் உள்ளடக்கிய 
இரண்டாவது மண்டபம் கட்டப்பட்டது. 
மூலவர் கோயிலுக்கு வலதுபுறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் 
வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதனையொட்டி ஒரு மாடத்தில் 
ஸ்ரீ யோகநரசிம்மர் வீற்றிருக்கிறார்.  
ஸ்ரீ சுதர்சனரும் , ஸ்ரீ யோகநரசிம்மரும்...!















கிருஷ்ணகிரி ஸ்ரீ காட்டு வீரஆஞ்சநேயர் கோயிலில் பை கட்டி வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என திருவண்ணாமலை சித்தர் ஒருவர் கூறியுள்ளதையடுத்து கோயில் பிரபலமானது. 
பைகளும் அதிகம் கட்டத் தொடங்கினர்.

ஸ்ரீ காட்டு வீரஆஞ்சநேயர்ஆலயம் ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் தலமாக சிவனின் பிரதிநிதியாக உருண்டைப் பாறை மீது ஆலயத்தை நோக்கியபடி நந்தி இருக்க , விஷ்ணுவின் பிரதிநிதியாக ஸ்ரீ அனுமன் எழுந்தருளியிருப்பது சிறப்பு..! 

அந்த நந்தியும் வளர்ந்து கொண்டே வருகின்றது. !

ஆகவே இங்கு வந்து  முழு தேங்காயை காணிக்கையாகக் கொடுத்து வேண்டுதல் செய்கிறவர்களுடைய நியாயமான கோரிக்கை வேண்டி பை கட்டினால் 11 நாட்கள், 11 வாரங்கள், 11 மாதங்களில் நிறைவேறும். 

ஆலயத்தில் மண்டபத்தில் தேங்காய் காணிக்கை 
செலுத்தும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

அவரவர் வேண்டுகோளுடன் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் ஒரு முழு தேங்காயை ஒரு சிவப்பு நிற துணியில் முடித்து வைத்து அதை ஒரு பையில் வைத்து அங்கு குறிப்பிட்டுள்ள இடத்தில் கட்டிவிட்டுச் செல்கிறார்கள்.

 அவர்களுடைய பிராத்தனை நிறைவேறியதும் அங்கு வந்து அந்த தேங்காயை எடுத்து அர்ச்சனை செய்துவிட்டு அந்த தேங்காயை பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு செல்கிறார்கள்.

கோவிலிலேயே அதற்கென அமைந்துள்ள இடத்தில் அனைத்து பொருள்களும் கிடைக்கின்றன. பிரார்த்தனை தேங்காய் பை மீது வேண்டுதலை செய்ய வந்துள்ள பக்தருக்கு தரப்படும் எண்ணை குறிப்பிட்டு வைப்பதால். வேண்டுகோள் நிறைவேறியதும் அங்கு வந்து அவர்கள் கட்டி வைத்துள்ள பையை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியும்.

கோவிலில் உள்ள மண்டபத்தில் சிவப்புத் துணியில் கட்டப்பட்டு
 நூற்றுக் கணக்கான தேங்காய்களைப்  பார்க்கவே ஆச்சர்யமாக உள்ளது.

பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும் அந்த தினங்களில்  வந்து வேண்டிக் கொண்டு தேங்காயைக் கட்டுவதால் வேண்டிய காரியம் நிச்சயமாக நடைபெறுகின்றது என்பது  நம்பிக்கை...

அவ்வாறு வேண்டுதல்கள்  நிறைவேறி பின்பு அந்த பையில் உள்ள தேங்காயை உடைத்து பொங்கல் வைத்து சாப்பிடுகின்றனர். 

பல பக்தர்களின் கோரிக்கை நிறைவேறி உள்ளது 
என்பது மறுக்க முடியாத உண்மை ..

ஆலயத்தின் படங்கள்...
http://www.kaduhanuman.org/old-html/index-2.htmlசொடுக்கிப்பார்க்கலாம் ..
சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 
தேவசமுத்திரம் கிராமத்தில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற 
ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் கோயில்  உள்ளது.  






15 comments:

  1. பை கட்டுவதென்றால் என்ன?
    நியாயமான கோரிக்கை என்றால் என்னவென்று யார் தீர்மானிப்பது? ஆஞ்சனேயரா? :).

    அத்தனை சோளமும் ஆஞ்சனேயர் படமும் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  2. சனிக்கிழமையும் அதுவுமா ஸ்ரீ
    கா ட் டு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தைக்
    கா ட் டி அசத்திட்டீங்கோ. ;)))))

    >>>>>

    ReplyDelete
  3. முதல் படம் பார்க்க திவ்யமாக உள்ளது. மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    கடைசி படமான பறக்கும் அனுமாரும் அதுபோலவே !


    >>>>>

    ReplyDelete
  4. பல்வேறு கோயில்களில் குடி கொண்டுள்ள அனுமனைப்பற்றி தாங்கள் அடிக்கடி எழுதுவது மிகச்சிறப்பாக திகட்டாமல் உள்ளன.

    ஒவ்வொருமுறையும் புதுப்புது விஷயங்களாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    >>>>>

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்தமான சோளங்களும், இதர நிவேதனப் பொருட்களும் பார்க்க, மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  6. ஆலயத்தின் படத்தினைக்காண சொடுக்கிப்பார்க்கச் சொல்லியிருந்தீர்கள்.

    தங்கள் அன்புக்கட்டளையாக நினைத்து நானும் ஆசையால் அதுபோல சொடுக்கிப்பார்த்தேன்.

    ஆனால் என் கைவிரல்களில் சொடக்கு மட்டும் விழுந்தது. ;)))))

    காணமுடியாமல் கீழ்க்கண்ட பதில் வந்தது:

    The page cannot be found

    The page you are looking for might have been removed, had its name changed, or is temporarily unavailable.
    Please try the following:

    Make sure that the Web site address displayed in the address bar of your browser is spelled and formatted correctly.
    If you reached this page by clicking a link, contact the Web site administrator to alert them that the link is incorrectly formatted.
    Click the Back button to try another link.
    HTTP Error 404 - File or directory not found.
    Internet Information Services (IIS)

    Technical Information (for support personnel)

    Go to Microsoft Product Support Services and perform a title search for the words HTTP and 404.
    Open IIS Help, which is accessible in IIS Manager (inetmgr), and search for topics titled Web Site Setup, Common Administrative Tasks, andAbout Custom Error Messages.

    >>>>>

    ReplyDelete
  7. அதனால் பரவாயில்லை. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் !

    ooo ooo

    ReplyDelete
  8. சிறப்பானதொரு பகிர்வு. வை.கோ. அய்யா அவர்கள் இந்த url காப்பி & பேஸ்ட் செய்து பார்க்கவும். நன்றியுடன்...
    http://www.kaduhanuman.org/old-html/gallery.html

    ReplyDelete
    Replies
    1. ravi krishna has left a new comment on the post "கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ...":

      சிறப்பானதொரு பகிர்வு. வை.கோ. அய்யா அவர்கள் இந்த url காப்பி & பேஸ்ட் செய்து பார்க்கவும். நன்றியுடன்...
      http://www.kaduhanuman.org/old-html/gallery.html //

      மிக்க நன்றி. கண்டு களித்தேன். கோயில் நுழைவாயில் முதல் பசு மாடுகள் வரை 16 படங்களும் அதன் பிறகு ADMN. OFFICE என்பதையும் காண முடிந்தது. சிரத்தையுடன் எனக்காக மெனக்கெட்டு இணைப்பினைக் கொடுத்துள்ள தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

      அன்புடன் VGK

      Delete
  9. சிறப்பானதொரு பகிர்வு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  10. thank u for the information.
    asaadhya sadhakan niyaayam irukkum idaththile thaan iruppaan.
    nyaayam endru therinthavarkaL thaan than pakkam irukkum nyaaththai solla anumanai vazhi paduvar.
    subbu thatha
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  11. நாங்கள் இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறோம், இன்னுமொரு ஆஞ்சநேயர் கோவில் தேங்காய் கட்டி நினைத்தது நடக்க. ?அத்தனை தேங்காய்களையும் பார்க்கும்போது எனக்கும் ஆச்சரியமாய் இருக்கும். தேங்காய் கட்டி நினைத்தது நடக்கும் என்றால்......!

    ReplyDelete
  12. சிறப்பான தகவல்கள் + படங்கள்... ரவி கிருஷ்ணா ஐயா அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  13. காட்டு வீர ஆஞ்சினேயரைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்ததற்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  14. சிற்ப்பான படங்கள். புதிய தகவல்கள்..... என அசத்தலான பகிர்வு.

    ReplyDelete