





பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.|


என்னும் திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப சின்னஞ்சிறு குருவிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய யானைகளையே தங்கள் ஒற்றுமையாலும் , ஒருங்கிணைந்த குரல்களாலும் மிரட்டி விரட்டுவது மிகுந்த பிரமிப்புக்குள்ளாக்கி மனித குலத்திற்கு பாடம் நடத்துகிறது..!
“கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை
சிறியதோர் வயிற்றினுக்காய்-நாங்கள் ஜன்மமெல்லாம் வீணாய்
மறிகள் இருப்பதுபோல்-பிறர் வசந்தனில் உழல்வதில்லை”
என்று பாரதியார் குருவியைப்பற்றி மெச்சிப் பாடி,
மனிதனைச் சாடியுள்ளார்.

பெரிய உருவம் கொண்ட யானைகள் குருவிகளை கண்டு கதிகலங்கியுள்ள சுவாரஸ்யமான சம்பவம் கென்யாவின் ரிசாவோ பகுதியில் நடைபெற்றுள்ளது..








ஒவ்வொன்றும் வெறும் 10 கிராம்களே அளவுடைய குருவிகள் எனினும் அவை பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்து பறந்த காட்சியை கண்டும், பறக்கும் ஒலியையும் கேட்டும் அதிர்ச்சியடையும் யானைகள் தமது நகர்விலிருந்து பின்வாங்குகின்றன..~




யானைகளை விரட்டும் பறவைகளும்..

பையனைத் துரத்தும் பறவைகளும்...!
11 Cute Penguins Trying Desperately To... Um, Just Watch...
17 Birds That Are Pure Evil. One Peacock Won't Let You Park.


கொடைக்கானல் பிரை யண்ட் பூங்காவில் குரட்டலேரியா வகையைச் சேர்ந்த மரத்தில் சிட்டுக்குருவி வடிவில் மஞ்சள் நிறத்தினாலான பூத்துக்குலுங்கும் பூக்கள் வியப்பில் ஆழ்த்துகிறது..!





இதெல்லாம் வேண்டம் என்று சொன்னால் மனிதர்களே கேட்பதில்லை..
சரி..சரி.. பட்டால்தால் தெரியும்..!






உண்மையிலேயே, தங்கள் தலைப்பினைப்போலவே, வியப்பில் ஆழ்த்தும் பறவைகள் தான். ;)
ReplyDelete>>>>>
மிகவும் அசத்தலான அனிமேஷன் படங்கள்.
ReplyDeleteஆஹா, எங்கிருந்து தான் எப்படித்தான் இவற்றைப் பிடிப்பீர்களோ !!!!!
>>>>>
யானையையே மிரட்டும் குருவிகள் ..... என்றால் எவ்வளவு ஆச்சர்யமாக உள்ளது !!!!!!!
ReplyDeleteமொய்மொய் என்று ஒற்றுமையுடன் ஆயிரக்கணக்கான குருவிகள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் தானே.
ஒற்றுமை என்றும் பலமாம் !
[தாங்கள் இதன் மூலம்]
ஓதும் செயலே நலமாம் !!
>>>>>
வள்ளுவர் வாக்கு, பாரதி பாடல் என எல்லாம் அழகோ அழகு தான். அர்த்தம் பொதிந்தவைகள்.
ReplyDelete>>>>>
பொடியனைத் துரத்தும் பறவைகளில், அவனைப்பார்க்கப் பாவமாக உள்ளது.
ReplyDelete>>>>>
குருவிகள் சிகரெட் பற்ற வைக்கும் படத்தில் ஓர் சமுதாய விழிப்புணவு கருத்தும் சொல்லி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteபட்டால்தான் தெரியும் .... என்பது உண்மைதான்.
>>>>>
சிம்பிளான சிறப்பான இன்றைய பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.
ReplyDeleteகடைசியில் காட்டியுள்ள அமைதிப்புறா போன்ற வெள்ளை நிறப்பறவை அப்படியே அழகாக மிதந்து மிதந்து ஸ்டைலாகப் பறப்பது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ;)))))
ooo o ooo
அருமையான பதிவு ஒற்றுமையின் பலத்தையும், சிறியது என்று அலட்சியம் செய்வது பற்றியும் அழகாக புரிய வைத்ததும், மனிதகுலத்தின் பாகுபாடும் ஒரு சாண் வயிற்றுக்காக படும்பாடும். அனாவசியம் என்பதையும் சிறப்பாக எடுத்து உரைத்தது சிறப்பே. அழகான படங்களும்அருமை...!
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள்....!
பறவை இனங்கள் அருகி வருகின்ற இக்காலத்தில் இப்படி ஒரு காட்சியா.
ReplyDeleteகண்கொள்ளாக் காட்சி சகோதரியாரே.
நன்றி
மனம் வானில் பறக்கிறது... என்னே அற்புதமான படங்கள்... வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteஅனைத்துமே அற்புதம் ஆனந்தம்.பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஆகா அழகு மிதக்கும் பறவைகள்.
ReplyDeleteஎல்லாப் படங்களும் அருமை. யானையை விரட்டும் பறவைகள்! அந்தப் பையன் கையில் என்ன கொண்டு ஓடி வருகிறான் என்று தெரியவில்லை! முட்டைகளா?
ReplyDeleteALFRED HITCHCOCK-ன் the birds திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா. ?
ReplyDeleteவியப்பில் ஆழ்த்தும் விநோதப் பறவைகள் அசத்துகின்றன. ஏற்ற படங்களைச் சேகரித்து வெளியிடும் தங்கள் தனித்துவம் இதிலும் அற்புதம். பகிர்வுக்கு நன்றி மேடம்.
ReplyDeleteவியக்க வைக்கும் படங்கள். அனைத்தும் அருமை அம்மா.
ReplyDeleteவியப்பான தகவல்கள்! வித்தியாசமான வீடியோ காட்சிகள்!
ReplyDeleteஅருமையான படங்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteபத்துக் கிராம் பறவைகள் முத்தம்தனில் ஒன்று சேர்ந்தால் பித்தாகிப் போகிறரே யானை.. அஹமை....
ReplyDelete