Tuesday, February 18, 2014

கண்களிக்கும் காரமடை தேர் திருவிழா



Caramadai Car Festivels....



Karamadai Ther feb15, 2014




பழமை வாய்ந்தகாரமடை அரங்கநாத சுவாமி கோயில் 
மாசி மகத்தின்போது திருத்தேர் உற்சவம் 12 நாள்கள் நடைபெறும்.
பராமரிப்பு கருதியும், பாதுகாப்பையும்  கருத்தில் கொண்டு, 
மாசி மகத்தின்போது இரும்பு சக்கரங்களை பொருத்தி தேரோட்டத்தை நடத்த திருச்சி பெல் நிறுவனத்தில் 7.50 டன் எடையில் உருவாக்கப் பட்ட 4 இரும்பு சக்கரங்கள் கொண்டு வரப்பட்டு, தேரில் பொருத்தப்பட்டன. வெளிப்புறம் இரும்பு சக்கரங்கள் இருந்தாலும், சக்கரத்தின் நடுவே எப்போதும்போல் மரச் சக்கரங்களே உள்ளன. 

Displaying altAuCp3MbovjYJ1M6a0EHP-49uVAoOI2ZtasFMqdefF6Hq.jpg


Displaying altAgQjrJ3glSrsjfJ70_6XMwwbNXu6R3WxiCWDgAVSmFtJ.jpg

Displaying altAi-04GGS4ut8kT_uRMu-iJZa0u6WEocoOjJXRI4dChr1.jpg

Displaying altAr2O8zTtdJ9tEhdsNEgUdag-YqnYVf60sXsJ6cHD4qH6.jpg

 the wooden horse donated by the British engineer; 
Spruced up:(Clockwise from top left) The entrance to the Ranganthaswamy Temple, Karamadai; the wooden horse donated by the British engineer; Sthala vriksham; the Utsavar deity and the new seven-tier rajagopuram getting ready.Photos: K. Ananthan and S. Prabhu


15 comments:

  1. வணக்கம்
    அம்மா
    பதிவின் வழி அருமையான தகவலை தந்துள்ளிர்கள் படங்கள் அனைத்தும் அழகு வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்பா..

    என்ன ஒரு கூட்டம்... அப்பப்பா... அட அந்த குதிரை கொடுத்தது ப்ரிட்டிஷ் எஞ்ஜினியரா.. அழகாக இருக்கிறதுப்பா..

    தேர் திருவிழாவில் கலந்துக்கொண்ட திருப்திப்பா..

    அன்பு நன்றிகள்ப இராஜராஜேஸ்வரி..

    ReplyDelete
  3. காரமடைத் திருவிழா கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று தங்கள் தளத்தின் வழியாகவே காண்கிறேன்.. அற்புதமான படக்கோர்வைங்க.. நன்றிங்க.

    ReplyDelete
  4. காரமடை ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயிலைப் பற்றியும் தேர்த் திருவிழாவினைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றேன். இன்று தங்களது அருமையான பதிவின் மூலம் விரிவாக அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. தங்களின் இன்றைய தலைப்பே கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    >>>>>

    ReplyDelete
  6. ஆடி அசைந்துவரும் அந்தத்தேர் வெகு அழகாக, அற்புதமாக ஜோராக உள்ளது. நீண்ட நேரம் மிகவும் ரஸித்துப் பார்த்தேன்.

    நிறை மாத கர்ப்பிணி ஆடி அசைந்து மிகவும் மெதுவாக ஒவ்வொரு தப்படியாக வைத்துச்செல்வது போல தேரோட்டத்தைப்பார்ப்பதும் மிகவும் அதிசயம் தான்.

    >>>>>

    ReplyDelete
  7. ஊர் கூடினால் மட்டுமே தேர் நகரும் என்பது எவ்வளவு ஓர் அழகான வார்த்தை.

    ஜனங்களின் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது இந்தத்தேர்விழாக்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. காரமடை என்ற பெயரே காரசாரமான சூடான மஸால் வடை சாப்பிடுவதுபோல ருசியோ ருசியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  9. காணொளியில் நேற்றே G+ இல் பலமுறை பார்த்து ரஸித்து மகிழ்ந்தோம்.

    இன்று இந்தப்பதிவினில் இணைப்பும் கொடுத்துள்ளது அருமை தான்.

    >>>>>

    ReplyDelete
  10. இதில் இணைப்புக் கொடுத்துள்ள 2012 மார்ச் மாதப்பதிவாகிய “தேரு வருதே” திரும்பச் சென்று பார்த்து மகிழ்ந்தேன்.

    “தேரு வருதே” வைத் திரும்பப்படித்தாலும் “தேரு வருதே” என்றே வருவதுபோல திரும்பத்திரும்பப் பார்த்தாலும் தங்கள் பதிவுகளில் மகிழ்ச்சி மட்டுமே வருதே !

    மிகவும் சந்தோஷமாக உள்ளது ;)))))

    >>>>>

    ReplyDelete
  11. ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமியை தங்களின் உதவியால் இன்று எங்களால் கண்டு களிக்க முடிந்தது.

    பிரிட்டிஷ் பொறியாளர் கொடுத்துள்ள வெள்ளையில் பெயிண்ட் செய்துள்ள மரக்குதிரை நன்னா இருக்கு.

    >>>>>

    ReplyDelete
  12. என் மகன்களுக்கு ஓரிரு வயதான போது அவர்களை அதன்மேல் அமர்த்தி ஆடச்செய்ய, ஓர் மரக்குதிரை வாங்கி வந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அது பச்சைக்கலரில் இருந்தது.

    குதிரையின் காதுப்பக்கங்களில் குழந்தைகள் கைகள் இரண்டாலும் பிடித்துக்கொண்டு ஆட இரு கழிகள் கொடுத்திருப்பார்கள். அடித்தளம் மட்டும் சாய்வாக ஆடுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ;)

    இப்போது என்னவெல்லாமோ விதவிதமான அழகான பொம்மைகள் வந்துவிட்டன. நான் சொல்வதெல்லாம் பழைய கதை.

    >>>>>

    ReplyDelete
  13. BHEL திருச்சியால், புதிதாகச் செய்து கொடுக்கப்பட்ட இரும்புத் தேர்ச்சக்கரங்கள் என்பதனைக் கேட்க ஏதோவொரு இனம் புரியாத இன்பமும் மகிழ்ச்சியும் என்னுள் ஏற்பட்டது.

    தேரினால் ஏற்படக்கூடிய பெரும்பாலான விபத்துகளைத்தடுக்க அதில் Hydraulic Break வசதி செய்து கொடுத்திருப்பார்கள். டன் கணக்கில் அவ்வளவு வெயிட் உள்ள ஓடிவரும் தேரை திடீரென நிறுத்த இந்த புதிய தொழில்நுட்பம் மிகவும் பயன்படக்கூடும்.

    >>>>>

    ReplyDelete
  14. அழகான ஆச்சர்யமான காரமடைத் தேர்த்திருவிழா பற்றிய படங்களுடன் கூடிய மிகச்சிறப்பான பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றிகள்.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பத்தும் பசையுமாகக் கொடுத்துள்ள பின்னூட்டங்கள் பத்து மட்டும் பத்துமோ பத்தாதோ !

    காலையிலிருந்து இங்கு நெட் கிடைக்காமல் அடிக்கடி ஒரே ப்ராப்ளம்ஸ்.

    oo oo oo oo oo

    ReplyDelete
  15. காரமடை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை போனதில்லை. படங்களும், அழகான தேரோட்டக் காணொளிகளும் சீக்கிரம் போகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

    ReplyDelete