Friday, February 14, 2014

மங்களங்கள் மலரும் மாசிமகத் திருநாள்





மாசி மாத முதல் தேதியன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது
மகா ஸ்நானம் எனப்படும்..!.
புனித நதிகள், கடற்கரைகள், குளங்கள் ஆகியவற்றில் சுவாமி தீர்த்தவாரி காணும் மாசிமகத் திருநாளில் . அந்தநீர் நிலைகளில் நீராடுபவர் பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்று ஞானநூல்கள் சொல்கின்றன.
மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது போற்றப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாத சிவராத்திரி மகாசிவராத்திரி என்று போற்றப் பட்டு, எல்லா சிவாலயங்களிலும் இரவு முழுவதும்நான்கு கால பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன. 
அபிஷேகப் பிரியரானசிவபெருமானை அன்றிரவு கண்விழித்திலிருந்து ஆராதனைகள் செய்தால் சிவனருள்கிட்டும் ..!

சிவபெருமான், குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில்தான் என்பதும் புராணக் கூற்று.

பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி, தீயில் 
வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில்தான் நடந்தது.

மாசி மாதப் பௌர்ணமியில் (மாசி மக நட்சத்திரம்) கும்பகோணம் மகாமகக்குளத்தில் நீராடினால் புண்ணியம் சேரும். 

அன்று, அந்தக் குளக்கரையில்முன்னோர்களுக்கு பிதுர் பூஜை செய்தால், 
பிதுர் தோஷங்கள் விலகிவிடும்.குடும்பத்தில் சுபிட்சம் நிலவும் என்பர்.

மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் 
குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம்.

மிகவும் சிறப்பான மாசி மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம்கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.

மாசி மகத்தன்றுதான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.

மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு. அதனால், மகா விஷ்ணுவை இம்மாதம்முழுவதும் துளசி தளத்தால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்தில்சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

மாசி மகத்தன்று, சிவபெருமான், பள்ளிகொண்டாப்பட்டு என்னும் ஊருக்குஎழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக் காட்சி கொடுத்து, நீத்தார்கடனுக்குரிய வழி பாட்டினை நடத்தும்  விழா திருவண்ணாமலையில் மக நட்சத்திரத்தில்கொண்டாடப்படுகிறது.

வல்லாள மகா ராஜனுக்கு வாரிசுஇல்லாததால், சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன் நீத்தார் கடன் அளித்ததாக புராணவரலாறு சொல்கிறது.

மாசி மகத்தன்று சிவபெருமான், திருமால், முருகப் பெருமான் ஆகியோரின்உற்சவத் திருமேனிகள் கடல், நதி, குளம் மற்றும் நீர் நிலைகளில் எழுந்தருளிதீர்த்தவாரி காண்பார்கள்.

கும்பகோணம் மகாமகக் குளத்தில், சிவாலயத்தில் அருள்புரியும் சுவாமிகளும்;

குடந்தை ஸ்ரீசக்கர தீர்த்தத்தில் பெருமாள் கோவில் உற்சவர்களும்;
திருச்செந்தூர் கடற்கரையில் அருள்மிகு முருகப் பெருமானும் தீர்த்தவாரிகாண்பார்கள். 
கும்பகோணம் மகாமகக் கோவில்களில் ஒன்றானஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அன்னை காளிகா பரமேஸ்வரி அம்பாள் சிவசக்தி சொரூபமாக காட்சி தருவதால், அம்பாளுக்கு நந்தி வாகனமாக உள்ள நந்தி வாகனத்துடன் காட்சிதருவாள். 
இந்தக் கோவிலிலிருந்து அம்பாள் மட்டுமேமகாமகக் குளத்திற்கு 
தீர்த்தவாரி காணச் செல்வாள் என்பது தனிச்சிறப்பு ஆகும்.
கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களில் உள்ள சுவாமிகளும் மாசி மாதப் பௌர்ணமி அன்று தீர்த்தவாரி காண்பார்கள்.
திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும்மகாதேவருக்கு மாசி மகத்தன்று பெருந்திரு அமுது படைக்கும் நிகழ்ச்சிநடைபெறும்.
மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடை பெறும் முழுக்கு 
தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.

மாசிமகத் திருநாள் அன்றுதான் அன்னை பார்வதி தாட்சாயிணி 
என்ற பெயரில் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.

பிரளய காலம் முடிந்ததும், அதற்குப் பின் பிரம்மனுக்குப் படைக்கும் திறனைசிவபெருமான் அருளிய நாள் மாசி மகம் என்பதால், 
கும்ப கோணத்தில்கும்பேஸ்வரர் கோவில் விழாக் கோலம் காணும்.
மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மாசி பௌர்ணமியில்தான்.



12 comments:

  1. 14.02.2014 க்கான பதிவு அதற்குள்ளாகவா? ;)))))

    அன்று வேறு ஒரு முக்கியமான தினம் ஆச்சே !

    ReplyDelete
  2. ’மங்களங்கள் மலரும் மாசி மகத்திருநாள்’ என்ற தலைப்பும் படங்களும், விளக்கங்களும் மிகவும் அருமையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  3. ஒவ்வொரு படமும் சும்மா ஜொலிக்கிது. திவ்ய தரிஸனம். கண்களில் ஒத்திக் கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
  4. மேலுருந்து 7 வது [கீழிருந்து 11வது] உற்சவப்பெருமாள் + தாயார் படம் தனிச்சிறப்பாகப் புதுமையாக உள்ளது. மகிழ்ச்சிகள்.

    >>>>>

    ReplyDelete
  5. மாசற்ற மாசி மாதச் சிறப்புக்களை, மாசில்லா மாணிக்கமாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளது சந்தோஷமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  6. இன்றே இரண்டு பதிவுகளோ !!!!!

    அதுவும் வாரிசின் வாரிசைப்பற்றியோ !!!!! ;)

    மிக்க மகிழ்ச்சி.

    அங்கு செல்ல வேண்டிய அவசர அவசிய வேலைகள் இருப்பதால் இங்கு இத்துடன் எஸ்கேப் ;)

    o o o o o

    ReplyDelete
  7. அப்போ மொத்தம் ஏழு ஆச்சு !

    o o o o o o o

    ReplyDelete
  8. முதல் படத்தில் காட்டியுள்ள சக்தி மிக்க அம்மன் அமர்க்களமாக உள்ளது. அவளின் பார்வையில் தான் எத்தனையொரு தீர்க்கம் !

    ரிஷப வாகனமும் ரொம்ப நன்னா இருக்கு. ;)

    >>>>>

    ReplyDelete
  9. கடைசி படத்தில் கடல் அலை + சூர்யோதயம் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  10. பலூன்கள் கட்டிய தேர் டாப் ...... டாப் க்ளாஸ்.

    மஹாமஹக்குளம் + மாசி மகம் பற்றிய விபரங்களும் படு ஜோர்.

    >>>>>

    ReplyDelete
  11. மாசி மாதம் உபநயனம் செய்வது விசேஷம் போலவே, மாசி மகத்திற்குப் பிறகே வெல்லம், புளி, மிளகாய், துவரம்பருப்பு போன்ற மளிகை சாமான்களை மொத்தமாக வருஷாந்தர சாமான் என்று முன்பெல்லாம் வாங்கி வைப்பது வழக்கம்.

    அப்போது தான் இந்த விளை பொருட்களின் விலை ஓர் கட்டுப்பாட்டில் வந்து மலிவாகவும் கிடைக்கும் என என் மாமியார் சொல்லுவார்கள்.

    இப்போதெல்லாம் யாரும் அதுபோல வாங்கி ஸ்டாக் செய்வதே இல்லை. இடத்தையும் அடைக்கும். பூச்சி புழு வராமல் பாதுகாப்பது கஷ்டமே.

    கல்யாணமே ஆனாலும் கடையில் வாங்கி மனையில் வைப்பதே இப்போது நம் வழக்கமாக மாறிவிட்டது.

    எதுவுமே பத்தாக [பத்தும் பசையுமாக என்றும் கூட நாம் நல்லவிதமாகவே வைத்துக்கொள்ளலாம்] இருக்கக்கூடாது என்று என் மாமியார் சொல்லுவா. அதனால் பத்து, பத்துமோ பத்தாதோ என்று பதினொன்றாகவே கொடுத்துள்ளேன். ;)) )) )) )) )) )

    oo oo oOo oo oo

    ReplyDelete
  12. மாசிமகப் பெருமைகளை அறிந்துக்கொண்டேன். நன்றி அம்மா.

    ReplyDelete