





உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.


சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளினை
சிவராத்திரி என்கிறோம்.
வருடத்தின் பன்னிரண்டு சிவராத்திரி நாட்களில்,
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியையே மகா சிவராத்திரி ஆகும்.
மாசி மாத மகா சிவராத்திரி நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.

ஒரு பிரளய காலத்தின் முடிவில் உயிரினங்கள்
அனைத்தும் அழிந்து பிரபஞ்ச நாயகனான சிவபெருமானும்,
நாயகியான பார்வதி தேவியும் மட்டும் எஞ்சினர்.

அப்போது பார்வதி தேவி, மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனிதகுலம் தழைக்கவும் ஓர் இரவு முழுவதும் விழித்திருந்து நான்கு கால பூஜை செய்து பரம்பொருளை வழிபட்டார்.
அதனை ஏற்று சிவபெருமான் மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டியை தோற்றுவித்தார். அதனால் மீண்டும் பூமியில் உயிரினங்கள் தோன்றின.

இவ்வாறு பார்வதிதேவி பரமனைப் பூஜித்த அன்றைய தினமே
மகா சிவாராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
அவர் பூஜை செய்த நான்கு காலங்களும், தற்போது சிவாலயங்களில்
மகா சிவராத்திரி சிறப்பு பூஜையாக செய்யப்படுகின்றது.
விஞ்ஞான ரீதியாகவே மகா சிவராத்திரி நாள், மனிதனின்
ஆன்ம வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருக்கிறது.
மகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதால் அந்த நாளன்று விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே சூழ்நிலை உருவாகிறது.

இந்தியாவின் பல்வேறு புனிதத் தலங்களிலும் ஆலயங்களிலும்
மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

புராணங்கள், இதிகாசங்கள், சான்றோர்கள் கூற்றுப்படி, இந்நாளின் இரவன்று உறங்காமல் விழித்திருப்பதற்கான பலன்கள் எடுத்துரைக்கப்பட்டு, மக்களை விழித்திருக்கச் செய்வதற்காகப் பல உபாயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
யோக மரபில் சிவபெருமான் ஒரு கடவுளாகவும், ஆதி குரு -
முதலாவது குருவாகக் கருதப்படுகிறார்.

ஆன்மிகப் பாதையில் இருக்கும் மனிதர் அந்த நாளில்தான் கயிலாய மலையுடன் ஒன்றிணைகிறார். ஒரு மலையைப்போல முழுமையான நிச்சலனமாகிறார். பல்லாண்டு ஆத்ம சாதனைகளுக்குப் பின்னர், ஒரு நாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆழ்கிற அந்த நாள்தான் மகா சிவராத்திரி நாளில் அவருள் இருக்கும் அனைத்து அசைவுகளும் நின்று போகின்றன. எனவே அந்த நாளினை அவர்கள் நிச்சலனத் திற்குரிய நாளாகக் கருதுகிறார்கள்.

மதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையைச் சாராமல், அறிவியல் ரீதியாகவே அனைவருக்கும் ஆன்மிக வளர்ச்சிக்குத் துணைபுரிவதால், மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் ஒரு இறைவிழாவாக நிகழ்கிறது.

ஒரு வேடன் காட்டில் சென்று கொண்டிருந்தபோது, புலி ஒன்று அவனை விரட்ட ஓடிச் சென்று ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். மரத்தின் கீழே, புலி படுத்துக் கொண்டது. ..!
செய்வதறியாமல் திகைத்த வேடன், பொழுதைக் கழிக்கவும், தூக்கத்தை விலக்கவும் - தூங்கினால், கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவேனோ என்று பயந்து - அந்த வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான்.
கீழே விழுந்த இலைகள், அந்த மரத்தினடியில் இருந்த
சிவ லிங்கத்தின்மேல் விழுந்தன.

வேடன் தான் செய்வது என்னவென்று அறியாமல் செய்த அந்தச் செயல், சிவனுக்குரிய அர்ச்சனையாக மாறி, அவனுக்குச் சிவனின் அருள் கிடைத்தது. அன்று சிவராத்திரியாதலால், கண் விழித்துப் பூஜை செய்த பயனும் கிடைத்தது.
சிவராத்திரியின் மகிமையைஉணர்ந்து சிவராத்திரியன்று
முழு இரவும் கண்விழித்துச் சிவபெருமானைப் போற்றி
வழிபாடு செய்து, அருள் பெறலாம்..!





இன்றைய நாளுக்கேற்ப மகத்தான பகிர்வு... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமகாசிவராத்திரி மகத்துவம் அறிந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
சிவபெருமான் கிருபை வேண்டும்... அதுவன்றி இந்த உலகினில் வேறென்ன வேண்டும்.. சிவபெருமான் கிருபை வேண்டும்...
ReplyDeleteமாக சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தேன் அழகிய படங்களும் வழமை போல் அசத்தல் தான்! வாழ்த்துக்கள் .....!
ReplyDeleteமகா சிவராத்திரி பற்றிய பதிவு அழகான படங்களுடன் - அருமை!..
ReplyDeleteஅன்புடையீர்,
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
நாளை
ஸ்வஸ்திஸ்ரீ
விஜய வருஷம்
கும்ப மாஸம் [மாசி]
சித்த யோகம் கூடிய
சுபயோக சுபதினமான
வெள்ளிக்கிழமை [28.02.2014]
உஷத்காலம் [விடியற்காலம்]
மிகச்சரியாக 5 மணிக்கு
நம் பேரன்புக்கும்
பெரும் மரியாதைக்கும் உரிய
கொங்கு நாட்டுக்
கோவைத்தங்கமான
திருமதி.
இராஜராஜேஸ்வரி
அவர்கள்
தங்களின் வெற்றிகரமான
1 2 0 0 வது
பதிவினை தன் வலைத்தளத்தில்
வெளியிட உள்ளார்கள்.
காணத்தவறாதீர்கள்.
கண்டு களிக்க மறவாதீர்கள்.
>>>>>
இன்று வியாழக்கிழமை
ReplyDeleteபிரதோஷத்துடன் கூடிய
மஹாசிவராத்திரியாகும்.
இன்று இரவு முழுவதும் கண் விழித்து
’சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ’
என்று சிவநாமம் ஜபித்தால் மிகவும்
புண்ணியம் கிடைக்கும்.
>>>>>
விடியற்காலம் மிகச்சரியாக
ReplyDeleteஐந்து மணி வரை விழித்திருந்து
இந்தப்பதிவரின் வலைத்தளத்தினில்
பின்னூட்டமிட்டு தங்களின்
கண் விழித்து 'சிவ' நாமம் சொல்லிய
விரதத்தை முடித்தீர்களானால்
மேலும் அதிக புண்ணியம் கிடைக்குமாக்கும்.
>>>>>
கிடைப்பதற்கு அரிதான இந்த
ReplyDeleteநல்வாய்ப்பினை யாரும்
நழுவ விடாதீர்கள், என
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பிரியமுள்ள கோபு [VGK]
>>>>>
வேடன் கதை, வில்வக்கதை அருமை.
ReplyDelete>>>>>
படங்கள் எல்லாம் வெகு அழகு.
ReplyDeleteகண்களைப் பறிக்கின்றன ;)
>>>>>
விளக்கங்கள் எல்லாம் விசித்திரமாக உள்ளன.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
>>>>>
மகா சிவராத்திரியைப் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் அருமை. படங்களும் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அம்மா.
சாதாரண நாட்களிலேயே இரவு வெகு நேரம் கண் விழித்து, ஏதேதோ கற்பனைகளில் மிதப்பவன் நான்.
ReplyDeleteஇன்று குருவாரம் பிரதோஷம் வேறு. சாயங்காலம் கோயிலுக்குப் போகணும்.
>>>>>
இரவு 8 மணிக்கு போட்டிக்கான கதையின் விமர்சனப் பகுதிகளை மட்டும் Copy & Paste செய்து நடுவருக்கு 8.30க்குள் அனுப்பி வைக்கணும்.
ReplyDelete>>>>>
பிறகு என் அண்ணா பிள்ளை ஆத்தில் நடைபெறும் மிகப்பெரிய மஹா சிவராத்திரி சிவபூஜையில், சிரத்தையான பல்வேறு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளணும்.
ReplyDelete>>>>>
12 மணிக்குள் என் இல்லத்திற்கு நான் திரும்பணும்.
ReplyDelete"VGK 07___________" போட்டிக்கான சிறுகதையை 12.01 க்கு வழக்கம்போல் வெளியிடணும்.
இதுபோன்ற பல உபரியான வேலைகள் இன்று உள்ளன.
>>>>>
வழக்கம்போல நாளை அதிகாலை சுமார் மூன்று மணிக்குத்தான் என் கண்கள் சொக்க ஆரம்பிக்கும்.
ReplyDeleteநான்கு மணிக்குத்தான் எனக்கு நல்லதூக்கமே வர ஆரம்பிக்கும்.
பிறகு நான் எப்போது எழுந்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது.
நான் தூங்கி எழுவதற்குள் வெள்ளிக்கிழமையில் பாதி நாள் முடிந்திருக்கும்.
அதனால் தங்களின் வெற்றிகரமான 1200வது பதிவுக்கு இப்போதே என் அட்வான்ஸ் நல் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு, மனதில் ஒரு ஓரமாக பத்திரமாக பொக்கிஷமாக வைத்துக்கொள்ளுங்கள், என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நேற்று ஐந்துக்கு நாலு, இன்று 12க்கு எவ்வளவோ ? ;) பார்ப்போம்.
Bye for Now.
பிரியமுள்ள VGK
ooo ooo ooo ooo
வழக்கம்போல நாளை அதிகாலை சுமார் மூன்று மணிக்குத்தான் என் கண்கள் சொக்க ஆரம்பிக்கும்.
ReplyDeleteநான்கு மணிக்குத்தான் எனக்கு நல்லதூக்கமே வர ஆரம்பிக்கும்.
பிறகு நான் எப்போது எழுந்திருப்பேன் என்பது எனக்கே தெரியாது.
நான் தூங்கி எழுவதற்குள் வெள்ளிக்கிழமையில் பாதி நாள் முடிந்திருக்கும்.
அதனால் தங்களின் வெற்றிகரமான 1200வது பதிவுக்கு இப்போதே என் அட்வான்ஸ் நல் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு, மனதில் ஒரு ஓரமாக பத்திரமாக பொக்கிஷமாக வைத்துக்கொள்ளுங்கள், என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நேற்று ஐந்துக்கு நாலு, இன்று 12க்கு எவ்வளவோ ? ;) பார்ப்போம்.
Bye for Now.
பிரியமுள்ள VGK
ooo ooo ooo ooo
மகா சிவராத்திரிக்கு வாழ்த்துக்கள். உங்களின் 1200வது பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகான படங்கள். சிவராத்திரியின் சிறப்புக்கள், மகிமை,பலன்கள் பற்றி அருமையான பகிர்வு.வாழ்த்துக்கள்.நன்றி.
ReplyDeleteஓம் நமச்சிவாய....
ReplyDeleteசிவராத்திரிக்கு ஏற்ற பதிவு.
மிக சிறப்புப் பதிவு காலநேரத்திற்கு ஏற்றவாறு.
ReplyDeleteபடங்கள் மிக மிக அருமை.
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.