Monday, February 24, 2014

அருளும் அரகண்டநல்லூர் அரன்




அரகண்டநல்லூர் தலத்திற்கு வந்த ஞான சம்பந்தப் பெருமான்,  அரகண்டநல்லூரில் இருந்த வண்ணமே திருவண்ணா மலை ஈசனைப் பாடியுள்ளார். 
தற்போதும் அண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை மகாதீபத்தை அரகண்டநல்லூர் குன்றின் ஒரு பகுதியிலிருந்து தரிசிக்கலாம். இங்கிருந்து 36 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவண்ணாமலை! 

மிருகண்டு முனிவருக்கு யோக சித்தியும் ஞான சித்தியும் அருளிய ஈசன் நீலகண்டமுடையார் என்னும் திருப்பெயரோடு எழுந்தருளியிருக்குமிடம் அரகண்டநல்லூர். 


மிருகண்டு முனிவர் அரனை -சிவபெருமானை- கண்ட தலமாதலால்,  அரகண்டநல்லூர் என்னும் பெயர் பெற்றது. 


"ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை- அதற்குரிய துல்லியமான நாதத்தோடு ஈசன் உமாதேவிக்கு உபதேசித்ததால், சிவன்  அதுல்யநாதீஸ்வரர் என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார். 
திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிறு குன்றின்மீது அமைந்துள்ள திருக்கோவிலில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார் சிவபெருமான்.
 
பஞ்சபாண்டவர்களும் பாஞ்சாலியும் தங்கள் வனவாச காலத்தின்போது 
வந்து தங்கி ஈசனை வழிபட்ட தலம்


அர்ச்சுனன் பிரம்மாஸ்திரம் வேண்டி ஈசனை வழிபட்ட தலமும் இதுவே....

இதற்குச் சான்று பகர்வது கோவிலை அடுத் துள்ள பகுதியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஐந்து அறைகள் பஞ்சபாண்டவர் குகை என்னும் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. 
 

பாஞ்சாலி நீராடுவதற் காக பீமன்  வெட்டிய குளம்
 தற்போது பீமன் குளம் என்றே அழைக்கப்படுகிறது. 

A
பீமன் குளமும் , பாறைமீது அமைந்து காட்சி தரும்  பாஞ்சாலி கோவிலும் ..
 
வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப்பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் 
 அரகண்டநல்லூர் வந்து வழிபட்டுச் சென்றனராம் 

லிங்கோத்பவர்...                                                                      
 

பாண்டவர்கள் அரகண்டநல்லூர் இறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர் கள் இங்கு வந்து வழிபட்டால் மீண்டும் அவற்றைப் பெறலாம். என்னும் கருத்தை திருஞானசம்பந்தரே முன் மொழிந்துள்ளார். 


அரகண்டநல்லூர் தல தட்சிணா மூர்த்தி அறிவாற்றல் 
அருளும் வள்ளலாகத் திகழ்கிறார்.

பாண்டவர் வரலாற்றோடு தொடர்புடைய அரகண்டநல்லூர் தலம் 
முற்கால மன்னர்களுடனும் தொடர்புடையதாகத் திகழ்கிறது. 


கொடை வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோரை அரகண்டநல்லூர் பகுதியை ஆண்ட தெய்வீகன் என்னும் மன்னனுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டதை யறிந்த மூவேந்தர்களும் தெய்வீகனைச் சிறைபிடித்துச் சென்றுவிட்டனராம். அப்போது இத்தல ஈசனே சென்று தெய்வீகனை மீட்டு வந்தார்  என்பது வரலாறு..

எல்லா ஆலயங்களிலும்  வடக்கு நோக்கி காட்சியளிக்கும் துர்க்கையம்மன் தெற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பான அம்சம் 
 

  நவகிரக சந்நிதியில் அமைந் துள்ள சனீஸ்வரரும் தன் வாகனமான காகத்தின்மேல் அமர்ந்த வண்ணம் காட்சி தரும் சிறப்பு வாய்ந்தவர். 


காகத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் சனிபகவான் காட்சி தரும் இடங்கள் மூன்று. ஒன்று தரைமட்டத்துக்குக் கீழும், மற்றொன்று சமதளத்திலும், இன்னொன்று மலைமீதும் அமைந்துள்ளது. 


அவ்வகையில் குன்றின்மீது அமைந்த கோவில் 
அரகண்டநல்லூர் தலமாகும். 


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, எட்டயபுரம் ஜமீன்களின் குலதெய்வமாக விளங்கும் கழுகாசலமூர்த்தி ஆலயம் தரை மட்டத்துக்குக் கீழேயும்; 
விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் ராமநாதீஸ்வரர் ஆலயம் 
சமதளத்திலும் அமைந்துள்ள மற்ற தலங்களாகும்.

"அட்டமச்சனி நடைபெறுபவர்கள்  வந்து வழிபட்டு 
தோஷம் நீங்கப் பெறுகிறார் கள். 

திருமணத்தடை போன்ற தோஷங்கள் விலகவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும்  அரகண்டநல்லூர்  இறைவனை மனமுருக வழிபட எண்ணங்கள் யாவும் ஈடேறும்' 
 
அரகண்ட நல்லூர் தலத்தைச் சுற்றி திருக்கோவி லூர் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில், அந்திலி நரசிம்மர் கோவில், ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனம் போன்றவை சில கி.மீ. தொலைவிலேயே அமைந் துள்ளன. அவற்றையும் தரிசித்து மகிழலாம்.

அரகண்டநல்லூர் கோவிலில் தீமிதி விழா பிரசித்தி பெற்றது..

ர்ச்சுணன் மாடு விரட்டும் நிகழ்ச்சி,  அரவான் களபலி முடிந்து ஊர்வலம் ,தென்பெண்ணை ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட கரகம், அக்னி சட்டியுடன் மேலதாளம் முழங்க கோவிலை அடையும் நிகழ்ச்சிகள். 
திரவுபதி சமேத அர்ச்சுணன் எழுந்தருளி, அவர் முன்பாக அக்னி குண்டத்தில் கரகம் இறங்கியதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்..
தீர்த்தவாரி: ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட கூட்டத்தில் நடைபெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும் 

  • மாசி மாத அமாவாசையின் போது குருஜி அவர்கள் இறைவனுக்கு பிரியமான  இணையதள வாசகர்கள் ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் நீங்க அரிய வாய்ப்பு அளித்திருக்கிறார்.தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்..
  • இணைப்பு.....

http://www.ujiladevi.in/2014/01/pithru.html






 












14 comments:

  1. அருமையான தகவல்களுடன் அரகண்டநல்லூர் கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அரகண்ட நல்லூர் எனும் திருத்தலத்தினைப் பற்றிய அற்புத செய்திகளை தங்களால் அறியப் பெற்றோம்!.. மகிழ்ச்சி!..

    ReplyDelete
  3. அரகண்ட நல்லூர் அரனைப்பற்றிய மிக அற்புதமான விரிவான கட்டுரைப்பா..

    படங்கள் எல்லாம் ரொம்ப தத்ரூபமாக இருக்கிறது. அதிலும் சிவன் நீரில் அழகாய் அலைந்தாடுவது போல.. ரமண மஹரிஷி திருஞான சம்பந்தர் இருவரும் ஜோதி தரிசனம் பெற்றதையும் அங்குள்ள கல்வெட்டில் படிக்க முடிந்தது... அன்பு நன்றிகள்பா இன்றைய ஸ்தல பகிர்வுக்கு..

    ReplyDelete
  4. என் இளம்வயதிலேயே அரகண்டநல்லூரைப் பற்றி அறிவேன். எப்படித் தெரியுமா? "நூற்றியெட்டு ரூபாயோ அல்லது சற்றுக் குறைவோ, (சரியாக நினைவில்லை) மணியார்டர் அனுப்பி, உங்களின் பிரச்சினைகளை எழுதினால், ஒரு தாயத்து அனுப்புவோம் - அது வாழ்நாள் முழுதும் பயன்தரும். ஆனால் நியாயமான கோரிக்கைகளுக்கு மட்டுமே பலன் தரும்" என்று முழுபக்க விளம்பரம் எல்லாப் பத்திரிகைகளிலும் வந்துகொண்டிருந்த காலம் அது. அரகண்டநல்லூரின் பெருமையை ரமணரைவிட, திருஞானசம்பந்தரைவிட, அதிகமாகப் பரப்பியவர் இந்த விளம்பரதாரரே! எனக்கும் மணியார்டர் அனுப்பி, பெரிய பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை அதைப் பார்த்தவுடன் வந்தது. அஞ்சல் அலுவலகத்தில் போய்க் கேட்ட பிறகுதான் தெரிந்தது, மணியார்டர் அனுப்புவதற்கு, முதலில் நம் கையில் 'மணி' இருக்கவேண்டும் என்று! இன்னொன்று, பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை, நியாயமான ஆசையா அல்லவா என்று தெரியவில்லை அப்போது! .............தங்களின் ஆரவாரமற்ற பக்திப்பணிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. திருவண்ணாமலை மாவட்டம் தான் எங்கடையது என்றாலும் இத்தனை தகவல்களை அறிந்திருக்கவில்லை.. தங்களின் ஒவ்வொரு பகிர்வையும் கண்டு வியந்து போகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. காகத்தின் மீது பகவான் படம் இருந்தால் இன்னும் மகிழ்வாக இருந்திருக்கும்..(என் ஆவலே)

    ReplyDelete
  7. ’அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற பழமொழி ஞாபகம் வந்தது எனக்கு ....... இந்த இன்றையத் தலைப்பைப் படித்த உடன்.

    >>>>>

    ReplyDelete
  8. அரகண்ட நல்லூர் .... ஆஹா .... நல்லதொரு க்ஷேத்ரத்தின் பெயர்.

    திருவண்ணாமலைப்பக்கமாக இருக்குமோ என நினைத்தேன்.

    அது போலவே சொல்லீட்டிங்கோ அங்கிருந்து 36 கிலோ மீட்டர், என்று.

    >>>>>

    ReplyDelete
  9. மிருகண்டு முனிவர் சிவனைக் கண்ட தலமாதலால் அரகண்ட நல்லூர் என்ற பெயர் .... ஆஹா ஆனந்தமாக உள்ளது ..... இதைத்தாங்கள் சொல்லிக்கேட்க.....

    >>>>>

    ReplyDelete
  10. ’அங்கவை ... சங்கவை’ பெயர்களைக் படித்ததுமே, அந்த ரஜினி படமும், அதில் வந்த திரு. சாலமன் பாப்பையா அவர்களின் உருவமும், அதில் நடித்த அவரின் பெண்களாக வரும் இருவரும் கண்முன் வந்து போனார்கள்.

    ”நீங்களும் நம்ம வீட்டுக்கு வாங்க ! ... நல்லாப் பழகுங்க ...” ;))))))

    >>>>>

    ReplyDelete
  11. வழக்கம்போலவே, படங்களும், விளக்கங்களும், விஷயங்களும் அற்புதமாக அமைந்துள்ளன.

    முதல் இரண்டு படங்களும், வழக்கத்து மாறாக தெற்கு நோக்கிய துர்க்கையம்மனும் மனதைக் கவர்ந்தன.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    o o o o o

    ReplyDelete
  12. அரகண்டநல்லூர் வழியாக ஒரு வருடத்திற்கும் மேலாக தினமும் போகும் வாய்ப்பு இருந்தும் இந்தக் கோயிலுக்குப் போனதில்லை. பதிவிலுள்ள தகவல்கள் போகும் ஆவலைத் தூண்டுகிறது. இனி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போய் பார்க்கிறேன். பகிர்விற்கு நன்றிங்க.

    ReplyDelete
  13. அரகண்டநல்லூரைப் பற்றி மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். கோயிலுக்குச் சென்றுவந்த உணர்வு ஏற்படுகிறது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக தினமும் ஒரு தேவாரப் பதிகம் படித்துவருகிறேன். ஞானசம்பந்தர் தேவாரம் முடித்துவிட்டு, தற்போது நாவுக்கரசர் தேவாரம் படித்துவருகிறேன். இத்தலம் பற்றி படித்ததாக எனக்கு நினைவில்லை. தங்களுடைய பதிவிலிருந்து அரகண்டநல்லூர் பாடல் பெற்ற தலமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அன்புகூர்ந்து தெரிவிக்கவேண்டுகிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
      தேவாரத் திருப்பதிகம்

      (இரண்டாம் திருமுறை 77வது திருப்பதிகம்)

      2.77 திருஅறையணிநல்லூர் என்று அழைக்கப்பட்டது
      அரகண்ட நல்லூர்..

      பண் - காந்தாரம்
      திருச்சிற்றம்பலம்

      833
      பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
      வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
      சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
      ஆடினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.

      01
      834
      இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழ
      நிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்
      அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்
      தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.

      02
      835
      என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
      பின்பினார்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
      முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்
      கன்பினாரறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.

      03
      836
      விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்
      உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்
      அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்
      பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.

      04
      837
      தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீ
      ஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்
      மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
      பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.

      05
      838
      விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
      அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்
      நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
      உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.

      06
      839
      வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
      ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறை
      ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
      வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.

      07
      840
      தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடை
      முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
      அக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்
      நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.

      08
      841
      வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்
      செய்வதேயலங் காரமாம் இவையிவைதேறி யின்புறில்
      ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலாரறை யணிநல்லூர்ச்
      சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.

      09
      842
      வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்
      சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி
      ஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப்
      பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.

      10
      843
      கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்
      பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்
      மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள்தொழக்
      கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.

      11
      இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
      சுவாமிபெயர் - அறையணிநாதேசுவரர், தேவியார் - அருள்நாயகியம்மை.

      Delete