Monday, February 3, 2014

ஏற்றமான வாழ்வருளும் ஏகபுஷ்பப் பிரியநாதர்





தென்னாடுடைய சிவனே போற்றி! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
பராய்த்துறை மேவிய பரனே போற்றி என்று பக்திப்பரவசத்துடன் வணங்கிப்பரவும் பொன்னார் மேனியனான ஆயிரம் நாமங்கள் கொண்டு அருளும் சிவபெருமான்‘ஏகபுஷ்பப் பிரியநாதன்’.என்னும் திருப்பெயரோடு ஈசன் அமர்ந்து அருளும் தலம்  தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ள திருத்தியமலை ஆகும்

திருத்தியமலைக்கு வந்து ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயினும் நல்லாளையும் தரிசித்து வழிபட்டனராம் அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபாமுத்திரையும்.

திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் 
பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருளும் அன்னையாகத் திகழ்கிறாள்,  தாயினும் நல்லாள்.

ஆறு வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் போதும். சூரியனைக் கண்ட பனிபோல தடைகள் தானே விலகும்.

படியேறிச் சென்றால் தெய்வானையுடன் அழகன் சுப்பிரமணியர் அரிட் காட்சி தருகிறார். இவர் சத்ருகளை அழித்துக் காப்பாற்றுபவர். 

நீதிமன்ற வழக்குகளில்  வெற்றிபெற இவரை சரணாகதி அடையலாம். செவ்வாய், சஷ்டிகளில் இவரை தரிசித்தால் சத்ருகளால் வரும் தொந்தரவுகள் நீங்கும்.


அதிகார நந்தி, அம்பாளுக்கும் இறைவனுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் இறைவனை தரிசிக்கிறது.

திருத்திய மலை திருக்கோயில்   ராஜராஜ சோழனின் மகன் 
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. 

ஏகபுஷ்பப் பிரியநாதர் என்ற பெயர்  இறைவனுக்கு 
வந்தற்குச் சுவையான வரலாறு ஒன்று உண்டு..!
 
இறைவனால் படைக்கப்பட்ட  எத்தனையோ மலர்கள்  இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. தேவ அர்க்கய வள்ளிப்பூ என்னும் ஒரு மலரை மட்டுமே இறைவனே   காத்திருந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை உண்டு..!

வற்றாத நீர் உள்ள ஒரு சுனையில் பல யுகங்களுக்கு ஒரே முறை பூக்கும்  சிறப்பு மிக்க சுனை அமைந்திருக்கும் இடம்தான் திருத்தேசமலை. !

தேவ அர்க்கய வள்ளிப்ப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் காத்திருப்பதால், இந்த சிவபெருமானின் திருப்பெயர், ஏகபுஷ்பப் பிரியநாதர் என்று வழங்கப்படுகிறது..!

‘தேவ அர்க்கய வள்ளிப்பூ மலர்ந்து இறைவனிடம் சேர்வதைப் பார்க்க விரும்பி, பிருங்கி முனிவர். அந்த அருமையான நேரத்தை நோக்கி தவமிருந்தார். 

திருந்திய   மலையில் பல கிளிகள் இருந்தன. அவற்றுக்கு இப்பூ பூக்கும் நேரமும் காலமும் தெரியும். அந்த விவரத்தை அவை தமக்கிடையே பேசிக்கொள்வதை பிருங்கி முனிவர் கவனித்தார். விவரமும் புரிந்துகொண்டார். 



அப்போதிலிருந்து அந்தக் கிளிகளையும் கவனித்து வந்தார். 
அந்தப் புனிதமான நேரமும்  வந்தது. 

சுனையில் தோன்றிய சங்கு போன்ற தேவ அர்க்கய வள்ளிப்பூ மெல்ல நகர்ந்து போய் ஏகபுஷ்பப் பிரியநாதரின் சிரசில் அமர்ந்த அரிய காட்சியைக் கண்ட பிருங்கி முனிவர் ஆனந்தக் கூத்தாடினார். 
பிருங்கி முனிவரையும் கிளிகளையும் தன்னடி 
சேர்த்தருள் செய்தார் இறைவன்.

கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு வில்வத்தாலும் ஆவுடையாருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது. ..!

கிளிகளோடு பிருங்கி முனிவர், அகத்தியர்-லோபாமுத்ரா போற்றி வணங்கிய ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயின் நல்லாளையும் தரிசித்து நற்பலன் பெறலாம். 

பிரம்ம ஹத்தி தோஷம் , திருமணத்தடைகள் ஆகியவற்றை நீக்கும் பரிகாரத்தலமாகத்திகழ்கிறது திருத்தியமலை..!
இதன் பழைய பெயர் திருத்தேசமலை.

உமா மகேஸ்வர வடிவம் , பைரவர் , மகாலஷ்மி சண்டிகேஸ்வரர் , 
சூரியன் , நவக்ரஹங்கள் தரிசனமும் பெறலாம் ..!

கோயில் 84 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அம்மன் தாயினும் நல்லவள்.
கோயில் 5050 வருட முற்பட்ட பழைய கோயிலாகும்.
Thiruthiyamalai - Entrance
திருத்தியமலை. திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் திருப்பைஞ்சீலியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.




20 comments:

  1. திருதேசமலை எனும் திருத்தியமலை திருத்தலத்தைப் பற்றி விவரமான பதிவு.
    அழகான படங்களுடன் - மனம் நிறைகின்றது.

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு அம்மா... தகவல்கள், விளக்கங்கள் அனைத்தும் பிரமாதம்... அற்புதமான படங்கள் மனதை விட்டு அகலவில்லை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. எதிர்பாராமல் கண்களை இமைக்கிறார் சிவன். :)))

    ReplyDelete
  4. அழகிய படங்களுடன் அற்புதமான கட்டுரை!திருத்திய மலை திருத்தலத்தை வலம் வந்து மகிழ வைத்தீர்கள். நன்றி!

    ReplyDelete
  5. ஏகபுஷ்பப்பிரிய நாதர் - பெயரே வசீகரிக்கிறது..!

    ReplyDelete
  6. இந்தப் பதிவில் உள்ள இறைபெயர்கள், இடப்பெயர்கள் அனைத்தும்
    புதுமையாக உள்ளது.
    படங்களும் வியக்க வைக்கின்றது.
    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  7. இத்தலத்திற்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன. அந்தளவிற்கு சிறப்பு நல்கும் உயரிய தளம். வாழ் நாளில் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டிய தளத்தினை விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி.

    அழகான படங்கள். அருமை அருமை! நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ஏக புஷ்பப் பிரியநாதர் என்ற பெயரே நல்லா இருக்கு.

    முதல் படத்தில் கண்ணடிக்கும் சிவனார். ;)))))

    >>>>>

    ReplyDelete
  9. தென்னாடுடைய சிவனே போற்றி ............

    என்ற பாடலில் முதல் மூன்று வரிகளை மட்டும் எழுதிவிட்டு, முக்கியமாக கடைசி வரியான ‘சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி’ என்பதை எழுதாமல் விட்டுவிட்டீர்களே !

    என் போன்ற திருச்சிராப்பள்ளிக் காரர்களுக்கு வருத்தமாக இருக்காதா? ;(

    >>>>>

    ReplyDelete
  10. அம்பாள் பெயர் ’தாயினும் நல்லாள்’

    ஆஹா! அப்போ அது சாக்ஷாத் நீங்க தான் ..... இன்று தாயில்லாப்பிள்ளையாகிய எனக்கு. ;)))))

    ’தேவ அர்க்கய வள்ளிப்பூ’ போன்றே

    அருமையான
    அபூர்வமான
    அழகான
    அசத்தலான

    தகவல்களாகத் தந்துள்ளீர்கள்.

    >>>>>

    ReplyDelete
  11. ’தவமிருந்தார்’ என்று முடியும் பத்திக்கும் [Paragraph] ’திருந்திய மலையில்’ என்று ஆரம்பமாகும் பத்திக்கும் இடையே காட்டியுள்ள படத்தை வேண்டி நானும் தவமாய் தவமிருந்தேன் அன்று “பச்சை மரம் ஒன்று - இச்சைக்கிளி ரெண்டு’ என்ற பதிவிடும்போது. கடைசிவரை அது எனக்குக் கிடைக்கவே இல்லை.

    உங்களுக்கு அதை புரிய வைத்து கேட்கலாமா என்று கூட யோசித்தேன். பிறகு வேண்டாம் என ஏதோவொரு கூச்சத்தில் விட்டுவிட்டேன்.

    இதுபோன்ற அபூர்வமான எனக்கு மிகவும் பிடித்தமான அனிமேஷன் படங்களை ஏற்கனவே தங்கள் பதிவினில் இருந்து அவ்வப்போது திருடி பத்திரமாக ஒரு தனி FILE இல் வைத்திருந்தேன்.

    இருப்பினும், புதிய கம்ப்யூட்டர் வாங்கியபோது, பழைய கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்கில் இருந்தவற்றை அவர்கள் இதற்கு மாற்றித் தந்தபோது, ஏதோ கோளாறுகள் செய்து, நான் கஷ்டப்பட்டு திருடி சேமித்து வைத்திருந்த அத்தனை அனிமேஷன் படங்களையும் காணாமல் போகச் செய்து வெறுப்பேற்றி விட்டனர்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்...

      நான் கணிணி நுட்பப் பதிவரவல்லவே ..!
      எனக்குக் கணிணி பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாது..
      சில சமயங்களில் நான் தேடும்போதும் தேடும் படம் கிடைப்பதில்லை..

      எதிர்பார்ப்புடன் தேடினால் கூகிள் ஏமாற்றுவதுண்டு ..
      எனவே கிடைப்பதை எடுத்து பதிவிடுவேன்..

      அனிமேஷன் படங்கள் பதிவிலிருந்தும் , சேமித்து வைத்த இடங்களிலிருந்தும் சில நாட்களில் மறைந்துவிடுகின்றன...!

      இருக்கும் வரை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் போல இருக்கிறது..!

      Delete
  12. திருடிய சொத்தெல்லாம் கடைசியில் இப்படித்தான் காணாமல் போகும் என்று தாங்கள் நினைப்பது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. என்னவோ போங்கோ ...... தங்களிடமிருந்து மட்டுமே ஓர் உரிமையில் திருடி வந்தேன். இப்போ அதுபோலவும் செய்ய முடியாமல் செய்துட்டீங்கோ. பரவாயில்லை.

    ஏதாவது ஒன்று இரண்டு தேவைப்பட்டால் விரும்பிக்கேட்டால் தயவுசெய்து அனுப்புங்கோ.

    >>>>>

    ReplyDelete
  13. ROUND LOTUS அனுப்பியும், நான் அதை சேமித்தும் பிரயோசனம் இல்லாமல் உள்ளது. அதை COPY + PASTE செய்யும்போது ரெளண்ட் ஆக வராமல் பழையபடி சதுரமாகவே வருகிறது. ஏதோ அதில் [விஷமப்] பொடி வைத்துள்ளீர்கள். ;((((( இருக்கட்டும் ... இருக்கட்டும் ! ;)

    >>>>>

    ReplyDelete
  14. கிளியொன்று கிளி பொம்மையொன்றை தன் அலகினால் கொத்தி, ஓர் சின்ன தள்ளு வண்டியில் போட்டு, அதிலிருந்து எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு ......... நானும் என் மேலிடமும் ............. சேர்ந்து பார்த்து மகிழ்ந்தோம்.

    “அதை தனியே சேமித்து வையுங்கோ ....... அநிருத் வரும்போது காட்டலாம்” என்றாள்.

    “இப்போதெல்லாம் இவற்றை என்னால் தனியே சேமிக்க முடியாதும்மா .... இருப்பினும் அவன் வரும்போது இந்தப்பதிவையே திறந்து என்னால் காட்டிட முடியும்” என்று அவங்களுக்கும் சமாதானம் சொல்லி, நானும் என்னை சமாதானம் செய்து கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
  15. பிறகு என் மேலிடத்தை உட்காரச்சொல்லி, தங்களின் சமீபத்திய பூனைப்பதிவை மட்டும், படங்களை மட்டும், ”தயவுசெய்து பார்த்துவிட்டுப்போ” எனக் கேட்டுக்கொண்டேன். பார்த்தாள். ரஸித்தாள். மகிழ்ந்தாள்.

    “அவற்றையும் அநிருத் வரும்போது காட்டணும்” என்றாள்.

    “ஆஹா, உத்தரவு .... அப்படியே காட்டிட்டாப்போச்சு” என்றேன். ;)))))

    >>>>>

    ReplyDelete
  16. 12.02.2014 அன்று மேற்படி கோயில் கும்பாபிஷேகத்திற்கு தாங்கள் வருவதாக இருந்தால் தயவுசெய்து முன்கூட்டியே எனக்குத் தகவல் கொடுங்கோ, ப்ளீஸ்.

    பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooo ooo ooo

    ReplyDelete
  17. வணக்கம் .. வாழ்க வளமுடன்...

    கிளியொன்று கிளி பொம்மையொன்றை தன் அலகினால் கொத்தி, ஓர் சின்ன தள்ளு வண்டியில் போட்டு, அதிலிருந்து எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு ..//

    அது குப்பைத்தொட்டியல்லவே .. தொட்டில் ..
    தொட்டிலில் போட்டு ஆட்டியும் விடுகிறதே..!!

    அது என்ன மனிதனா .. சில மனிதப்பதர்கள் தான் குப்பைத்தொட்டியில் குழந்தைகளைப் போடும் ..!

    ReplyDelete
    Replies
    1. ;)))))

      //அது குப்பைத்தொட்டியல்லவே .. தொட்டில் ..
      தொட்டிலில் போட்டு ஆட்டியும் விடுகிறதே..!!//

      ஆமாம். அது தொட்டிலே தான். ஆட்டியும் விடுகிறது தான்.
      முன்பே கவனித்தேன்.

      இருப்பினும் இப்படி நான் ஏதாவது எழுதினால் தான் தங்களிடமிருந்து ஓர் பதில் வரும் என்பதால் எழுதினேன். ;)

      //அது என்ன மனிதனா .. சில மனிதப்பதர்கள் தான் குப்பைத்தொட்டியில் குழந்தைகளைப் போடும் ..! //

      மிகச்சரியாகச் சொன்னீர்கள். உண்மைதான்.

      இன்றைய [04.02.2014] வலைச்சர அறிமுகத்துக்குப் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். ;)

      Delete
  18. அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.
    அதிலும் கும்பாபிஷேக பத்திரிக்கையை வெளியிட்டதற்கு நன்றி அம்மா.

    ReplyDelete