Saturday, February 1, 2014

மணம் கமழும் வாழ்வு அருளும் மலையடிப்பட்டி ஸ்ரீ திருக்கண்ணாயிரம் உடையார்



மலையடிப்பட்டி தல ஈசன் திரு வாகீசர். சித்தர்களால் திருக்கண்ணாயிரமுடையார் என்று அழைக்கப்படுகிறார். 

பரவெளித் தத்துவத்தை வெளிப்படுத்தும் பெருமானாக இறைவன் எழுந்தருளியிருப்பதால் வாகீசர் எனவும் மக்களை கண் திருஷ்டி தோஷங்களிலிருந்தும் கண் நோய்களிலிருந்தும் காப்பதால் கண்ணாயிரம் உடையார் என்றும் இறைவன் போற்றப்படுகிறார். 
கண் திருஷ்டிகளால் வாடும் பக்தர்கள் இறைவனை பிரார்த்திக்கும்போது அவர்கள் மேல் விழுந்த ”கண்களை” ஈசன் திருக்கண்ணாயிரமுடையார் ஏற்று அடியார்களை 
கண் திருஷ்டியிலிருந்தும், கண் நோய்களிலிருந்தும் காப்பதால் 
பெருமான் கண்ணாயிரம் உடையார் என்று போற்றப்படுகிறார். 
இறைவனிடமிருந்து தோன்றிய மனிதன் இறைவனைச் 
சென்றடைய வேண்டிய மனிதனுடைய  கடமையை.  
உணர்த்தும் தாவரம் அழிஞ்சில்  மரமாகும். 

ஏறுஅழிஞ்சில்மரமும்,வில்வமரமும்ஒருங்கே செழித்துள்ள 
மலையடிப்பட்டி மிகவும் அரிதான செல்வ வள சக்திகளை 
அருளும் சிறப்புடையது. 
File:"A holy tree in front of Rock Cut Siva Temple of Malayadipatti".JPG
மலையடிப்பட்டி தலத்தில் உள்ள வில்வ மரத்திற்கும், அழிஞ்சில் மரத்திற்கும் நீர் வார்த்து தங்கள் கையால் அரைத்த மஞ்சள் பூசி, சுத்தமான குங்குமத்தால் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். திருமண தோஷங்கள் விலகும். கண் திருஷ்டி, கண்ணேறு, ஏவல் போன்ற தீய விளைவுகள்அகலும். குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

கண், காது போன்ற ஒன்பது உடல் துவாரங்கள் வழியாகத்தான் 
தீவினைகள் நம்மைத் தாக்குகின்றன. 
மற்றவர்களுடைய திருஷ்டி சக்திகளும் நவ துவாரங்கள் வழியாக நம் உடலில் புகுந்து துன்பம் விளைவிக்கின்றன. 

எனவே, மலையடிப்பட்டி தல ஈசனுக்கு ஒன்பது இளநீர்களால் அபிஷேகம் நிறைவேற்றுவதால் கண்ணேறு தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம். 

9, 18, 27 என்ற ஒன்பதின் மடங்கில் இளநீர்களை அபிஷேகம் செய்தலால் பலன்கள் விருத்தியாகும், துரிதமாகும். 

திரு கண்ணாயிரம் உடையார் திருத்தலத்தில் அருளும் சப்த மாதர்கள் வழிபாடு.ஸ்வர சக்தி அனுகிரகம் கிட்ட பரிகாரம் அளிக்கிறது..  

சப்த ஸ்வரங்களில் பூலோகத்துடன் தொடர்புடைய எல்லா ஸ்வரங்களும் அடங்கி விடுவதால்  சப்த மாதர்களுக்கு பசு வெண்ணெய் சார்த்தி வழிபட்டால் குழந்தைகளுக்கு  பெயர் சூட்டுவதில் ஏற்படும் குழப்பங்கள் களையும் வாய்ப்புகள் கிட்டும். 
சுப நிகழ்ச்சிகளுக்காக முகூர்த்த நேரம் கணிக்கையில் நேத்திர சக்திகள் மிகுந்த நாட்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஐதீகம்..! 

முகூர்த்த நேரத்தைக் கணிப்பதில் ஏற்படும் துன்பங்களை நீக்கும் தலமாகதிகழ்கிறது..!

கண்களில் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் வளர்பிறை நாட்களில் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதாலும் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொதுவாக, அறுவை சிகிச்சைகளுக்கு குறிப்பாக கண் அறுவை சிகிச்சைகளுக்கு தேய்பிறை செவ்வாய்க் கிழமை உகந்தது. 

அறுவை சிகிச்சைக்கு முன் ஸ்ரீகண் நிறைந்த பெருமாளைத் 
தரிசனம் செய்வதால் அற்புதமான பலன்களைப் பெறலாம். 
ஸ்ரீகண் நிறைந்த பெருமாளுக்கு முன்னே திகழும் 
இரு தூண்களும் விசேஷமான சக்திகளை உடையவை. 
பொதுவாக, இறை மூர்த்திகளை மறைக்கும் வண்ணம்
தூண்களை ஆலயங்களில் அமைப்பதில்லை. 

ஸ்ரீரங்கநாதரின் சயனக் கோலத்தை முழுமையாகக் காண முடியாத வகையில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கும்  தூண்களை ஹரி நேத்ர தூண்கள் என்று அழைக்கின்றனர். 

ஸ்ரீரங்கநாதரை  தரிசிக்கும் சிறப்பு முறையாக  பெருமாளுக்கு அவரவர் கைகளால் முப்பது முழம் அளவிற்கு ராமபாணம், சாமந்தி, மஞ்சள் நிற மணமுள்ள செவ்வந்தி போன்ற மலர்களால் அலங்கரித்து, முதலில் பெருமாளின் திருப்பாதங்களுக்கு நேரே உள்ள தூணை தரிசனம் செய்து அதன் பின்னர் பெருமாளின் தலைக்கு எதிரே உள்ள தூணை தரிசனம் செய்து அதற்குப் பிறகே பெருமாளை தரிசனம் செய்வது நலம்.அருளும் ..! 

திருஅருணாசல ஜோதி ஸ்தம்ப தரிசனம் பெற்றதால் பெருமாளின் நேத்ர சக்திகளை நேரடியாகப் பெறும் அளவிற்கு இன்றைய மனிதர்களின் ஆன்ம சக்தி பலப்படவில்லை. எனவே, பெருமாளின் நேத்ர சக்திகளை நறுமணம் கமழும் ஹரி நேத்ர தூண்கள் மூலம் பெறுவதால் மனிதர்களும் அருணாசல ஜோதி தரிசனப் பலனை ஓரளவு பெற இயலும் என்பதால்தான் இத்தகைய மலர் ஸ்தம்ப வழிபாட்டை  ஏற்படுத்தி உள்ளனர். இதனால் மணம் கமழும் வாழ்வு மலரும். 

பொருளாதாரம், கல்வி, ஆன்மீகம், அரசியல், சட்டம், வியாபாரம் என எத்துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள்  மலர் வழிபாட்டால் அற்புத பலன்களைப் பெறுவார்கள். 

 முற்பிறவியின் நற்பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கும்படி அதிருஷ்ட
சக்திகளை விருத்தி செய்து பூர்வ ஜன்ம நற்பலன்களை இப்பிறவியில் அளிக்கக் கூடிய தலங்களில் முதன்மையாகத் திகழ்வது  மலையடிப்பட்டி திருத்தலமாகும். 

இங்குள்ள கற்பாறைகள் சகஸ்ர ம்ருதுள சக்திகளை
இயற்கையாகப் பெருக்கும் சக்தி பெற்றவை. 

எனவே, தலத்தை கிரிவலம் வந்து வணங்குவதால் பூர்வ ஜன்ம புண்ணிய சக்திகளை முழுமையாகப் பெற்று மங்கள வாழ்வு பெறலாம் என்று சித்தர்கள் உறுதியளிக்கின்றனர். 

ஜகந்நாதம் பரிபூர்ணம்
அனந்த சயனம் பரிபூர்ணம்
அருணாசலம் பரிபூர்ணம்

என்னும் துதியை ஓதி  ராஜ யோகத்தை அருளும்
சிறப்புடைய கிரிவலம் வருதல் நலம்.

கிரிவலப் பாதையில் எறும்புகளுக்கு உணவு இடுதல் சிறப்பு..!

இறை பக்தி, கடவுள் நம்பிக்கை. தீர்த்த யாத்திரை போன்ற
நற்பலன்களும் பெருக உதவும்..!

திரு வாகீஸ்வர மூர்த்தி அருளும் திருத்தலம்
பரவெளி தத்துவத்தைப் போதிக்கும் சிறப்புப் பெற்றதாகும். 

திருஅண்ணாமலை ஈசனை கண்ணாரக் கண்டு அவருடைய திவ்ய தரிசன சக்திகளை தன்னுடைய செந்தாமரைக் கண்களில் நிறைத்துக் கொண்ட ஸ்ரீரங்கநாத பெருமாளே  சயன மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் மலையடிப்பட்டி தலத்தை இரவு பகல் எந்நேரமும் கிரிவலம் வந்து பயன் பெறலாம் ..

செவ்வாய், புதன் கிழமைகளிலும், சப்தமி, பௌர்ணமி திதிகளிலும், ரோஹிணி, பூரம், அனுஷம், சதயம் நட்சத்திர நாட்களிலும் இங்கு கிரிவலம் வருதலால் மகத்தான பலன்களைப் பெறலாம். 

ரோஹிணியும் புதன் கிழமையும் சேர்ந்த நாட்களிலும், பௌர்ணமி திதியும், செவ்வாய்க் கிழமையும் இணைந்த நாட்களிலும் கிரிவலம் வருதல் யோகப் பலன்களைப் பெருக்கும். 
தூண் வடிவில் அருணாசல ஜோதியாக தோன்றிய
இறைவன் தூண்களில் எழுந்தருள்வது இயல்பானதுதான் 

எப்போதும் நிலைத்த தன்மைக்கு தூண் உவமையாக திகழ்கிறது..!

இவ்வுலகம் இயங்குவதற்கு வேதங்களே தூண்கள் போன்று நிலைத்து நின்று உலகைக் காக்கின்றன ..தூண்கள் தர்ம சக்திகளை நிலைகொள்ளச் செய்பவை இந்த பூமியின் வடிவமும் உலக்கை என்னும் தூணின் வடிவம்தானே? !

இவ்வுலகைக் காக்க, தீய சக்தியை எதிர்த்து சம்ஹாரம் செய்ய தோன்றிய நரசிம்ம அவதார மூர்த்தி ஆதிவாரத்தில் அந்தியம்  பொழுதில்  
ஹரி உருவாய் தூணில் தான் எழுந்தருளினார். 

அவதாரங்களில் மிகவும் அழகான தெய்வீகச் செம்மல் நரசிம்ம மூர்த்தி எல்லையில்லா சீற்றம் கொண்டு அண்டசராசரமும் நடுங்கும் வண்ணம் பிரகலாதனின் பிரார்த்தனையை ஏற்று தூணில் எழுந்தருளினார். 

அவதார மூர்த்தியை கர்ப்பம் தாங்கும் வல்லமையை ஒரு தூண் பெற்றது என்றால் தூண் வடிவத்தின் பின்னால் உள்ள தெய்வீக மாண்பை, மகத்துவத்தை, சக்தியை, வல்லமையை நிறந்துள்ளது..

மிகவும் உக்கிரஹம் வாய்ந்த அவதார மூர்த்தியான நரசிம்ம மூர்த்தியை கர்ப்பம் தாங்கிய கோலத்தில் உள்ள தூண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. எனவே ஹரி நேத்திர தூண்களையும் , இறைவனையும் இணைத்து வணங்கி அகக்கண்ணும் புறக்கண்களும் ஒன்றாக ஒளிபெற்று பயனடையலாம் ..!

திருச்சி துவாக்குடி, அசூர், செங்களூர் வழியாக அல்லது புதுக்கோட்டை கீரனூர் வழியாக சென்றடையக் கூடிய திருஆலத்தூர் என்னும் திருத்தலமே தற்போது மலையடிப்பட்டி என்று வழங்கப்படுகிறது. 

19 comments:

  1. மலையடிப்பட்டி திருக்கண்ணாயிரம் உடையார் பற்றிய சிறப்புகள் அனைத்தும் அருமை அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மலையடிப்பட்டியின் திருக்கண்ணாயிரம் உடையாரின் சிறப்புகளை வழங்கியமைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..
      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..!

      நேத்திரம் என்பது கண்.

      நேத்திர சக்தி என்றால் கண்களுக்கு சக்திகளை இறைவனிடனிடம் இருந்து பெறுதல்..!

      Delete
  4. மலையடிப்படி பெருமாள் பெருமைகளை
    அழகாய் விரிவாக சொல்லும் பகிர்வுக்கு நன்றி.
    திருக்காண்ணாயிர உடையாரின் படம் மிக அழகு.
    நேத்ர தூண்கள் தரிசனம் கிடைத்து விட்டது, மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு... திருக்கண்ணாயிர உடையாரின் சிறப்புகளைத் தெரிந்து கொண்டோம்...

    ReplyDelete
  6. மலையடிப்பட்டி பற்றி அறிந்தேன். நன்றி அம்மா.

    ReplyDelete
  7. மலையடிப்பட்டி தல விவரங்களும் விரிவான தகவல்களும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  8. திருக்கண் ஆயிரம் உடையார் பற்றிய விபரங்கள் ஆயிரம் பதிவுகளுக்கு மேலேயே தந்து அசத்தியுள்ள அபூர்வ சிந்தாமணி அவர்களின் பதிவின் மூலம் அறியக்கிடைத்தது என் பாக்யம் தான். மிக்க மகிழ்ச்சி ;)

    >>>>>

    ReplyDelete
  9. ஏழுஅழுஞ்சில் மரம்; நவத்துவாரங்கள் :))) ))) ))); ஒன்பது இளநீர் அபிஷேகங்கள் என அனைத்தும் புதிய மகிழ்வூட்டும் செய்திகளாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. எனது சமீபத்திய கண் ஆபரேஷன் அகஸ்மாத்தாக தேய் பிறையில் அமைந்துள்ளது.

    ஏதோ FINAL SCAN TEST என 21.01.2014 செவ்வாய்க்கிழமை வரச்சொல்லியிருந்தார்கள்.

    அங்கு அதற்காகப் போன என்னை அப்படியே அட்மிட் செய்து கொண்டு விட்டார்கள், நான் அதற்கான தயார் நிலையில் இல்லாத போதும்..

    >>>>>

    ReplyDelete
  11. கடந்த ஒரு மாதமாகவே வாராவாரம் வெவ்வேறு கண் பரிசோதனைகளுக்காகச் சென்று வந்துகொண்டுதான் இருந்தேன்.

    23.01.2014 வியாழன் நல்ல முஹூர்த்தநாள் என்றும், என் ஜன்ம நக்ஷத்திரமான புனர்பூசத்திற்கு மிகவும் மைத்ரமானதான சித்ரா ;)))))))) நக்ஷத்திரம் என்றும், அன்று செய்துகொள்வது மிகச்சிறப்பாக அமையும்; வேறு நல்ல நாட்களே கிடைக்கவில்லை எனவும் எங்காத்து வாத்யார் சொல்லியிருந்தார்.

    நான் பார்த்தவரையிலும் கூட அதுவே நல்லநாள் என்று எனக்கும் நன்றாகவே தெரிந்தது தான். அந்த நல்ல நாளையே டாக்டரிடம் சொல்லி well in advance FIX செய்திருந்தேன்.

    செவ்வாய்க்கிழமை மாலை FINAL SCAN எடுக்கமட்டும் ஒருமணி நேரம் வந்துட்டு திரும்பிப்போங்கோ எனச் சொல்லியிருந்தார்கள்.

    புதன் மாலை அட்மிஷன் + வியாழன் காலை ஆபரேஷன் என்பதே ஒரிஜினல் திட்டமாக இருந்தது.

    தொடரும் ....

    >>>>>

    ReplyDelete
  12. திடீரென்று அந்தத்திட்டத்தை மாற்றி விட்டார்கள். புதன்கிழமை காலை ஆபரேஷன் என மாற்றி விட்டார்கள். நான் மிகவும் டென்ஷன் ஆகிவிட்டேன். மனதளவில் பாதிக்கப்பட்டேன். செவ்வாய் இரவு முழுவதும் நான் சுத்தமாகத் தூங்கவே இல்லை.

    வியாழன் நல்ல நாளில் அந்த டாக்டர் தம்பதியினரின் பெண்ணுக்கோ அல்லது பிள்ளைக்கோ நிச்சயதார்த்தமாம். திடீர் ஏற்பாடாம். அதனால் வியாழன் காலையில் செய்ய FIX செய்திருந்த ஆபரேஷன்கள் எல்லாவற்றையும், முதல் நாள் அதாவது புதன் காலையில் செய்வதாக திடீரென்று மாற்றி அறிவித்துவிட்டனர்.

    >>>>>

    ReplyDelete
  13. நான் தங்களைத்தான் முதலில் நினைத்துக்கொண்டேன். தங்களுக்கு இது சம்மந்தமாக தகவல் கூட என்னால் கொடுக்க இயலவில்லை. SMS கொடுக்கலாம என்றுகூட நெடுநேரம் யோசித்தேன். ஏதோ நல்ல காலம், தங்களில் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளால், நல்லபடியாகவே எல்லாம் நடந்து முடிந்தது.

    அகஸ்மாத்தாக தேய்பிறை செவ்வாய்க்கிழமை தான், நான் அட்மிட் ஆகியுள்ளேன் என்பதில் எனக்கோர் திருப்தியும் நிம்மதியும், மன அமைதியும், இப்போது தங்களின் இந்தப்பதிவினைப் படித்ததும் ஏற்படுகிறது.

    சந்தோஷமான தகவலாகவே கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி. ;)

    >>>>>

    ReplyDelete
  14. என் கண் ஆபரேஷனுக்கு முன்பும் பின்பும் ஸ்ரீ கண் நிறைந்த [கண் காக்கும்] பெருமாளை தரிஸிக்க வாய்ப்பும் அளித்துள்ளீர்களே !

    அதை நினைக்க நினைக்க எவ்வளவு சந்தோஷமாக உள்ளது தெரியுமா ! ;)

    மலையப்பட்டிக்கே என்னை அழைத்துப்போய் விட்டீர்கள் - ஒருமுறைக்கு இருமுறையாக - சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  15. எனக்குக்கிடைக்கும் குறுகிய நேரத்தில் என் பதிவு வேலைகளைத்தவிர தங்கள் பதிவுகளை மட்டுமே கண்டு களித்து வருகிறேன்.

    மற்றவர்களின் பதிவுகள் பக்கம் போக எனக்கு நேரமும் இல்லை - தற்சமயம் எனக்குள்ள நெருக்கடிகளினால் விருப்பமும் இல்லை.

    மேலும் அதிக நேரம் கம்ப்யூட்டரில் அமர மேலிடத்தின் அனுமதியும் இல்லை.

    தங்கள் பதிவுகளை சற்றே தாமதமானாலும் நான் அவ்வப்போது படித்துக் கருத்து எழுதிவிட வேண்டும். இல்லாவிட்டால் நிறைய ARREARS சேர்ந்து போய்விடும் எனக்கு.

    மேலும் தங்கள் பதிவினை படித்து கருத்து எழுதாவிட்டால் நான் நன்றி கெட்டவனாகி விடுவேன். எனக்கு நிம்மதியாகத் தூக்கமும் வராது. ஏதோ ஓர் குற்ற உணர்ச்சி ஏற்பட்டுப்போகும்.

    அந்த அளவுக்கு உங்கள் பதிவுகளின் மேல் மட்டும் எனக்கோர் தனி ஈடுபாடு உள்ளது. அது ஏனோ எனக்கே புரியவில்லை.

    தாங்கள் என் நலம் விரும்பிகளில் நம்பர் - 1 என்பதால் மட்டுமே இருக்கும்.

    தாங்கள் பல்லாண்டு வாழ்க !

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    பிரியமுள்ள VGK

    o o o o o o o o

    ReplyDelete
  16. கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படக்கூடாது என்று சொல்லுவார்கள். இந்த திருஷ்டியிலிருந்து தப்பிப்பதற்கு அறுமியயான உபாயம் சொல்லியிருக்கிர்கள், மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  17. மலையடிபட்டி ஈசன் அற்புத மகிமை தெரிந்துகொண்டோம்.

    தர்சனம்பெற்றோம். நன்றி.

    ReplyDelete