அனந்தன் என்ற நாகார்ஜூனனுக்கும், வாயுதேவனுக்கும் பலப்பரீட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பருவத்தை பிடித்துக் கொள்ள, வாயுதேவன் காற்றை கடுமையாக வீசி, மலையை விடுவிக்க முயன்றான். அப்போது மேருவின் சிகரப்பகுதிகள் முறிந்து பல இடங்களில் விழுந்தது.
சூரியன் உதிக்கும் அதிகாலை நேரத்தில் மலைமேல் பயணம் மேற்கொண்டிருந்தோம்.
நீலவண்ண மயிலில் முருகன் ஒரு நொடி அதனில் இரு சிறகு மயிலில் உலகம் வலம் வரப்புறப்பட்ட காட்சியாய் எழிலுற விளங்கியது.
அலங்கார முடிகிரணம் கொண்டு, கோல மயிலின் வண்ணச்சிறகு போல் கிழக்கு வானம் வண்ண,வண்ண கோலம் போட்டு குன்று தோராடும் குமரனின் அருட் கோலம் காணத் தயாராகியது..
அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளின்றி பொருளேது முருகா
இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள குணமாகின்றன்...
இங்கு முருகன் எழுந்தருளிய கதை சுவையானது..
முருகப் பெருமானின் அற்புதத்தை பாருக்கு உணர்த்துகிறது.
நொய்தல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்னும் ஊரில் மாடுகளை மேய்க்கும் இடையன் ஒருசில நாட்களாக வனத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் வருகின்ற காராம் பசுவின் மடியில் பால் வற்றியிருப்பது கண்டு வியந்தான்.
பண்ணையாரும் காராம் பசுவையும் ஏனைய பசுக்களையும் புல்மேய வனத்துக்கு அனுப்பிவிட்டு பின்னால் சென்றனர்.
காராம் பசு ஏனைய பசுக்களை விட்டு நீங்கிச் சென்று மண்மேடு ஒன்றில் தானாகவே பால் சொரிந்த மணல்மேட்டை தோண்டிப் பார்த்தபோது முருகப் பெருமானின் கல் விக்கிரகம் சிலையின் இடுப்புப் பகுதிக்கு கீழ் முறையற்ற வேலைப்பாடு இல்லாது கரடு முரடாக இருக்கவே சிற்பியை அழைத்து திருத்தப் பணித்தார்.
உளியால் சிற்பி தட்டியபோது உதிரம் கற்சிலையில் இருந்து பெருக்கெடுப்பதைக் கண்ட சிற்பி பதறியடித்து "சாமிக் குற்றம்" ஆகிவிட்டது என்று , உணர்ந்து அப்படியே கோயில் எழுப்பினார்.
கருவறையில் வெள்ளிக்கவசத்தால் மறைத்து பூசை செய்கின்றனர்.
மலையில் வெண்சாரை, வெண் தவளை, கானாச்சுனை காயாத எட்டி, கருநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
உடற் பிணி நீங்கவேண்டி பலதலங்கள் சென்று வழிபட்டு இங்கே வணங்கி நோய் நீங்கப் பெற்றான் சோழ மன்னனான சிவாலயச் சோழன்.
சிவாலயச் சோழ மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்க முருகப்பெருமான் அருளினார்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோயில்
விநாயகருக்கு பூஜை முடிந்த பிறகே, மற்ற தெய்வங்களுக்கு பூஜை நடப்பது வழக்கம்.
ஆனால், இங்கு முருகப்பெருமானுக்கு பூஜை முடிந்த பின்பே சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது.
பழத்தால் கோபித்து மலை மேல் இருப்பதால், விநாயகர் தன் தம்பியைச் சமாதானம் செய்ய அவருக்கு முன்னுரிமை கொடுத்தாராம்.
சகோதரர்களுக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே, இவ்வாறு செய்யப்படுகிறது.
கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம்: ""துதிப்போர்க்கு வல்வினைப்போம், துன்பம்போம், நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசம் தனை''... என்று முருக பக்தர்கள் மனம் உருகி கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்கிறார்கள்....
இந்த கவசத்தை இயற்றிய ஸ்ரீபாலன் தேவராய சுவாமிகள் கந்தசஷ்டி கவசத்தை எழுதிய இவர் அதை அரங்கேற்றம் செய்ய உகந்த இடத்தைக் காட்டுமாறு முருகனை நினைத்து வழிப்பட்டார். உயர்ந்த தலம் என்ற உணர்வு ஏற்பட அரங்கேற்றினார்.
கந்தர் சஷ்டி கவசத்தில் "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற புகழ்மிக்க வரியையும் தந்துள்ளார்.
கந்தர் சஷ்டி கவசத்தில் "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற புகழ்மிக்க வரியையும் தந்துள்ளார்.
. "கிரி' என்றால் "மலை'. மலைகளில் எல்லாம் தலையாய மலை என்பதால் இப்படி பெயர் சூட்டியுள்ளனர்.
வளர்பிறை சஷ்டி திதிகளிலும், ஐப்பசி கந்தசஷ்டி திருவிழாவின் ஆறு நாட்களும் பக்தர்கள் விரதமிருக்கின்றனர்.
குழந்தை வரத்துக்கு மிக <உகந்த கோயில் இது.
- முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.
- மூலவரைச் சுற்றி எட்டு கிரகங்களை அமைத்து, நடுவில் முருகன் இருக்கிறார். அவரை செவ்வாய் கிரகமாக கருதுகின்றனர்.
""இறை நம்பிக்கையை மறுப்பவர்களின் நாக்கு புண் நாக்கு,'' என்று கூறியதால் "புண்நாக்கு சித்தர்' என்ற பெயர் இருந்தது.
நாக்கினை பின்பக்கமாக மடித்து அருள்வாக்கு வழங்கி வந்ததால் பின்நாக்குச் சித்தர் எனவும் பெயர் பெற்றார்.
அவர் தவமிருந்த குகை இப்போதும் உள்ளது. தலபுராணம் பாடிய
சரவண மாமுனிவரும் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார்.
அவர் தவமிருந்த குகை இப்போதும் உள்ளது. தலபுராணம் பாடிய
சரவண மாமுனிவரும் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார்.
காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமிக்கு சந்நிதி உள்ளது.
வீடு கட்ட, திருமணம் நடத்த, வியாபாரம் செய்ய, தொழில் துவங்க, வியாதிகள் தீர முருகனிடம் சிரசுப்பூ உத்தரவு கேட்கின்றனர்.
வெற்றிலைப் பாக்கு வைத்து பூஜை நடந்த போது, சுபகாரியங்கள் அதிகம் நடந்தன.
அதற்கு முன் விபூதி வைத்து பூஜை நடந்த போது, நாட்டில் அதிகப்படியான கோவில்களில் குடமுழுக்கு நடந்தது; மக்களிடம் ஆன்மிக ஈடுபாடு அதிகரித்தது.
அதற்கு முன் மண்ணை வைத்து பூஜை நடந்த போது, ரியல் எஸ்டேட் தொழில் செழித்து பூமி விலை பல மடங்கு அதிகரித்தது.
தற்போது மணல் வைத்து பூஜை நடப்பதால் மணல் பற்றாக்குறை ஏற்பட்டு, ஆற்று மணல் விலை பல மடங்கு அதிகரிக்குமென நம்பிக்கை கொள்கின்றனர் பக்தர்கள்.
என்ன பொருள் பூஜையில் வைக்க வேண்டுமென்று பக்தர்கள் கனவில் வந்து ஆண்டவர் உத்தரவு கொடுப்பாராம். கலியுக அதிசயம்.
மூலவர் சந்நிதியில் முருகப்பெருமான் தனித்துள்ளார். வள்ளி, தெய்வானை சந்நிதிக்கு முருகன் சந்நிதிக்கு பின்புறம் நூறு படிகளை கடந்து செல்ல வேண்டும்.
அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் திருமணம் செய்ய தவம் செய்யும் காட்சி வள்ளி, தெய்வானை திருவுருவங்கள் ஒரே கல்லில் பிரபையுடன் வடிக்கப்பட்டுள்ளது.
அங்கு நிறைய ஆடுகள் காணக் கிடைத்தன.அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் திருமணம் செய்ய தவம் செய்யும் காட்சி வள்ளி, தெய்வானை திருவுருவங்கள் ஒரே கல்லில் பிரபையுடன் வடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் பகவானின் வாகனம் ஆடு.
படிகளின் சம தளத்தில் கொம்புகளும் ,தாடியும் கொண்டு பெரிய ஆடு அசை போட்டவாறு கம்பீரமாக அமர்ந்திருந்த கோலம் வியக்க வைத்தது.
படிகளின் சம தளத்தில் கொம்புகளும் ,தாடியும் கொண்டு பெரிய ஆடு அசை போட்டவாறு கம்பீரமாக அமர்ந்திருந்த கோலம் வியக்க வைத்தது.
அதனுடன் படம் எடுத்துக் கொண்டோம். நிறைய சினிமாப் படங்களில் நடித்திருக்கும் போல. அருமையாக போஸ் கொடுத்து பயப்படாமல் பழகியது.
சென்னிமலை ஆண்டவருக்கு அடிவாரத்திலிருந்து திருமஞ்சன (அபிஷேகம்) தீர்த்தம் இரண்டு பொதிகாளைகள் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது. இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயமும் இங்கு நடந்தது.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடி படிக்காசு பெற்ற திருத்தலம்
அருட்சிறப்பை புலனாக்கிறது.
அருட்சிறப்பை புலனாக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது..
சிவன் மலைக்கு சுரங்கப்பாதை இருப்பதாக அறிய முடிகிறது....
.
.
தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் உள்ளது.
அடர்ந்த மரங்கள் மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில்.மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகம். .....
தல விருட்சமாக புளியமரம் வளர்ந்தோங்கி காட்சி அளிக்கிறது.
அற்புதமான அபிஷேகமும்,அலங்காரமும்,ஓதுவாரின் கணீர்
குரலிலான பாடலும் இப்பொது நினைத்தாலும் கர்ப்பக்கிரகத்தின்
முன் அமர்ந்திருந்த அந்த நேரத்திற்கு மனம் சென்று விடுகிறது.
குமரப்பெருமாள், கொள்ளித்தலையில் எறும்பது போல் தவிக்கும் மனதிற்கு அஞ்சுதல் தவிர்த்து ஆறுதல் வழங்குகிறான்.
சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த சேயோன் முருகன், உலகெங்குமுள்ள தேவாலயங்களில் அமர்ந்து அரசோட்சுகிறான்.
வள்ளிக்கு வாய்த்தவன் தெயவயானை மணாளன் வினைகள் களைவான்.
திருமால் தனக்கும், திருமகளுக்கும் பிரிய மருகன் செல்வம் செழித்து வாழ்வு வளம் பெறச் செய்வான்.
- அண்ணாமலை ரெட்டியாரின் சென்னிக்குள வாசன் என்று தொடங்கும் காவடிச்சிந்துப் பாடல் காவடி ஏந்துபவரையும், கேட்பவரையும்,பார்ப்பவரையும் தன்னிச்சையாக ஆடவைக்கும்.
அடேயப்பா....
ReplyDeleteஎவ்ளோ பெரிய பதிவு... எவ்வளவு அழகாக தொகுத்து அளிக்கப்பட்ட சென்னிமலை செந்தில் குமரனை பற்றிய செய்திகள்... இடையிடையே எவ்வளவு புகைப்படங்கள்...
மீண்டும்... மீண்டும் பார்த்து வியந்த மற்றுமொரு சிறப்பு பதிவு இது...
//மேருவின் சிகரப்பகுதிகள் முறிந்து பல இடங்களில் விழுந்தது. அதில் ஒரு பகுதியே சென்னிமலை.//
இப்போது படித்த பிறகு தான் தெரியும்.
//அலங்கார முடிகிரணம் கொண்டு, கோல மயிலின் வண்ணச்சிறகு போல் கிழக்கு வானம் வண்ண,வண்ண கோலம் போட்டு குன்று தோராடும் குமரனின் அருட் கோலம் காணத் தயாராகியது//
கலக்கல் வர்ணனை...
//இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். //
நல்ல செய்தி... இறையருளுடன் இணைந்து நல்ல ஆரோக்கியமும் கிடைக்கிறது...
//மணல்மேட்டை தோண்டிப் பார்த்தபோது முருகப் பெருமானின் கல் விக்கிரகத்தை கண்டு மனம் மகிழ்ந்தார்//
ஆஹா... தெய்வ தரிசனம் கண்டார்..
//சகோதரர்களுக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே இவ்வாறு செய்யப்படுகிறது.//
இறையின் பெயரால் ஒரு அருமையான போதனை...
//சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த சேயோன் முருகன், உலகெங்குமுள்ள தேவாலயங்களில் அமர்ந்து அரசோட்சுகிறான்.//
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@
ReplyDeleteR.Gopi said...
அடேயப்பா....
எவ்ளோ பெரிய பதிவு.//
சுருக்க மனம் வரவில்லை. இன்னும் முழுமையாகக் கூறிய திருப்தி வரவில்லை. நிறைய காட்சிகள் கண்முன் நிற்கின்றன.
முழுமையாகப் படித்து, உடனே பின்னூட்டமிட்ட தங்களுக்கு நன்றி ஐயா.
முருகன் அருள் முன்னிற்க எழுதியிருக்கிறீர்கள். நான் இன்னும் சென்னிமலை சென்றதில்லை. போகவேண்டும் என்ற ஆசையை தந்தது உங்கள் பதிவு. நன்றி. ;-)
ReplyDeleteபடி ஏறிச் செல்லவும் பாதை உண்டு, வாகனத்தில் செல்லவும் வழி உண்டு. நானும் சில முறை சென்றிருக்கிறேன்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ.
This comment has been removed by the author.
ReplyDeletenice pics...
ReplyDeleteஉங்களுடைய பதிவு சென்னி மலை சென்று முருகனை தரிசனம் செய்து வந்த திருப்தியை தந்தது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான கோயில் தரிசனம்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@ RVS said...//
ReplyDeleteசென்று முருகனைத் தரிசித்து வாருங்கள்.நன்றி.
@நிகழ்காலத்தில்... said...//
ReplyDeleteஆமாங்க. நடந்து படியேறி வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள். நன்றி.
@ சமுத்ரா said...
ReplyDeletenice pics...//
நன்றிங்க.
@கோவை2தில்லி said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க.
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஅருமையான கோயில் தரிசனம்...//
நன்றிங்க.
உங்கள் விமர்சனங்கள் பக்தியை வரவைக்கும்போல இருக்கே.போய்ப் பார்த்த ஒரு உணர்வு !
ReplyDelete@ஹேமா said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க .
சென்னிமலை என்றதும் எனக்கு " சென்னிக் குளநகர் வாசன் " என்னும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடி சிந்து நினைவுக்கு வரும். மிக அருமையான பதிவு. அறுபடை வீட்டுக்கும் அடிக்கடி செல்லும் நான் இந்த தலத்துக்கு சென்றதில்லை. சென்னிமலை முருகன் என்னை அழைக்கிறான். ( உன்னை விடுவேனோ படித்தீர்களா ?)
ReplyDeleteVery good write up dear.
ReplyDeleteVery pretty pictures.
I decided to go here at my next visit to Coimbatore.
viji
அருமையான பதிவுங்க
ReplyDeleteசென்னி மலை குமரன் கண்டுகொண்டோம்.
ReplyDeleteஎன்னை வியந்து போகச்செய்த சில வரிகள்:
ReplyDelete//நீலவண்ண மயிலில் முருகன் ஒரு நொடி அதனில் இரு சிறகு மயிலில் உலகம் வலம் வரப்புறப்பட்ட காட்சியாய் எழிலுற விளங்கியது.//
//கந்தர் சஷ்டி கவசத்தில் "சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என்ற புகழ்மிக்க வரியையும்
தந்துள்ளார்.
சிரம் என்றால் "சென்னி' (தலை). "கிரி' என்றால் "மலை'. மலைகளில் எல்லாம்
தலையாய மலை என்பதால் இப்படி பெயர் சூட்டியுள்ளனர்.//
மிக நீண்ட, மிக விளக்கமான, இந்த முருகனைப்பற்றிய செய்திகள் அளித்துள்ள உங்கள் பொற்கரங்களை மானசீகமாக என் கண்களில் ஒத்தி வணங்குகின்றேன்.
மிகவும் பொறுமையாக, பக்திப்பரவசத்துடன், வரிக்குவரி ரசித்துப்படித்து மகிழ்ந்தேன். மனதில் வாங்கிப்படிக்க நீண்ட நேரம் ஆனது.
அதனால் தான் தாமதமாகப் பின்னூடம் அளிக்க வந்துள்ளேன்.
உங்களுடைய சிரத்தையும், கடுமையான உழைப்பும், நன்றாகவே உணர முடிகிறது.
தினமும் இதுபோல பல தகவல்கள் தரும் தாங்கள், நீடூழி வாழ்க; நடுவில் கொஞ்சமாவது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்! அன்புடன் vgk
April 6, 2011 2:14 PM
345+2+1=348
ReplyDelete