Saturday, April 2, 2011

Griffith University



எனது மகன் தான் படிக்கும் பல்கலைக் கழக வளாகத்தைக் காண அழைத்துச் சென்றார்.


ஒரு சிறு அழகிய குன்றில் இயற்கைச் சூழலில் அற்புதமாக எழில் நிறைந்ததோற்றத்தில் தவழும் குளிரகாற்று தழுவ மெல்லிய பனிப்போர்வை போர்த்துக் காட்சியளித்தது.


எங்கும் பலவகை மலர்ச் செடிகளும், பச்சைப்பட்டாடை உடுத்திய மரங்களுமாக ரம்மியமான சூழல்.
உடும்பு போல் ஒருவகை விலங்கும்,மற்றும், சில விலங்குகள் பறவைகள்காணக்கிடைத்தன.
உயிரினங்களுக்கு தொல்லை தரக்கூடாதாம். உயர்ந்தோங்கிய மரங்களில் வண்ணப்பறவைகள் தாங்களும் பாடம் படிப்பதாக அறிவித்துக் கொண்டிருந்தன. 
பல்கலைக்கழக நூலகம் அருமையாக இருந்தது. காதில் அடைத்துக் கொள்ள, ரப்பர் அடைப்பான்கள், ஒரு பட்டனைத்தட்டினால் இரண்டு வருகிறது. காதில் அடைத்துக் கொண்டு மாணவர்கள் வெளிப்புற சத்தத்தை மட்டுப்படுத்தி,ஆழ்ந்து படிக்கிறார்கள்.

கணிணி அறை நிறைய கணிணிகளை இயக்கியவாறு மாணவர்கள் அனைத்து வயதிலும் இருந்தார்கள்.
பதினாறு வயது வரையேபெற்றோர் அரவணைப்பில் இருப்பவர்கள்,  பிறகு ஏதாவது வேலையில் சேர்ந்து சம்பாதித்தவாறேதான் படிக்கிறார்களாம்.
நிறைய சீன ஜப்பானிய மாணவ மாணவியர்களைப் பார்க்கமுடிந்தது. பல வண்ணப்பூக்களாலான அழகிய மாலை போல அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, இந்திய, மற்றும் பல்வேறு தேச மாணவர்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது மறக்க முடியாத அனுபவம்.


உணவகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாணவர்களின் குடியிருப்புப் பகுதி அனைத்து வசதிகளும் நிரம்பி இனிமயாக படிக்கும் சூழலில் அமைந்திருந்தது.


 சுற்றிலும், பூத்துக்குலுங்கும் மலர்ச் செடிகளும்,யூகலிப்டஸ் மரங்களின் இனிய காற்றும், தூய்மையான சுகாதாரமான வளாகமுமாக கருத்தைக் கவர்ந்தது.
ஆரம்பநாட்களில் மாணவர்கள் அறிமுகத்திற்காக விலங்கியல் பூங்காவில் இருந்து பெரிய வாகனத்தில் கூண்டுகளில் அடைக்கப் பட்ட விலங்குகளைக் கொண்டு வந்து ஒரு பெண்மணி பழகவைத்தாராம்.


 என் மகன் கழுத்தில் பாம்பு, மற்றும் விலங்கினங்களுடன் புகைப்படம் எடுத்து வந்து காட்டினார்.அவை பிரத்யோகமான் ஷாம்பு மற்றும் சோப்பு உபயோகித்து குளிக்கவைத்து வாசனைத்திரவியங்களாலும் குளிப்பாட்டப்பட்டிருக்குமாம். 

விலங்களிடமிருந்து மனிதருக்கோ, மனிதரிலிருந்து விலங்குகளுக்கோ நோய் தொற்றி விடாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்தபிறகே கூண்டுகளிலடைக்கப்பட்டு, பழக்கப்படுத்தி, பல்வேறு தேச மாணவர்கள் பழகும் விதமாகவும்,விலங்குகளையும், மனிதர்களையும் நேசிக்கக் கற்றுத்தரும் முகாந்திரமாகவும் இவ்வகை முகாம்கள் வருடந்தோறும் நடத்தப்படுகின்றனவாம்.

எனக்குத்தான் மிகப்பெரிய குறை இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லையே என்று.
என்மகன் அதனால் என்ன அம்மா  நீங்கள் பெற்ற எல்லா மகன்களையும் இந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி படிக்க வைத்து பட்டமும் பெறவைத்து விட்டது சாதாரணமான விஷயமல்லவே. நாங்கள் இங்கு தந்தையின் பெயராலேயே இந்நாட்டு வழக்கப்படி அழைக்கப்படுவதும் அப்பாவிற்கும்,உங்களுக்கும் கிடைத்த பாராட்டாகவே நாங்கள் நினைக்கிறோம் என்று சமாதானம் கூறினார்.
ஆண்டின் துவக்க மாதத்தில் வெள்ளம் வந்தபோது இந்தவளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகாம் அமைத்து, தங்குமிடமும், உணவும், மற்ற வசதிகளும் குறைவறச் செய்து கொடுத்து பாராட்டுப்பெற்ற குழுவில் என் மகன்களும் பங்கு பெற்றதில் பெருமிதம் தான்
.



19 comments:

  1. உங்களுக்கு மட்டும் இங்கே படிக்கலைனு குறை இல்லீங்க.. எங்களுக்கும் தான்.. என்ன ஒரு அருமையான இடம்.. இந்தியாவில் இம்மாதிரி இடம் வேண்டும்.. இருக்கா.? வழக்கம்போல படங்கள், உங்கள் மகன் அனைத்தும் அருமை.. அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்கள்..

    ReplyDelete
  2. ஆஹா, மிகவும் அருமையான விஷயங்கள் தான். நீங்கள் மிகவும் கொடுத்துவைத்த நல்ல அன்னை.
    அங்கு படிக்கும் உங்கள் மகனும் மிகவும் கொடுத்து வைத்தவர் தான்.

    (மானவ்ர் தவறு, மாணவர் தான் சரி, எனவே எழுத்துப்பிழையை சரி செய்யவும்)

    உங்கள் படம் இதுதான் என்று குறிப்பிட்டுச்சொல்லாதது எங்களுக்கு வருத்தமே.


    “மகன் தந்தைக்கு/அன்னைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை/அன்னை என்நோற்றான்(ள்) கொல் எனும் சொல்” என்ற குரல் தான் என் நினைவுக்கு வந்தது.

    அனைத்துமே அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. >>எனக்குத்தான் மிகப்பெரிய குறை இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லையே என்று.

    இந்த மாதிரி போஸ்ட் போட்டா படிக்கற எல்லாருக்கும் அந்த குறை தான்.. ஹா ஹா .. ஆனா ஒண்ணு மட்டும் உண்மைங்க.. நம்மால முடியாததை நம்ம வாரிசுகள் செய்யும்போது நாமே செஞ்ச மாதிரி இருக்கும்.. நல்ல அம்மா... கொடுத்து வெச்ச மகன்..

    // super aa sonarungka Senthil kumar..:))

    ReplyDelete
  4. @ தம்பி கூர்மதியன் said...//
    இந்தியாவில் இம்மாதிரி இடம் வேண்டும்.. இருக்கா.?
    தேடித்தான் பார்க்க வேண்டும்.
    தங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. @வை.கோபாலகிருஷ்ணன் sai

    “மகன் தந்தைக்கு/அன்னைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை/அன்னை என்நோற்றான்(ள்) கொல் எனும் சொல்” என்ற குரல் தான் என் நினைவுக்கு வந்தது.
    குறளை தங்கள் குரலில் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.நன்றி.

    ReplyDelete
  6. @தேனம்மை லெக்ஷ்மணன் sa//
    கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. அருமையான இடம். மகனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. பல சுவையான விடயங்கள். காதுக்கு பட்டன்...
    அங்கு கல்வி கற்கும் மகனுக்கும், அவனை அனுப்பி வைத்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மகனுக்கு வாழ்த்துகள்.
    கொடுத்து வெச்ச மகன்...

    ReplyDelete
  10. என்ன ஒரு அருமையான இடம்.. உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மேன்மேலும் சிறக்க உங்கள் மகனுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நேரில் போய் வந்த உணர்வை கொடுத்தது படங்களும் உங்கள் வர்ணனையும்... நன்றிங்க அம்மா...

    //நாங்கள் இங்கு தந்தையின் பெயராலேயே இந்நாட்டு வழக்கப்படி அழைக்கப்படுவதும் அப்பாவிற்கும்,உங்களுக்கும் கிடைத்த பாராட்டாகவே நாங்கள் நினைக்கிறோம் என்று சமாதானம் கூறினார்//
    நெகிழ வைத்த வார்த்தைகள்...

    ReplyDelete
  13. @ அப்பாவி தங்கமணி said...//
    நெகிழ வைத்த வார்த்தைகள்./
    ஆனந்தம் கொள்ள வைத்தீர்கள்.

    ReplyDelete
  14. @ goma said...//
    நல்வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  15. @ தோழி பிரஷா said...//
    கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  16. @ மாதேவி said...//
    நன்றிங்க.

    ReplyDelete
  17. @Dr.எம்.கே.முருகானந்தன் said...
    பல சுவையான விடயங்கள். காதுக்கு பட்டன்...
    அங்கு கல்வி கற்கும் மகனுக்கும், அவனை அனுப்பி வைத்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.//
    வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete