Tuesday, April 26, 2011

தழைக்க...தழைக்க...

எங்கும் நிறைந்த இறைவனை அருள் செறிந்த இடங்களில் தெய்வீகமான தன்மையை உணர்ந்து தரிசிக்கிறோம்.

பசுவின் உடலெங்கும் ரத்தம் ஓடினாலும்,பாலாக மாறி அமிர்தமாக வர்ஷிப்பது அதன் மடிக்காம்புகளில் தான்.!
உலகெங்கும் சர்வவியாபியாக இருக்கும் இறைவன் தான் என்றாலும் அன்பும்,பக்தியும்,தியாகமும்,சத்தியமும் உள்ள இடங்களில் பசுவின் மடி பால் போல் அருள்பாலிகிறான்.

பெரும்பாலான கோவில்களின் தலபுராணங்களை ஆழ்ந்து வாசிக்கும் போது அங்கு பசுக்கள் தானாகவே பாலை வர்ஷித்து விட, பசுவிடம் பால் கறக்கும் போது நன்கு மேய்ந்த பசுவின் மடியில் பால் காணாமையால்,அந்த குறிப்பிட்ட பசுவை பின் தொடர்ந்து சென்று ,அது பால் வர்ஷித்த இடத்தை சோதிக்க -அங்கே, சிவலிங்கமோ, அம்மனோ,முருகனோ, விஷ்ணுவோ -வழிபடத்தக்க புனிதமான விக்ரகங்கள் கிடைப்பதை நிறைய வியந்து போற்ற முடிகிறது.

சிருங்கேரி மடம் ஸ்தாபிக்க ஆதிசங்கரர் தேர்ந்தெடுத்த இடம் ,அவர் கண்ட அற்புதக் காட்சியின் சிறப்பால் தான்.


[Laksha_deepam.JPG]
நல்ல பாம்பு படம் எடுத்து,தன் நிழலை தவளைக்குக் கொடுத்து இளைப்பாறச் செய்த தியாகத்தால்.கொடிய நாகப்பாம்பு தவளையை விழுங்குவதை விடுத்து,தன் நிழலைக் கொடுத்து உதவுகிறதென்றால்,ஜீவபேதத்தை மறந்த உயர்ந்த ரிஷிகள் இங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.அவர்களுடைய தியாக உணர்வே. vibration -அந்த பாம்புக்குக் கிடைத்திருகக வேண்டும்.

துறவிகளுக்கான மடாலயம் அமைத்தார் சிருங்கேரி மடம் தோன்றியது. அங்கு சென்று திரும்பும் போதெல்லாம் அதிர்வலைகளை இன்றும் உணரலாம்.

விக்ரமாதித்தன் சிம்மாசனம் புதைந்த இடத்தில் நின்ற மனிதனின் மனநிலை மாற்றமே அரசனுக்கு சிம்மாசனத்தைக் காட்டிக் கொடுத்தது.
கட்டபொம்மன் ஏழு வேட்டை நாய்களுடன் வேட்டைக்குச் சென்றார்.
 http://4.bp.blogspot.com/_V2nStYZjvpI/TDoEnuABIhI/AAAAAAAAChs/H_QzPHkV1QU/s1600/Project_Page000.jpg

 http://www.tamilolli.com/wp-content/uploads/2010/05/tblfpnnews_92151606083.jpg
 முயல்களை விரட்டிச் சென்றன வேட்டை நாய்கள்.குறிப்பிட்ட இடத்தில்  ஓடுவதை நிறுத்திய முயல்கள் தைரியமாக வேட்டைநாய்களை எதிர்த்துத்  துரத்துவதை வியப்புடன் கவனித்த கட்டபொம்மன்,  வீரத்திற்குப் பெயர் பெற்ற பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை எழுப்பினார்.
 http://1.bp.blogspot.com/_J34Obj-wsLA/TAEbueSc49I/AAAAAAAAA2s/T2s-9dHBlb0/s1600/KATTABOMMU.jpg
பக்திமுனிவர் போகர் சமாதி அடைந்த இடத்தில் தான் பழனிமுருகன் தரிசனம் கிடைக்கிறது.

பாம்பாட்டிசித்தர் சமாதி அடைந்த மருதமலையில் தான் மருதமலை ஆண்டவர் அருள் காட்சி அளிக்கிறார்.
ராகவேந்திரரின் சமாதியான துங்கபத்திராவின் மந்த்திராலயக் கரையில் தான் பிருந்தாவனக் கண்ணன் ஆனந்தக்காட்சி அருள்கிறர்.
ஒரு ஊரில் வயதான ஞானம்மிக்க பெரியவரிடம் கோவில் கட்ட தீர்மானித்தவர்கள் இடம் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள்.அவர் அவ்வூரில் நடைபெற்ற உண்மைச் ச்ம்பவத்தை உரைத்தார்.

ஒற்றுமையாக வாழ்ந்த அண்ணன் தம்பியரில் அண்ணனுக்குத் திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் பிறந்தன.

திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்த தம்பி அண்ணன் குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார்.

இருவருக்கும் தந்தை கொடுத்த நெல் வயல்கள் தனித்தனியே விளைந்தன.

அண்ணன் நமக்கு வயதான காலத்தில் உதவி செய்ய மனைவி குழந்தைகள் என்று பந்தங்கள் இருக்கிறது.ஆனால் தம்பிக்கு இல்லையே. எனவே தம்பி சுகமாக வாழ வாரம் ஒரு நெல் மூட்டையை இரவில் தம்பியின் களஞ்சியத்தில் போட்டு வந்தான்.

தம்பியும் அண்ணனுக்கு பெரிய குடும்பம் .எனவே அதிகத் தேவையிருக்கும். தான் ஒற்றை ஆள் தானே.தந்தை,தாய்க்குப் பின் தாயும் தந்தையுமாய் இருக்கும் அண்ணன் சுகமாய் வாழட்டும் என்று வாரத்தில் ஒரு நெல் மூட்டையை சுமந்து சென்று யாருக்கும் தெரியாமல் அண்னனின் நெற்களஞ்சியத்தில் கொட்டி வந்தான்.

ஒரு நாள் இரவு இருவரும் மூட்டைகளுடன் எதிரெதிரே ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டனர்.

நிலைமையை உணர்ந்து ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.  அவர்களின் அன்பு ஆயிரம் மடங்கு பெருகியது.

தியாகத்தோடு கூடிய அந்த அன்பு கடவுளுக்கு நிகரானது.

அந்த இரவில் அவர்கள் சந்தித்த இடமே கோவில் கட்டுவதற்குச் சிறந்த இடமென்று அறிவுறுத்தினார் ஞானம் மிக்க பெரியவர்.

அங்கே எழுந்தது ராம லட்சுமணர் கோவில்.

இப்படிப்பட்ட உணர்வில் சிறந்த இடங்களைத்தான் ஆலயம் எழுப்ப தேர்ந்தெடுக்கின்றனர்.
தஞ்சையும்,மதுரையும்,பத்ரியும் கன்னியாகுமரியும்,

கேதாரமும்,ராமேஸ்வரமும்,இன்னும் பலப்பல ஆலயங்களும் அப்படித் தேர்ந்தெடுத்து நிர்மாணித்த இடங்கள் தான்.
http://2.bp.blogspot.com/_PBT9eH6cCGw/TBt6N1wNnHI/AAAAAAAAEv4/pWVd63ld9to/s400/Mdutmpl.jpg
ஆகவே தான் அவை காலத்தை கடந்தும்,வென்றும் நமக்கு அருள்பாலிக்கின்றன.

அதைவிடுத்து,உயிர்ப்பலியும்,ரத்தக்குளங்களும்,வெறுப்பும்,
மதத்துவேஷங்களும், வேற்றுமைகளும் ஆர்ப்பரிக்கும் நெகடிவ் உணர்வுகள் அலைவீசவிட்டு ஒன்றை அழித்து ஒன்றைக் கட்டினால் நிலைத்து நிற்குமா என்ன??இறைவன்தான் அங்கு குடியிருப்பானா???  
    
http://4.bp.blogspot.com/_F0LG01uRFEY/S-ivkXfkzcI/AAAAAAAAAM4/d3TdhsxecD4/s1600/gopuram.jpg

16 comments:

 1. நல்ல பதிவு.
  நிறைய படங்கள்.
  நிறைய விஷயங்கள்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  ReplyDelete
 2. ஒருசிலவற்றைப்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், பலவிஷயங்கள் கோர்வையாக அழகாக தாங்கள் கொடுத்துள்ள விதம் மிகவும் அருமை.

  பசுவின் மடியில், பாலாக மாறி அமிர்தமாக வர்ஷிப்பது போலவே, தங்களின் இந்தப்பதிவும், படங்களும், அமிர்தமாகவே உள்ளன.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 3. Aha!!!!!!!!!!!!!!
  Very well said Rajeswari.
  Anbe kadavul.
  panam sambadikkum avasaratthil anbu oru marrttu kuraikirathu ellaiya?
  viji

  ReplyDelete
 4. romba azhagaana pathivu....
  padiththu mudithathum, ada, aamam thane nnu solla vechathu..

  ReplyDelete
 5. ஒரு புதுமையான அனுபவம் இந்த பதிவு . புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை .

  ReplyDelete
 6. ராமர் அனுமார் படங்கள் மிக ஆசாகு...அருமையான கதையுடன் அனுபவ பகிர்வு அருமை

  ReplyDelete
 7. அதைவிடுத்து,உயிர்ப்பலியும்,ரத்தக்குளங்களும்,வெறுப்பும்,
  மதத்துவேஷங்களும், வேற்றுமைகளும் ஆர்ப்பரிக்கும் நெகடிவ் உணர்வுகள் அலைவீசவிட்டு ஒன்றை அழித்து ஒன்றைக் கட்டினால் நிலைத்து நிற்குமா என்ன??இறைவன்தான் அங்கு குடியிருப்பானா???

  அருமையான வரிகள்.
  மொத்தத்தில் அனைத்துத் தெய்வதரிசனம் கிட்டியதில் எனக்கு மகிழ்ச்சி.நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  ReplyDelete
 8. ஏழு நாட்களில் ஒரு பதிவைப் போடவே நானெல்லாம்
  உண்மையில் பாடாய்தான் படுகிறேன்
  எப்படி உங்களால் படங்களோடு தரமான பதிவுகளை
  27 நாட்களுக்கு 27 தர முடிகிறது
  நீங்கள் தனியாகத்தான் செய்கிறீர்களா அல்லது
  குழுவாகச் சேர்ந்துசெய்கிறீர்களா
  கொஞ்சம் பிரம்ம ரகசியத்தைதான் கசிய விடுங்களேன் பிளீஸ்
  ஸூப்பர் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. dear thozi,
  Your depiction is a good one regarding spiritualism.

  ReplyDelete
 10. ஒவ்வொரு இடத்திற்கும் அதிர்வுகள் உள்ளன என்று ஒப்புக்கொள்கிறேன். கண்ணகி நீதி கேட்ட விசயத்தில் பாண்டிய அரசன் மாண்டுபோனான். அதற்கு காரணமான பொற்கொல்லர்கள் அனைவரையும் அடுத்து வந்த அரசன் கொன்று குவிக்க உத்தரவிட்டான். அக்கசாலை என்று அழைக்கப்பட்ட - பொற்காசுகள் தாயாரிக்கும் இடத்திலிருந்த பொற்கொல்லர்கள் கொல்லப்பட்டனர். அந்த இடம்தான் இன்றைய தூத்துகுடி. அந்த மண்ணின் மைந்தர்களின் கோபம் இன்றைக்கும் பேர் பெற்றது. ரொம்ப ஆழ்ந்த கருத்துடைய பதிவு.

  ReplyDelete
 11. @ Ramani said...//
  Ramani said...
  ஏழு நாட்களில் ஒரு பதிவைப் போடவே நானெல்லாம்
  உண்மையில் பாடாய்தான் படுகிறேன்
  எப்படி உங்களால் படங்களோடு தரமான பதிவுகளை
  27 நாட்களுக்கு 27 தர முடிகிறது
  நீங்கள் தனியாகத்தான் செய்கிறீர்களா அல்லது
  குழுவாகச் சேர்ந்துசெய்கிறீர்களா
  கொஞ்சம் பிரம்ம ரகசியத்தைதான் கசிய விடுங்களேன் பிளீஸ்
  ஸூப்பர் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  April 26, 2011 7:22 PM

  I am one women army. காலையில் காபியுடன் கணிணி முன் அமர்ந்து பதிவிட்டு படங்களைச் சேர்ப்பேன். கணிணியில் வேறொன்றும் தெரியாது. படங்களுக்கும் எழுத்துக்களுக்கும் சில நேரங்களில் வரும் இடைவெளியை மகள் நிரப்பித்தருவார். வீட்டில் வேறு யாருக்கும் என் பதிவைப் படிக்கும் அளவிற்கு தமிழ் ஆர்வமும்,நேரமும் கிடையாது.பிளாக் என்னும் வார்த்தையை வீட்டில் உபயோகித்தால் டென்ஷன் ஆகிவிடுவார்கள்.
  - Show quoted text -

  ReplyDelete
 12. வித்தியாசமான சுவாரஸ்யமான தகவல்களோடு கூடிய பதிவு இதுவும். முன்பு நான் கேட்ட கேள்வியையே ரமணியும் கேட்டுள்ளார். பதிலுக்கு நன்றி!

  ReplyDelete
 13. புது புது தகவல்கள்.பகிர்வு அருமை.

  ReplyDelete
 14. மேடம்! உங்களது ஆர்வத்தை பாராட்டுகிறேன். நானும் ப்ளாக் எழுத வந்த புதிதில் தினம் ஒரு பதிவு இட்டேன். அப்புறம் யோசித்து பார்த்ததில் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் பதிவிட்டால் நிறைய பேர் படிக்க எதுவாக இருந்தது.

  உங்களது பதிவுகளில் விஷயங்கள் ஆயிரம். இந்தப் பதிவில் கூட கோயிலோ, பிருந்தாவனமோ, அரசவையோ எது வாக இருந்தாலும் அது அமைவதற்கு உகந்த இடம் பார்த்து அமைத்தால் அதில் சான்னித்தியம் இருக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அற்புதம்.

  என்னைப்போல கதை விடும் ஆசாமிகள் தினமும் ஒரு பதிவு எழுதினால் பரவாயில்லை. ஆகையால் இரண்டு நாளைக்கு ஒன்று என்று போட்டால் எங்களுக்கும் படிக்க எதுவாக இருக்கும். இது ஒரு ஆலோசனை மட்டுமே. உங்களை நான் தடுக்கவில்லை. தினம் ஒரு பதிவிட்டாலும் படிப்போம். ஆனால் கொஞ்சம் காலம் கடந்துவிட்டால் உங்கள் வலைப்பூவில் அடுத்து புதிதாக ஒன்று முளைத்துவிடுகிறது.

  புரிதலுக்கு நன்றி. ;-))

  ReplyDelete
 15. ;)
  சுக்லாம்பரதரம் விஷ்ணும்
  சசிவர்ணம் சதுர்புஜம்!
  ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
  ஸர்வ விக்நோப சாந்தயே!!

  ReplyDelete