Sunday, April 3, 2011

பஞ்சவர்ண கிளிப் பூ


பூப்பூவாய் பூத்திருக்கும் ஆயிரக்கணக்காண பூக்களில் விந்தையான மலர்களும் காணக்கிடைக்கின்றன. வண்ணத்துப் பூச்சியின் அழகும்,பட்டுப்போல் மென்மையும்,மனத்தை கொள்ளை கொள்ளச்செய்யும் சிந்தை மயக்கும் வசீகர வாசனையும், தேனும் நிரம்பி இருக்கும் கிளிப்பூ காண கண் இரண்டு போதாது.


தாய்லாந்தில் காணப்படும் `பேரட் பிளவர்' என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது.

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது. அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ. இந்த பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது.



இறைவன் திருமறையில்..
நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது
என்ற குர் ஆன் வசனம் போல் எண்ணி முடியாத அதிசயங்கள் காட்சியாக விரிகின்றன.

 கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் ரசித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.
ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, 
இயற்கையின் பேரதிசயங்களை. 
அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ. 
இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.

6 comments:

  1. //ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை. அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ. [Image]இயற்கையை ரசிக்கும் யாரும் கவிஞராகலாம். கவிஞர் ஆனாலும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்படலாம், அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது.//

    நம் நட்டில் சிவலிங்கத்துடன், பாம்பு போல அமைந்த நாகலிங்கப்பூவை பார்த்து அதிசயித்துள்ளேன்.

    இந்த பஞ்சவர்ணக்கிளிகள், அதுவும் மூக்கு வளைத்து அழகியதொரு தனிக்கலரில், பிரமிக்க வைக்கிறது என்னை. சூப்பர்.

    என் ஸ்பெஷல் நன்றிகள் தங்களுக்கு. இதற்காகவே ஆஸ்த்ரேலியா செல்ல விரும்புகிறது என் மனம்.

    பறித்து வந்து இங்கு கோவையில் தாங்கள் வளர்க்க முடியாதா? முயற்சிக்கவும், மேடம். Please.
    அன்புடன் vgk

    ReplyDelete
  2. பொன்மலர்களை பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். தேசிய மலர்க்கான சிறப்பு மலர், அழகாக இருக்கிறது. கிளிமலர், இதன் முன்பு கேள்விப்பட்டு இருக்கிறேன். (National Geographic) மிகவும் அழகான மலர் இது. படங்களுக்கும் தகவல்களுக்கும், மிக்க நன்றிங்க... தொடர்ந்து இப்படி நிறைய செய்திகள் தர வேண்டும்.

    ReplyDelete
  3. I am a flower lover dear.(Of course everything nature make me happy).
    But i never heard about this flower. What a pretty.
    Thanks for the write.
    I felt very happy reading your blog.
    viji

    ReplyDelete
  4. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர்
    வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete
  5. கிளிகளும் படங்களும் அழகோ அழகு. வலைச்சர ஆசிரியர் உங்களை தினசரி அறிமுகப்படுத்துராங்க. நானும் தினமும் வந்து அற்புத்மான படங்களையும் தெரியாத புது புது விஷயங்களையும் தெரிஞ்சுக்கரேன்.

    ReplyDelete