Tuesday, April 5, 2011

சித்தலிங்கேஸ்வரர்


  1.   
ப‌ழனி ம‌லைக்கோவிலின் தென்மேற்கு திசையில் உள்ளது
“போகரின் ஜீவ சமாதி”


இங்கு அவ‌ர் பூசித்த‌ “புவ‌னேசுவ‌ரி அம்ம‌ன் சிலையும்,ம‌ர‌க‌த‌ லிங்க‌மும் இன்றும் பூசையில் உள்ளது

இந்த‌ ச‌ன்னிதியில் இருந்து முருக‌னின் திருவ‌டி நிலைக்கு உள்ள சுர‌ங்க‌ பாதையில் சென்ற‌ போகர் திரும்ப‌வில்லை என்ப‌தும் நாம் அறிவோம்!..


உலகின் முத்ல் நவபாஷாண முருகன் ,பழனி முருகன். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான் போகரால் உருவாக்கப்பட்டது.

அவருக்குப் பிறகு ந்வபாஷாசாணத்தில்  அமைக்கப்பட்ட சிலை கோவை அருகில் வெள்ளளூரில் உள்ள சித்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரம்மானந்த சுவாமிகளால் அமைக்கப் பட்டிருகிறட்து..

மகிமை மிக்க சிவ பாஷாண சிவலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள எட்டடி லிங்கத்தின் உள்ளே நவபாஷண லிங்கம் செய்ய பத்து வருடம் அகியதாம்.

லிங்கத்தின் ஒரு பாஷாணம் செய்வதற்கு ஒரு ஆண்டு ஆகுமாம்.

அந்த வகையில் ஒன்பது பாஷாணம் செய்ய ஒன்பது ஆண்டுகள் ஆயினவாம்.
அதன் பின்னர் பாஷாணத்தில் உள்ள விஷத்தன்மை அகற்றி எடுத்து அமிர்தமாக்குவதற்கு ஒரு வருடம் தேவைப்படுகிரது.

பிறகுதான் பாஷாணத்தை சிவலிங்க வடிவில் அமைத்திருக்கிறர்கள்.

பிரம்மானந்த சுவாமிகள் இந்த லிங்கத்தை பத்து ஆண்டுகள் வீட்டில் வைத்து  தினமும் பூஜைகள் செய்தார்.

பிறகு மக்களின் நன்மை கருதி ஒரு கோவில் கட்டி சிவலிங்கத்துள் இந்த நவபாஷணலிங்கத்தை வைக்க முடிவு செய்தார்.

தற்போது நவபாஷாண சிவலிங்கம் இடம் பெற்றுள்ள கோவை வெள்ளளூர் சித்தலிங்கேஸரர் கோவிலில் மேலும் சிறப்பம்சமாக் ,நவக்கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் நாளும் கோளும் ஒன்றும் செய்ய முடியாத நியதிப்படி அமைந்திருக்கிறது. 

அந்தந்தகிரகங்களின் மேல் அதற்கான வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன்.

இலுப்பை மரத்தினால் ஆன கருடக்கம்பம் சிற்ப்புற உருவக்கப்ப்ட்டுள்ளது.

திருக்கோவிலைச்சுற்றி,துர்க்கை,தட்சிணமூர்த்தி,சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கின்றனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி!  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

மரத்தடி விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.!

சரபேஸ்வரர வேள்வி பில்லி.சூன்யம் நோய் நீங்க நடத்தப் படுகிறது.

அபிஷேக விபூதி அணிந்துகொண்டாலோ, சிறிது உட்கொண்டாலோ வியாதிகள் நீங்குகின்றன.

ஆதி வைத்திய நாதன் சிவனல்லவா??

மஞ்சள் நூலில் கட்டபட்ட ம்ஞ்சள் கொம்பு பதினொன்று மலையாகக் கட்டி விற்கிறார்கள்.பைர்வருக்குச் சாற்றி வழிபட்டால் திருமணத்தடைகள்



















21 comments:

  1. நவபாஷாணம்,
    போகரின் ஜீவ சமாதி,
    சித்தலிங்கேஸ்வரர்
    பற்றியெல்லாம்
    அற்புதமாக
    விளக்கி
    எங்களை
    சித்தம்
    குளிர
    வைத்து
    விட்டீர்கள்.

    (ஆட்டுக்கார அலமேலு என்ற படத்தில் ”பருத்தி எடுக்கையிலே...என்னைப் பலநாளும் பார்த்த மச்சான்” என்று ஆரம்பிக்கும் பாடலின் இடையே “சித்தம்குளிரவைத்து சேர்த்தணைக்கப்போறேண்டி” என்று சிவக்குமார் பாடுவார். என்னவோ அந்த நினைவும் வந்து போனது)

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    கோயம்புத்தூர் செல்லும் போது சித்த லிங்கேஸ்வரர் கோவில் சென்று பார்க்கிறோம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அழகான முருகன் படம் !

    உங்கள் பதிவுகளைத் தொடராக வாசிக்க எனக்கு உங்கள் வேகம் போதாது.ஆனாலும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கிறேன் !

    ReplyDelete
  4. இவ்வளவு அழகான படங்களுடன் இவ்வளவு செய்திகளுடன் இவ்வளவு வேகமாகப் பதிவுகள் போட நீங்கள் எவ்வளவு மெனக்கெடவேண்டும். பிரமிக்க வைக்கிறீர்கள் அம்மா.

    ReplyDelete
  5. @ G.M Balasubramaniam said...

    தங்களின் உற்சாகமூட்டும் வாக்கு நிறைவாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  6. @வை.கோபாலகிருஷ்ணன் s//
    உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. @ Rathnavel said.../
    அவசியம் சென்று தரிசியுங்கள் ஐயா.

    ReplyDelete
  8. @ஹேமா said...//
    வசதிப்படி வந்து தரிசியுங்கள் சகோதரி.

    ReplyDelete
  9. @thirumathi bs sridhar said...
    சிறப்பான பதிவுங்க//
    கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. கோவிலின் சிறப்பை அறிந்து வியப்படைந்தேன். நிச்சயம் செல்ல வேண்டும்..

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  11. அட நான் கேட்டது போல ஆன்மீக பதிவா.?? சூப்பரு.!!

    பழனிக்கு போகும்போதெல்லாம் இந்த இடத்தை பாத்துட்டு வருவேன்.. ஆனா போனதில்லை.. படத்தில் அழகு.. பத்தியில் பக்தி.. அனைத்தும் சிறப்பு

    ReplyDelete
  12. @தம்பி கூர்மதியன் said...//

    சக்தி மிகுந்த இடம். சிறிது நேரம் அமர்ந்து கண்மூடி தியானித்துவிட்டு வாருங்கள்.

    ReplyDelete
  13. I had seen the place lllllllllllllloooooooooonnnnnnnnnnnnnggggggggggggggg ago.
    Now you made me to visit again.
    The pictures are really very very nice.
    viji

    ReplyDelete
  14. அடக் கோவையில் இப்படி ஒரு கோவிலா ? தெரியாம போச்சே ... அடுத்த முறை அங்கு போறப்ப போய் பார்க்கிறேன்,.

    ReplyDelete
  15. @ எல் கே said...
    அடக் கோவையில் இப்படி ஒரு கோவிலா ? தெரியாம போச்சே ... அடுத்த முறை அங்கு போறப்ப போய் பார்க்கிறேன்,.//
    அவசியம் தரிசியுங்கள்.

    ReplyDelete
  16. @ நிகழ்காலத்தில்... said...
    கோவிலின் சிறப்பை அறிந்து வியப்படைந்தேன். நிச்சயம் செல்ல வேண்டும்..

    பகிர்வுக்கு நன்றி..
    நிச்சயம் சென்று தரிசியுங்கள்.

    ReplyDelete
  17. @ viji said...//
    மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும், வருகைக்கும் நன்றி தோழி.

    ReplyDelete
  18. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர்
    வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete