ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் வாட்டில் மலர் ஆகும்.
அழகிய மஞ்சள் வர்ணத்தில் பச்சை இலைகளின் பிண்ணணியில் ஆகஸ்டு மாதத்தில் பூக்க ஆரம்பித்து, இலைகளே தெரியாமல் தங்கமயமான பூக்களே நிரம்பி கொள்ளை அழகாய் நகரெங்கும் பூத்துச் சொரிந்து கண்களை நிறைக்கிறது.
வாசம் மனதிற்கு இதமாய் இருக்கிறது. வாசனைத்திரவமான செண்ட் தயாரிப்புக்கு மலர்களைப் பயன்படுத்துகிறார்களாம்.
மரத்தின் பட்டைகளிலிருந்து சாயம் தயாரிக்கிறார்களாம்.
வாட்டில் மரத்தின் விதை ஐஸ்கிரீம் தயாரிப்பிலும், காபி தயாரிப்பதற்கும், ஆல்கஹால் தயாரிக்க,சாக்லேட் ,கேக், ரொட்டி தயாரிக்க,மற்றும் பலவகைகளிலும் பயன்படுகிறது.
Acacia cyclops. Red Eye Wattle)
(
பூர்வ குடிகளான அபார்ஜின் மக்கள் வாட்டில் விதைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
விதைகளை வறுத்தும், வேகவைத்தும்,உண்கிறார்கள்.
மாவாக்கி ரொட்டி தயாரிக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு சத்தான உணவுப் பொருளாகிறது. நார்ச்ச்த்தும்,மாவுச்ச்த்தும் நிறைந்திருப்பதால் சர்க்கரை நோய்க்கு தீர்வு காணும் உணவாக விஞ்ஞான கழகம் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடுகளில் அலங்காரமாகவும், சாலை ஓரங்களில், மற்றும் ஆஸ்திரேலியாவில் திரும்பிய திசை எங்கும் காட்சியளித்து கண்ணுக்கும்,மனதிற்கும் உற்ச்சாகமூட்டி, பலவகைகளிலும் பலனளித்து கற்பக விருட்சமாய் திகழ்வதால் தேசிய மலராக திகழ்கிறது.
மஞ்சள் மலர் மஞ்சள் துண்டு போட்டவரை நினைவு படுத்தினால் கம்பெனி பொறுப்பேற்காது. ஆமாம். முதலிலேயே சொல்லிவிட்டேன்.
நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது தேர்தல் ந்டைபெற்றது. ஒன்றும் சுவாரஸ்யமாய் காட்சிப்படவில்லை.ஒரு சுவர் விள்ம்பரம், வரலாறு காணாத பொதுக்கூட்டம், மைக் செட்,பிரச்சாரம் எதுவுமே காணப்படவில்லை. தொலைக்காட்சியில் இருகட்சி தலைவர்களும் தங்கள் விவாதத்தை அறிவுப்பூர்வமாக எடுத்து வைத்தார்கள். கவனமாகக் கேட்டு தங்கள் முடிவை எடுத்து ஓட்டுப் போடுகிறார்கள்.
காலை நடைப்பயிற்சிக்கு அந்த பள்ளி வழியாக நடந்தபோது, சில மூத்த குடிமக்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுப்ட்டிருப்பதை வியப்புடன் கவனித்தேன்.
பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம், மைக்கைப் பிடுங்கி அடித்துக் கொள்ளுதல் என்று எதுவுமே நடக்காதாம். நம்மைப்போல் துண்டு விழும் ப்ட்ஜெட் போடாமல் உபரி பட்ஜெட் போட்டு,நம்மை வியக்க வைக்கிறார்கள்.
குளியல் அறையில் ஒரு கடிகாரம் வைத்திருந்தார்கள். எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விடாமல் தடுக்க அரசாங்கம் நான்கு நிமிடங்களுக்கு மேல் ஷவரில் குளிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததாம். பிரேக் த ரூல் என்றெல்லாம் தண்ணீர் காட்டாமல் கர்மசிரத்தையாக கடைப்பிடிக்கிறார்கள்.
இந்தியா இருநூறு வருடங்கள் பின்தங்கியிருப்பதாக ஆதங்கப் படுகிறார்கள்.நீராதாரங்களைப் பாதுகாக்கத்தவறியிருப்பதையும், மரங்களை வெட்டுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. மாற்றிப் பார்க்கலாமா??
மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி தானே???
பஞ்சவர்ண கிளிப் பூ
பூப்பூவாய் பூத்திருக்கும் ஆயிரக்கணக்காண பூக்களில் விந்தையான மலர்களும் காணக்கிடைக்கின்றன. வண்ணத்துப் பூச்சியின் அழகும்,பட்டுப்போல் மென்மையும்,மனத்தை கொள்ளை கொள்ளச்செய்யும் சிந்தை மயக்கும் வசீகர வாசனையும், தேனும் நிரம்பி இருக்கும் கிளிப்பூ காண கண் இரண்டு போதாது.
கிளிப்பூவின் அழகை நாம் காண்பதற்கு வண்ணக் கிளியே!!
இறைவன் திருமறையில்..
நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது
என்ற குர் ஆன் வசனம் போல் எண்ணி முடியாத அதிசயங்கள் காட்சியாக விரிகின்றன.
கிளையில் இருக்கும் கிளிகள் இறங்கி காம்பில் தொங்குகிறதோ என்று அதிசயப்பட வைக்கும் காட்சியைத்தான் ரசித்துக் கொண்டிருக்கிறோம் நாம்.
ஒவ்வொரு பூவுமே புன்னகையோடு சொல்கிறது, இயற்கையின் பேரதிசயங்களை. அப்படியொரு அதிசயப் பூதான் இந்த பறக்கும் கிளி வடிவத்திலான பூ.
வரப்போவதில்லை .
அருமையான பதிவு..
ReplyDeleteவாட்டில்-ஆஸ்திரேலியாவின் தேசிய மலர் என்று மட்டும் தான் தெரியும்..
ஆனால் பிற விசயங்களையும் தெரியபடுத்தியதுக்கு மிக்க நன்றி..
//மஞ்சள் மலர் மஞ்சள் துண்டு போட்டவரையும், பச்சை இலைகள் அவருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்பவரையும் நினைவு படுத்தினால் கம்பெனி பொறுப்பேற்காது. ஆமாம். முதலிலேயே சொல்லிவிட்டேன்.//
ReplyDeleteஅருமையோ அருமை, அனைத்துமே!
வாழ்த்துக்கள்.
தேசிய மலராவதற்குக்கூட எத்தனை தகுதி வேண்டியிருக்கிறது. மற்றபடி இந்தியா முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது, ராஜேஸ்வரி. ஏனெனில் முன்னேற்றத்திற்கான தனி மனித முயற்சிகள் இப்போது அதிகரித்துள்ளது
ReplyDeleteஆஸ்த்திரேலியாபற்றி நிறைய விஷயங்களைத்தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDeleteபடங்களை ரசிக்கவே உங்கள் வலை பக்கத்துக்கு வர ஆரம்பித்து விட்டேன்... கண்ணை கவரும் படங்கள்... வேற எங்கும் காணாதவையும் கூட... பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி...:)
ReplyDeleteஅந்த கிளிப்பூ பற்றி கேள்வி பட்டது கூட இல்லை... வாவ்... just a treat to eyes from nature...:)
அழகான வாட்டில் பூக்களை சில சினிமா காட்சிகளில் மட்டும் பார்த்துள்ளேன், இன்றுதான் பெயர் தெரிந்து கொண்டேன்.நல்ல பகிர்வு
ReplyDelete@ thirumathi bs sridhar said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க.
@ அப்பாவி தங்கமணி said.../
ReplyDeleteவாவ்... just a treat to eyes from nature...:)//
சந்தோஷம். நன்றிங்க.
Lakshmi said...//
ReplyDeleteநன்றி அம்மா.
@சாகம்பரி said...//
ReplyDeleteநம்பிக்கை தரும் வார்த்தைக்கு நன்றி அம்மா.
@வை.கோபாலகிருஷ்ணன் sai//
ReplyDeleteவாழ்த்துக்கு நன்இ ஐயா.
@தம்பி கூர்மதியன் said...//
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க.
This comment has been removed by the author.
ReplyDeleteவாட்டில் மலர்களைப் பற்றியும் மரத்தின் பயன்பாடு பற்றியும் தங்கள் பகிர்வை வாசித்து மகிழ்ந்தேன். ஆஸ்திரேலியாவின் தேர்தல் பற்றித் தங்களுக்கிருக்கும் வியப்பு நியாயமானதே. எனக்கும் இங்கு வந்த புதிதில் வியப்பாயிருந்தது. இப்போது பழகிவிட்டது. கிளிப்பூ பார்க்க அவ்வளவு அழகு. பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம்.
ReplyDelete336+2+1=339
ReplyDelete