Friday, April 8, 2011

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர்




  • காலை எழுந்தவுடன் படிப்பு என்று பழக்கப்பட்டிருந்த நான் இப்பொழுது
  • காலை எழுந்தவுடன் பதிவு என்று வழக்கப்படுத்திக் கொண்டேன்.
  • காலையில் நடைப் பயிற்சிக்கு என்னையும் அழைத்துச் செல்வார் என்கணவர்.
  • ரேஸ்கோர்ஸ்,வனக்கல்லூரி, வ.உ.சி மைதானம் என்று கூட்டத்துடன் நடப்பது பிடிக்கவில்லை.
  • குஜராத்தி சமாஜில் லாபிங் தெரபி என்று வெறுப்புடன் சிரித்துவிட்டு வருவேன்.
  • சிரிக்கலாம் வாங்க என்று சில நிகழ்ச்சிகளுக்கும் சென்று அழுது திரும்புவோம்.
  • காலையில் பால்காரர் வந்திருப்பாரா, பேப்பர்,வேலைக்காரி,போன் ஏதாவது வருகை தந்திருக்குமா,கல்லூரிக்கும்,பள்ளிக்கும் பிள்ளைகளை அனுப்பும் டென்ஷன்,சிறுவாணிதண்ணீர் பிடித்து வைக்கவேண்டிய அவசரம் என்று மனத்தில் ஆயிரம் நினைவுகளுடன் ,கூட்டத்துடன் நடைப்பயிற்சி எனக்கு பிடித்ததில்லை.
  • ஏதாவது கிரிவலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது கோவிலில் எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதட்சிணம் வருகிறேன்.
  • தம்பிக்குப் பெண் பார்த்த மாதிரியும் ஆயிற்று, கம்புக்குக் களை எடுத்தமாதிரியும் ஆச்சு
  • அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும்,ஆட்டுக்கு புல்லு பிடுங்கிய மாதிரியும் ஆச்சு  கோவிலுக்கு அழைத்துச் செலுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன்.
  • சில முறை திருவண்ணாமலை கிரிவலம் சென்றோம். 
  • சிவராத்திரியில் சிவன் கோவிலை வலம் வ்ருவோம்.
  • ஒரு தைப்பூசத் திருநாளில் தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு கிரிவலம் வரலாம் என்று சென்றிருந்தோம்.
  • கோவையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பாலக்காடு மெயின் ரோட்டில் மதுக்கரை மரப்பாலம் அருகே மேற்கு பகுதியில் மலையின் மீது தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
[Gal1]
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
[Gal1]
  •  மலையின் மீது ஏறிச்செல்ல படிக்கட்டுகள் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்தில் விநாயகர் கோயிலும், நவகிரக சன்னதியும் உள்ளது.

  • நவகிரக சன்னதி அருகில் மும்மூர்த்தி மரம் என்ற மாமரம் இருக்கிறது. இந்த மரத்தில் மூன்று வகை சுவையுடைய மாங்கனிகள் காய்க்கிறது.
[Gal1]
  •  தலவிருட்சம் வில்வமரம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒருமண்டபமும், அதை அடுத்து மிகப்பழமையான புற்று ஒன்றும் உள்ளது. இந்த புற்றில் வயது முதிர்ந்த சர்ப்பம் இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

  •  இதனருகே கடுமையான வறட்சி காலத்திலும்,வற்றாமல் நீர் சுரந்து கொண்டிருக்கும் கிணறு உள்ளது. இந்த கிணற்றிலிருந்து தான் மலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலைப்படிக்கட்டு வழியே நடந்து சென்றால் அரை மணி நேரத்தில் மலையின் உச்சியை அடைந்து விடலாம். 

  • அங்கு அமைந்துள்ள கோயிலில் தான் தர்மலிங்கேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமியின் எதிர்புறத்தில் நந்தியும், வலப்புறத்தில் விநாயகரும், இடப்புறத்தில் முருகனும் அருள்பாலிக்கிறார்கள்.
[Gal1]

  •  இப்பகுதியில் வாழும் மலை வாழ் மக்கள் இவரை குலதெய்வமாக வழிபடுகிறார்கள். கார்த்திகை மாதத்தில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முறை வைத்து 3 நாட்களுக்கு மலை மீது தீபம் ஏற்றுகின்றனர். 4 கி.மீ. தூரம் சுற்றுப்பாதை உள்ள இந்த மலையை பவுர்ணமி நாட்களில் திருவண்ணமாலைக்கு அடுத்தபடியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
[Gal1]
  • மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. பீமன் காவல் காத்ததற்கு சான்றாக பீமனுக்கு தனி சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதை காவல் தெய்வமாக கருதி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.


தர்மர் வழிபட்டதால் நியாயம், தர்மம், வழக்குகளில் வெற்றி, மற்றும் நீதி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடுசெய்கிறார்கள்.


  • நாங்கள் கிரிவலம் செல்ல முற்பட்ட போது அங்கிருந்தவர்கள் சிறுத்தை ஒன்று உலா வருவதாகவும், மலையைச் சுற்றி சில இடங்களில் பாதை சரியாக இருக்காது, பழக்கப்பட்டவர்கள் துணையில்லாமல் செல்வது சரியில்லை என்றும் தெரிவித்தார்கள். 
  • மாலை ஆறுமணிக்குள் கிரிவலம் முடியுமாறு மதியமே வலம்வர ஆரம்பித்துவிட வேண்டுமாம்.
  • நாங்கள் நேரம் கடந்துவிட்டதால் மலை ஏறி சுயம்பு தர்மலிங்கேஸ்வரரைத் தரிசிக்க சிவனே நீயே துணை என்று, விநாயகரைத் தியானித்தவாறே மலை ஏற ஆரம்பித்தோம். 
சில இடங்களில் படிகள் சரி இல்லாமல் பள்ளமும் மேடுமாக, பாறைகள் இடையில் இருந்தன. 


  • சிரமப்பட்டு மலை ஏற தர்மலிங்கேஸ்வரர் தரிசனம் கிடைத்தது. தைப்பூச நிலவொளியில் அற்புதக் காட்சி. வைரமாலையாய் ஜொலிக்கும் நகரின் காட்சியும்,முழுநிலவின்  பாலாய் பொழியும் அமுத கிரணங்களும், கொட்டிக் கிடக்கும் வைரங்களாய் கண்சிமிட்டி மின்னும் நட்சத்திரங்களும், தவழும் மூலிகைக் காற்றும் ஏறிவந்த சிரமத்தை இல்லை என்று ஆக்கி, மகிழ்ச்சியளித்தன.
  • நிலவொளியில் அபிஷேகிக்கப்பட்ட தர்மலிங்கேஸ்வரரை கற்பூர தீப ஆராதனையிலும் வில்வ அர்ச்சனையிலும் மனம் குளிர வணங்கினோம்.
  • அமர்ந்து கண்மூடி தியானிக்க மனம் வரவில்லை. மேய்ச்சல் நிலத்தில் அசை போடுவதாவது -என்று கண் திறந்து அமர்ந்து தியானித்தோம்.
  • இறங்கும் போது படிக்கட்டுகள் இல்லாத சில் இடங்களில் அமர்ந்து ,தவழ்ந்து என்று ஏறும் பொழுதைவிட  கடினப்பட்டு இறங்கினோம்.
  • உள்ளூர் பிரமுகரின் தலைமையில் வேள்வி பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. 
  • அந்தப் பக்கம் எப்போது சென்றாலும் என் கணவர் காரை நிறுத்தி மகன்களிடம் சொல்வார் அதோ தெரிகிறதே அந்த மலையின் உச்சியில் நாங்கள் இருவரும் ஏறி தரிசனம் செய்தோம் என்று மேகங்களின் இடையில் தெரியும் கோவிலைக் காட்டுவார்.
  • மகாலிங்கத்தின் மகத்தான தரிசனம் என்றும் மனதில் முகிழ்த்திருக்கும்.

10 comments:

  1. இந்த லிங்க் கிடைப்பதற்குள் சிவ சிவா ! என்று ஆகிவிட்டது.

    நீங்கள் மலைஏறி வந்த அனுபவத்தைக்கேட்டதும் எனக்கு நானே ஏறிவிட்டு வந்ததுபோல காலெல்லாம் ஒரே வலி, சிவ சிவா !

    படத்தில் காட்டியுள்ளது கருஞ்சிறுத்தையோ என்று பயந்தே விட்டேன். பிறகு தான் கருப்புப்பூனை என்று யூகித்தேன்.

    வழக்கம்போல எல்லாமே அருமை.

    கோவைப்பெண்களுக்கே உள்ள காலை வேளை டென்ஷன்கள் போனஸ் ஆகக் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    பழமொழிகள் ஒரு சில மிகவும் ரசித்தேன்:

    தம்பிக்குப் பெண் பார்த்த மாதிரியும் ஆயிற்று, கம்புக்குக் களை எடுத்தமாதிரியும் ஆச்சு அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும்,ஆட்டுக்கு புல்லு பிடுங்கிய மாதிரியும் ஆச்சு

    மேலும் சிரித்த இடம்:

    குஜராத்தி சமாஜில் லாபிங் தெரபி என்று வெறுப்புடன் சிரித்துவிட்டு வருவேன். சிரிக்கலாம் வாங்க என்று சில நிகழ்ச்சிகளுக்கும் சென்று அழுது திரும்புவோம்.

    நன்றி மேடம். மறக்காமல் LINK அனுப்பியதற்கு மீண்டும் நன்றி.

    சிவ சிவா ! சிவாய நம ஓம்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு. நாங்கள் நேரில் தரிசனம் செய்தது போன்று உணர்வு.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  3. ஆஹா.... எத்தனை போட்டோஸ். நீங்கள், உங்கள் பதிவுகளில் படங்கள் இணைக்க ஆரம்பித்ததில் இருந்து , அவை புது மெருகேறி வருகின்றன. நேரில் நாங்களும் அழகான இடங்களை கண்டு களித்தது போல அமைந்து உள்ளன. பகிர்வுக்கு நன்றிங்க. தொடர்ந்து அருமையான இடங்களை சுற்றி காட்டுங்க.

    ReplyDelete
  4. My God!!!!!!!!!!
    What a pleasent memory for me. Do you know my father do Annadanam up in the hill taking up all the necessary things, and being a little girl I go Along with my father and go round along the hills. What a pleasentest days those are.
    Thanks a lot for bring my sweet memory dear.
    Your write up is very nice.
    viji

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு. படங்கள் அருமை. உங்க பதிவுகள் டாஷ்போர்டில் அப்டேட் ஆவதில்லையே?

    ReplyDelete
  6. //காலை எழுந்தவுடன் பதிவு என்று வழக்கப்படுத்திக் கொண்டேன்//
    எல்லார் நிலைமையும் அப்படித்தான் ஆகி போச்சுங்க அம்மா...:)))

    //சிரிக்கலாம் வாங்க என்று சில நிகழ்ச்சிகளுக்கும் சென்று அழுது திரும்புவோம்//
    ஹா ஹா... இதுக்கு ப்ளாக் படிக்கறதே மேல்னு தோணி இருக்கணுமே...:))


    //தம்பிக்குப் பெண் பார்த்த மாதிரியும் ஆயிற்று, கம்புக்குக் களை எடுத்தமாதிரியும் ஆச்சு//
    எனக்கு பழமொழிகள் ரெம்ப பிடிக்கும்... எங்க பாட்டி வார்த்தைக்கு வார்த்தை ஒரு பழமொழி சொல்லுவாங்க... அந்த ஞாபகம் வந்துடுச்சு உங்க பதிவு பாத்ததும்...;))

    //கோவையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பாலக்காடு மெயின் ரோட்டில் மதுக்கரை மரப்பாலம் அருகே மேற்கு பகுதியில் மலையின் மீது தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது//
    கேள்விபட்டதே இல்லிங்க... அம்மாவை கேட்டா தெரியுமா இருக்கும்... நன்றி பகிர்ந்து கொண்டதற்கு...

    ReplyDelete
  7. ungaladuiya intha katturai arumaiyaka irnthathu, naan antha malaiku arukil ulla ooril than vasikkiren, thatpoluthu ,intha kovil nanraagaa paramarikkapattu varukirathu, neengal kuruvathu poonru thatpoluthu vanavilankugalinal apathu endru ethuvum illai kerivalapathai natapatharku eattrathaga irukkirathu, anaivarum kanndippaka varavum, kerivala pathaiyai thoooimaiyaga vaikavum. nama sivaaya......

    ReplyDelete
  8. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர்
    வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete