Thursday, April 28, 2011

வண்ணத்துப்பூச்சி எண்ணங்கள்

Butterfly GardenMonarch Butterfly


caterpillar pictures, butterfly pictures, butterflies picture
Hatching Butterfly


Monarch Flower


அழகிய மணமுள்ள மலர்கள் தோறும் வண்ணச்சிறகு முளைத்த சின்ன ஜீவன்கள் நடந்து போகும் எழில் எண்ணச் சிறகை சிறகடித்துப் பறக்கவைக்கும். நம்மில் யாருக்குத்தான் அடிமை வாழ்வு பிடிக்கிறது?? விட்டுவிடுதலையாகி சிட்டுக்குருவியைப் போலப் பறக்கவே ஆசைப்படுகிறோம்.


கூட்டுப்புழுவாய் குடும்பத்தளைகளுக்குள் பரிணாம வளர்ச்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

  •  உண் என்னும் ஒற்றைக் கட்டளை மட்டும் கொண்ட குடம்பி என்னும் அருவருக்கும் புழுப்பருவம் வளர்ச்சியுற்று, வள்ளலாரின் தனித்திரு, பசித்திரு விழித்திரு என்ற கோட்பாட்டின்படி தனித்தனியே தன்னைச்சுற்றி பட்டுக்கூடு அமைத்து தவம் செய்யும் ரிஷிகளைப் போல் உண்ணாமல் உறங்காமல் ஒரே தவ உணர்வுடன்இருந்து உரிய நேரத்தில் வண்ண வண்ண பறக்கும் சிறகு முளைத்த தேவதைகளாய் மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தூதுவனாய் புதுவடிவெடுக்கின்றன. 
    • பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதற்கு என்றொரு திரைப்படப் பாடல் ஒன்று. பிடித்துப் பார்க்கப் பட்டாம் பூச்சியைத் துரத்தாத பிஞ்சு விரல்களையும், எழுதிப் பார்க்கப் பட்டாம்பூச்சியை உவமைக்கு இழுக்காத கவிஞர்களையும் விரல் விட்டு எண்ணி விடலாம். 
    • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பூச்சியினங்களில் பட்டாம் பூச்சிகளின் பங்கு அதிகம். இயற்கைச் சமநிலைக்கும்,  பூக்களில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி இயற்கை வளநிலைக்கும் உதவும் பட்டாம்பூச்சிகள் அழிந்து வருவதைத் தடுக்க உலகெங்கும் நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகின்றன
    • சிங்கப்பூரில் ஏற்கனவே சாங்கி விமான நிலையத்தில் உள்ள பட்டாம் பூச்சிப் பூங்கா, செந்தோசா பட்டாம் பூச்சிப் பூங்கா எனப் பல பூங்காக்கள் பட்டாம்பூச்சி இனப் பெருக்கத்தில் அக்கறை கொண்டுள்ளன.
    • பூக்கள் வரவேற்கையில் பட்டாம் பூச்சிகள் பறந்து வருவதற்கென்ன, பாஸ்போர்ட்டா விசாவா?திருமணம், பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகளில் பட்டாம் பூச்சிகளைக் கொண்டுபோய் விழாவில் பறக்கவிட்டு மகிழ்வதற்கும் இப்போதெல்லாம் பட்டாம் பூச்சிகளைப் பலர் வளர்க்கின்றனர்.

      படிமம்:Cethosia cyane.jpg

      படிமம்:Viceroy Butterfly.jpg

      படிமம்:Argynnis paphia - Kaisermantel.ogv

      படிமம்:Cairns birdwing - melbourne zoo.jpg

      வண்ணத்துப்பூச்சி பறந்த பனித்தீவு!


      தற்போது வெள்ளை வெளேரென்று பனி படர்ந்த தீவாக இருக்கும் கிரீன்லாந்து, ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது.
      கிரீன்லாந்து தீவின் தென்பகுதியில் ஒரு மைல் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட சேற்று மண் படிவங்களில் இருந்து பூக்களின் மகரந்தங்களும், அதிலிருந்த பூச்சிகளின் மரபணுக்கும் ஆராய்ச்சி செய்யப்பட்டன.

      அவற்றின் மூலம், 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வண்ணத்துப்பூச்சிகள், பட்டுப்பூச்சிகள், தேனீக்கள், வண்டுகள், சிலந்திப்பூச்சிகள் ஆகியவை வாழ்ந்த அடர்ந்த காடுகளுடன், பசுமையாகவும், வெப்பமாகவும் கிரீன்லாந்து இருந்தது தெரியவந்தது.
      இப்பகுதியில், பைன், ஈவ், ஆல்டர், ஸ்பர்சி ஆகிய ஊசியிலை மரக் காடுகள் நிறைந்து இருந்திருக்கின்றன. கோடைகால வெப்பநிலை 10 டிகிரி சென்டிகிரே
      டாகவும், குளிர்கால வெப்பநிலை மைனஸ் 17 டிகிரி சென்டிகிரேடாகவும் இருந்து வந்திருக்கின்றன. மேலும், மேலேயுள்ள பனியடுக்குகள் உருகினாலும் கூட, அடிமட்டப் பனியடுக்குகள் உருகுவதில்லை என்பதும், கடல் மட்டம் தற்போது இருப்பதைவிட 30 மீட்டர் உயரத்தில் இருந்த விவரமும் தெரியவந்துள்ளது.

      இதுவரை, இந்தக் காலகட்டத்தில் கடைசிப் பனியுகம் நிலவியதாகத்தான் பொதுவாகக் கருதப்பட்டது. அதற்கு மாறாக, இந்தக் காலகட்டத்தில் கிரீன்லாந்து தீவிலேயே வெப்பம் அதிகமாக இருந்திருப்பதால், பனியுகம் என்று கருதப்பட்ட காலகட்டத்திலும் பூமி மிகவும் வெப்பமாக இருந்தது தெரியவந்திருக்கிறது.

      Crescent? - Phyciodes tharosWestern Pygmy Blue, perhaps? - Brephidium exilis - female
      Greater Fritillary - Speyeria atlantis - male


      Black Swallowtail - Papilio polyxenes - female
      Lyside Sulphur - Kricogonia lyside - male
      Lyside Sulphur - Kricogonia lyside - male
      Northern Pearly-eye - Enodia anthedon
      Not sure what I am? Fritillary???? - Boloria bellona
      Colorful Butterflies

      9 comments:

      1. பூப்பூவாய்ப் பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா................ பாடலை முணுமுணுக்கிறது வாய்.

        பட்டுப்பூச்சிகள் அழகோ அழகு !

        அவைகளின் பலவித வண்ணங்கள் நமக்கு ஏற்படுத்துதே பரவச எண்ணங்கள்.

        அருமையான அழகிய படங்கள், நல்ல பலவித விளக்கங்கள்.

        பாராட்டுக்கள். அன்புடன் vgk

        ReplyDelete
      2. பூப்பூவாய்ப் பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா................ பாடலை முணுமுணுக்கிறது வாய்.

        பட்டுப்பூச்சிகள் அழகோ அழகு !

        அவைகளின் பலவித வண்ணங்கள் நமக்கு ஏற்படுத்துதே பரவச எண்ணங்கள்.

        அருமையான அழகிய படங்கள், நல்ல பலவித விளக்கங்கள்.

        பாராட்டுக்கள். அன்புடன் vgk

        ReplyDelete
      3. சிறகில் கவிதை எழுதி..
        மலர்களோடு மனம் கலந்து..
        இந்த பூமியை வண்ணங்களால் அழகூட்டும்...
        வண்ணத்துப்பூச்சிகளின் கதை....

        தகவல் அருமை..

        ReplyDelete
      4. Rajeswari,
        On seeing the writing and animation photos, my mind started fly like a butterfly.
        I felt very very happy watching flying butterflies and very nice write up.
        Thankyou for making my day starts with happy dear.
        viji

        ReplyDelete
      5. பட்டாம்பூசிகளின் அணிவகுப்பு.
        அருமை அம்மா.
        வாழ்த்துக்கள்.

        ReplyDelete
      6. அழகிய படங்கள் கண்களுக்கும், தகவல்கள் சிந்தனைக்கும் விருந்தாகின. நன்று தோழி...

        வாழ்த்துக்கள்... :)

        ReplyDelete
      7. ;)
        சுக்லாம்பரதரம் விஷ்ணும்
        சசிவர்ணம் சதுர்புஜம்!
        ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
        ஸர்வ விக்நோப சாந்தயே!!

        ReplyDelete