Sunday, April 10, 2011

விசித்திர விநோதங்கள்

வலை உலாவின் போது பூனை வடிவ ஜப்பானிய வீடுகளும், மெக்ஸிகோ நாட்டின் பாம்புவடிவ வீடுகளும் கவனத்தைக் கவர்ந்து மனதை ஈர்த்து ,பகிர்ந்து கொள்ளத் தூண்டின.


cat-island7%5B2%5D.jpg (700×467)


ஜப்பானிய நாட்டில் பூனைகளின் தீவு என்று ஒரு இடம் இருக்கின்றது. மனிதர்களை காட்டிலும் பூனைகள் இங்கு அதிகம் வசிப்பதால் இத்தீவு இப்பெயரால் அறியப்படுகின்றது. 


இத்தீவின் பெயர் ரஸிரொஜிமா.இஸினோமகி நகரத்தில் அமைந்து உள்ளது.

cat-island1%5B3%5D.jpg (700×465)

பூனைகளை வளர்த்து உணவு ஊட்டுகின்றது செல்வச் செழிப்பைத் தரும் என்று இத்தீவுவாசிகள் நம்புகின்றனர். மனிதர்களின் எண்ணிக்கையை காட்டிலும் பூனைகளின் எண்ணிக்கை இத்தீவில் அதிகமாக இருந்து வருகின்றது.

cat-island2%5B3%5D.jpg (700×465)


நூறு மனிதர்கள் வரை இத்தீவில் வசித்தாலும் பாதிப்பேருக்கு அறுபத்தைந்து வயதிற்கு மேல் வயதாகிறதாம்.விருத்தர்கள்!

cat-island8%5B3%5D.jpg (500×331)

இத்தீவில் பூனைகளுக்கு கோவில்கள், நினைவுத் தூபிகள் ஆகியனவும் உள்ளன. பூனை உருவத்தில் வீடுகள், கட்டிடங்கள் ஏராளமானவை கட்டப்பட்டு இருக்கின்றன.

cat-island4%5B2%5D.jpg (700×465)

மெக்சிகோ நாட்டில் பாம்பின் உருவத்தில் கட்டப்பட்டு இருக்கின்றது ஒரு வீட்டுத் தொகுதி.

quetzacoalt8.jpg (500×751)


இவ்வீட்டுத் தொகுதி மிகவும் விநோதமானதாக மாத்திரம் அன்றி இரவு நேரங்களில் பார்வையிடுகின்றவர்களை பயம் கொள்ள வைப்பதாகவும் உள்ளது.

quetzacoalt4.jpg (500×334)

பாம்பு இருக்கின்ற வீட்டில் மனிதர்கள் வாழ முடியாதுதான்.ஆனால் பாம்பின் உருவத்தில் கட்டப்படுகின்ற வீட்டில் வாழ முடியும்தானே?

quetzacoalt5.jpg (500×330)
quetzacoalt9.jpg (500×749)


ந்டுங்கிக்கொண்டே பாம்பு நடனம் ஆடிய படியே படிகளில் இறங்குவார்களோ??

quetzacoalt10.jpg (500×332)

கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடுவது போல, குலவித்தை கல்லாமல் பாகம் பட்டு இந்தியாவில் பாம்பாட்டிகளாகத் திரியும் நாடோடி மக்களின் இரண்டு வயதுக் குழந்தைகள் பாம்புகளை வசப்படுத்தும் வித்தையை கற்று வைத்து இருக்கின்றன. கையாளவும் செய்கின்றன.


children_snake_charmers_in_india_05.jpg (620×400)
children_snake_charmers_in_india_02.jpg (620×400)




16 comments:

  1. படங்களும் வர்ணனைகளும் இதம்.
    உண்மையிலேயே விசித்திர வினோதம்தான்.

    ReplyDelete
  2. அந்த பாம்பு வீடு..... அய்யோ.!! எப்படிதான் இருக்காங்களோ.. பூனை தீவும் சூப்பரு..

    ReplyDelete
  3. படங்கள் எல்லாம் அழகு.
    குழந்தைகள் பாம்புடன் விளையாடுவது அழகு.

    பூனை தீவு பதிவு புதிது நன்றி .

    ReplyDelete
  4. //ந்டுங்கிக்கொண்டே பாம்பு நடனம் ஆடிய படியே படிகளில் இறங்குவார்களோ??//

    நல்லதொரு நகைச்சுவை, மிகவும் ரசித்தேன்.

    உங்களுக்கு என்று எப்படித்தான் இதெல்லாம் அழகழகாக படங்களாகக் கிடைக்கின்றதோ!

    தினமும் ஏதாவது ஒரு அதிசயத்தைக்காட்டி அசத்தி விடுகிறீர்கள்.

    YOU ARE VERY VERY GREAT. எங்களுக்கு நீங்கள்,(அந்த பூனைத்தீவின் அதிர்ஷ்டப்பூனை போல), கிடைத்தது நாங்கள் செய்த பாக்யம்தான் என்று நினைக்கிறேன்.

    தொடர்ந்து அசத்துங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம். அன்புடன் vgk

    ReplyDelete
  5. படங்கள் எல்லாம் அழகு.உங்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் அழகழகாக படங்களாகக் கிடைக்கின்றதோ
    தொடர்ந்து அசத்துங்கள்.

    ReplyDelete
  6. பூனை கூட பரவாயில்ல,அய்யோ!பாம்பு வடிவில் வீடா?விநோதமாதானிருக்கு

    ReplyDelete
  7. நல்ல பல தகவல்கள்.. அளித்தமைக்கு உளம்கனிந்த நன்றிகள்..

    ReplyDelete
  8. //கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடுவது போல, குலவித்தை கல்லாமல் பாகம் ப்ட்டு இந்தியாவில் பாம்பாட்டிகளாக திரியும் நாடோடி மக்களின் இரண்டு வயதுக் குழந்தைகள் பாம்புகளை வசப்படுத்தும் வித்தையை கற்று வைத்து இருக்கின்றன. கையாளவும் செய்கின்றன.//

    பாம்பென்றால் படையும் நடுங்கும்போது பாவம் அந்தக்குழந்தைகள். சிவ, சிவா!
    ராஜராஜேஸ்வரி தான் காப்பத்தணும்.

    ReplyDelete
  9. நாடோடிக் குழந்தைகள் புகைப்படம் பிரமாதம்.. தெரியாத புது விவரங்கள்.

    ReplyDelete
  10. சுவாரசியமாக இருந்தாலும் பயமாகவும் இருக்கிறது .

    ReplyDelete
  11. அருமையான மியாவ்தீவு பற்றிய பதிவு.
    இளங் கன்று பயமறியாது .அந்த பிள்ளைகள் படம் சூப்பர்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு.
    வித்தியாசமான செய்திகள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அதிசயமான சுவாரஸ்யமான பதிவு.பாம்....பு.பாம்பு வீடு.கடைசிப்படம் பயமுறுத்துது !

    ReplyDelete
  14. வித்தியாசமான படங்களுடன்
    சுவையான வர்ணனை.
    அருமை.

    ReplyDelete
  15. //ஜப்பானிய நாட்டில் பூனைகளின் தீவு என்று ஒரு இடம் இருக்கின்றது//
    கோடி ரூபாய் குடுத்தாலும் நான் அங்க போக மாட்டேன்...:))

    //இத்தீவில் பூனைகளுக்கு கோவில்கள், நினைவுத் தூபிகள் ஆகியனவும் உள்ளன//
    சுவாரஷ்யம் தான்... நம்ம ஊர்ல பூனையை சகுன தடைனு சொல்றோம்... அவங்க கோவிலே கட்டி இருக்காங்க... இண்டரெஸ்டிங்...

    //நாடோடி மக்களின் இரண்டு வயதுக் குழந்தைகள் பாம்புகளை வசப்படுத்தும் வித்தையை கற்று வைத்து இருக்கின்றன. கையாளவும் செய்கின்றன//
    பாம்புனா படை தான் நடுங்கும்... இந்த பாப்பா நடுங்காது போல ...:)

    //இவ்வீட்டுத் தொகுதி மிகவும் விநோதமானதாக மாத்திரம் அன்றி இரவு நேரங்களில் பார்வையிடுகின்றவர்களை பயம் கொள்ள வைப்பதாகவும் உள்ளது//
    பாம்பு சூப் சாப்ட்டுடே யோசிப்பாங்களோ...ஹா ஹா...:))

    ReplyDelete