சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடி காலை தலைக்குமேல் உயர்த்த வெட்கப்பட்ட காளியை வென்ற கதையை திருவிளையாடல் புராணம் கூறும்.
அதே சிவன் இப்போதைய ஸ்வர்ணமுகி போன்ற நடனமங்கையரிடம் போட்டியிட்டிருந்தால் வென்றிருப்பார் என்று சொல்லமுடியுமா??
பகீரதன் தவத்திற்கு மெச்சி ஆகாய கங்கையாக வந்த நதிப் பெண்ணை
சிவன் தன் தலை மீது தாங்கியே சமனப்படுத்த முடிந்தது.
நேரடியக கங்கை ஆகாயத்திலிருந்து பூமியின் மீது விழுந்திருந்தால்
பூமி தாங்கியிருக்காது.
ஆர்ப்பரித்து வந்த கங்கையின் சப்தத்தை தவத்திற்கு இடையூறாகக் கருதிய முனிவர் கங்கையை விழுங்கிவிட பகீரதனின் வேண்டுகோளுக்காக காதின் வழி வெளியேற்றியதால் ஜானவி என்ற பெயர் பெற்றாள்.
எண்ணிக்கையில் சரிபாதி இருக்கும் பெண்ணினத்திற்கு முப்பத்து மூன்று சதம் கொடுக்க முடியவில்லை இந்த விஞ்ஞான யுகத்தில்.
ஆனால் சரிபாதி தன் தேகத்தில் பெண்மைக்குத் தந்தான இறைவன் போற்றத் தக்கவன்.
பெண் காட்டாறு போல் ஓடிவிடமுடியாது. மழை பெய்யும் போது மட்டும் பெருக்கெடுத்தோடி,மழை பொய்த்தபோது காய்ந்து கட்டாந்தரையாக கூடாது.
ஜீவநதியாய் வ்ருமானம் வ்ரும்போது சேமித்து ,வறுமையில் செம்மை காத்து அச்சாணியாய் திகழவேண்டியவள் பெண்.
அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு என்ற கரைகளால் தன்னையும் காத்து, குடும்பத்திற்கும்,குலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டியவள்.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம். ஆணுக்குத் தரும் கல்வி தனி மனிதனுக்குதரும் கல்வியாகும். ஒரு பெண்ணுக்குத்தரும் கல்வியோ அந்த ச்முதாயமே பயன் பெறும் கருவியாகும்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியசாலி
என்ற பழமொழி ஏற்புடையதே.
ஆத்மாவிற்கு ஆண் பெண் வேற்றுமை கிடையாது தான். நாம் இன்னும் ஆத்தும நிலை எய்தாமல் மானுட நிலையில் இருக்கிறோமே.
ஆத்மாவிற்கு குளிர்,வெப்பம், இன்பம்,துன்பம்,புகழ்,இகழ் -என்று எந்த இரட்டைகளும் கிடையாது. மனிதர்களுக்கு உண்டே......
இடுக்கன் வருங்கால் நகைக்க என்று சொல்லி
வைத்தார் வள்ளுவரும்.சரிங்க....
பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு? சொல்லுங்க.
நிச்சயம் ஆணால் எழுதமுடிகிற தளங்களை விமர்சனமில்லாமல், பெண்ணால் தொடமுடியாது என்பதே என் கருத்து
குடும்பமும்,உறவுகளும் புரிந்து ஆதரவு தரும் என்பது எல்லோருக்கும் சாத்தியப் படுமா என்று தெரியவில்லை.
திருவரங்கத்தில் தாயாராக அலங்கரித்துக் கொண்டு, தாயாரை விட நளின கோலத்தில் அரங்கன் பவனி வரும் காட்சி நினைவில் வ்ருகிறது.
தாயாரைவிட அழகில்சொக்கவைத்தாலும், அரங்கனின் பார்வையில் கருணை ,தாயாரை விட ஒருமாற்று சற்று குறைவாகத்தான் இருக்குமாம். பராசரபட்டர் கண்டுபிடித்துக் கூறிவிடுவார்.
இவன் செய்தபாவங்களெல்லாம் அரங்கன் நினைவுக்கு வந்து விடுமாம்.பார்க்கமறுத்து தலையைக் குனிந்து கொண்டு விடுவாராம். விடுவாரா தாயார்? தயாதேவியாயிற்றே! அவன் முகவாயைப் பற்றி கொஞ்சலுடன் கோபத்தைத் தணித்து ,இனி பாவம் செய்ய மாட்டான் இப்போது அருளுங்கள் என்று கூறுவாளாம்.
எல்லாக் குழந்தைகளும் தன் தாயாரை அழகி என்று
கூறுவதின் கருத்து இதுதான்.
கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை விட அழகானது இந்த உலகில் எதையவது காட்ட முடியுமா?அந்தப் பெண்ணின் எழுத்து நாகரிகமாகத்தான் இருக்கவேண்டும். பொறுப்புணர்ந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இந்திராகாந்தி, இரும்புப் பெண்மணி தாட்சர் -அவர் காலத்தில் ஒரே ஆண் என்று புகழ்ப்பட்டவர், இமயத்தில் வெற்றிக் கொடி நாட்டிய பச்சேந்திரி பால், விண்வெளிவீராங்கனை என்று விதிவிலக்குகள் சாதனைப் பெண்கள்தான்.
எழுத்து உலகத்திலும் சுஜாதா ,புஷ்பா தங்கதுரை போன்றோர் பெண் பெயரில் ஆரம்பத்தில் எழுதினாலும் அவர்கள் எழுத்து அவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
கொடுக்கப்பட்ட தலைப்பிற்கும்,என் எழுத்திற்கும் ஏதவது சம்பந்தம் உண்டா, இதிலும் படங்கள் சேர்க்கப்பட்டது உசிதமா, என்றெல்லாம் சாகம்பரிக்கே வெளிச்சம்.
மடல் பெரிது தாழை;மகிழ் இனிது கந்தம் என்பது போல் தன் எழுத்துக்களால் இனிய மணம் வீசி வரும் மகிழம் பூச்சரத்திற்கு என்னை தொடர் பதிவிற்கு அழைத்தற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் படித்த எல்லாப் பதிவுகளிலும் இந்த தலைப்பூ மணம் பரப்பிவிட்டது.
எனக்கு இவ்வளவுதான் தெரிந்தது. மன்னித்துக் கொள்ளுங்கள்.
எழுதாத அத்தனை பேரும் அழைப்பாக ஏற்று
பெண் எழுத்தைத் தொடர அழைக்கிறேன்.
excellent post madam
ReplyDeleteநல்ல பதிவு. அனைத்தும் அருமையான படங்கள்.
ReplyDeleteதாயாரின் படம் பேசுகிறது.
வாழ்த்துக்கள் அம்மா.
மிகவும் நளினமாக கருத்துக்களை கூறுகிறீர்கள். ஆணுக்குப்பெண் நிகர், ஏன் அதற்குமேலும் கூட என்று தெளிவுபட உங்கள் கருத்துகள் உணரவைக்கின்றன. ஆன்மீகப்படக் கட்டுரைகள் கூட மற்ற துறைகளிலும் ஏன் நீங்கள் முத்திரை பதிக்கக்கூடாது.?
ReplyDelete”பெண் எழுத்து” பற்றிய உங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வெகு அழகாக, வெகு நளினமாக, வெகு சாமர்த்தியமாக, உண்மையை உண்மையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.
ReplyDeleteபெண் என்பவள் தெய்வீகம் பொருந்தியவள். உதாரணமாக நவராத்ரி பண்டிகையின் போது கோவில்களில் அம்மனை வெகு அழகாக சாந்த ஸ்வரூபியாக அலங்கரித்து வைக்கும் போது தரிஸிக்கும் அனைவருக்குமே பொதுவாக, அந்த அம்பாள் மேல் ஒருவித அன்பு பெருக்கெடுத்து ஓடுகிறது. மன்தில் சாந்தி ஏற்படுகிறது.
அதே அம்பாள் கடைசிநாள் அன்று, மகிஷாசுரமர்த்தினியாக மாறும்போது எனக்கு பார்க்கவே பயமாக உள்ளது. அதுபோலத்தான் நீங்கள், சொல்லவருவதும் எனக்குப்படுகிறது.
பெண்கள் அமைதியாக, நல்லவிஷயங்களை, நல்லமுறையில் ஸாத்வீகமாக அன்பை அடிப்படையாகக்கொண்டு, எழுதினாலே போதும்.
ஒருசில ஆண்கள் ஏதேதோ எழுதுகிறார்களே என்று போட்டிபோட்டுக்கொண்டு, மற்ற ஆண்களும், பெண்களும் எழுத வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
அன்பு, பாசம், மனிதநேயம், குடும்ப உறவுகள், கலாச்சாரம், பண்பாடு போன்ற எவ்வளவோ விஷயங்கள் பற்றி எழுவதற்கு பழுத்த பதமான ருசியான கனிகள் போலக் கொட்டிக்கிடக்கும்போது, வெம்பலை, காயை, அழுகலை, அசிங்கத்தை எழுதவோ, படிக்கவோ, பேசவோ விரும்பாமல் இருப்பதே ஆணோ, பெண்ணோ எந்த எழுத்தாளராக இருப்பினும் நல்லது என்பதே என் கருத்தும். [வேறு வழியே இல்லாதபோது இலைமறை காய்மறையாக ஏதோ பட்டும்படாதுமாகச் சொல்லிப்போகலாம் அதில் தப்பேதும் இல்லை.]
தங்களின் கீழ்க்கண்ட வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தன:
//நேரடியக கங்கை ஆகாயத்திலிருந்து பூமியின் மீது விழுந்திருந்தால் பூமி தாங்கியிருக்காது.//
//ஆத்மாவிற்கு ஆண் பெண் வேற்றுமை கிடையாது தான். நாம் இன்னும் ஆத்தும நிலை எய்தாமல் மானுட நிலையில் இருக்கிறோமே.//
//பெண் காட்டாறு போல் ஓடிவிடமுடியாது. மழை பெய்யும் போது மட்டும் பெருக்கெடுத்தோடி,மழை பொய்த்தபோது காய்ந்து கட்டாந்தரையாக கூடாது.//
//ஜீவநதியாய் வ்ருமானம் வ்ரும்போது சேமித்து ,வறுமையில் செம்மை காத்து அச்சாணியாய் திகழவேண்டியவள் பெண். அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு என்ற கரைகளால் தன்னையும் காத்து, குடும்பத்திற்கும்,குலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டியவள்//
//கையில் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை விட அழகானது இந்த உலகில் எதையவது காட்ட முடியுமா?அந்தப் பெண்ணின் எழுத்து நாகரிகமாகத்தான் இருக்கவேண்டும். பொறுப்புணர்ந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்.//
//எனக்கு இவ்வளவுதான் தெரிந்தது//
உங்களுக்கு நிறையவே தெரிந்திருக்கிறது. சொல்லப்போனால் உங்களுக்குத்தெரியாத விஷயங்களே ஏதும் இல்லை என்பது எனது அபிப்ராயமாகும். உங்களையும், உஙக்ளின் அறிவாற்றலையும் நான் மிகவும் மெச்சுகிறேன்.
உங்களைப்போன்ற பெண்தெய்வங்களைப்போற்றி மகிழ்ந்து என்றும் ஆதரவுதர என்னைப்போல் எவ்வளவோ பேர்கள் இருப்பார்கள்.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
அன்புடன் vgk
முதலாவதாக இருக்கும் நடராஜரின் படம் மிக ஈர்ப்புடையதாக இருக்கிறது..
ReplyDeleteபகிர்வுக்கும், எம்மை அழைத்தற்கும் மிக்க நன்றி...
//குழந்தையுடன் இருக்கும் பெண்ணை விட அழகானது இந்த உலகில் எதையவது காட்ட முடியுமா?அந்தப் பெண்ணின் எழுத்து நாகரிகமாகத்தான் இருக்கவேண்டும். பொறுப்புணர்ந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்.// பொதுவாக பெண்களின் கருத்து இதுதான், சமூகத்தின் அடிப்படையான குடும்பங்களின் பிரதி நிதியான பெண்கள் எல்லாவற்றையும் எழுதமுடியாது. அமைதியான அழுத்தமான பதிவு. பாராட்டுக்கள்.நன்றி.
ReplyDeleteமிகவும் அருமையான விளக்கமும் படங்களும். திறமையான அலசல்.
ReplyDeleteஆணித்தரமாக கருத்துக்களைச்சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
// ஒரு பெண்ணுக்குத்தரும் கல்வியோ அந்த சமுதாயமே பயன் பெறும் கருவியாகும்.//
ReplyDeleteசக்தியும் சிவமுமாக அழகான படங்களுடன் நல்ல பதிவு...
// ஒரு பெண்ணுக்குத்தரும் கல்வியோ அந்த சமுதாயமே பயன் பெறும் கருவியாகும்.//
ReplyDeleteசக்தியும் சிவமுமாக அழகான படங்களுடன் நல்ல பதிவு...
ஆன்மீக வாசம் நிறைந்திருக்கும் தளத்தை அமைத்திருப்பதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபாராட்டுக்கள்.பெண்கள் அமைதியாக, நல்லவிஷயங்களை, நல்லமுறையில் ஸாத்வீகமாக அன்பை அடிப்படையாகக்கொண்டு, எழுதினாலே போதும்.
ReplyDeleteநல்ல பதிவு....பெண் எழுத்து என்பது சில கட்டுப்பாடுகளுடனேயே இன்னும் இயங்கி வருகிறது...நம் கலாசாரம் அப்படி..பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteBeautiful, very beautiful.
ReplyDeleteI dont find wards to appreciate the writings.
I enjoyed ward by ward.
Thiru.Y.Gobalakrishnan Sir, written everything what I want to tell.
You are great Rajeswari .
viji
உங்கள் பதிவைப் படித்து முடித்தவுடன் ஏனோ என் கண்களில் நீர் வழிந்தது. அதுவே என் பாராட்டு எனத் தோன்றுகிறது.
ReplyDeleteபடங்கள் அற்புதம். சிவானந்தத்தில் திளைத்தேன். ;-))
ReplyDeleteமிக அருமை
ReplyDeleteஎழுத்து குறித்த அனைத்து பதிவுகளிலும்
அதிக விஷய கனமுள்ள பதிவாக
உங்கள் பதிவை உறுதியாகச் சொல்லலாம்
படங்களும் மிக அருமை
மனங்கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தெளிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள் !
ReplyDeleteஅற்புதமான பதிவு.பெண்ணாக அப்படியே உள்ளுணர்வோடு எழுதியிருக்கிறீர்கள் தோழி !
ReplyDelete\\பெண் காட்டாறு போல் ஓடிவிடமுடியாது. மழை பெய்யும் போது மட்டும் பெருக்கெடுத்தோடி,மழை பொய்த்தபோது காய்ந்து கட்டாந்தரையாக கூடாது.//
ReplyDelete- ரொம்ப தெளிவாய் மனம் தைக்கிற மாதிரி எழுதுகிறீர்கள். மிகவும் ரசித்தேன் உங்கள் எழுத்தை.
வழக்கம் போல அழகிய படங்களுடன் சொல்ல வந்த கருத்தை மென்மையாக ஆனால் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteDear thozi,
ReplyDeleteThe presentation is so superb.
381+2+1=384
ReplyDelete