ஒளிர்ந்து.. உயர்ந்து... சுவாமி விவேகானந்தர்
- அன்பெனும் அட்சய பாத்திரத்தை நெஞ்சில் ஏந்தி உலகிற்கு அள்ளி வழங்கிய ஞான வள்ளல் ,பேரறிவாளர் விவேகானந்தர் உதிர்த்த முத்துக்கள் திரட்டிக் கோர்க்கப்பட்டு கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் (ஒளிகாலும் இருமுனையம் -ஆங்கிலத்தில் இதனை லெட் (LED) என்று சுருக்கமாக குறிப்பர்) - ஒளியில் எழுத்துக்கள் படிக்கட்டுக்களில் சிகாகோ கலைப்பயிலகத்தில் ஒளிர்கின்றன.(Art Institute of Chicago)
- படிகளில் ஏறும் ஒவ்வொருவரும் சிந்தனை செறிந்த முகத்துடன் பார்த்து -படித்து - பார்வை மேலே செல்லச் செல்ல முகத்தில் கம்பீரம் கூடுகிறதே! கோவில் படிகளில் ஏறுவது போன்று உணர்ச்சி பொங்கப் பொங்க படித்துக்கொண்டே படிகளில் ஏறுகிறார்கள். வாருங்கள் நாமும் கூடவே ஏறிச் சென்று அவர்கள் ஒவ்வொருவரும் பெறும் புனித நல்லுணர்வைக் கண்டுணரலாம்.
- சுமார் நூற்றுப் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் வீரத்துறவி விவேகானந்தர் - 1893 ,செப்டம்பர் 11 - ஆம் நாள் -சுவாமிஜி உரையாற்றிய சிகாகோ கலைப்பயிலகத்தின் ஃபுல்லர்ட் டென் கூடத்திற்கு அருகில்தான் இவை இருக்கின்றன.
- அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு எச்சரிக்கையின் நிறங்களான பயங்கரவத ஆபத்தைக் காட்டும் சிவப்பு,பெரும் ஆபத்தை உணர்த்தும் ஆரஞ்சு, தொடர்ந்து பெருகும் ஆபத்து எச்சரிக்கை மஞ்சள்,பொதுவான ஆபத்து நிலையைக் காட்டும் நீல வண்ணங்களில் சுவாமி விவேகானந்தரின் உரைகளே படிக்கட்டுகளில் ஒளிர்கின்றன.
- சுவாமிஜியின் செய்தியை உலகமும் குறிப்பாக அமெரிக்காவும் கவனிக்கத் தவறினால் ஆபத்துதான் என்று ஒளிர்ந்து எச்சரிக்கின்றனவோ என்னவோ இந்த வண்ணங்களின் எண்ணங்கள்!!.
- இந்த 118 படிகளில் ஏறிச் செல்லச் செல்ல சர்வ சமயச் சபையின் முதல் நாளன்று சுவாமிஜி ஆற்றிய உரையின் முழுப் பகுதியையும் படித்து விட முடிகிறது.படிப்பவர் இதயமும் உயர்ந்து உலக சகோதரத்துவம் என்னும் ஒப்பற்ற உயரிய உணர்வை உணரப் பெறும்.
- காவி உடுத்திய கீழை நாட்டுத் துறவி,மேலை நாட்டினரின் மனங்களை " Sisters and Brothers of America " என்ற ஐந்தே ஐந்து சொற்களின் மூலம் வென்று,பிற மதங்களை மதித்தல், ஏற்றுக்கொள்ளுதல் என்ற இந்துப் பண்புகளை உரத்து முழங்கினாரே!! பிரிவினை வாதத்திற்கும் மதவெறிக்கும் அழிவுக்காலம் வந்து விட்டது ,எழுமின்;விழிமின்;ஓயாது உழைமின் என்றுஅறுதியிட்டு அறிவித்தார் அந்த நிகழ்வில்.
- என்னால் எந்த உயிருக்கும் அச்சம் ஏற்படாமல் இருக்கட்டும் என்ற உறுதிமொழி ஏற்றுத் துறவு பூண்டவர் இளம் வீரத்துறவி விவேகானந்தர். அவரது சொற்களோ தன்னைத்தானே கண்டு பயப்படும் சமயத்தின் பெயரால் அசுர சக்தியைத் திரட்டும் ஒரு சிலரின் மதவெறி மண்டிக் கிடக்கும் மனதில் புகாத துர்பாக்கியத்தால், 108 ஆண்டுகளுக்குப்பின் அதே செப்டம்பர் 11 ஆம் நாள் அமெரிக்க நாட்டில் மதவெறித்தாக்குதல் நடைபெற்ற கொடுமையை என்ன சொல்ல??
- இந்த இரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுக்காட்டி "சேரவாரும் ஜெகத்தீரே! இனியாவது அமைதி கண்டு உய்வீர்!! என்று அறைகூவல் விடுக்கின்றனவோ இந்தப் படிக்கட்டுக்கள்.!!
- இந்த கலைச்சின்னத்தின் செய்தி ஆழமானது,பொருள் பொதிந்தது; இன்றைய காலக்கட்டத்திற்கு மிக மிக இன்றியமையாதது.
- சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 -2010 முதல் ஜனவரி 12 -2011 வரை சிறப்பிற்குரிய இடம் என்ற அடைமொழியுடன் திறந்து வைக்கப்பட்டிருந்த இக் கண்காட்சியை உருவாக்கியவர் பாரதத்தின் புகழ் மிக்க கலைஞரான ஜிதிஷ் கலாட் என்பவர் ஆவார்.
- சுவாமிஜியின் உரை முதல், அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல் வரையான வரலாற்றுப் பதிவுகள் எத்தகைய வீழ்ச்சியை நம்க்கு உணத்துகின்றன?வ்ருங்காலம் எவ்வாறு சீரமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அலைகளை காண்பவர் மனதில் தோற்றுவிக்கத் தூண்டுவதே கண்காட்சியின் நோக்கமாகும்.
- செப்டம்பர் 11 என்றவுடன் பலரின் மனதில் அழிவுப்பதையில் அசுர வேகத்தில் பறந்த போயிங் 707 விமானங்களின் சப்தமும், தோற்றமுமே திரைப்படக்காட்சியாக ஓடும் அவல நிலையை மாற்றி,இந்த கலைப்பயிலக்த்திற்குச் செல்பவர்களின் மனங்களில் நம்பிக்கையைத் தூண்டி ஆக்கப்பாதையில் செலுத்த சர்வசமய சபையில் உரையாற்றிய வீரத்துறவி விவேகானந்தரின் திரு உருவே தோன்றட்டும்!
-
-
- //
அன்பு மார்க்கம் ஒன்றே உலகத்திற்கு நல்லது
ReplyDeleteஉலக அமைதியையும், மனிதாபிமானத்தையும் உணத்தும் அருமையானதொரு பதிவு. படங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteவிவேகானந்தரின் பக்குவம் என்னை ஆச்சரியப்படுத்திய ஒன்று. இளைஞர்களுக்கான் தலைவராக இருக்க அவர் மட்டுமே தகுதியானவர். எத்தனை விசயகள் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள. நன்றி.
ReplyDeleteபடங்கள் விளக்கங்களுடன் மிக அருமை
ReplyDeleteஎப்போதுமே எனக்கு எண்ணிக்கையும் தரமும்
முரண்படுகிற விஷயங்கள் என்கிற
அபிப்பிராயம் எப்போதும் உண்டு
அதற்காக ஒரு பதிவு கூட
போட்டிருக்கிறேன்
(மயில்களும் காகங்களும்)
உங்கள் விஷயத்தில் அதுதவறாகிப் போனது
எண்ணிக்கை பதிவின் தரத்தை
எவ்விதத்திலும் பாதிக்கவில்லை
தங்கள் பதிவுக்கு தினமும்
இப்போது ஆஜராகிவிடுகிறேன்
தொடர வாழ்த்துக்கள்
சிகாகோ அன்று முதல் இன்று வரை விவேகானந்தருக்கு ஒரு போதிமரமாக விளங்குகிறது...
ReplyDeleteவிவேகானற்தரின் வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் வேண்டும்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
தொடக்கத்தில் அவரை பற்றி தவறான எண்ணங்களை கொண்டிருந்த நான் காலப்போக்கில் அவரது உன்னதத்தை புரிந்து கொண்டேன். நன்றிங்க
ReplyDelete@ Ramani said...//
ReplyDeleteஎனது பூந்தோட்டத்தில்
மணமிக்க மலர்களையே வளர்க்கிறேன்
மயில்களை மட்டுமே ஆடவிட்டு ரசிக்கிறேன்
குயிகளைக் கூவ மட்டுமே அழைக்கிறேன் அனைவர்மீதும் பன்னீரைத் தெளிக்கும் போது என்மீதும் படும் துளிகளில் சிலிர்க்கிறேன்..
தீதும் நன்றும் பிறர் தர வாராதே -எனவே நல்ல செயல்களில் மட்டுமே பயின்று எங்கள் பிள்ளைகளையும் பழக்கும் முன்னுதாரணமாகிறோம்.
தங்களின் என் தள வருகைகளுக்கும் உற்சாகப் பின்னூட்டங்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்;நன்றிகள்;வாழ்த்துக்கள் -ஐயா.
@வை.கோபாலகிருஷ்ணன் sai//
ReplyDeleteஅருமையான பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா.
@ சாகம்பரி said...//
ReplyDeleteஆச்சரியப்படுத்தும் வீரத்துறவி பற்றிய தங்கள் கருத்துகளுக்கும்,வருகைக்கும் நன்றிங்க.
@ எல் கே said...//
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்.கருத்துக்கு நன்றிங்க.
மிகவும் உபயோகமான அருமையான பதிவு.ஸ்வாமி விவேகானந்தரின் கம்பீரக் குரலில்,’சிகாகோ உரை’ கேட்க எம் வலைப்பூவிற்கு வருகை தரவும்.
ReplyDelete;)
ReplyDeleteசுக்லாம்பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத்
ஸர்வ விக்நோப சாந்தயே!!
421+2+1=424
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete