Wednesday, February 26, 2014

சிறப்பு மிகுந்த சிவராத்திரி விரதம்


 


கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, 
தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, 
மங்கலத்தைச் செய்யும் மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். 

மகாசிவராத்திரி விரத தினத்தன்று சிவபெருமானின் 
எட்டு திருநாமங்களை ஓயாமல் ஜபிக்க வேண்டும் ..அவை:
ஓம் ஸ்ரீபவாய நம
ஓம் ஸ்ரீசர்வாய நம
ஓம் ஸ்ரீருத்ராய நம
ஓம் ஸ்ரீபசுபதயே நம
ஓம் ஸ்ரீஉக்ரயே நம
ஓம் ஸ்ரீமகா தேவாய நம
ஓம் ஸ்ரீபீமாய நம
ஓம் ஸ்ரீஈசாநாய நம.

மாசிமாதத் தேய்பிறைக் காலத்தில் வரும் சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரி விரத தினமான சதுர்த்தசி திதி இரவில்தான் சிவபெருமான் ஜோதிலிங்கமாக அடியும் முடியும் காணமுடியாத லிங்கோற்பவ மூர்த்தியாக தரிசனம் தந்த நேரம்.
லிங்கோற்பவ மூர்த்தி என்பது அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் 
எனப்படும் 64 சிவ வடிவங்களில் ஒன்று. 

அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், பைரவர், úஸôமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, கால ஸம்ஹாரர், ஊர்த்துவத் தாண்டவர் முதலிய 64 வடிவங்கள் சிவமூர்த்தங்கள் எனப்படும்...
 லிங்கோத்பவ மூர்த்தி தோன்றுவதற்குப் புராணக் கதை உண்டு. . 

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இருவரில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் ஏற்பட்டு,  முற்றிய சண்டையை நிறுத்தவும், உண்மையில் பெரியவர் யார் என்று அவர்களுக்கு உணர்த்தவும், சிவபெருமான் பெரும் நெருப்பை உமிழும் ஜோதி ஸ்தம்பமாக வானளாவ உயர்ந்து நின்றார். 

இதன் அடியையும் முடியையும் யார் முதலில் கண்டறிந்து வருகிறார்களோ அவரே பெரியவர் என்று ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார். 
உடனே பிரம்மா அன்னப் பட்சியாக விண்மீது பறந்து முடியைக் காண விரைந்தார். 

விஷ்ணு வராக வடிவம் கொண்டு நிலத்தை தோண்டிக் கொண்டே அடியைக் காண விரைந்தார். முடிவில் விஷ்ணு தன்னால் அந்த ஜோதியின் அடியைக் காணமுடியவில்லை என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
முடியைத் தேடிச் சென்ற பிரம்மனோ வழியில் மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த ஒரு தாழம்பூவைப் பிடித்து விசாரிக்க, அது ஜோதிஸ்தம்பத்தின் உச்சியிலிருந்து தவறிக் கீழே ரொம்ப காலமாய் வந்து கொண்டிருப்பதாகச் சொல்ல, பிரம்மாவுக்குச் சடாரென்று ஒரு யோசனை. தாழம்பூவைச் சரிகட்டி ஒரு பொய்சாட்சி தயார் செய்துவிடுகிறார். அதாவது அவர் முடியைப் பார்த்து விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி என்றும்! 
ஆனால் இறுதியில் உண்மை தெரிகிறது, இருவருமே அடியையும் முடியையும் காணாதவர்கள்தான் என்று. பிரம்மா பொய் சொன்னதால் அவருக்குப் பூலோகத்தில் தனியாகக் கோயில் இல்லாமல் போனது.

தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதுவும் சிவபெருமான் 
தன் தலையில் சூடும் அரிய பெருமையையும் இழந்தது. 

இவ்வாறு அயன், அரி இருவருக்கும் தானே முழுமுதற் கடவுள் என சிவன் உணர்த்திய வடிவம்தான் லிங்கோத்பவர். ஜோதிலிங்கமாக ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பரமசிவன் தோன்றிய அந்த இரவே மகா சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.
 சிவன் கோயில்களில் கர்ப்பக்கிருஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். 

அதில் லிங்கத்திற்குள் ஓர் அற்புதமான உருவம் இருக்கும். 
அதன் ஜடாமகுடம் லிங்க வட்டத்திற்குள் அடங்காததாக இருக்கும். 

அதன் பாதங்களும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. 

இந்த உருவத்தின் கீழே ஒரு வராகமூர்த்தி இருக்கும். 

மேலே அன்னத்தின் உருவில் ஒரு மூர்த்தி இருக்கும். இதுவே லிங்கோத்பவ மூர்த்தி. 
இறைவன் லிங்கோத்பவராகத் தோன்றியது திருவண்ணாமலையில் நிகழ்ந்தது. இங்கு சிவன் தீ மலையாக வெளிப்பட்டதால் இது பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக வணங்கப்படுகிறது.
 பிரம்மா, விஷ்ணு சண்டைக் கதையில் பொதித்திருக்கும் உண்மையை நாம் உணரவேண்டும். அதுதான் நாம் சிவராத்திரி விரதம் இருப்பதற்கான உண்மையான பலன். 

பிரம்மா அறிவு வடிவினர். திருமாலோ லஷ்மியையே 
தன் இருதயத்தில் வைத்திருக்கும் செல்வத்தின் நாயகன். 

வெறும் அறிவாலோ, செல்வத்தாலோ இறைவனைக் காண முடியாது. 

அறிவும் செல்வமும் அகங்காரத்தைத்தான் வளர்க்கும். 

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் முடியும் அடியும் அகப்படவில்லை என்று சொல்வதன் தாத்பரியம் , பரமாத்மா ஆதியும் அந்தமும் இல்லாத, சிருஷ்டி பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து என்பதுதான். 
இப்படி அடி, முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாதவரையே, என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்' என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால் வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார். 

அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அனுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதினாலேயே அவருக்கு "ஆசுதோஷி' என்று ஒரு பெயர் இருக்கிறது. 
"ஆசுகவி' என்றால் கேட்டவுடனே கவி பாடுகிறவர் அல்லவா? 

இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி. (காஞ்சிப் பெரியவரின் வார்த்தைகள் இவை)

ஆன்மா நற்கதி அடையவே விரதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 

மகா சிவராத்திரியன்று காலையில் நித்திய கடன்களை 
முடித்துவிட்டு சிவாலயம் சென்று வழிபட வேண்டும். 
உண்ணா நோன்புடன் திருமுறைகளைப் பாராயணம் செய்யவேண்டும். 
இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்திருந்து நான்கு ஜாமங்களிலும் நடைபெறும் சிவபூஜையில் கலந்து கொள்ள வேண்டும். 

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 6 மணிவரை  4 ஜாமங்களிலும் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக, அர்ச்சனைகளைக் கண்டும், சிவபுராணம், பன்னிரு திருமறைகள் ஆகியவற்றை ஓதியும் சிவசிந்தனையில் இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் தத்தம் இல்லங்களிலும் இவ்வாறு பூஜிக்கலாம்.
சிவதரிசனத்திற்குப் பிரதோஷ காலம் மிக ஏற்றது . 

இந்தப் பிரதோஷ காலத்தைப் போலவே ""லிங்கோத்பவ காலமும் சிவதரிசனத்திற்கு மிகமிக உகந்தது. 
மகா சிவராத்திரி தினத்தன்று இரவு 11.30 மணிமுதல் பின்னிரவு 1.00மணி வரை (ஒன்றரை மணி நேரம்) உள்ள நேரமே லிங்கோத்பவ காலம். 

ஏனெனில் இந்தநேரத்தில்தான் சிவன் ஜோதி லிங்கமாகத் 
தோன்றிய நேரம் என்பது ஐதீகம். 
இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள் கூட இந்த லிங்கோத்பவ காலம் வரையிலாவது விழித்திருந்து வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.
பன்னிரு கோடி சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிப்பதால் கிடைக்கும் சிவ புண்ணியத்தை சிவராத்திரி தினத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பூஜிப்பதால் பெற்றுவிடலாம் என்பது நம் முன்னோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சிவராத்திரியில் உண்ணாநோன்பும், கண்விழித்து சிவதியானம் செய்வதும்  புலன்களை வெல்வதற்கான முயற்சிக்கு ஒரு தூண்டுகோலாகும்..!. புலன்களை அடக்கினால் மனத்தை அடக்கலாம். மனத்தை அடக்கிவிட்டால் கிட்டாதபேறு வேறு இருக்காது.. 
சிவராத்திரி விரதமிருந்து சிவனை உளமாற மனம், மொழி, மெய்யால் வழிபடுபவர் உடல் நலம் சிறக்கும். மனவளம் பெருகும். 
இவற்றிற்கும் மேலாக  கண்களுக்கு ஒரு நண்பன் கிடைப்பான். அந்த நண்பன் நம் கண்கள் இரண்டு. அவற்றிற்கு ஒரு நண்பன் கிடைத்தால் இன்னொரு கண். அதாவது மூன்றாவது கண். சிவனுக்கே உரியது மூன்றாவது கண். 
அது  கிடைத்தால்... சிவ சாரூப்யம் அடைந்து...  பிறவிப்பயன் பெறலாம்..!

19 comments:

  1. சிவராத்திரி மகிமை அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. நள் இருளில் நட்டம்

    பயின்றாடும் நாதனை ,

    தில்லையுட் கூத்தனை ,

    தென்பாண்டி நாட்டானை,

    அல்லற்பிறவி அறுப்பானை,

    கறந்த பால் கன்னலொடு

    நெய் கலந்தாற்போல

    சிறந்தடியார் சிந்தனையில்

    தேனூறி நின்று,

    பிறந்த பிறப்பறுக்கும்

    எங்கள் பெருமானை,

    31 வடிவங்களில் ( 23 + 8 ) , மிகுந்த அழகுடனும், நிறைந்த

    தகவல்களுடனும் பகிர்ந்தமைக்கு

    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. சிறப்பான விளக்கங்களுடன் அற்புதமான பகிர்வு அம்மா... படங்கள் அனைத்தும் பிரமாதம்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
    சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
    சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
    சிவ சிவ என்னச் சிவகதி தானே!..

    ReplyDelete
  5. அன்பர்களை சிவ சிந்தனையில் ஆழ்த்தியது - தங்களின் பதிவு!.. மகிழ்ச்சி!.. மிக்க மகிழ்ச்சி!..

    ReplyDelete
  6. ஓம் நமச்சிவாய!சிவராத்திரிக்காக அருமையான பகிர்வு

    ReplyDelete
  7. சிறப்பு மிகுந்த
    சிவராத்திரி விரதம்

    கண்டேன் ... பெருமகிழ்ச்சி
    கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
  8. சிவ சிவா !

    எத்தனைப்படங்கள் !!!!!
    எத்தனைச் செய்திகள் !!!!!

    எத்தனை எத்தனை

    விளக்கங்கள் !!!!!!!!!!!

    அத்தனையும் அருமை.

    >>>>>

    ReplyDelete
  9. நடுவில் ஆங்காங்கே சுவையூட்டிடும் புராணக்கதைகள் அதுவும் தேனினும் இனிப்பான தங்கள் சொற்களால் ... தனிப்பாணியில் .....

    அசத்தல் தான் ! போங்கோ ;)

    >>>>>

    ReplyDelete
  10. அனைத்துக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    பிரியமுள்ள VGK

    o சிவ o சிவ o சிவ o சிவ o சிவ !!!!

    ReplyDelete
  11. சிவராத்திரியில் சிவாயநம ஒம் என்று கூறி நன்மை பெற கூறும் தங்கள் பதிவு மிக மிக சிறப்பு .

    ReplyDelete

  12. அருமையான படங்கள்...
    அற்புதமான தகவல்கள்...
    ஓம் நம சிவாய ....

    ReplyDelete
  13. ஓம் நமச்சிவாய!
    சிவராத்திரிக்கு முன்பாகவே சிவ தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நன்றி

    ReplyDelete
  14. சிவராத்திரி மகிமையும் விரதம் பற்றியும் நிறைய தெரிந்துகொண்டோம்.... மகிழ்ச்சி!

    ReplyDelete
  15. கதைகளின் விளக்கங்கள் அருமை. இதை அறியாமல் யார் பெரியவர் என்ற சர்ச்சைகளில் இருந்து மீண்டு வருவோம் சிவராத்திரி வந்து விட்டால் என் தந்தையின் நினைவும் கூடவே வரும். அவர் சிவராத்திரி அமாவாசை அடுத்த பிரதமை அன்று உடலம் நீத்தார்.

    ReplyDelete
  16. சிவராத்திரியின் பெருமையை உரிய கதைகளுடன் விளக்கும் முறை சிறப்பாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  17. வணக்கம்
    அம்மா

    சிவராத்திரி பற்றி சிறப்பான விளக்கமும் படங்களும் மிக அழகு வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. ?????

    அடியேன் அனுப்பியது 5 கமெண்ட்ஸ். வெளியிட்டுள்ளது 4 மட்டுமே.

    சிவ சிவா .... இது என்ன சோதனை !

    OK அதனால் பரவாயில்லை.

    அது ..... போனால் போகட்டும்.

    ?????

    ReplyDelete