Saturday, May 17, 2014

சென்னை ஸ்ரீ .மீனாட்சி திருக்கல்யாணம்..




சென்னை முகப்பேரில் ஸ்ரீராம் நகரில்  
சென்னை மீனாட்சி அம்மன் ஆலயம் 
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை 
அடியொட்டி அதேபோல அமைத்திருக்கிறார்கள்..

மூலவராக மெல்லதவழுகின்ற செல்லக்கிளி அழகிய திருக்கரத்திலும்  

மென்னகை அதரத்திலும் தவழ  எழில் கோலம் கொண்டு திகழும்
அன்னை மீனாட்சி மஞ்சள் காப்பில் மங்களகரமாக அருள் பொழிகிறாள்...!


பொற்றாமரைக்குளம் 



சித்திரை மாதத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணவிழாவில், திருக்கயிலாய சிவபூதகண வாத்திய முழக்கத்துடன், மங்கலவாத்தியமும் இசைக்க, நாராயணனின் சீர்வரிசையை பெண்கள் ஏந்தி வர, மதுரையில் நடைபெறுவது போன்றே வைதீக சம்பிரதாயத்துடன் சிவாச்சாரியார்கள் பங்கேற்று திருக்கல்யாண வைபவத்தை கோலாகலமாக நடத்தி வைக்கின்றனர்..


Displaying IMG_20140510_112122.jpg

விபூதி விநாயகர்


பூங்காவாக இருந்த இடத்தை ஸ்ரீ ராம் நகர் குடியிருப்பு மக்கள் தங்கள் வழிபாட்டுதலமாக சாந்நித்யமாக திகழச் செய்திருக்கிறார்கள்..

சமீபத்தில் 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது..!
வரசித்தி விநாயகர்

அன்னையின் எதிரில் நந்திகேஸ்வரர் சந்நிதியும் பக்கத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதியும்   உள்ளது..!

அஷ்டதிக் கஜங்களாக எட்டுத்திசைகளிலும் கரும்போடு நிற்கும் யானைகளால் தாங்கப்படும் கருவறையில் சொக்கநாதர் அருள்புரிகிறார்.



சுவாமி சுந்தரேஸ்வரர்  சந்நிதியில் பிரதோஷ நந்திகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்..

பள்ளியறைக்கு எழுந்தருள சுந்தரேஸ்வரர் அழகே உருவாய்
தரிசனம் தருகிறார்..
கூடல் முருகன் சந்நிதியில் வள்ளி தெய்வானையோடு முருகன் தரிசனம் தருகிறார்...!

எல்லாம் வல்ல சித்தர்  சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சண்டிகேஸ்வரர்  சந்நிதி உண்டு   

நவக்கிரஹங்கள் , மஹாலஷ்மி சந்நிதி 
ஆகிய சந்நிதிகள்  சிறப்பாக் திகழ்கின்றன்..!

மதுரையில் நடைபெறும் அத்தனை திருவிழாக்களும் 
அதே தினத்தில் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன ..! 

பூங்காவாக இருந்தபோது கிணறு இப்போது தீர்த்தமாக சுவாமிகளின் அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது..!
ஆலயத்தின் இணையதளம் -
http://chennaisrimeenakshi.weebly.com/index.html
ஆலயம் செல்லும் வழி -முகவரி..
http://chennaisrimeenakshi.weebly.com/location--route-map.html
தொடர்புடைய பதிவு
சென்னை ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலயம்

வைத்திய லிங்கம் , 


பைரவர் சந்நிதி


வன்னி மரமும் சிறிய நந்தவனமும் இருக்கிறது..!
ஆலய வாசலில் தூதுவளைச்செடி --தானாக முளைத்ததாம் ..!



19 comments:

  1. தங்கள் பதிவின் மூலம்
    தரிசித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தரிசித்து மகிழ்ந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. படங்கள் அருமை. ஏற்கெனவே படித்த நினைவாய் இருக்கிறது.

    ReplyDelete
  4. சிறப்பான படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி...

    ReplyDelete
  5. சென்னையின் சுந்தரேஸ்வரர்
    ஆலயத்தைப் பற்றிய
    சிறப்பான தகவல்களுக்கும் ,
    பதிவிற்கும் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  6. இனிய பதிவு.. அழகான படங்கள்.. மகிழ்ச்சி!..

    ReplyDelete
  7. சென்னை அன்னை மீனாக்ஷிக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.

    >>>>>

    ReplyDelete
  8. ஸ்ரீ சுந்தரேஸ்வரர் பற்றிய சுந்தரமாக பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  9. விபூதி விநாயகர் விசித்திரமாக உள்ளார்.

    அவருக்குப்போடப்பட்டுள்ள கோலம் மிக அழகாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  10. எட்டு திக்குகளிலும் கரும்போடு நின்று தாங்கி வரும் யானைகளில் இரண்டினைப் பார்த்ததே அடிக்கரும்பாய் இனிக்கிறது.

    தங்களின் விளக்கங்களின்படி அந்தக்கருவறையில் சொக்கநாதர் காட்சியளித்து நம்மை சொக்க வைப்பார் என நினைத்தால், தக்ஷிணாமூர்த்தியாக தோன்றி மகிழ்விக்கிறார்.

    >>>>>

    ReplyDelete
  11. சந்தனக்காப்பிட்டது போன்ற ஐந்து தலை நாகருக்குக்கீழேயுள்ள கருத்த வைத்யலிங்கம் நம் கருத்தினைக் கவர்வதாக அமைந்துள்ளது.

    >>>>>

    ReplyDelete
  12. மொத்தத்தில் இந்தத் தங்களின் 1277வது பதிவு அற்புதமாக உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    oo oo oo

    ReplyDelete
  13. சென்னையில் இருப்பவர்கள் மதுரைக்குப் போய் மீனாட்சியை தரிசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சென்னையிலேயே தரிசிக்கலாம் என்பது மகிழ்ச்சியான செய்தி. நல்ல தகவல்.

    ReplyDelete
  14. மீனாட்சியம்மன் கோவில் செய்திகள் வழ்க்கம் போல் அருமை.

    ReplyDelete
  15. அருமையான பதிவு.
    படங்களும் நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. அடுத்து சென்னை சென்றால் காணவேண்டும் .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. சிறப்பானதொரு பதிவு மற்றும் படங்கள். நன்றி அம்மா

    ReplyDelete
  18. அருமையான பகிர்வு.
    படங்கள், செய்திகள் அருமை.

    ReplyDelete