அன்பே தகழியாக ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்..
ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே’ என்கின்றனர் அப்பர் சுவாமிகள்
தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை திருவண்ணாமலை புண்ணிய பூமி, ஆன்மிக பூமியாகத்திகழ்கிறது..
அடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் சிவபெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் பெருமானின் அடிமுடி தேடினர்..
அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார்.
இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
யோக நெறியால் அன்றிக் காண முடியாத தெய்வ ஒளியை திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.
கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteதீப திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteகார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதீப ஒளியில் நம் வாழ்வு பிரகாசிக்கட்டும்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteகார்த்திகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரி!
ReplyDeleteதிருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒரு மலையாளக் கவி சொன்னாராம்”தீபஸ்தம்பம் மாஹாச்சரியம் எனிக்கும் கிட்டணம் பணம்” அதுபோல் நானும் கூறுகிறேன் அண்ணாமலைத் தீபம் மஹா ஆச்சரியம் உங்களுக்கும் கிடைக்கட்டும் அருள்.
ReplyDeleteதிருக்கார்த்திகையின் தீபத்திருநாளை சிறப்புடன் கொண்டாடும் வேளையில்
ReplyDeleteசிறப்பு பதிவு தந்தமைக்கு பாராட்டுக்கள்!
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
((அகல் விளக்கு (சிறுகதை) எனது படைப்பை தங்களுக்கு நேரமிருப்பின் படிக்கவும்))
புதுவை வேலு
திரும்புகின்ற பக்கமெல்லாம் தீபங்களின் அணி வரிசை! மங்கலம் உண்டாகட்டும்! கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிருக்கார்த்திகை வாழ்த்துகள்! படங்களும் பகிர்வும் அருமை.
ReplyDeleteதிருக்கார்த்திகை வாழ்த்துகள்.
ReplyDeleteவிளக்குகள் அருமை.
நல்ல தகவல்கள்.
நன்றி சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்......
ReplyDeleteகார்த்திகை தீபத்திருவிழா பற்றிய விவரங்களையும் எரியும் விளக்குகளின் படங்களையும் பதிவிட்டிருப்பது அருமையாக உள்ளது
ReplyDelete