துளசி பயிரான இடத்தில் உள்ள சூழ்நிலை –
காற்றும் தண்ணீரும் மண்ணுமே சுத்தமாகிவிடும்.
கார்த்திகை மாத சுக்ல பட்ச(வளர்பிறை) துவாதசி, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசி தேவிக்கும் திருமணம் நடந்த தினமாக பிருந்தாவன துவாதசி என சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது.
கர்நாடகாவில், 'சிக்க தீபாவளி(சின்ன தீபாவளி) என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றி, வாணவேடிக்கைகளுடன் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.
துளசி பூஜை செய்ய, துளசிச் செடியை பூஜை செய்யும் போது, பூஜை செய்யும் படம், விக்ரகம் முதலியவற்றில், தெய்வத்தை எழுந்தருளப் பிரார்த்திக்கும் 'ஆவாஹனம்' துளசிக்கு அவசியமில்லை.
அதில் எப்போதும் தேவி எழுந்தருளியிருக்கிறாள். இது சகல நன்மைகளையும் தர வல்லது.
பிருந்தாவன துளசி விரத பூஜையில், துளசி மாடத்தில், ஸ்ரீ விஷ்ணுவின் அம்சம் ஆன நெல்லி மரத்தின் கிளையை சேர்த்து நட்டு, பூஜை செய்வது வழக்கம்.
துளசிச் செடியின் அடியில், ஸ்ரீ கிருஷ்ணரது பிரதிமை அல்லது சாளக்கிராமத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.
துளசி மாடத்தின் இரு புறமும் வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்வது சிறப்பானது.
துளசி மாடத்துக்கு கோலமிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, பூ வைக்க வேண்டும். மாலையாகவும் சாற்றலாம். இரு பக்கமும் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். பஞ்சினால் ஆன கஜவஸ்திரம் சாற்ற வேண்டும். ரவிக்கைத் துணி போன்றவற்றையும் சாற்றுகிறார்கள். புடவை கட்டி அலங்கரிப்பதும் உண்டு.
காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின்,மாலை, விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது. சிலர் காலையிலும் செய்கிறார்கள்.
பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும். 'இன்னின்ன பலன்களுக்காக பூஜை செய்கிறேன்' என்று வேண்டுவதைக் கோரி சங்கல்பம் செய்ய வேண்டும். அதன் பின் 16 விதமான உபசார பூஜைகளைச் செய்து, மலர்கள் தூவி, துளசி அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும். .
அவல் பாயசம் இனிப்புப் பண்டங்கள் நிவேதனம் செய்வது சிறந்தது. . மாலை வீடு முழுதும் விளக்கேற்றி, தாம்பூலம் கொடுத்து, பட்டாசுகள் வெடித்து மிக உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.
அன்றைய தினம், யாராவது ஒருவருக்கு வடை பாயசத்துடன் உணவு வழங்கி, பாயசத்துடன் கூடிய பாத்திரத்தை தானம் செய்வது சிறப்பானது.
கார்த்திகை மாதம், பிருந்தாவன துவாதசி துவங்கி, ஒவ்வொரு மாதமும் வளர்பிறை துவாதசியன்று விரதமிருந்து, துளசி பூஜை செய்து, பாயச தானம் செய்வது வழக்கம். மறுவருடம் பிருந்தாவன துவாதசியன்று விரதம் நிறைவு செய்யலாம். இவ்வாறு செய்வது மிகச் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.
பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.
மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. இதைச் செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும்.
தூவாதசி துளசி பூசை அறிந்தேன் உணர்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அட்டகாசமான படங்களுடன் துளசியின் மகிமையை அறிந்தேன் அம்மா...
ReplyDeleteதுளசி பூஜா விபரம் தெரிந்து கொண்டேன் அம்மா..படங்கள் அருமை.
ReplyDeleteஎன்றும் பசுமையான ஸ்ரீதுளசிக்கும் ஸ்ரீபரந்தாமனுக்கும் திருமணம் என்பதால் - பதிவு முழுதும் பச்சைப் பசேல் என்று - கண்ணுக்குக் குளுமையாக இருக்கின்றது. மகிழ்ச்சி.. நன்றி..
ReplyDeleteதுளசிச்செடியைப்பற்றி இத்தனை சிறப்புகளை இப்போது தான் அறிந்தேன். படங்களும் அழகு!
ReplyDeleteதுவாதசி துளசிபூஜை, துளசிச்செடியின் சிறப்புகளை அறிந்தேன்.அழகான படங்களுடன் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇதுவரை அறியாதது
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை
பதிவுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
துளசி பூஜை தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!
ReplyDeleteஅருமையான தகவல்கள்...
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
Hi Mam,
ReplyDeleteYou have inspired me with your blogs. I have written my first blog and if you have time please read my blog and give me your feedback. Thanks!
http://arulamudhu.blogspot.com.au/
துவாதசி பற்றியும் துளசியின் பல்வகையான பெருமை பற்றியும் படங்களுடன் நிறைவொன செய்திகளை அறிந்தேன். நன்றி.
ReplyDeleteதுளசி பற்றிய தகவல் மிக அருமை. ஊரில் சிலர் சொல்வார்கள், துளசிமாடம் வீட்டில் வைத்தால்.. துன்பம் துயரம் சூழும் என.. அப்பயத்தில் வைக்கவில்லை, ஆனா வீட்டில் துளசி வளர்த்தோம்.
ReplyDelete