Wednesday, December 10, 2014

சாக்லேட் தொழிற்சாலை




ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகருக்கு அருகில் இருந்த பிலிப்தீவில் அமைந்திருந்த சாக்லட் தொழிற்சாலைகுச் சென்றிருந்தோம்..

ஐந்து டாலர் நுழைவுக்கட்டணம் செலுத்தினால் நுழைவுச்சீட்டாக ஒரு சாக்லேட் தந்தார்கள்..


 கோகோ விதையை காயவைத்து பொடியாக்கும் இயந்திரங்கள், கோகோ காயிலிருந்து விதைகளைப்பதப்படுத்தி கோகோ வெண்ணை தயாரிப்பது , சாக்லேட் தயாரிப்பது போன்றவற்றை சுவாரஸ்யமாக காட்சிகளாக்கி ரசிக்கவைக்கிறார்கள்.

சில விளையாட்டுகளில் வென்ற காயின்களை கொடுத்தால் அதற்கான பரிசாக சாக்லட்டுகள் அளிக்கிறார்கள்.

எங்கள் குழந்தை சாக்லட்டுகளைவிட அந்த காயினால் கவரப்பட்டு சாக்லட் பெற மறுத்துவிட்டு காயினையேவிரும்பி வாங்கிக்கொண்டது,..

நிறைய சாக்லட் சாப்பிட்டு சலிப்பு ஏற்பட்டுவிட்டது போலும்..

ஒருடன் எடையுள்ள சாக்லட் ஒன்றும் பார்வைக்கு வைத்திருந்தார்கள்..

விதம் விதமான சாக்லட்டுகள்மாடலாக வைத்து காமிராவும் செட்செய்து வைத்திருக்கிறார்கள்.. உள்ளே சென்று கிளிக்செய்து நம் இ மெயில் முகவரி டைப் செய்தால் படம் அந்த முகவரிக்கு வந்துவிடுகிறது..

முழுவதும் சாக்லட்டுகளால் ஆன நகரம் , சின்னச்சின்ன பொம்மைகள் சாக்லட் செய்து பாக்கெட் செய்து ஏற்றுமதி செய்வது எல்லாம் சாக்லட்டுகளாலேயே அமைத்திருந்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது..,










15 comments:

  1. நாங்களும் அந்த சாக்லெட் தொழிற்சாலைக்குள் சென்று வந்த மாதிரி இருக்கிறது அம்மா.

    ReplyDelete
  2. புதியப் பகுதி அறிமுகம் இனிப்பாக இருக்கிறது'படங்களும் தகவலும் நன்று

    ReplyDelete
  3. ஸ்ஸ்ஸ்ஸ்!! இனிமையான பதிவு!!

    ReplyDelete
  4. ஆகா
    ஆகா
    படங்களைப் பார்க்கப் பார்க்க நாவில் இனிப்பு தெரிகிறது
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. அருமை...
    படங்கள் ஆச்சர்யம்
    நன்றி

    ReplyDelete
  6. தித்திக்கும் பதிவு அம்மா...

    ReplyDelete
  7. சாக்லேட் போலவே - இன்றைய பதிவு..
    அருமை.. இனிமை..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  8. நானும் ஒரு சாக்லேட் பிரியன்தான். உங்களிடமிருந்து ஒரு வித்தியாசமான பதிவு. அவ்வப்போது இதுமாதிரியும் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. சாக்லேட் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்,படங்கள். அருமை.

    ReplyDelete
  10. சாக்லெட் தொழிற்சாலை...இனிப்பாக இருக்கிறது...

    ReplyDelete
  11. வணக்கம்
    அம்மா.
    அறியாத விடயத்தை அறிந்தேன்... சாக்லெட் நகரம் மற்றும் உருவங்கள் எல்லாம் அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. சாக்கலேட்டுகளில் கைவினைகள் ரசிக்க வைக்கிறது. என்னதான் செய்தாலும் அவை உண்பதற்குத்தானே இல்லை வெறும் காட்சிப்பொருளா. ? அயல் நாடுகளிலிருந்து வருபவர்கள் சாக்கலேட்டுகள் கொண்டு வருவார்கள். ஆனால் என்னக்கென்னவோ இந்திய சாக்கலேட்டின் சுவை அதில் இல்லை என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  13. அழகான படங்களுடன் நல்ல பகிர்வு அம்மா...

    ReplyDelete
  14. சாக்கேல்ட் நகரம், அழகு.

    ReplyDelete
  15. அருமை. ஒவ்வொன்றும் அழகு. சாப்பிடத் தோன்றினாலும் சாப்பிட முடியாதே!

    சிறு வயதில் Parry's Chocolate தொழிற்சாலைக்கு ஒரு முறை சென்ற நினைவு...... இன்னமும் மனதில் இனிமையாய்.

    ReplyDelete