திருப்பாவை,
''மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் ''
-- என்றே தொடங்கிறது.
திருவெம்பாவையும்,
'' போற்றியாம் மார்கழி நீர்
ஆடேலோர் எம்பாவாய் ''
- என்றே முடிகிறது
மார்கழி மாதம் பிறந்ததுமே, அனைத்து ஆலயங்களும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டு வழிபாடுகள் நடக்கும்
' மாதங்களில் நான் மார்கழி மாதம் ஆகின்றேன் '' என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.
வால்மீகியும், பஞ்சவடிவில் இராமர் இருக்கும்போது,இலக்குமணன் , இராமனுக்கு விருப்பமான பனிக்காலம் வந்ததென்றும், இந்த மார்கழி மாதத்தினாலேயே ஆண்டு முழுவதும் அணி பெறுகிறதென்றும் இராமனிடம் கூறிகிறான்..
பாகவதம் மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு,அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள் என்றும் கூறுகிறது.
பாகவதம் மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு,அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள் என்றும் கூறுகிறது.
கார்த்தியானி விரதத்தைப் '' பாவை நோன்பு '' என்பதினால் ' எம்பாவாய் '
எனப் பாவையை நோக்கி முதலில் பாடிய பாடல்கள் ' ஏலோர் எம்பாவாய் '
என்ற தொடர் ஒவ்வொரு பாட்டிலும் முடிவாக வருகிறது.ஆண்டாளும் ,
'' பாலுண்ணோம் நெய்யுண்ணோம்
கோல அணிகலெல்லாம் பூணோம் ''
-- என்று நோன்புடன் ,அறம் செய்தலையும் வலியுறுத்துகிறது.
ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்ட வேண்டுமெனப் பாடுகிறார்.
நோன்பு முடிந்த பின் எல்லா அணிகளையும் அணிவதோடு நெய் ஒழுக சிறந்த உணவை உண்ணுவதனையும் குறிப்பிடுகிறது.
ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்ட வேண்டுமெனப் பாடுகிறார்.
நோன்பு முடிந்த பின் எல்லா அணிகளையும் அணிவதோடு நெய் ஒழுக சிறந்த உணவை உண்ணுவதனையும் குறிப்பிடுகிறது.
இராணுவச் சிப்பாய்கள் லெப்ட் – ரைட் என்று ஒருவிதமான அதிர்வுகளுடன் நடப்பார்கள். ஏதேனும் பாலம் வந்தால், அவர்கள் சாதாரணமாகத்தான் நடக்க வேண்டும். பாலத்தில் லெப்ட்-ரைட் போட்டால், பாலத்தின் அதிர்வுகளும் சேர்ந்து (Resonance) பாலமே உடைந்து போகலாம்.
ஆன்மிக அதிர்வுகள் ஒன்றி இணையும் மாதம் மார்கழி. ஆகவே மாதங்களில் உன்னதமானது மார்கழி.
மார்கழியில் திருவில்லிப்புத்தூரில் துளசிமாடத்தின் அடியில் பூமியில் கோதை உதித்தாள்.
அரங்கனுக்கு மலர்க் கைங்கரியம் செய்யும் பெரியாழ்வார் கோதையைக் கண்டெடுத்து வளர்த்தார்.
நாரதர் கூற, ருக்மணி தேவி துவராகைக் கண்ணனே தன் கணவன் என்று மனதில் ஒன்றினாள். கண்ணனே அவளது ஊருக்கு வந்து அவளை மணந்து மகிழ்வித்தார்.
அதே நாரதர் கூற, கந்தனே வேடனாக, கிழவனாக எனப் பல லீலைகள் புரிந்து வள்ளிதேவியை மணம் புரிந்தார்..
பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுத்த மாலையைக் கோதை தான் அணிந்து பெருமாளுக்குத் தான் உகந்த மனைவியா என்று அழகு பார்த்தாளாம்.
ஒரு நாள் இதனைக் கண்டுவிட்ட பெரியாழ்வார் அம்மாலையை, மாசுபட்டது என்று அணிவிக்கவில்லையாம். அரங்கனோ, ஆண்டாள் அணிந்து அழகு பார்த்த மாலைதான் தனக்கு வேண்டுமென்றார்.
அவ்வாறே நடந்திட, கோதை விடியற்காலை மற்ற தோழிகளையும் எழுப்பி ஊர்வலம் வந்து திருப்பாவையைப் பாடினாள்.

வாரணம் ஆயிரம் என்று அரங்கனுடன் தான் மணம் புரிந்ததாகக் கனாக் கண்டேன் தோழீ நான் என்று பாடினாள். மகாவிஷ்ணுவுக்குப் பல்லாண்டு பாடினாள். பெரியாழ்வார் திகைத்தார். அ
அரங்கனோ, கோதையை மணமகளாக அலங்கரித்துத் திருவரங்கக் கோயிலுக்கு அழைத்து வாரும் என்க, அவரும் அவ்வாறே செய்ய, மணமாலையுடன் திருவரங்கக் கருவறைக்குள் சென்ற ஆண்டாள், அரங்கனுள் மறைந்தாள்.
கண்ணையும் மனதையும் கவரும் அழகான ஒரு மார்கழிப்பதிவு.
ReplyDeleteகோதை கண்டேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
படங்கள் ஒவ்வொன்றும் என்னே அழகு...
ReplyDeleteஅழகிய மாதம். அழகிய படங்கள். அழகிய பதிவு.
ReplyDeleteபடங்கள் அருமை! மார்கழி என்றாலே கலர்ஃபுல்தான். எல்லார் வீடுகளிலும் கலர் கோலங்களும், அதிகாலை ஓசோன் படலம் கீழே இருக்கும் போது எழுந்து நீராடி இறைவனடி தொழுதல்....திருவெம்பாவை பற்றியும் எழுதுங்கள் சகோதரி...
ReplyDeleteஇனிய திருப்பாவை வரலாறு!..
ReplyDelete(நமது தளத்திலும் திருப்பாவை மலர்கின்றது)
ஆண்டாள் திருவடிகளே சரணம்!..
கோதையும், மார்கழியும், மாதவன் பெருமை கூறும் பாவை நோன்பும் அருமை.
ReplyDeleteபடங்கள் எல்லாம் சிறப்பு சேர்த்தன.
...அனைத்து படங்களும் அருமை...........
ReplyDeleteநல்ல பகிர்வு. நன்றி.
ReplyDeleteஅத்தனையும் அருமை சகோதரி!
ReplyDeleteமார்கழியின் சிறப்பு மனம் நிறைத்தது!
வாழ்த்துக்கள்!
மார்கழி மாதத்தை மிகச் சிறப்பாக துவக்கி வைத்துள்ளீர்கள்.
ReplyDeleteமார்கழிக்கான அழகிய பதிவு அழகிய படங்களுடன்...
ReplyDeleteஅற்புதம்...
ReplyDeleteபடங்கள் அப்படி ஒரு அழகு...
அருமை அம்மா..