Saturday, April 9, 2011

அழகிய கடற்கரை - Bondi கடற்கரை

File:Bondi Beach.jpg
ஆஸ்திரேலிய நாடு அழகிய பல கடற்கரைகள் கொண்டு சுற்றுலாப்பயணிகளை உலகெங்கிலிருமிருந்து ஈர்க்கிறது
கோவா மாநிலத்திற்குச் சென்றால் நிறைய கடற்கரைகளையே சுற்றுலாத் தலங்களாக அழைத்துச் செல்வதைக் கண்டிருக்கிறோம். புகழ்பெற்ற சர்ச் களுக்கும் சென்றிருக்கிறோம்.
[1.jpg]
சிட்னிக்குச் சுற்றுலா வருபவர்கள், ஒபரா ஹவுசையும், டார்லிங் ஹாபரையும் தரிசித்து விட்டு,  சிட்னி முருகன் ஆலயத்துக்குப் போய் அருச்சனையும் செய்வார்கள். இவற்றோடு இணையும் இன்னுமொரு சுற்றுலாத் தலம், சிட்னியின் கடற்கரைப் படுக்கைகள் ஆகும். சிட்னியின் கரையோரப் படுக்கைகளில் நல்ல கடற்கரைகள் அதிகம் இருக்கின்றன.
[8.jpg]
 டிசம்பர் மாதக் கோடைகாலத்தின் இதமான இளஞ்சூட்டைப் பருக விரும்பும் மேற்குலகத்தோர், ஆஸ்திரேலியாவின் Queensland மாநிலத்தில் உள்ள Gold Coast பிரதேசம் மற்றும் சிட்னியில் உள்ள கடற்கரைப் பகுதிகள், அதுவும் குறிப்பாக Bondi கடற்கரையைத் தேடி வருவார்கள். 

டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாத இறுதி வரை இப்படியான கடற்கரைகளை தேனீ மொய்ப்பது போல கடற்கரையில் சூரியக்குளியல் எடுத்து கடற்கரையை எழிலூட்டுகிறார்கள்.
[6.jpg]
நல்ல சுத்தமான குருமண் படுக்கையும், சுத்தமான ஆழமற்ற கடற்படுக்கையும் கொண்டது Bondi கடற்கரை.

கடற்கரையோரம் நிறைய உணவகங்கள், தங்குமிடங்கள் இருக்கின்றன.

உலகெங்குமிருந்து கிருஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்க அதிகளவில் விரும்பும் இடமாகத் திகழ்கிறது.
[4.jpg]
கடலில் நீந்தவும், உடை மாற்றவும், குளிக்கவும், கழிப்பகங்களும் கூடவே நல்ல வசதியோடும் பராமரிப்போடும் உள்ளன. கூடவே கடலில் மிதந்து களிக்கும் நீர்ச்சறுக்கல்(surfing) ஏற்பாடும் உண்டு. உலகின் முதல் கடல் மிதப்போர் பாதுகாப்பு கழகம் (world's first surf lifesaving club) ஆன Bondi Surf Bathers Life Saving Club இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களையும், தொண்டர்களையும் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு பல நல்ல சேவைகளைக் கடற்கரை நுகர்வோருக்கு வழங்குகின்றது.
ஆழக்கடலுக்குச் செல்வோரை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துக் கரைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றது. கூடவே எந்தெந்தப் பகுதிகள் கடல் நீராட உகந்தவை என்பதை அறிவித்தும் கொடிகள் நட்டும் காட்டுகின்றது இந்த அமைப்பு. மற்றைய கடற்கரைகளோடு ஒப்பிடும் போது சற்றே ஆழம் குறந்த கரை ஆனால் அதிக அலை அடிப்பை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
[7.jpg]


vb6.jpg (620×413)ஒலிம்பிக் வாலிபால் போட்டி கடற்கரையில் நடைபெறுகிறது.
vb11.jpg (420×619)

13 comments:

  1. 1975 எனக்கு வயது 25. அலுவலக நண்பர்கள் (ஆண்கள் மட்டும்) சிலருடன் பம்பாய், கோவா முதலிய இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்தேன்.

    பம்பாயிலிருந்து கோவாவுக்கு கடலில் கப்பல் பயணம் செகண்ட் கிளாஸ் (மொட்டை மாடியில்) ரூபாய் 30 மட்டும் டிக்கெட் 24 மணி நேரப்பயணத்திற்கு, அன்று.

    கோவாவில் சன்பாத் பார்க்கலாம் என்று கூட்டிச்சென்றார்கள், என் நண்பர்கள்.

    ஏதோ சூரியன் கடலில் குதிப்பது போலவும் குளிப்பது போலவும் தெரியுமாக்கும் என்று போய்விட்டேன்.

    அங்கு போனால் ஒரு பத்து ஆணும் பெண்ணுமாக வெளிநாட்டுக்காரர்கள் உரித்த பச்சை நிலக்கடலைபோல வெய்யிலில் மணலில் உருண்டும், கடலில் குளித்தும் ஏதேதோ நிலைமைகளில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்ததைக்காண நேர்ந்ததும், எனக்கு கடும் குளிர் ஜுரமே வந்து விட்டது.

    உங்களின் இந்தப்பதிவைப்பார்த்ததும் எனக்கு இப்போ அந்த ஞாபகம் வந்து குளிர் ஜுரம் வருமோ எனக்கவலை ஏற்பட்டுவிட்டது.

    அன்று கோவாவில் நான் கண்டது ஒரு பத்து பேர்கள் என்றால் இங்கு உங்கள் பதிவில் 10 லட்சம் பேர்கள் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

    வாழ்த்துக்கள். சிவ! சிவா !!

    ReplyDelete
  2. படங்கள் நிறைந்த நல்ல பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கோடைக்காலத்திற்கான சரியான பாதையில் பதிவெழுதி இருக்கிறீர்கள்.. படங்கள் ஈர்க்கின்றன. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  4. படங்களுடன் பதிவும் மிக அருமை
    வீட்டில் அமர்ந்தபடி சுற்றுலா செல்லுகிற அனுபவம்
    உங்களது ஒவ்வொரு பதிவிலும் கிடைக்கப்பெறுகிறது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அட சூப்பருங்க.. அருமையா படங்களுடன் விளக்கம்.. சூப்பரா இருந்தது..

    ReplyDelete
  6. புகைப்படங்களும் ஓவியங்களும் மிக அழகு!

    ReplyDelete
  7. தேர்தல் பணி முடிந்து உங்கள் வலைப்பூவில் வலம் வருகிறேன். தெரிந்து கொள்ள விஷயங்கள் நிறைய உள்ளன.

    ReplyDelete
  8. ஜில்லுனு ஒரு பீச்...சூப்பர் பிக்சர்ஸ்ங்க...

    ReplyDelete
  9. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர்
    வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete