Tuesday, April 19, 2011

சிற்பக் களஞ்சியம் தாடிக்கொம்பு..







திண்டுக்கல்லில் அமைந்திருக்கும் சௌந்திர ராஜப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்.

என்மகன் அங்கு பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தார்.

ஒவ்வொரு முறையும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் போதும், விடுதியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரச் செல்லும் போதும், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ளச் செல்லும் போதும் கோவிலுக்கு நிறைய முறை சென்றிருக்கிறோம்.

ரயில் பயணத்திற்கு விருப்பப்ப்ட்டு செவ்வாய் கிழமை தேய்பிறை அஷ்டமி நாளில் அதிகாலை கோவையிலிருந்து ரயிலில் கிளம்பினோம்.

ரயில் நிலையத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியும், நேதாஜியின் படையில் பங்கேற்ற வீரருமான,எங்கள் குடும்ப நண்பர் வரவேற்று கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

அவர் மாதா பிதா டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி கோவில்களுக்கும், கும்பாபிஷேகங்களுக்கும் பல அரிய சேவைகளைச் செய்து வருகிறார். 

தன்னுடைய நண்பரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். 

அவரும் சுதந்திரப்போராட்ட வீரர். திருமலை வாசி என்கிற அருமையான பெயர் கொண்ட அவரின் வீர சரித்திரம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வாழும் வரலாறாக பாடப்புத்தகமாக வைக்கப்பட்டிருக்கிறதாம். 

அந்தப் புத்தகப் பிரதியையும், நேதாஜி, காந்தி, நேரு மற்ற தலைவர்களுடன் எடுக்கப்பட்ட அபூர்வ படங்களையும் ,தாமிரப்பட்டயகளையும் ஆர்வத்துடன் பார்வையிட்டோம்.

இத்தனை வயதிலும், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும்,நல்ல நினைவாற்றலுடனும், தர்ம ,கோவில் கைங்கர்யங்கள் செய்துவரும் அவர்களின் தரிசனம் எங்களின் பெரும்பேறாக, மகன்களுக்கும் தோன்றிய்து.

சிற்ப அற்புதம் வாய்ந்த தாடிக்கொம்பு கோவிலின் சிற்பம் போல் மீண்டும் உருவாக்க முடியாத தெய்வீகச் சிறபம்சம் கொண்டவை. 

அக்காலச் சிற்பிகள் தாரமங்கலம், தாடிக்கொம்பு சிற்பங்கள் நீங்கலாக எந்த கோவில் சிற்பங்களும் செய்து தருகிறோம் என்றே பதிவு செய்து முன்பணம் பெறும் அற்புதம் நிறைந்தவை.

வில்வமரமே தலமரமாகத் திகழ்கிறது. விஷ்ணுவின் கோவிலில் சிவாம்சமாகக் கருதப்படும் வில்வமரம் தலவிருட்சமாக சைவ வைணவ ஒற்றுமை துலங்குகிறது.
soundarrajaperumal temple

பனைமரங்கள் அடர்ந்த காடாக முற்காலத்தில் விளங்கியது. 

மண்டூக மகரிஷி சாபவிமோசனத்திற்காகத தவமிருந்த போது,தாளாசுரன் ரிஷியின் தவம் பலித்தால் அவனுக்குக் கேடு வந்துவிடுமோவென்று, தொல்லை கொடுத்தான். 

மதுரை திருமால் அழகரை நோக்கித்தவமிருந்த முனிவரின் தவத்திற்கு மெச்சி அழகரே சௌந்திரராஜப் பெருமாளாகக் காட்சி தந்து, தாளாசுரனை வதம் செய்து அருளினார்.

போக்குவரத்து வசதிகள் அதிகமில்லாத காலத்தில், மதுரை அழகருக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை தாடிக்கொம்பு கோவிலில் செலுத்தியிருக்கின்றனர். அழகரே சௌந்திராஜராக வந்தவர்ர் என்பதால் ..!


ஹயக்கிரீவர் மிகுந்த வரப்பிரசாதி. ஏலக்காய் மாலை சாற்றி, கல்வி வழிபாடு: செய்கின்றனர்.

கல்வி தெய்வங்களான ஹயக்ரீவர், சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றனர். 
திருவோணத்தன்று ஹயக்ரீவருக்குதேனபிஷேகத்துடன் விசேஷ பூஜை நடக்கிறது.படிப்பில் மந்தம், ஞாபகமறதி, பேச்சுகுறைபாடு உள்ளவர்கள் இந்நாளில் ஹயக்ரீவருக்கு தேங்காய், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்ந்த கலவையை படைத்து, ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.

தன்வந்திரிக்கும் தனி சன்னதி உள்ளது.

அமாவாசைதோறும் மூலிகை தைலாபிஷேகம், மூலிகை லேகியம் படைத்து தன்வந்திரிக்கு பூஜை நடக்கிறது.

தைலப்பிரசாதம் பெருமாள் கோயிலில் துளசியும், தீர்த்தமும் பிரசாதமாகத் தருவார்கள். மருத்துவக்கடவுள் தன்வந்திரி சந்நிதியில் லேகியம் , தைலத்தைப் பிரசாதமாகத் தருகின்றனர்.

நோயாளிகளுக்காக, அமாவாசை நாட்களில் இந்தப் பிரசாதத்தை வாங்கிச் செல்கின்றனர்.

சக்கரத்தாழ்வாரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர்...விசேஷ மானவர். பின்புறம் உள்ள நரசிம்மரை சுற்றிலும் அபூர்வ அமைப்பில் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர்.

விஷ்வக்ஸேனர், இரட்டை விநாயகர், பெருமாளின் தசாவதாரம், லட்சுமி நரசிம்மர், வேணுகோபாலர், ஆஞ்சநேயர், சொர்ண பைரவர் ஆகிய சன்னதி உண்டு.

"சிற்பக்கோயில்' என்று சொல்லு மளவுக்கு பிரமாண்டமான கலைவண்ணங்களைக் காணலாம்.

தாயார் கல்யாண சௌந்திரவல்லி தனி சன்னதியில் இருக்கிறார்.

அன்னையின் சன்னதி முகப்பில், நின்ற நிலையில் விநாயகர், விஷ்ணு துர்க்கை மற்றும் சங்கநிதி, பதுமநிதி அருள்கின்றனர்.

சன்னதி முன் மண்டபம் சிற்ப சிறப்பை வெளிப்படுத்தும் கலைக் கூடமாக வடிக்கப்பட்டுள்ளது.

தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்து வதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், ரதி, கார்த்தவீரியார்ஜூனன் ஆகிய சிற்பங்கள் உள்ளன. நின்ற நிலையில் பிள்ளையார் காட்சியளிப்பதும் ஆலயத்திற்குப் பெருமை கூட்டுகிறது.
இரணிய வதம்செய்யும் நரசிம்மரின் சிலை உக்கிரமும் அழகும் ஒருங்கு கூடும் அற்புதமான கலைக்கணத்தை காட்டுகிறது.

பதினாறு கரங்கள் கொண்ட துர்க்கையின் சிலையும் பயங்கரமான அழகுகொண்டது

இசைத்தூண்களும் சப்தஸ்வரங்களை எழுப்பி இனிமை கூட்டுகின்றன.

ரதி மன்மதன் சிலைகளுக்கு திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் அர்ச்சனை ஆராதனைகள் நிகழ்த்துகிறார்கள்.

மூலஸ்தானத்தில் சவுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

கள்ளழகரே இங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதப்படுவதால், மதுரையைப் போலவே, இங்கும் சித்ராபவுர்ணமியன்று சுவாமி குடகனாற்றில் இறங்குகிறார்.

இவ்விழாவின் போது மண்டூகருக்கு சுவாமி அருளிய வைபவம் பாவனையாக நடக்கும்.

ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் சுவாமி பாதத்தில் திருவோண தீபம் ஏற்றப்பட்டு விசேஷ பூஜை நடக்கும்.

பின், தீபம் முன்னே செல்ல, உற்சவமூர்த்தி பின்னே வலம் வருவார்.

இந்த தரிசனத்தைக் காண்பவர்கள் பாவவிமோசனம் பெறுவர் என்பது நம்பிக்கை.

ஆடியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். ஆடி பவுர்ணமியன்று சுவாமி தேரில் எழுந்தருளுவார்.

பொருளாதார சிக்கல் தீர சொர்ண ஆகஷ்ண பைரவர் அருள் தருகிறார்.
sunderrajaperumal temple
செவ்வாய் கிழமையும் தேய்பிறை அஷ்டமி நாள் பைரவருக்கு மிகுநத உகந்த நாள்.

கணக்கற்ற அளவு மக்கள் கூட்டம் திரண்டு அதிகளவில் பாலாபிஷேகம் நடைபெற்று .தீபங்கள் ஏற்றப் பட்டது கண்கொள்ளாக் காட்சி.

வெண்பூசணியை வட்டவடிவில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு சிவப்புத்திரியிட்டு, நெய் அல்லது நல்லண்ணை நிரப்பி தீபமேற்றுவது துன்பங்கள் தீர்க்கும் வழிபாடாகச் செய்யப்படுகிறது

சுரைக்காயை வட்ட வடிவில் வெட்டி,குழித்து, எண்ணையிட்டும் தீபமேற்றியிருந்தனர்.

இருப்த்திஒரு மிளகை சிவப்புத்துணியில் முடிந்து அகல் விளக்கில் நல்லண்ணையால் தீபம் கடன் பிரச்சினை தீர்க்கிறது.

கோவை கோவில்களிலும் தாடிக்கொம்பு இங்கே வந்துவிடதா என்று அர்ச்சரே அச்சரியப் படும் அள்வு காமாட்சிஅம்மன் ஆலயத்திலும், ரத்தினவிநாயகர் ஆலயத்திலும் அஷ்டமி தினங்களில் கூட்டம் வருகிறது.

காலநேரம் சரியில்லை என்றால் பைரவரை வணங்கினால் சரியாகும் என்பது அனுபவமொழியகும்.

கோவிலைச்சுற்றி குப்பைகள் கிடக்கின்றன.

அபூர்வமான சக்கரத்தாழ்வார் சிலை வேறெங்கும் காணாத அமைப்பில் பழங்கால ஆட்டுக்கல் போன்று சுற்றி வரும் திகிரிபோல் வேலைப்பாடமைந்த கற்றளி மண்ணில் புதைந்து பின்னப்பட்டு காட்சியளித்தது வேதனையூட்டியது.

 குறைந்த பட்சம் மண்ணிலிருந்து மீட்டு அத்தனை பெரிய வளாகத்தில் காட்சிப்படுத்தலாம்.

கோனார்க் சூரியச்ச்க்கரம் போல் அடையாளச் சின்னமாக விளங்க வேண்டிய அற்புதம் மண்மூடிக்கிடக்கிறது.

தாரமங்கலக் கோவிலிலும் நிறைய தூண்களும் சிற்ப அற்புதங்களும் கோவிலைச்சுற்றி மண்ணில் கிடக்கின்றன.

முதலில் தாயார் கல்யாண சௌந்தரவல்லியை வணங்கிய பின், மூலவரைத்தரிசிக்க வேண்டுமாம்.
முதலில் அவரைத்தரிசித்தால் அவர் அழகில் சொக்கி வரம் கேட்க மறந்துவிடுவோமாம். அர்ச்சகர் சுவாமி தெரிவித்தார்.
தாடிக்கொம்பு சவுந்தர்ராஜப்பெருமாள்
திருக்கோவிலில் திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்கிறார்கள்.

ஆலயம் 450 ஆண்டுகளுக்கு முன்னால், விசயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.

தாடிக்கொம்பு ஆலயச் சிற்பக் கலைப் படைப்புகளால் ஆலயக் கட்டுமானத்திற்குப் பெருஞ்சிறப்பு ஏற்பட்டது.

இங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதி இரு வாயில்களைக் கொண்டுள்ளதைப் பலரும் வியந்து போற்றுவர்.

தாடிக்கொம்பு ஆலயப்பகுதியிலே பெய்யும் மழைநீர் எந்த வழியாக ஓடிச் சென்று, குளத்தை அடைகிறதென்பது பொறியியல் வல்லார்க்கும் புரியாத புதிராக இருந்துவருகிறது.

450 ஆண்டுகளுக்கு முன்பேயே கட்டடக் கலை நுட்பம் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது

2hzpnb4.jpg (360×480)
      1ekg3q.jpg (480×360)
        mr6yit.jpg (360×480)
          2njd9o9.jpg (360×480)








          .

            01020304
            05060708
            09101112
            1314

            மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத்திருநாள் போலவே சௌந்திராஜப் பெருமாளும் குடகனாற்றில் இறங்கி தீர்த்தவாரி கண்டருள்கிறார்.


            13 comments:

            1. தாடியும் நீளம், கொம்பும் நீளம்.

              நீண்ட வர்ணனை. நல்ல படங்கள்.

              ஹயக்கீரிவர், பைரவர், சக்கரத்தாழ்வார்,தலவிருட்சத்தில் சைவ வைணவ ஒற்றுமை என் தொடர்ந்து அசத்துகிறீர்கள்.

              பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

              ReplyDelete
            2. கொம்பினில் மாட்டிய தாடி போல நாங்கள் தாடிக்கொம்பு சிற்பக்களஞ்சியத்தில் உங்களிடம் சிக்கியுள்ளோம். அனைத்துமே அருமை. தொடர்ந்து அசத்துங்கள். அசராமல் நாங்களும் உங்களுடனே வருகிறோம்.

              வாழ்த்துக்கள்.

              ReplyDelete
            3. அருமையான பதிவு.
              நாங்கள் தாடிக்கொம்பு பார்த்திருக்கிறோம். அத்தனை படங்களும் அருமை. உங்களது பதிவுகள் ஒன்றையொன்று மிஞ்சுவது போல் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.
              வாழ்த்துக்கள் அம்மா.

              ReplyDelete
            4. ஒரு திருதலத்தை பற்றி ப்திவு எழுதும்போது முழு விவரமும் தர வேண்டியது அவசியம். நல்ல பதிவு

              ReplyDelete
            5. உங்கள் ஒவ்வொரு பதிவும் சுவாரஸ்யம்.வாசிக்கவும் ஆர்வம் !

              ReplyDelete
            6. //மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத்திருநாள் போலவே சௌந்திராஜப் பெருமாளும் குடகனாற்றில் இறங்கி தீர்த்தவாரி கண்டருள்கிறார்.//

              படம் நல்லா அருமையா இருக்கு!

              ReplyDelete
            7. அடேங்கப்பா... எவ்வளவு படங்கள்... எவ்வளவு தகவல்கள்... ஆற அமர படிக்கவேண்டும். நல்ல பதிவு. ;-)

              ReplyDelete
            8. ஒரு திருதலத்தை பற்றி ப்திவு எழுதும்போது முழு விவரமும் தர வேண்டியது அவசியம். நல்ல பதிவு

              ReplyDelete
            9. Aha...............
              Very fine. Beautiful pictures......
              Very well written wards.....
              Made me to visit this place without fail.
              Thanks Rajeswari.
              You made my day happy.
              viji

              ReplyDelete
            10. சுவாரஸ்ய தகவல்களுடன் வழக்கம் போல அழகிய பதிவு. ஒரு சிறு குறை எனக்கு. அந்த சுதந்தரத் தியாகியின் படத்தையும், அவர் பழம் பெறும் தலைவர்களுடன் எடுத்துக் கொண்ட படத்தையும் போட்டிருக்கலாம்.

              ReplyDelete
            11. Hi,

              Very interesting post and pictures.

              "அக்காலச் சிற்பிகள் தாரமங்கலம், தாடிக்கொம்பு சிற்பங்கள் நீங்கலாக எந்த கோவில் சிற்பங்களும் செய்து தருகிறோம் என்றே பதிவு செய்து முன்பணம் பெறும் அற்புதம் நிறைந்தவை."

              If you are referring to the contract which the Stapahi enters into - it actually says that - they will do a good job comparable to the best that has been done before with the exception of few unparalleled pieces in - Avudayar koil ( kodungai), tiruvalanchuli ( palakani) etc. The early versions do not even mention Taramangalam ( pillars) . Not sure if Tadikkombu forms part of this exception list. So in essence they promise to do a nice job comparable to all except the few listed as exceptions. Further the reason they state so, is not because of their inability but more out of respect for the masterpieces.

              anbudan
              vj
              www.poetryinstone.in

              ReplyDelete
            12. உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றாய் படித்துக் கொண்டு வருகிறேன்.
              என்னை மிகவும் கவர்ந்தது இந்த தாடிக் கொம்பு பதிவு.

              என் அக்கா இந்தக் கோவில் பற்றி ரொம்பவும் சொல்லுவாள். இதுவரை போக வாய்ப்பு கிடைக்கவில்லை.

              உங்கள் பதிவு படித்ததும் போக வேண்டும் என்கிற ஆசை அதிகமாகிறது.

              இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

              ReplyDelete