Friday, June 3, 2011

பரிவுடன் அருளும் பதினாறு லக்ஷ்மிகள்

பரிவுடன் அருளும் பதினாறு லக்ஷ்மிகள்
[Photo+of+Laxmi.jpg]





வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் படித்து லட்சுமி பூஜை செய்வது விஷேஷம்.ஷோடஸ லட்சுமி என்று ஷோடஸ உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக அன்னையை வணங்குவோம். அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங்கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கும் வள்ளல் பெருந்தகையான தயாதேவி அன்னை லட்சுமி.





ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் பெருமைகளைக் காண்போம்.


1. சௌந்தர்ய லட்சுமி


நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால்தான் அவர்கள் நம்மை வரவேற்பார்கள். இதற்கு "சௌந்தர்ய லட்சுமீ கரம்' என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். இதற்காக முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.


2. சௌபாக்கிய லட்சுமி


போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.


3. கீர்த்தி லட்சுமி
எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், நமது பெயர் சமூகத்தில் பல பேருக்குத் தெரிந் திருக்க வேண்டும். இத்தகைய கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.





4. வீரலட்சுமி

நம்மையும், நமது மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றையும் காப்பாற்றிக் கொள்ள நம்மி டம் வீரம் இருக்க வேண்டும். இந்த வீரத்தை அளிப்பவள் வீர லட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கியத்தைப் பெறலாம்.





5. விஜயலட்சுமி


மனிதனுக்கு எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தா லும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள் புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம்.


6. சந்தான லட்சுமி


மனிதனுக்கு அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், அவனுக்கு குழந்தை இருந்தால்தான் அவன் பெருமை அடைகிறான். அது நல்ல குழந்தையாகவும் இருக்க வேண்டும். இதற்கு அருள் புரிபவள் சந்தான லட்சுமி. அவளை வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.





7. மேதா லட்சுமி


பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.


8. வித்யா லட்சுமி


கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று பலவகைப்பட்டது. இவை அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது "ஸ்ரீவித்யை' என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யாலட்சுமி யின் அருள் வேண்டும்.

Shri Laxmi-Ganesha


9. துஷ்டி லட்சுமி


எல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந் தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.


Maa Dhana Laxmi Wallpaper


10. புஷ்டி லட்சுமி


வெளியுலகில் நாம் பழகும் போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.


11. ஞான லட்சுமி


வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல. நாம் ஆசைப்பட்ட பொருட்கள் யாவும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டுப் பிரிந்து விடும் என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.


12. சக்தி லட்சுமி


இறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங் களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் அவசியம் தேவை. இதனைப் பெற சக்திலட்சுமியை வணங்கினால் போதும்.


13. சாந்தி லட்சுமி

எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.





14. சாம்ராஜ்ய லட்சுமி


மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.

Veda Lakshmi

15. ஆரோக்கிய லட்சுமி


மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப் பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.





16. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி


மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது. இந்த ஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும்.






பதினாறு லட்சுமிகளைப் பூஜை செய்து எல்லா பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்.



ஸ்ரீ மகாலட்சுமி ஸ்ரீரங்க ஷேத்திரவிருட்சமரத்தில் வில்வம் போன்றவற்றை நாடுபவள். வில்வமரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்கிறாள். வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் வில்வமரத்தைப்பேணுவதும் ஸ்ரீ மகாலட்சுமிக்குப் பிரியமானதாகும். சூரியனைப் போன்ற ஒளியுடைய ஸ்ரீ மகாலட்சுமியே உன்னருளால் உண்டாகிய "வனஸ்பதி" என்று புகழ்பெற்ற வில்வமரம், அதனுடைய பழம் எங்கள் மனதையும் புற இந்திரியங்களையும் பற்றியுள்ள அஞ்ஞானத்தையும் மங்களமற்றவற்றையும் நீக்கிவிடும்.


[lakshmi.gif]


தாமரைமலர் ஸ்ரீ மகாலட்சுமியுடன் பிறந்தவனான சந்திரனைக் கண்டதும் அவனை வெறுத்து இதழ்களைக் குவிக்கும் பழக்கத்தை வழக்கமாகக்கொண்டது. இதனைக் கண்ட மகாலட்சுமி தாமரை மலரில் அதிகமாக வசிக்காது தன்னுடன் பிறந்த கௌத்துவ மணிக்குப் பெருவாழ்வு கொடுக்க எண்ணி அதனை அணிகின்ற திருமாலின் மார்பில் நித்தியவசிப்பிடம் கொண்டாள்.இதனால் மக்கள்உலகவர் உடன் பிறந்தோரை வெறுத்துச் சினங்காது நேசமாகவும் அந்நியோந்நிய உறவுடன் இருப்பதனையுமே ஸ்ரீமகாலட்சுமி அதிகம் விரும்பிப் பேரருள் புரிவாள். மகாலட்சுமியானவள் 





நெல்லிமரத்திலும்,நெல்லிக்கனியிலும் அதிக விருப்பமுடையவள்.இவை எங்கெங்கெல்லாம் காணப்படுமோ அங்கங்கெல்லாம் ஸ்ரீ மகாலட்சுமி வாசஞ்செய்வாள். நெல்லிக்கனி சாப்பிடுவதால் ஆரோக்கியமும் புண்ணியமும் கிடைக்கின்றன. ஆனால், வெள்ளிக்கிழமைகளிலும் இரவிலும் உண்ணக்கூடாது.நெல்லிமர நிழலிலே அன்னமளிப்பது மிகவும் சிறப்பானது. துவாதசியன்று நெல்லிக்காயை உணவிலே சேர்த்தால் ஏகாதசி பலனுண்டு.

வெண்ணிற மாடப்புறாக்கள் வாழும் இடங்கள் கலகம் என்பதையே அறியாத பெண்கள் தியும் வீடுகள், தானியக் குவியல்கள் உமி சிறிதுமில்லாத அரிசிக் குவியல், எல்லாருடனும் பகிர்த்துண்டு வாழும் மனிதன், இனிமையோடும் கனிவோடும் இருக்கும் மனிதன், நாவடக்கம் உள்ளவன், உணவு உண்பதிலே அதிக நேரம் போக்காதவன், பெண்களைத் தெய்வமாக மதிப்பவன் இவர்களிடத்தில் ஸ்ரீ மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள். வலம்புரிச் சங்கு, நெல்லிக்காய்,கோமயம், தாமரை வெண்மை, பரிசுத்தமான ஆடை அணிகளிலும் ஸ்ரீ மகாலட்சுமி நித்தியவாசம் செய்வாள்.



மகாலட்சுமியை "ஸ்ரீதேவி, "அலைமகள், "பொன்னரசி, "இலட்சுமி, "செல்வமகள், "செந்தாமரை ராணி, "திருமகள், "மங்களலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.





31 comments:

  1. வெள்ளி அன்று லக்ஷ்மிகளின் தரிசனம் அதுவும் காலையில் . நன்றிங்க

    ReplyDelete
  2. @ எல் கே said...
    வெள்ளி அன்று லக்ஷ்மிகளின் தரிசனம் அதுவும் காலையில் . நன்றிங்க//

    Thank you sir.

    ReplyDelete
  3. அஷ்டலஷ்மி கேள்விபட்டிருக்கிறேன். இன்றுதான் பதினாறு லஷ்மிகள் கண்டு இன்புற்றேன்.

    ReplyDelete
  4. @ FOOD said...
    அஷ்டலஷ்மி கேள்விபட்டிருக்கிறேன். இன்றுதான் பதினாறு லஷ்மிகள் கண்டு இன்புற்றேன்.//

    நன்றி ஐயா.
    இன்பமும், நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இந்த வெள்ளிக்கிழமையும் அஷ்டலக்ஷ்மிகளின் அருளை டபுளாக அள்ளித்தந்தது போல 16 லக்ஷ்மிகளைப்பற்றி அனைத்துப்படங்களும், அருமையான விளக்கங்களும் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    எங்கள் சந்தோஷமும் டபுளாகி விட்டது.

    கடைசியில் காண்பித்துள்ள டிசைனைப்பார்க்கும் போது, 16 லக்ஷ்மிகளும் நமக்கு வேண்டிய பொன்னையும் பொருளையும் வாரிவாரி வழங்குவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்துவதாகச் சிறப்பாக அமைந்துள்ளது.

    தெய்வீகப்பதிவரான உங்களுக்கு என் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  6. வெள்ளிகிழமை லட்சுமி தரிசனம் நன்றி

    ReplyDelete
  7. அருமையான ஆன்மீகத் தவகல்கள். நன்றி

    ReplyDelete
  8. i know only 8 lakshmi's (ashtalakshmi) but u gave knowledge about 16 lakshmis thank u so much and its descriptions n pictures r really good....keep it up maa....

    ReplyDelete
  9. @ வை.கோபாலகிருஷ்ணன் said//

    பல மடங்கு சந்தோஷமும்,லட்சுமி கடாட்சமும் பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  10. @ ஆர்.கே.சதீஷ்குமார் said...
    வெள்ளிகிழமை லட்சுமி தரிசனம் நன்றி//

    தரிசனத்திற்கு நன்றி.

    ReplyDelete
  11. @Dr.எம்.கே.முருகானந்தன் said...
    அருமையான ஆன்மீகத் தவகல்கள். நன்றி//

    நன்றி ஐயா.

    ReplyDelete
  12. @arya said...//

    நன்றி.சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. எனக்கு அஷ்டலட்சுமி தெரியும் ஆனால் இன்றுதான் ஷோடஸ லட்சுமி பற்றி அறிந்தேன் ,
    'மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது"
    இதுவும் நான் அறியாதது ஆன்மீக களஞ்சியமாக தகவல்களை அள்ளித்தரும் உங்களுக்கு என் ஆன்மீக வந்தனம் தாயே

    லக்ஷ்மிகடாக்ஷம் தரும் படங்கள் அருமை

    ReplyDelete
  14. @A.R.ராஜகோபாலன் said...//
    இதுவும் நான் அறியாதது ஆன்மீக களஞ்சியமாக தகவல்களை அள்ளித்தரும் உங்களுக்கு என் ஆன்மீக வந்தனம் தாயே //

    வந்தனம். வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  15. நல்ல தகவல்கள்..நன்றி

    ReplyDelete
  16. எனக்கு தெரியாத பல விஷயங்களை உங்களின் பதிவுகள் மூலம் தெரிந்துக்கொல்கிறேன்.
    நன்றி சகோ..

    ReplyDelete
  17. Wow!!!!!!!!!!!!
    I was excited.
    Today is Friday. Now is early morning.
    I got Shotasha Lakshmis darshan.
    Sitting in front of s (Laptop)i narrated Lakshmi astothram.
    Thanks Rajeswari.
    viji

    ReplyDelete
  18. வழக்கம்போல் படமும் பதிவும் அருமை
    செல்வம் பொழியும் லட்சுமியின் படம்
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அருமையான தவகல்கள்.

    ReplyDelete
  20. @ சமுத்ரா said...
    நல்ல தகவல்கள்..நன்றி//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  21. @* வேடந்தாங்கல் - கருன் *! said...
    எனக்கு தெரியாத பல விஷயங்களை உங்களின் பதிவுகள் மூலம் தெரிந்துக்கொல்கிறேன்.
    நன்றி சகோ..//

    நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  22. @viji said...
    Wow!!!!!!!!!!!!
    I was excited.
    Today is Friday. Now is early morning.
    I got Shotasha Lakshmis darshan.
    Sitting in front of s (Laptop)i narrated Lakshmi astothram.
    Thanks Rajeswari.
    viji//
    வாங்க விஜி. சந்தோஷம் கருத்துக்கு.

    ReplyDelete
  23. @ Ramani said...
    வழக்கம்போல் படமும் பதிவும் அருமை
    செல்வம் பொழியும் லட்சுமியின் படம்
    அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்//
    வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  24. @ Giruba said...
    அருமையான தவகல்கள்.//

    நன்றி.

    ReplyDelete
  25. நல்ல விளக்கங்கள் .. போட்டோஸ் கண்ணை கொள்ளை கொள்ளுது...

    ReplyDelete
  26. எங்கள் தெய்வங்களும் அழகோ அழகுதான்.வணங்க வைத்தீர்கள் !

    ReplyDelete
  27. @நிகழ்வுகள் said...
    நல்ல விளக்கங்கள் .. போட்டோஸ் கண்ணை கொள்ளை கொள்ளுது...//

    Thank you.

    ReplyDelete
  28. ஹேமா said...
    எங்கள் தெய்வங்களும் அழகோ அழகுதான்.வணங்க வைத்தீர்கள் !//

    நன்றிங்க ஹேமா..

    ReplyDelete
  29. லெட்சுமி எல்லாருக்கும் வேண்டுமுங்க… அத்தனை லெட்சுமியையும் அறிய வைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete