Sunday, June 5, 2011

உர்மியா உப்பு ஏரி - தீ நீர்வீழச்சி


The nature in Lake Urmia beach near Salmas city before the Crisis

Flamingos at Lake Urmia
உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஏரியான, ஈரானின், "உர்மியா' உப்பு ஏரி, முதன்முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. 

இதனால், ஏரி உள்ள பகுதியில், மிகப்பெரிய அளவில், சுற்றுச்சூழல் மாற்றம் உருவாகக்கூடும் என வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஈரானின்,மேற்கு அஜர்பைஜான் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாணங்களுக்கிடையில், 140 கி.மீ., நீளமும், 55 கி.மீ., அகலமும், 52 அடி ஆழமும் கொண்ட ஏரி, உர்மியா ஏரி. 

மத்திய கிழக்கு பகுதியில், இது தான் மிகப்பெரிய ஏரி. 

உலகளவில் இது மூன்றாவது மிகப்பெரிய ஏரி. இதில் உள்ள தண்ணீரில், அதிகளவில் உப்பு இருப்பதால், உப்பு ஏரி என்று அழைக்கப்படுகிறது.
சமீபத்தில்   உர்மியா ஏரி.  முதன் முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. 

 உர்மியா . ஏரியை சுற்றி நடக்கும் ஆக்கிரமிப்புகள், ஏரிக்குள் விடப்படும் நச்சு கழிவுநீர், மற்றும் தவறான பாசனக் கொள்கைகள், அருகில் உள்ள ஆறுகளில் கட்டப்படும் பிரம்மாண்ட அணைகள், அப்பகுதியில் நிலவும் பஞ்சம் போன்றவற்றால், ஏரி தற்போது முன்பிருந்ததை விட 60 சதவிகிதமாக சுருங்கி விட்டது. 

இப்படியே போனால், இன்னும் சில ஆண்டுகளில், ஏரி இருந்ததற்கான அடையாளம் கூட தெரியாமல் போய்விடும் என, ஏற்கெனவே வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
A general view of Urmia
File:OrumiehFromPlane.jpg
  உர்மியா ஏரி. உலக சுற்றுலா மையமாக உள்ளதால், அப்பகுதியின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. 

ஆனால், சமீப காலமாக ஏரியின் உப்புத் தன்மை அதிகரித்துக் கொண்டே வருவதால், படகுகள் மற்றும் சிறு கப்பல்கள், ஏரியில் அவ்வளவு சுலபமாகச் செல்ல முடியவில்லை. 

இதனால், சுற்றுலாத் தொழில் மிகவும் நசித்து விட்டது. தற்போது ஏரியே உறைந்து போய்விட்டதால், சுற்றுலாவை நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகியுள்ளது.

Urmia University's entrance

போதாக்குறைக்கு, உர்மியா ஏரியில் வீசும் சூறாவளி, 600 கி.மீ.,க்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் உப்பை வீசி வருவதால், விவசாயம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அங்கு விளையும் ஆப்பிள், திராட்சை, முந்திரி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மூலிகையிலிருந்து சாறு எடுத்து, பல வகை பானங்களாக தயாரிக்கப்படுகின்றன. இப்போது, பருவநிலை மாற்றத்தால் இவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது..




Kandovan Village from across the valley
உர்மியா ஏரியின் ஒரு மூலையில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கிராமம் "கண்டோவன் இருக்கிறது. இயற்கை கொடுத்த வரபிரசாதமான இந்த இடத்தில் இயற்கைவீடுகள் அமைந்து கருத்தை கொள்ளை கொள்கின்றன.
 செங்கல்,  சிமெண்ட், மணல் ஏதும் இல்லாமல் மலையில் இருக்கிற பாறைகளை செதுக்கி வீடுகளாக மாற்றி இருகிறார்கள். 

இதில் ஆச்சர்யபடவைக்கும் விஷயம் எல்லா வீடுகளும் கூம்பு வடிவத்தில் இருக்கும்.

இந்த வித்யாசமான தோற்றம் எப்படி வந்தது என ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கண்டுபிடித்தனர். இந்த பகுதியை ஒட்டி உள்ள மலையான "சஹாந்த்"-இல் இருந்து வெளியான எரிமலையின் சாம்பல்தான் இதற்கு காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள.

இந்த மலை "சஹாந்த்"பல சிறப்புக்கள் வாய்ந்தது. 

இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை பகுதிகளில்  நிறைந்து இருக்கும் வெந்நீர் ஊற்றுகள் .  பல நோய்களை குணமாக்கும் வல்லமை இருப்பதாக அறியபடுகிறது. 

இந்த மலையில் உள்ள பாறைகளை 11,000-ம் வருட பழமையானவையாம். 

 வீடுகளின் உட்புறம் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு படுக்கை அறை, மற்றும் கால்நடைகளை கட்டிவைக்கும் பகுதி என பிரித்து வைத்துள்ளனர்.

Interior of a Kandovan home 
  சுற்றுலா பயணிகளுக்காக இங்கே தங்கும் விடுதி (Hotel) ஒன்றும் உள்ளது.

இந்த சுட்டியில் இந்த வீடுகள் பற்றி அதிக தகவல்கள் பெறலாம்.

அமெரிக்காவில் கலிபோர்னியா நகரத்தில் உள்ள Y osemite National Park கில் இந்த தீ நீ்ர் வீழ்ச்சி மற்றும் பழமையான பைன் மரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தீ நீர் வீழ்ச்சி சூரிய வெப்பத்தினால் உருவாகிறது. 

பிப்ரவரி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் காலநிலைகளுக்கு ஏற்ப சில நேரங்களில் மட்டும் அரிதாகத்தான் இந்த் தீ நீர் வீழ்ச்சி வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


22 comments:

  1. புகைப்படங்கள் வழக்கம் போல சூப்பர்.

    ReplyDelete
  2. @கலாநேசன் said...
    புகைப்படங்கள் வழக்கம் போல சூப்பர்.//

    நன்றி.

    ReplyDelete
  3. மிக அருமையான தொகுப்பு. அரிதான விஷயங்கள்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    புதிய அறிய விஷயங்களை தொகுத்தளித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உப்புச்சப்புள்ள பலவிதமான தகவல்கள்.

    தகவலின் ஆழமும், அகலமும், நீளமும் அந்த ஏரியின் பரப்பளவு போலவே பிரமிக்க வைப்பதாக உள்ளது.

    தீ நீர்வீழ்ச்சி என்று ஒன்று உண்டா?

    குற்றால அருவிபோல நின்று குளிக்க நினைத்தால் என்ன ஆகும்? துடைக்க துண்டு தேவையில்லாமல் பஸ்பமாகிப் பறந்து விடுவோமா?

    கோடிக்கணக்கான கொக்குகளின் அணிவகுப்பு கொள்ளைகொண்டு போகுதே என் மனதை... அருமையான படப்பிடிப்பு.

    உப்பிட்டவரை உள்ளளவு நினை என்பார்கள். உர்மியா உப்பு ஏரியையே பதிவிட்டவரை உயிர் உள்ளவரை நினைப்போம் அல்லவா?

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நல்லதொரு பதிவுக்கு நன்றி.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  6. @FOOD said...
    மிக அருமையான தொகுப்பு. அரிதான விஷயங்கள்.//

    Thank you sir.

    ReplyDelete
  7. @ Rathnavel said...
    நல்ல பதிவு.
    புதிய அறிய விஷயங்களை தொகுத்தளித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.//

    நன்றி.

    ReplyDelete
  8. கொத்துக்கொத்தாகத்தொங்கும் திராட்சை. ஆஹா,
    அடடா ....
    அப்படியேப் பறித்து,
    அப்படியே அலசி,
    அப்படியே மிக்ஸியில் அடித்து,
    அப்படியே வடிகட்டி,
    அப்படியே திக்காக
    அருவிபோல் கொட்டவிட்டு
    அள்ளி அள்ளி
    அண்டா அண்டாவாக
    அருந்திக்கொண்டே இருந்தால்
    அருமையாக இருக்குமே!

    கடைசியில் காட்டியிருக்கும் வானவில்லே மழையெனப்பொழிவதுபோன்ற சுழற்சிப்படம் ரொம்ப நல்லா இருக்கு.

    எதைப்பாராட்டுவது எதைவிடுவது என்பதுதான் உங்கள் பதிவில் எனக்குப் பெரும் பிரச்சனை .... வாழ்க!

    தலையைப்பிய்த்துக் கொள்ளவைக்கும், தலையாய,
    தங்கமானபதிவல்லவோ,
    தங்களுடையது!

    வாழ்க ! வாழ்க!! வாழ்க!!!

    ReplyDelete
  9. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
    உப்புச்சப்புள்ள பலவிதமான தகவல்கள்./
    உப்பிட்டவரை உள்ளளவு நினை என்பார்கள். உர்மியா உப்பு ஏரியையே பதிவிட்டவரை உயிர் உள்ளவரை நினைப்போம் அல்லவா?//

    Thank you sir for your valuable comments.

    ReplyDelete
  10. தீ நீர்வீழ்ச்சி என்று ஒன்று உண்டா?நல்ல பதிவு.
    புதிய அறிய விஷயங்களை தொகுத்தளித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. @தலையாய,
    தங்கமானபதிவல்லவோ,
    தங்களுடையது!

    வாழ்க ! வாழ்க!! வாழ்க!!!//

    தங்கமாய் தந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  12. @மாலதி said...//

    நன்றிங்க.

    ReplyDelete
  13. மைசூரில் உள்ள "JOKE FALLS" போல் உள்ள து "தீ நீர்வீழுச்சி"!
    தினமும் தங்களின் பதிவினை பார்க்க தூண்டும் கருத்துக்களுக்கு நன்றி!--பத்மாசூரி

    ReplyDelete
  14. @சந்திர வம்சம் said...//
    வாங்க .உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. அரிய தகவல்கள், அழகான புகைப்படங்கள்! உர்மியா ஏரிக்கருகிலுள்ள கூம்பு வடிவ வீடுகள் பற்றி முன்னரேயே அறிந்து வியந்திருக்கிறேன். தீ நீர்வீழ்ச்சி புதிய தகவல். சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது போல அந்த சுழலும் புகைப்படம் மிக அழகு!!

    ReplyDelete
  16. படங்களும் பகிர்வுகளும் அருமை. இயற்கை ஜொலிக்குது..
    Ashwin Win
    அஷ்வின் அரங்கம்

    ReplyDelete
  17. கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து . நன்றி மேடம்

    ReplyDelete
  18. பாறைகளாஇ குடைந்த வீடு வெகு அருமை. வாழ்ந்து பார்க்க ஆசையா இருக்கு. படங்களும், தகவலும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  19. மனோ சாமிநாதன் said...

    *****

    //சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது போல அந்த சுழலும் புகைப்படம் மிக அழகு!!//

    *****

    என்னைப்போலவே அந்த சுழலும் படத்தைத் தாங்களும் ரஸித்து, அதைச்சுட்டிக் காட்டியுள்ளதற்கு,
    மிக்க நன்றி, மேடம்.

    இப்போது தான் இந்த தங்களின் கமெண்ட்டை அகஸ்மாத்தாக கவனித்தேன்.

    அன்புடன் தங்கள்,
    vgk

    ReplyDelete
  20. 553+4+1=558

    ;)) தங்கள் பதிலுக்கு நன்றிகள்.

    ReplyDelete