Saturday, February 4, 2012

ஊர்வசி! ஊர்வசி !!





புராணங்கள் என்பது சில உயர்நிலையில் உள்ள சூட்சுமமான விஷயங்களை பாமரனுக்கு புரியும் நோக்கில் சுவாரசியமாக கூறும் எழுத்துவகை.

புராணங்களில் வரும் கதைகளையோ, கதையின் உள்நோக்கத்தையோ காணாமல் மேலெழுந்த வாரியாக பார்த்தால், வேடிக்கையாக இருக்கும். 

பாமர நிலையில் இருக்கும் ஒருவனுக்கு உயர் ஞான விஷயத்தை விளக்குவதே புராணங்களின் நோக்கம்.

ஐலன் பரம்பரை சந்திர வம்சம், இக்ஷ்வாகு பரம்பரை சூரிய வம்சம்.

ஐலன் வம்சத்தில் முக்கியமாகச் சொல்லப்பட்டவன் புரூரவஸ்.
இந்தப் புரூரவசின் மனைவியின் பெயர் ஊர்வசி!!
ஊர்வசி தேவ லோக மங்கை.
புரூரவசும் தேவருலகத்துடன் தொடர்பு கொண்டவன்.
அவன் இந்திர சபைக்கு அடிக்கடி போய் வந்த காலத்தில் ஊர்வசியைக் கண்டு அவள் மீது மையல் கொண்டான். 

அவர்கள் இருவர் மீதும் ரிக் வேதத்தில் ஒரு பாடலே உள்ளது. 

அப்சர மங்கைகள் தங்கள் விருப்பம் போல் வாழ்ந்தவர்கள் 
ஊர்வசி திடீரென புரூரவசை விட்டு நீங்கி விட்டாள்.
அவர்கள் சரித்திரத்தை ‘விக்ரம ஊர்வசீயம்’ என்னும் ஒரு
காவியமாகக் காளிதாசர் எழுதியுள்ளார்.
இரவு நேரங்களில் பூலோகத்தில் சென்று கால் பதித்து திரும்புவது ஊர்வசியின் வழக்கம். 

அவ்வாறு சென்ற போது,  ஊர்வசியை கேசி என்ற அரக்கன் 
கவர்ந்து சென்று விட்டான்”

சோமனுடைய மகன் புதனுக்கும் – வைவஸ்வத மனுவின் மகள் இலாவிற்கும் பிறந்தவன் புருரவஸ். 

தன்னுடைய பாட்டனாரின் பெயரை தன் வம்சத்திற்கு சேர்த்து சந்திரவம்சம் என்று சூடிக்கொண்டு ப்ரயாகையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். நல்ல புஜபல பராக்கிரமம் மிக்கவன். 

புரூரவசிடம் இந்திரலோகத்தின்  ரம்பை, மேனகை, திலோத்தமா, சித்ரலேகா மற்றும் பல மொத்த யவ்வன சுந்தரிகளும் ஒரு நட்சத்திர கூட்டம் போல வானில் உலா வந்து சூரியனை துதித்துவிட்டு தேரில் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த  புருரவஸ். மன்னனைப் பார்த்து அந்த அப்சரஸ்கள்“வாயு வேகத்தில் செல்லும் உங்களை பார்த்தால் கடவுளின் மித்ரனாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். 
எங்கள் ஊர்வசியைக் காப்பாற்றுங்கள் என வேண்டினார்கள்...

சிறிது நேரத்திற்கெல்லாம் மனோ வேகம் வாயு வேகத்தில்
ஊர்வசியை மீடுத் திரும்பினான் புருரவஸ்.

தேரோட்டி … தேரை தரையிறக்கு…” என்று கட்டளையிட்டான் புருரவஸ்.

தேர்பாகன் மிகவும் லாவகமாக தேரை தரையிறக்கியும் சமன் இல்லாத தரையில் இறங்கியதால் ஒரு சிறிய அதிர்வுடன் இருபக்கமும் ஆடியபடி நின்றது.

அதில் குலுங்கிய ஊர்வசி இறங்கும் போது புருரவஸ் மீது உரசியதில் இருவரும் ஒரு  மின்னல் வெட்டியதை உணர்ந்தார்கள்.

பிடித்து இறக்கும் கையின் ஸ்பரிசத்தால் கட்டுண்டு  விடமுடியாமல் தவித்தான்.

கையோடு கை ஒட்டி பிறந்தாற்போல் பிரிக்க முடியாமல் தவித்தது கண்டு அங்கே வந்த அப்சரஸ்கள் கேலி பேசி சிரித்தார்கள்.

இந்திரலோகத்தில் “லக்ஷ்மியின் விருப்பம்” நாட்டிய நாடகத்தில் ஒரு கட்டத்தில் லக்ஷ்மியின் தோழி அவளிடம் “மூவுலகிலிருந்து அனைவரும் வந்தாயிற்று. இன்னும் யாரை எதிர்பார்க்கிறாய்?” என்று கேள்வி எழுப்பும் காட்சி  வந்தது. 

அப்போது “புருஷோத்தம்” என்று சொல்வதற்கு பதிலாக “புருரவஸ்” என்று பதிலளித்துவிட்டாள் லக்ஷ்மியாக வேடமிட்டிருந்த ஊர்வசி. 

அவள் மனதில் எந்நேரமும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தவன் 
வாய் வழியே வெளியே வந்துவிட்டான்.
இதைக்கண்ட பரத முனிவர் கடுங்கோபம் அடைந்தார். 

“நான் கற்றுக்கொடுத்ததை மறந்து வேறு நினைவோடு இருந்ததால் இக்கணம் முதல் நீ இந்த இந்திரலோகத்தில் இருக்கும் தகுதியை இழக்கிறாய்.” என்று சாபமிட்டார். 


தேவேந்திரன், கேசியுடனான  யுத்தத்தில் தனக்கு உதவி புரிந்தமைக்காக  புருரவசுக்கு நன்றிக் கடன்பட்டிருந்தான்.  ஆகையால் அவளை புருரவசுக்கு மணமுடித்து அவனுடன் அனுப்பிவைத்தான்.

மூன்று நிபந்தனைகளை ஊர்வசி புருரவசுக்கு விதித்தாள்...

தான் குழந்தைகளைப் போல் வளர்க்கும் இரு ஆடுகளை படுக்கையறையிலேயேதான் எப்போதும் வைத்திருப்பேன் 
என்பது முதலாவது நிபந்தனை. 

ஆடையின்றித் தான் புரூரவஸ்ஸைப் பார்க்க நேரிடக்கூடாது 
என்பது இரண்டாவது. 

எப்போதும் நெய்யையே உணவாகக் கொள்வேன் 
என்பது மூன்றாவது நிபந்தனை. 

இவைகளை ஏற்றுக்கொண்டு அவளை மணந்த புரூரவஸ்ஸும் அவளுடன் அறுபத்தொரு வருஷங்கள் இன்பமாக வாழ்ந்திருந்தான். 

ஊர்வசியும் தேவலோகத்தையும் இந்த ஆனந்தத்தில் வெறுத்திருந்தாள். 

ஊர்வசியில்லாத ஸ்வர்க லோகம் குறையோடு இருந்தது. 

இதனால் ஊர்வசியை மீண்டும் தேவலோகத்திற்குக் கொண்டு வருவதற்காக விச்வாவஸு என்ற கந்தர்வ ராஜன் ஒரு இரவு கந்தர்வர்களுடன் வந்து ஆடுகளை அபஹரித்துச் சென்றான். 

ஆடுகள் கத்துவதைக் கேட்டு  புரூரவஸ் இருட்டில் இவள் நம்மை ஆடையின்றிப் பார்க்க முடியாது என்று அப்படியே கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைத் திருடியவர்களைப் பிடிக்க அவசரமாகச் சென்றான். 

இதுதான் சமயம் என்றிருந்த விச்வாவஸுக்கள் ப்ரகாசமான ஒரு மின்னலையும் ஏற்படுத்தி ஊர்வசியைப் புரூரவஸ்ஸின் கோலத்தைக் காணச் செய்தனர். 
இரண்டு நிபந்தனைகளும் மீறப்பட்டு விட்டதால் ஊர்வசியும் 
தேவலோகம் திரும்பி விட்டாள்.


ஊர்வசி,  புரூரவசை விட்டு நீங்கிய காட்சி ரவி வர்மாவின் கை வண்ணத்தில்.
கந்தர்வர்களும் வந்த வேலை முடிந்ததென்று ஆட்டுக்குட்டிகளை 
அங்கேயே விட்டு விட்டு மறைந்து விட்டனர்.

கந்தர்வர்கள், புரூரவசுக்கு வரங்களைத் தர முன் வந்தார்கள் 

ஊர்வசியே எனக்கு வேண்டியது. அதை அருளுங்கள்" 
என்று கந்தர்வர்களிடம் வேண்டினான். 

கந்தர்வர்கள் ஒரு அக்னி ஸ்தாலியை அவனிடம் கொடுத்து வேத வழியில் அந்த அக்னியை மூன்றாக்கி, ஊர்வசியை விரும்பி யாகம் செய்யுங்கள். அவளை அடைவீர்கள் என்று கூறிச் சென்றனர்.

"ஊர்வசியை அடைய உதவுமென்று கந்தர்வர்கள் கொடுத்த அக்னி ஸ்தாலியையும் காட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டோமே" என்று மீண்டும் காட்டிற்கு வந்தான். 


அக்னி ஸ்தாலியை வைத்து விட்டுப் போன இடத்தில் வன்னி மரத்தை நடுவில் கொண்ட ஒரு அரச மரத்தைக் கண்டான். 


"இந்த அக்னி ரூபமான மரத்தையே அரணியாக்கி, கடைந்து அக்னியை உண்டாக்கி உபாஸிப்போம்" என்று அந்த மரத்தைத் தன் நாடு கொண்டு வந்தான்.
காயத்ரீ மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே அரணியைச் செய்ய, 
இருபத்து நான்கு அளவுள்ள அரணியும் உண்டாயிற்று. 


அதைக் கடைந்து மூன்று அக்னியையும் பெற்று வேத விதிப்படி, ஊர்வசியை உத்தேஸித்து யாகங்களைச் செய்த புரூரவஸ் மீண்டும் கந்தர்வ லோகத்தையும், ஊர்வசியையும் நிரந்தரமாகப் பெற்றான். 
ஒன்றாய் இருந்த அக்னி இப்படி இந்த மன்வந்த்ரத்தில் 
மூன்றாயிற்று. என்கிறது விஷ்ணு புராணம்
இப்படி மனம் புரிந்த புருரவஸ் ஒரு வித்யாதர பெண் உதயவதி என்பவளின் மேல் காதல் வயப்பட்ட போது ஊர்வசி தன் காலை நிலத்தில் ஊன்றி கொடியாக மாறினாள்..

11 comments:

  1. கோபியர் கொஞ்சும் ரமணனுக்கு ஓய்வு கொடுத்து தூங்க வைத்தத்ற்கு நன்றி. கடைசி படத்தைத்தான் சொன்னேன்.

    ReplyDelete
  2. ஊர்வசி, புரூரவஸ் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி. பகிர்வுக்கு வாழ்த்துகள் வழக்கம்போல படங்களும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. Pl. continue Rajeswari....
    What happened to Urvasi kodi>>>>
    What is that kodi???????????
    viji
    By the very interesting story and pictures.
    viji

    ReplyDelete
  4. கதை புதிது. தெரிந்து கொண்டேன். படங்கள் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. ஊர்வசி கொடியாக மாறினாள் என்று கதை பாதியில் நிற்கிறதே....

    ReplyDelete
  5. மிக சுவாரசியமான ஊர்வசியின் கதை அருமை.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  7. ஊர்வசி புரூரவஸ் உங்கள் மொழியில் அருமை. தவமாய் தவமிருந்து ஊர்வசியே கிடைத்தாலும் இன்னொருத்தி வேண்டியிருக்கிறது பாருங்கள்!

    ஸ்ரீ நாராயணன் எனும் க்ருஷ்ணன் படங்கள் என் நெஞ்சத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. நன்றி.

    ReplyDelete
  8. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. 4. பாகவத்ப்பிரியா கோவிந்தா

    ReplyDelete