Sunday, February 19, 2012

அரும்பெரும் ஜோதி


Lord ShivaLord ShivaLord Shiva

 Animated Punjabi Quotes Picture Comment

சிவத் தலங்களில் முதன்மை பெற்ற காசி திருத்தலத்திலுள்ள சிவன் கோவில்களைக் கணக்கிட முடியாது. 


காசி நகருக்கு இதயம் போல அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலில் சிவராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும். 
Om Namah Shivaye
காசியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோவிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள்.  
காசி முழுவதுமே அன்று ஜகஜோதியாக இருக்கும்.


இராமேஸ்வரத்தில் சிவராத்திரியன்று காலையில் திறக்கும் சந்நிதியை மறுநாள் பிற்பகலில் தான் மூடுவார்கள். அபிஷேகமும் வழிபாடுகளும் விமரிசையாக நடக்கும். 

தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ரம் ஆகியவை இரவு-பகலாக ஒலிக்கும். இரவின் நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரங்கள் செய்வார்கள். ஒவ்வொரு ஜாமத்திலும் ஸ்வாமி மூன்று பிராகாரங்களிலும் உலா வந்து அருள் புரிவார். 
Happy Shivaratri  Image - 5
ஸ்வாமிக்கு ஆயிரம் குடங்களின் நீராலும் (சஹஸ்ர கலச), ஆயிரம் சங்குகளின் நீரைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். 
மாலையில் வெள்ளி ரத உலாவும் காலையில் பெரிய ரத உலாவும் நடைபெறும்.


நேபாளத்தில் சிவராத்திரி பெரும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. 

இங்குள்ள பசுபதி நாதர் கோவிலில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், நேபாளத்தின் பல பகுதிகளிலிருந்தும் துறவிகளும் பக்தர்களும் தரிசனம் செய்வதற்குக் குவிவார்கள்.

அன்று அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்படும். 

இதை நேபாள மன்னர் தன் சொந்தச் செலவில் செய்கிறார். கோவிலில் லட்ச தீபம் ஏற்றுவார்கள். எல்லாருமே புத்தாடை அணிவார்கள். பசுக்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும்.

ஆந்திர மாநிலம்: ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் மண்டபத்தை விஜய நகர மன்னர் ஒருவர் சிவராத்திரியன்று வழங்கியதாகக் குறிப்பு உள்ளது.

திருச்சி கோவில் சிலா சாஸனம் ஒன்று, சிவராத்திரி விழாச் செலவுக்காக சோழ மன்னர், தன் செல்வத்தை தானம் செய்ததாகச் சொல்கிறது.
Shiv Ji
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும்.

‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தேவருமாவார்’
என்னும் திருமூலரின் வாக்குப்படி ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரத நாளில் சிவபெருமானைச் சிந்தையில் நிறுத்தி சீரிய வாழ்வைப் பெறுவோம்.

எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி; அன்பு கொண்டவர்களாக இருந்தாலும் சரி; சிவராத்திரி அன்று சிவபெருமானைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், வழிபாடு செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும்’ என்பது ஐதீகம்..

பகற்பொழுது என்பது சிவபெருமானுக்கும், இரவுப்பொழுது அம்பிகைக்கும் உரியது. அம்பிகை தனக்குரிய, இரவுப்பொழுதை சிவபெருமான் பெயரால் ‘சிவராத்திரி’ என வழங்கச் செய்தார். நவராத்திரி நாயகி நமக்காகத் தந்தது-சிவராத்திரி.
பூஜையின் போது ஐந்தெழுத்து மந்திரமான `சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும். மேலும் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறியும் பூஜிக்கலாம்.
 
இந்த பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும். 
 
நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.







19 comments:

  1. சிவனேன்னு இருந்த எங்களுக்கு மூன்று நாட்களாக சிவசிந்தனைகளை ஏற்படுத்தி விட்டீர்களே!

    சிவ சிவா!
    சிவாய நம ஓம்!!
    ஓம் நமச்சிவாயா!!!

    ReplyDelete
  2. கடைசியில் சிவனேன்னு படுத்துள்ள குழந்தை சிவனை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குது! ;)))))

    ReplyDelete
  3. காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்து சிவஸ்தலங்களையும் பற்றிக் கூறியுள்ளது சிறப்பு.

    காசிக்கும் என் தாயுடன் சென்று வந்துள்ளேன். காசி விஸ்வநாதரையும், அன்ன பூரணியையும் ஆனந்தமாக தரிஸித்து வந்தேன்.

    இராமேஸ்வரத்திற்கும் என் தாயுடன் சென்று அனைத்துக் கிணறுகளிலும் குளித்து, இராமநாதஸ்வாமியை தரிஸித்து வந்தது நினைவில் நிழலாடி என்னை மகிழ்விக்கிறது, இந்த தங்களின் பதிவு. ;)))))

    ReplyDelete
  4. பெங்களூர் பழைய Airport செல்லும் சாலையில் அமைந்துள்ள அந்த மிகப் பிரும்மாண்டமான சிவனையும் காட்டி மகிழ்வித்துள்ளீர்கள். இதுவரை அங்கு நான்கு முறை போய் வந்துள்ளேன்.

    அந்தக் கோயில் நுழைவாயிலில் உள்ள பிரும்மாண்ட விநாயகரும் வெகு அழகாகவே உள்ளது.

    ReplyDelete
  5. நல்ல இனிப்பான சர்க்கரைவள்ளிக்கிழங்குகளை வாங்கி வந்து, நன்கு மண் போக கழுவி, குக்கரில் வைத்து, வேகவிட்டு, வெந்த தோலை கையைச்சுட்டுக் கொள்ளாமல் மெதுவாக உரித்துவிட்டு, உருளைக்கிழங்கு பொடிமாஸ் போல மசித்துவிட்டு, பிறகு சுத்தமான தித்திப்பு வெல்லப்பொடியையும், ஏலக்காய்ப் பொடியையும் போட்டு, கொஞ்சூண்டு மட்டும் ஜலம் விட்டு, அடுப்பில் ஏற்றி ஒரு கிளறு கிளறி, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு ஸ்பூனையும் போட்டு, சிவ சிவா எனச் சொல்லிக்கொண்டே, ரஸித்து ருஸித்து உண்டால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ, அவ்வளவு மகிழ்ச்சி தருகிறது இந்த சிவராத்திரி பற்றிய தங்களின் பதிவு. ! ;))))))

    ReplyDelete
  6. இந்தியாவில் உள்ள சிவஸ்தலங்கள் மட்டுமில்லாமல் நேபாளத்திலுள்ள பசுபதிநாதர் கோவில் பற்றியும் அருமையான தகவல்கள் கொடுத்திருப்பது சிறப்பு.

    ReplyDelete
  7. சிவ சிவா!
    சிவாய நம ஓம்!!
    ஓம் நமச்சிவாயா!!!

    ReplyDelete
  8. சிவராத்திரிக்கான சிறப்புப் பதிவு கண்டு
    பெரும் மகிழ்வு கொண்டேன்
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    பதிவர்கள் அனைவரும் தங்களுக்கு
    கடமைப் பட்டுள்ளோம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  9. தோடுடைய செவியனின்
    அழகுப் படங்கள் ..
    கடைசிப் படம் அவ்வளவு அழகு...

    ReplyDelete
  10. காசி,இராமேஸ்வரம், நேபாளம் சிவராத்திரி எல்லாமே நல்ல தகவல்.

    ReplyDelete
  11. நாள்கிழ‌மைக‌ளில் கோயிலுக்குச் செல்லும் ப‌ல‌னை அளிக்கிற‌து ச‌கோத‌ரி த‌ங்க‌ள் வ‌லைப்ப‌க்க‌ம் வருவ‌து! சிவானுப‌வ‌த்தை வைகோ சார் சொல்லிய‌ வ‌ள்ளிக்கிழ‌ங்கு ச‌கித‌ம் உண‌ர்வ‌தை க‌ற்ப‌னையில் ர‌சித்து ம‌கிழ்ந்தேன். பித்தா பிறைசூடி பெருமாளே அருளாளா ... அனைவ‌ரையும் காத்து ர‌ட்சிப்பாயாக‌... இம்மைக்கும் ஈரேழ் பிற‌விக்குமாக‌!

    ReplyDelete
  12. நிலாமகள் said...
    // சிவானுப‌வ‌த்தை வைகோ சார் சொல்லிய‌ வ‌ள்ளிக்கிழ‌ங்கு ச‌கித‌ம் உண‌ர்வ‌தை க‌ற்ப‌னையில் ர‌சித்து ம‌கிழ்ந்தேன். //

    தாங்கள் கற்பனை செய்து ரசித்து மகிழ்ந்ததை, அடிக்கடி கற்பனை உலகிலேயே மிதந்து இன்புற்றுவரும் நானும், கற்பனை செய்து பார்த்’தேன்’.

    ’தேன்’ ஆக இனித்தது. நன்றி vgk

    ReplyDelete
  13. ஓம் நம சிவாய.. மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  14. ராஜி ,
    படங்களும் , பதிவும் மிக அருமை.
    ஒரு வேண்டுகோள் , இறைபணியில் இனிதாய்
    ஈடுபட்டுள்ள நீங்கள் இயலுமாயின் , படங்களுடன்
    அந்த அந்த தெய்வங்களின் சிறப்பு ஸ்லோகங்களை
    காணொளி [ youtube ] இணைத்து அவற்றைப் பிரபலப்படுத்துங்கள் .
    . உம : சிவமானச , காலபைரவாஷ்டகம் ,
    ஏற்கனவே இது போல் இடுகை இட்டு விட்டீர்கள் என்றால்
    இதை நிராகரித்து விடுங்கள். நன்றி !

    ReplyDelete
  15. அன்பின் இராஜராஜேஸ்வரி - காசி - இராமேஸ்வரம் - நேபாளம் - ஸ்ரீசைலம் - திருச்சி - ஆகிய ஸ்தலங்களீல் உள்ள சிவபெருமானைப் பற்றி எழுதியது நன்று. நவராத்ரி நாயகி தந்த சிவராத்ரி பற்றிய பதிவிற்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - ஆன்மீகத் தொண்டினை அறத் தொண்டாகச் செய்து வரும் தங்களூக்கு சிவ பெருமான் அனைத்து நலங்களையும் வளங்களையும் அருள்வாராக. நட்புடன் சீனா.

    ReplyDelete
  16. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  17. 21. கோபீ ஜன லோலா கோவிந்தா

    ReplyDelete