



சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே” என்று மஹாகவி பாரதியாரும் பாடி, வெற்றியைப் பறைச்சாற்றும் பொருளாகச் சங்கு சிறப்பிக்கப்படுகிறது..
சாளகிராமம், சங்கு. இந்த இரண்டுக்கும் பிராணப் பிரதிஷ்டை இல்லை என்பது. சிறப்பு . எந்த இடத்திலும் எப்போதும் உபயோகிக்கலாம்.
வலம்புரிச் சங்கு ஐஸ்வர்யத்திற்கு அறிகுறியாக வருகிறது.
சங்கில் மிக உயர்ந்த வகை, கோமடி சங்கு. . கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும் கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். கோமடி என்றால் பசுவின் மடி. இந்தச் சங்கில் நாலு முனை வழியாக அபிஷேகம் செய்யும் போது, பால் வழியும். சில சமயம் ஒரு சங்கின் உள்ளேயே இன்னொரு குட்டிச் சங்கு அமர்ந்திருக்கும். இதுவும் அபூர்வம் தான். இதை இரட்டைச் சங்கு என்பார்கள்

லிங்க ரூபத்தில் வரிசையாக அமர்ந்து சந்தனம், குங்குமம் தரித்து,
பாலுடன் சிவனைக் குளிர்விக்கத் தயாராகி விடும் சங்கின் அமைப்பு,
அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது.

வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் ஓரளவு சங்கின் தோற்றம் அமைந்திருக்கும்.


பாற்கடலைக் கடைந்தபோது வந்த பல மங்கலப் பொருட்களில் சங்கும் ஒன்று.

சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு “சங்கு சக்ரதாரி” ஆனார்.
வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள்.
இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீடசம் பெருகும். வியாதிகள் நீங்கும்.
காலையில் நாம் எழுந்தவுடனே நம் உள்ளங்கையைப் பார்க்கும்படி சொல்வார்கள். ஏனென்றால் உள்ளங்கையில் சரஸ்வதி, லட்சுமி, மஹாவிஷ்ணு, பிரும்மா என்று பலர் இருக்கின்றனர்.
இதே போல் சங்கிலும் நடுவில் குபேரன், குழிப் பகுதியில் வருணன், சுழிக்கும் இடத்தில் சூரிய சந்திரர்கள், குறுகிய இடத்தில் பிராஜபதி, விரிந்த நிலையில் கங்கை யமுனை சரஸ்வதி ஆகியோர் குடிகொண்டு இருக்கிறார்கள்.

. சின்னச் சின்ன சங்குகள் சேர்த்து, சங்கு மாலை தங்கத்தில் செய்து அணிவது வழக்கம். பல பெருமாள் கோயிலிலும் பெரிய சங்கு
மாலைகளைப் பெருமாளுக்குச் சாத்துவார்கள்.

. எந்தப் பொருள் எரித்தாலும் கருப்பாக ஆக இந்தச் சங்கு எரிக்க, கருமையாக ஆகாமல், வெண்மையாகவே இருப்பது ஒரு சிறப்பு
.சமுத்திரத்திலிருந்து கிடைக்கும் சங்கு மிகவும் தூய்மையானது. தெய்வீகமானது. இதில் சூரியன் சந்திரன் மற்றும் வருணபகவானின் சான்னித்யம் எப்போதும் இயற்கையாகவே அமைந்துள்ளது.

முறையாக அமைந்த சங்கின் நடுப்பகுதியில் ஜலத்துக்கு அதிபதியான வருணனும் அடிப்பகுதியில் பிரும்ம தேவனும் நுனிப்பகுதியில் கங்கை சரஸ்வதி நதிகளின் அம்சமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் கட்டளையால் மூவுலங்களிலுள்ள அனைத்து புண்ணிய நதிகளின் புண்ய தீர்த்தங்களும் வலம்புரி சங்கத்தின் உட்புகுந்து இருக்கின்றன. ஆகவே சங்கத்தை பூஜிப்பதால் அனைத்து புண்ய நதிகளையும் பூஜித்த பலன் கிடைக்கும். ஆகவேதான் விஷ்ணு சிவன் முதலான தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது இறுதியில் சங்கில் வைக்கப்பட்ட புண்ணிய தீர்த்தத்தாலும் அபிஷேகம் செய்யப்படுகிறது




சங்கின் சிறப்பை அறிந்தேன் அம்மா...
ReplyDeleteசங்காபிசேகம் கண்டேன்
ReplyDeleteஉணர்ந்தேன்
நன்றி சகோதரியாரே
சங்கின் சிறப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது. வட மாநிலங்களில் எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் சங்கு ஊதுவது அவர்களின் வழக்கம்.
ReplyDeleteஇன்று மூன்றாவது சோமவரம்,கோவில் சென்று சங்காபிஷேகம் காணும் பேறு பெற்றென்.சிரப்பான பகிர்வு
ReplyDeleteசங்கொலி நாதம் எங்கும் முழங்க
ReplyDeleteமங்கையர் கீதம் மனதில் நிறைந்தது!
சங்கே முழங்கு!
புதுவை வேலு
கோயிலுக்குச் சென்று சங்காபிஷேகம் பார்த்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது.
ReplyDeleteசங்கை பற்றி இவ்வளவு விஷயங்களா.
ReplyDelete