

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் உளரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்

காணற்கரி தானநல் வாயுமைந்தா
கானந்தொரு தாந்திரி நீதி யுளோய்
வானத்தவர் பூவுளோர் வாழ்த்திடுமோர்
மோனத்தவ மாருதியைப் போற்றுதுமே

பெங்களூர் நகரம் விரிவு படுத்தப்பட்ட போது மஹாலஷ்மிபுரா என்ற இடம் வரை விரிந்தது,

குன்றுகளின் நடுவில் அமைந்திருந்த மாபெரும் பாறையும் இருக்கும் இடமும் சுற்றியுள்ள இடமும் அரசாங்கதினால் பொது இடமாக விடப்பட்டது.
ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மஹாலஷ்மி லே அவுட், பெங்களூரு.
ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மஹாலஷ்மி லே அவுட், பெங்களூரு.

மக்கள் வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் வாஸ்து சாஸ்திர படி தெய்வீகமாக கருதப்படும் ஈசான்ய மூலையில்(வடகிழக்கு) பாறை அமைந்தது..
மக்கள் இதை உணர்ந்து ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியின் உருவத்தை 22 அடி உயரமுள்ள அப்பாறையில் வரைந்து, அவ்வோவியத்திற்கு ஸ்ரீபிரஸன்ன வீர ஆஞ்சநேயர் என்று பெயரிட்டனர். ஸ்ரீராமநவமி திங்கள் முதன்முறையாக இந்த வரைபடத்திற்கு பூஜை செய்யப்பட்டது.
ஒரு குழு அமைத்து, ஓவியத்தை சிலை ரூபம் கொடுத்து வடிக்கப்பட்ட ஸ்ரீபிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமிக்கு பிராண பிரதிஷ்டை, நடந்தது.
ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 40 அடிக்கு 40அடியில் மூல கோயிலும், அதன் சற்று பின் மூன்று சன்னதிகளும் கட்டப்பட்டன. நடு சன்னதியில் பளிங்கினாலான ஸ்ரீராம, இலக்ஷ்மண, சீதா, ஆஞ்சநேயர்கள் வீற்றுள்ளனர். மற்ற இரு சன்னதியில் ஒன்றில் ஸ்ரீ அபய ஹஸ்த கணபதியும், மற்றதில் ஸ்ரீலஷ்மி தேவியும் வீற்றுள்ளனர்.
40 அடிக்கு 40 அடி உள்ள பிரதான கோயிலில் 22 அடி உயரத்திற்கு ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேயர் கம்பீரமாக எழந்தருளியுள்ளார். விகாரம் 40 அடி உயரம், அதன் மேல் கோபுரம் 41 அடி உயரம், மொத்தம் 81 அடி உயரத்தில் கலசநுனி. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி நின்ற மேனியில் தனது வலது கையில் மருந்து மலையும், இடது தொடையில் ஊன்றிய மறுகையில் கதையை பிடித்தவாறு மிக அழகாக காட்சி தருகிறார். அவரது கொஞ்சும் கேசங்கள் அழகாக முடிச்சிடப்பட்டுள்ளது. அவரது மார்பிலே ஸ்ரீராமரின் விக்கிரகம் பதிக்கப்பட்டுள்ளது. காதில் குண்டலமும், கழுத்திலே மணி ஆரங்களும், புஜங்களில் ஆபரணமும், கைகளிலே கங்கணமும், வலது முழங்காலிலே அழகான ஆபரணமும் அதில் அசைந்தாடும் மணியும், கால்களில் சதங்கையும், ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமி காண கண்கொள்ளா காட்சி. அவரது கம்பீரம் உற்சாகத்தை ஊட்டுகிறது.

இத்தனை உயரமாக இருந்தும் அவரது கடாக்ஷம் விழுந்து அமைதிப்படுத்தி ஆறுதல் சொல்லி ஆட்கொள்கிறது.

இத்தனை உயரமாக இருந்தும் அவரது கடாக்ஷம் விழுந்து அமைதிப்படுத்தி ஆறுதல் சொல்லி ஆட்கொள்கிறது.

பதிமூன்று ஏக்கர் நில பரப்பில் கட்டபட்டுள்ள கோயிலில் தனி சன்னதியில் மஹாலஷ்மிதாயார். பன்னிரெண்டு அடி உயரமும் ஐந்து அடி உயரத்திற்கு செதுக்கப்பட்ட மலர்ந்த தாமரை மீது அமர்ந்து
அருள் பாலிக்கிறாள்.

இந்த ஊரின் பெயரே மஹாலஷ்மிபுரா ..
கொடிமரத்தில் அருகில் இரண்டு சிறிய மாடங்கள்.
ஒன்று ஸ்ரீ அபய ஹஸ்த கணபதி சன்னதியின் எதிரில் உள்ளது. மாடத்தில் வௌளை எருக்கும், மாடத்தின் எட்டு பக்கதிலும் அஷ்ட கணபதிகள் உள்ளனர்.

மற்றது ஸ்ரீலஷ்மி தேவியின் சன்னதியின் எதிரில் உள்ளது. மாடத்தில் துளசியும், மாடத்தின் எட்டு பக்கதிலும் அஷ்ட லஷ்மிகளும் உள்ளனர். கோயில் அருகில் தியான மண்டபம், அதில் கோதண்டராமரும் தியான ஆஞ்சநேயருடன் மிக அழகாக அமைக்கப் பட்டுள்ளது. அருகாமையில் மிகப்பெரிய நூலகம் கணக்கில் அடங்கா புத்தங்கள்.
ஒன்று ஸ்ரீ அபய ஹஸ்த கணபதி சன்னதியின் எதிரில் உள்ளது. மாடத்தில் வௌளை எருக்கும், மாடத்தின் எட்டு பக்கதிலும் அஷ்ட கணபதிகள் உள்ளனர்.

மற்றது ஸ்ரீலஷ்மி தேவியின் சன்னதியின் எதிரில் உள்ளது. மாடத்தில் துளசியும், மாடத்தின் எட்டு பக்கதிலும் அஷ்ட லஷ்மிகளும் உள்ளனர். கோயில் அருகில் தியான மண்டபம், அதில் கோதண்டராமரும் தியான ஆஞ்சநேயருடன் மிக அழகாக அமைக்கப் பட்டுள்ளது. அருகாமையில் மிகப்பெரிய நூலகம் கணக்கில் அடங்கா புத்தங்கள்.

இலவச மருத்துவ வசதி, இலவச கண் அறுவை சிகிச்சை, நோயாளிகளுக்கு தங்க வசதி என்று ஏராளமான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளது கோயில் நிர்வாகம்.

கர்நாடகாவில் பயணித்தபோது பல இடங்களில் அனுமார் கோயில்களை அதிகமாகக் காணமுடிந்தது. தற்போது தங்கள் பதிவின் மூலமாக மற்றொரு கோயிலைப் பற்றி அறிந்தேன்.தமிழகத்தில் முன்னர் நாமக்கல், சுசீந்திரம் ஆகிய இடங்களில் பழமையான ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. தற்போது பல இடங்களில் பெரிய ஆஞ்சநேயர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நன்றி.
ReplyDeleteஅரிய தகவல்களுடன் இனிய பதிவு!..
ReplyDeleteவாழ்க நலம்!..
கடந்த ஆண்டு பெங்களூர் சென்றிருந்தபோது இந்தக் கோவிலைப் பார்த்தேன். ஆனால் சிறப்பு அம்சங்களை அறிந்ததில்லை.
ReplyDeleteகம்பரின் ஆஞ்சநேய துதியுடன் தொடங்கி படங்களுடன் அரிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி
புதிய ஆலயத்தின் சிறப்பை அறிந்தேன்... நன்றி அம்மா...
ReplyDeleteநாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஒரு முறை சென்றிருக்கின்றேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேயர் அழகு.
ReplyDeleteமாகலட்சுமி தாயார் அழகு.
புதிய ஆலயம் ஆலயத்தின் சிறப்பும் பாடல் பகிர்வும் அற்புதம்.
அருமையான தகவல். படங்களும் சிறப்பு.
ReplyDeleteஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேயர் பற்றிய அரிய தகவல்களும் அழகிய படங்க்ளும் அருமை.
ReplyDelete