ஸீல் 'என்னும் பிராணிகள் நீர் நாய் என்றும் ,, கடல் சிங்கம் என்றும் அழைக்கிறார்கள்..

ஆஸ்திரேலியாவில் தென்கடலில் சுற்றுலாத்தளமான ஸீல் ராக் என்னும் தலத்திற்குச்சென்றிருந்தோம்..
வழி எங்கும் திராட்சைத்தோட்டங்கள் காணக்கிடைத்தன.
யாரா நதிக்கரையில் உலகின் உயரமான குடியிருப்புப்பகுதிகள் அமைந்திருக்கின்றன.
யாரா ந்தியின் அடியில் செல்லும் சுரங்கப்பாதை வியப்பளித்தது..
வேகத்தைக்கண்காணிக்க காமிராக்கள் உண்டு..
காரின் எண்களைப்பதிவு செய்துகொண்டு கட்டணத்தை இல்லத்து முகவ்ரிக்கு அனுப்பி வசூலிப்பார்களாம்..
இந்தியக்கிராமப்புறங்களில் வைக்கோல்களை போர் போட்டு குவித்திருப்பதைப்போல் இங்கு உருளைவடிவில் கட்டி வைத்திருந்தது..
புதர் தீ ஏற்படும் காலம் என்பதால் காய்ந்த புதர்களை அரசாங்கமே பாதுகாப்பாக எரித்து தானாக எரிந்து விபத்து ஏற்படாமல் தடுக்கின்றனர்..
அங்கே புகை இருப்பதால் கவனமாக இருக்குமாறு அறிவிப்பும் செய்துவைத்திருக்கிறார்கள்..
கடலினுள் அமைந்திருக்கும் ஸீல் ராக்கில் வசிக்கும் ஸீலகளைப்பார்க்க தொலைநோக்கிகள் அமைத்திருக்கிறார்கள்..
அதில் இரண்டுடாலர் நாணயத்தைப்போட்டு அதன் மூலம் அந்தபாறையைப்பார்த்தால் ஸீல்களை அருகில் தரிசிக்கலாம்..
காலையில் இரை தேடி, கடலுக்குள் சென்றுவிடுமாம். பிறகு அங்கேயே பகல் முழுதும் இருந்துவிட்டு, மாலையில் கொஞ்சம் இருட்டின பிறகுதான் ஸீல்கள் கரைக்குத் திரும்பி வருமாம்.
பெங்குவின் பறவை காலனி' யில் செடி, புதர்களுக்கு நடுவேயெல்லாம், கூடு ( வீடு) செய்து வைத்துள்ளனர். '
ஸீல் !ரொம்ப 'ரிச் ' சான தாய்ப்பால் தரும் பிராணி ' ஸீல் ' தான் ! பிறந்த சில நிமிடங்களில் குட்டி ஸீல் நேராகத் தாயை நோக்கித் தானாகத் தவழ்ந்து சென்று பால் குடிக்க ஆரம்பித்துவிடும் !
அந்தப் பாலின் சக்தி ஆச்சரியமானது . மிகச் சிறந்த ஜெர்ஸி பசுவின் பாலைவிடப் பன்னிரெண்டு மடங்கு கொழுப்புச் சத்தும் , நாலு மடங்கு புரோட்டீன் சத்தும் ஸீல் பாலில் உண்டு .
அந்தப் பாலின் சக்தி ஆச்சரியமானது . மிகச் சிறந்த ஜெர்ஸி பசுவின் பாலைவிடப் பன்னிரெண்டு மடங்கு கொழுப்புச் சத்தும் , நாலு மடங்கு புரோட்டீன் சத்தும் ஸீல் பாலில் உண்டு .

கடற்கரையில் பறவைகளுக்கு மரத்தாலான வசிப்பிடங்களை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்கள்..
பாம்பும் உண்டு .தொல்லை செய்தால் கடிக்கும் அபாயம் உண்டு என்று அறிவிப்பு இருந்தது..
கடற்கரையில் ஸீல் ராக்குக்கு வந்ததன் நினைவாக வாங்கிச்செல்ல நினைவுப்பொருட்கள் அடங்கிய கடையும் , உணவகமும் ,சிறு குழந்தைகள் விளையாடும் விளையாட்டு அரங்கமும் அமைந்திருக்கிறது..
இந்தியாவைவிட ஆஸ்திரேலிய நேரம் நான்கரை மணிநேரம்
முன்னதாக இருக்கிறது..
பகல்நேர வெளிச்ச சேமிப்பிற்காக மெல்பர்னில் ஒருமணிநேரம் இன்னும் முன்னதாக நேரத்தை வைத்திருக்கிறார்கள்.எனவே மெல்பர்னில் ஐந்தரை மணிநேர வித்தியாசம்..
இரவு ஒன்பது மணிவரை சூரியன் மறையாமல் நம்முடன்
கூடவே பயணிப்பது ஆச்சர்யம்..
கடற்கரைக்கு அருகில் இருந்த குன்றில் கடல் பறவையான அழகான
சீகல் பறவைகள் வெள்ளை இறகுகள் , செர்ரிபழ் நிற கண்கள் , சிவந்த அலகுகளுடன் பறந்து சங்கீதமிசைத்துக்கொண்டிருந்தன..
ஆல்பட்ராஸ்' என்னும் பிரமாண்டமான பறவைகளின் குடியிருப்பும் உண்டு.. . இவைகள் இரண்டு இறக்கையையும் விரித்தால் வரும் நீளம் ஆறு அடிக்கும் அதிகம்..
பறவைகளுக்கு உணவளிக்கூடாது என்று அறிவிப்பும் இருந்தது..
ஒருவர் உணவுப்பொருளைப் போடப்போட அவர் வீசும் வேகத்திலேயே கூட்டம் கூட்டமாப் பறவைகள் கச்சிதமாகப்பிடித்து உண்டது கண்கொள்ளாக்காட்சி..






![[Seal+Beach+Sunset+MTP+2.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgokn36UckGUOyIaN4RKo5fudmR7JlGehGTe59T37S4ermmex06VgVLsYHRTLcxw1Trvzbb6lUebDMH3J29MjRBMPus36XN2PB5WsUGI6mUP4q2gZy3aSz_M-pxmogJnq4S2-Fge9wSbMme/s1600/Seal+Beach+Sunset+MTP+2.jpg)



வணக்கம்
ReplyDeleteஅம்மா.
நீர்வாழ் உயிர்இனங்கள் பற்றிமிக அருமையாகசொல்லி உள்ளீர்கள்... தொலைக்காட்சி பார்த்தது போல ஒரு உணர்வு பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்து படங்களும் அழகு.
ReplyDeleteநாங்கள் இந்த இடத்துக்கு சென்றதில்லை. முடிந்தபோது சென்று பார்க்கிறோம்.
பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அம்மா
வியக்க வைக்கும் நேர தகவல் உட்பட அனைத்தும் அருமை அம்மா...
ReplyDeleteபடங்கள் ஒவ்வொன்றும் அற்புதம் சகோதரியாரே
ReplyDeleteசீல் ராக் போயிட்டு வந்த மாதிரி ஒரு பீல் ...
ReplyDeleteநைஸ் மேம் ...
பபடங்கள் அழகு அம்மா..சீல் ராக் போன மாதிரி இருக்கிறது
ReplyDeleteஅரிய தகவல்.. அற்புதமான படங்கள்.. நிறைந்த விவரங்கள்..
ReplyDeleteபயனுள்ள பதிவு.. வாழ்க நலம்..
சீல் பறவைகளைப் பற்றிய பல புதிய செய்திகளை அறிந்தேன். புகைப்படங்கள் நிகழ்விடத்திற்கே கொண்டு சென்றுவிட்டன. நன்றி.
ReplyDeleteகடல்நாய், சீகல்(ராக்) பற்றிய தகவல்கள் அருமை. அழகான படங்கள். நன்றி.
ReplyDeleteவித்தியாசமான சுவாரஸ்யமான பதிவு.
ReplyDeleteஜெர்சி பசுவின் பாலைவிட கொழுப்பு சத்தும் ப்ரொடீனும் அதிகமுள்ள ஸீலின் பாலை மக்கள் உபயோகிக்கிறார்களா? இந்த நேர வித்தியாசத்தால் காலை ஐந்தரை மணிக்கே டெஸ்ட்கிரிக்கெட் மாட்ச் பார்க்க எழுந்திருக்க வேண்டி உள்ளது.அரிய தகவல்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்க ப்லாக் வந்து நானும் ஊர் ஊரா சுத்துறேன்:) நன்றி தோழி!
ReplyDeleteமனதைக் கொல்லை கொள்ளுகின்றன படங்களும், சீல்களும்...அதுவும் ஒரு சீல் முகத்தை மட்டும் முன் வைத்துக் கொண்டு பார்க்கும் படம் அருமையோ அருமை....அனுபவ விவரணம் வாசிக்க வாசிக்க சந்தோஷமாக இருக்கின்றது...ஏதோ நாங்களூம் தங்களுடன் வந்தது போல.....தகவல்கள் அருமை....மிக்க நன்றி!
ReplyDelete