Thursday, December 4, 2014

திருக்கார்த்திகை திருவிழா




தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே

ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. 
காலை மாலை இருவேளையும்  விளக்கு ஏற்றப்படும் இல்லங்களில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. 

 அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறோம்..

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். 
எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். 

விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். 

அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். 
இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். 
எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே

எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே... எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் தீபத்தை  துதிக்கிறோம்..!

ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ

 தினமும் தீபம் ஏற்றப்படுகிற இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. 
எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். 
சகல செல்வங்களும் சேரும். திருமகள் நீங்காது இருப்பாள்..
ஆலயங்களில் இறைவனுக்குச் செய்யும்  பதினாறு வகை உபசாரங்களில்   தூப - தீபம் சமர்ப்பித்தல் சிறப்பானது..

 தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். 

ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். 
புஷ்ப தீபம்- பிரம்மன்; 
புருஷாமிருகம் - கலைமகள்; 
நாகதீபம்-நாகராஜர்; 
கஜ தீபம் - விநாயகர்; 
வியாக்ர தீபம்-பராசக்தி; 
ஹம்ச தீபம் - பிரம்மா; 
வாஜ்ய தீபம்- சூரியன்; 
சிம்ம தீபம்-துர்கை; 
சூல தீபம்-மும்மூர்த்திகள்; 
துவஜ தீபம்-வாயு; 
வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; 
பிரமா தீபம்-துர்காதேவி; 
குக்குட தீபம்-கந்தப்பெருமான்; 
கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; 
ஸ்ருக் தீபம்-அக்னி; 
சக்தி தீபம்-பராசக்தி.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். 
திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

12 comments:

  1. 8 பொட்டுகளின் விளக்கம் உட்பட அனைத்தும் தகவல்களும் சிறப்பு அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. விளக்கின் மகத்துவத்தை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
  3. அண்ணமலையாரின் அருள் தீபத்தை
    அகிலம் போற்றும் வகையில் ஏற்றி
    ஆன்மீக ஒளி காட்டிய ஒப்பற்ற அம்மையே!
    உம்மை வணங்குகிறோம்.
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  4. கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  5. தீப சமர்பணமும், 8 பொட்டுக்களின் விளக்கங்களும் அருமை அம்மா

    ReplyDelete
  6. ஆலயங்களில் 16 வகைத் தீபங்கள் ஏற்றப் படுகின்றனவா. தெரியாதது கவனிக்காதது. தகவல் களுக்கு நன்றி

    ReplyDelete
  7. தீபங்களின் மகத்துவம் அறிந்தோம்...

    ReplyDelete
  8. தீபம் பற்றிய தொகுப்பு செய்திகள் பயன் மிகுந்தவை. நன்றி தோழி... அயராத உழைப்புக்கு.

    ReplyDelete
  9. வணக்கம் அம்மா
    தீப சமர்பணம் பற்றிய புதிய தகவல்களை அறிய தந்தமைக்கு முதலில் நன்றிகள். தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பான தீபத்திருநாள் வாழ்த்துகள். நன்றீங்க அம்மா..

    ReplyDelete
  10. அருமை ..
    தீபத் திருநாள் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  11. தீபத் தொகுப்பு சிறப்பு
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete