
![[Narasimhar.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiniGu4xbYy1tiN_XKTDzWy2k9cp0sDBJXFFFZ0u5EalRTbfiC5CB0mPd9nNQQSqiePL-qNW7i4CC37rRDC9OW_xQKfjOfYRSRu6tKojy-phTR6mdYU0kXBY-m1oz05zbK4VAR9TGVdnoZI/s640/Narasimhar.jpg)
![[Lakshmi+Narasimhar.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiotoy6OSOZKuncYIOSGd8lrPC-8vfNdwKbRnba_gY2Yb91oQymXrT7MqSgQJ9XxJOtV_SiMnfbVel5weTXcW5gKGfJHUVELqhTjCjfUOprBqh-pzoV2OmrlI12kbx2jZ1WCRv8-jOdXBfH/s320/Lakshmi+Narasimhar.jpg)
![[amruthavalli+thaayar.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4RJAhIyosIOm7Pt6LuswpXN-a2DagxbnOCAkM6sCknGoL8CpTuX1pP27xyxVFyhivqpbo4QR3XPVtl0OUeUW2GPdC3MORKResAMJYmRezhtcmtHmey5FoyggWAhfiux31ZeRfxag2ei1v/s320/amruthavalli+thaayar.jpg)
ராம அவதாரம் முடிந்ததும் ராமபிரான் வைகுண்டம் எழுந்தருளும் வேளையில், தாமும் உடன் வருவதாக கூறினார் ஆஞ்சநேயர். ஆனால் ராமபிரான், ‘கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் சப்த ரிஷிகளுக்கும், காலன் மற்றும் கேயன் எனும் இரு அரக்கர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். அவர்களை என்னுடைய சங்கு, சக்கரத்தால் அழித்து கலியுகம் முடியும் வரை நீயும் கடிகாசலத்தில் சங்கு, சக்கரத்துடன் இருந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு அருள்பாலித்து கலியுகம் முடியும் வேளையில் எம்மை வந்தடைவாய்’ என்று கூறிவிட்டார்.

இதனால்தான் யோக நிலையில் சங்கு, சக்கரத்துடன் அமர்ந்த நிலையில் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி கோவிலில் இருக்கிறது.

கலியுகம் முடியும் வரை அனுமனும் கலியுகத்திலேயே வாழ்வதாக ஐதீகம். எனவேதான் இன்றும் பக்தியோடு, ராமாயணம் படிக்கும் இடம் தோறும் ஆஞ்சநேயர் அருவமாகவோ, உருவமாகவோ வந்து கலந்துகொள்வதாக ஐதீகம்
பக்த பிரகலாதனுக்காக தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர்.

அத்திரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கவுதமர், பரத்வாஜா, விஸ்வாமித்ரர் என சப்த ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி நரசிம்மப் பெருமாள் சோளிங்கபுரம் தலத்தில் சாய்ந்த நிலையில்,
யோக முத்திரையோடு தியானக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
தற்போது சோளிங்கர் என்று அழைக்கிறார்கள்.
ஒரு கடிகை நேரம் (24 நிமிடங்கள்) சோளிங்கபுரத்தில் தங்கியிருந்தாலே எத்தகைய பாவியானாலும் முக்தி தரும் திருத்தலமாக விளங்குவதால் சோளிங்கபுரத்திற்கு கடிகாசலம் (திருக்கடிகை) எனும் பெயர் ஏற்பட்டது.

விஸ்வாமித்திரர் ஒரு கடிகை நேரம் சோளிங்கபுரத்து யோக நரசிம்மரைத் துதித்து, அதன் பயனாக பிரம்மரிஷி பட்டத்தையும் பெற்றார்.

இங்குள்ள பெரிய மலையின் உச்சியில் வடக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனைக் கடந்தால் சாளக்கிராம மாலை அணிந்து மூலவராய் யோக நரசிம்மர் கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலித்து வருகிறார்.
அம்ருதவல்லித் தாயார் தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் உற்சவர் பக்தவச்சலப் பெருமாள் என்பதாகும். தாயார் திருநாமம் சுதாவல்லி.

நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் பெற்றத் தலம் இது. ஸ்ரீமந் நாத முனிகளும், மணவாள மாமுணியும், ராமானுஜரும், திருக்கச்சி நம்பிகளும் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

இந்த மலைக்கு எதிரில் உள்ள சிறிய மலையில் நான்கு திருக்கரங்களுடன் யோக ஆஞ்சநேயர் உள்ளார். அக்கார அடிசல் எனும் விசேஷப் பாய£சம் நரசிம்மருக்கு மிகவும் உகந்தது.


வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கும், தாயாருக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை, நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. அதை பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனை வாங்கி உண்டால், மிகுந்த செல்வம் கிடைக்கும். நோய்கள் அகலும்.


இங்கு தாயார், பெருமாள், பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும். நம் பிரார்த்தனைகளை அம்ருதவல்லித் தாயாரிடம் கூறினால், அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைக்க, நரசிம்மர் அக்கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சநேயரிடம் கூறுவாராம். எனவே இந்த வரிசைப்படியே பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

தொட்டாச்சாரியார் எனும் பக்தர் வருடம் தோறும் காஞ்சீபுரம் வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம். முதுமை காரணமாக அவர் வரமுடியாத நிலையில் பெருமாளே இத்தலத்தில் காஞ்சீபுரம் கருடசேவை தரிசனத்தைக் காட்டி அருளியதாக கூறப்படுகிறது.

சித்திரை உற்சவத்தின் 9 நாட்களும் மலையில் இருந்து நரசிம்மர் சார்பாக சக்கரத்தாழ்வார் இறங்கி, ஊருக்குள் வலம் வந்து திரும்பவும் மலைக்குச் செல்வார். அவ்வேளையில் சக்கரத்தாழ்வாரே, தரிசிக்கும் பக்தர்களின் துயரங்களை போக்கிடுவார்.

இத்தல நரசிம்மருக்கு வேண்டுதல் எதுவும் செய்யாமல் 1,500 படிகள் மலை ஏறிவந்து தரிசித்தாலே பலன் தரும் அதீத சக்தி உள்ளது.
முன்பு இத்தலத்தில் பெருமாளுடன் சிவனும் கோவில் கொண்டிருந்தார். தொட்டாச்சாரியார் என்பவரே பின்பு சிவனை தனிக்கோவிலில் எழுந்தருளச் செய்ததாக கூற்று நிலவுகிறது.

பில்லி, சூன்யம், தீவினை, மனநோய், மனநிலை பாதிப்பு, மனக்குறை, மரண பயம் ஆகியவற்றால் துன்புறுபவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயரை தரிசித்தால் உடனடியாக துன்பங்கள் நீங்கப்பெறுவர் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும்.
ஆண்டின் 11 மாதங்கள் யோக நிலையில் தரிசனம் தரும் நரசிம்மர், கார்த்திகை மாதம் முழுவதும் கண் திறந்த நிலையில் அருள்வதாக ஐதீகம்.

அதுவும் கார்த்திகை மாத வெள்ளி மற்றும் குறிப்பாக கார்த்திகை மாதத்து அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் யோக நரசிம்மர் யோக நிலை விடுத்து நமக்கு அருள்பாலிக்க கண் திறப்பார்.


யோக நரசிம்மர் தரிசனம் கண்டு வணங்கினேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
அதிகாலையில் - ஸ்ரீ யோக நரசிம்மஸ்வாமி தரிசனம்..
ReplyDeleteஅழகு.. அருமை..
அற்புதமான புகைப்படங்கள் .. நேரில் சென்று தரிசித்தது போன்ற உணர்வு.. அருமை
ReplyDeleteசிறப்பான தகவல்கள் + படங்கள்... நன்றி அம்மா...
ReplyDelete1500 படிகள் ஏறிச்சென்று தரிசிக்கும் போதே எங்களுக்கு தெரிவித்தார்கள் ஆலயப்பணி காரணமாக தரிசிக்க முடியாது என்று இன்று இங்கு தரிசனம் கிடைத்தது.
ReplyDeleteஅருமையான, அழகான நரசிம்மர் தரிசனம் கிடைக்க பெற்றேன்.
ReplyDeleteபடங்கள் அவ்வளவும் அப்படி அழகு.
வாழ்த்துக்கள்.
இதுவரை இந்த திவ்ய தேசத்திற்குப் போனதில்லை. இன்று உங்கள் தளத்தில் பெருமாளையும் தாயாரையும் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி!
ReplyDeleteஇக்கோயிலுக்கு இதுவரை நான் சென்றதில்லை.தங்கள் பதிவைப் பார்த்ததும் செல்லவேண்டும் என்ற ஆசை மேம்பட்டுவிட்டது.
ReplyDeleteஅருமையான தரிசனம். இதுவரை நானும் சென்றதில்லை.....
ReplyDelete