Sunday, December 28, 2014

பெயர் சொல்லிப் பாடிப்பறக்கும் கிளிப்பிள்ளைகள்..!



பாடிப்பறக்கும் பச்சைக்கிளிகளும்  இச்சையோடு 
பதிவுகள் எழுதுகின்றனவா எனத்தெரியவில்லை..
முகநூலில் முகம் காட்டுமா..ட்வீட்டரில் ட்வீட்டுமா?
வாட்ஸ் அப்பில் தகவல்கள் அனுப்புகின்றனவா??!

அப்படி பதிவெழுதினால் பெயர்க்காரணங்களும் எழுத ஆரம்பித்துவிடும் போலும் அந்த – பேர் சொல்லும் (கிளிப்)பிள்ளைகள்..


கிளிகள் தங்கள் கிளிப்பிள்ளைகளை பெயரிட்டு அழைக்கின்றனவாம்..

அத்தோடு, வயதில் சிறிய கிளிகள் நம்மைப்போலவே , தங்களின் பெயரை அவற்றுக்குப் பிடித்த மாதிரி மாற்றியும் வைத்துக்கொள்கின்றன. 

வெனிசுலாவில் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் 17 கிளிக்கூடுகளில் 
சிறு மைக்குகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். 

இதில் 9 கூடுகளில் இருந்த முட்டைகள் வெவ்வேறு கூடுகளில் 
மாற்றி வைக்கப்பட்டன. 


கிளிகளின் பெயர்கள் அவற்றின் பெற்றோர்,மூதாதையரைச் சார்ந்துள்ளதா அல்லது வளர்ப்பைச் சார்ந்துள்ளதா என்று கண்டறியவே இப்படி முட்டைகள் மாற்றி வைக்கப்பட்டன. 

முடிவில் வளர்ப்பைச் சார்ந்தே பெயர்கள் வைக்கப்படுகின்றன 
என்பதைக் கண்டறிந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.



கிளிகள் கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்யும்போது வயதில் சிறிய கிளிகள் தொலைந்துவிடாமல் இருக்கவும், 

தொலைந்தால் கண்டறியவும், சரியான வேளைக்கு 
உணவு கொடுக்கவும்இந்தப்பெயர்கள் பெரிய கிளிகளுக்கு உதவுகின்றன. 

அதென்ன ”சரியான நேரத்திற்கு உணவு கொடுக்க” என்று யோசித்தால் 
மற்ற விலங்குகள்/பறவைகளுடன் ஒப்பிடும்போது கிளிகளே மனிதர்கள் மாதிரி தங்கள் பிள்ளைகளை அதிக நாட்கள் தங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்கின்றன. 

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல கூட்டைவிட்டுக் கிளம்பிய மூன்று வாரங்களுக்குப் பிறகும் சிறிய கிளிகள் தங்கள் பெற்றோரையே உணவுக்காகச் சார்ந்திருக்கின்றன.

கிளிகள் மட்டுமல்ல டால்ஃபின்களுக்கும் பெயர்கள் உண்டு. 

ஒரு டால்ஃபின் தொலைந்துவிட்டால், மொத்த டால்ஃபின் குடும்பமும்(pod) சேர்ந்து தொலைந்துபோன டால்ஃபினின் பெயர் சொல்லி அழைக்கின்றன.


13 comments:

  1. சுவையானத் தகவல்களும், அழகிய படங்களும் என பகிர்வு அருமை.

    ReplyDelete
  2. கிளிகள் தங்கள்பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்கின்றனவா
    இதுவரை அறியாத தகவல் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  3. அருமையான கிளி கொஞ்சும் பதிவு
    படங்கள் எல்லாம் அழகோ அழகு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கிளிகள், டால்பின் குடும்பங்களிலும் பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் உண்டு என்று சொல்லும் ஆராய்ச்சி ஆச்சர்யமேற்படுத்துகிறது. சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
  5. அழகிய கிளிக்கூட்டங்களுடன் பறப்பதைப் போலிருக்கின்றது..
    அரிய தகவல்களுடன் இனிய பதிவு!..

    ReplyDelete
  6. ஆஹா அற்புதமான பதிவு.
    பறக்கும் பச்சை கிளிகளை பார்த்ததும்
    மனதும் ரக்கை கட்டி பறக்கிறது தோழி.

    ReplyDelete
  7. ஆஹா அனைத்தும் சுவாரஸ்யமான விடயங்கள் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  8. கிளிப் பாடல்

    ஞாயிற்றை யெண்ணி யென்றும்
    நடுமை நிலை பயின்று
    ஆயிர மாண் டுலகில் -- கிளியே
    அழிவின்றி வாழ்வோ மடீ,

    அருமையான பதிவு அம்மா!
    பெருமையான் பதிவு அம்மா!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  9. பெயர்கள் என்றால் என்ன பெயர்களைக்கொண்டிருக்கும் என்று கற்பனை சிறகடித்தது. ஆராய்ச்சி-- கொஞ்சுகிறோம் என்கிற பெயர்களில் இயற்கையோடு இயைந்த அவைகளை ரொம்பவும் தொந்தரவுகளுக்கு உள்ளாக்குகிறோமோ என்று படங்களைப் பார்க்கையில் தோன்றியது.

    ReplyDelete
  10. கிளிகள் பற்றிய தகவல்களும் படங்களும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  11. கிளிகளும், டால்பின்களும் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து அழைக்கின்றன என்ற செய்தி வியப்பாக இருக்கிறது. கூட்டமாக இருக்கும்போது தங்கள் குழந்தைகளை அவை எப்படி அடையாளம் தெரிந்து கொள்ளும் என்று நான் நினைப்பதுண்டு. இப்படிப் பெயர் வைப்பதனால்தானோ என்னவோ? சுவாரஸ்யமான தகவல்.

    ReplyDelete
  12. கிளிகள் அழகு...
    அருமையான பகிர்வு... அழகான படங்கள்...

    ReplyDelete