


பனிப்பூக்கள் குளிர்காற்றில் பறக்கின்ற வேளை
இடையர்களும் இமைசாய்த்து துயில்கின்ற மாலை
விண்ணிலே மீனொன்று வால் நீட்டக் கண்டு
மென்மனசு இடையர்கள் போனார்கள் மிரண்டு
இது வானம் ஒன்று பூமிக்கு வருகின்ற தேதி
வானதூதர் வந்தங்கு சொன்னார் அச் சேதி.
சாந்தமுகம் சாய்ந்து கொள்ள சிரித்தது பசுக்கொட்டில்
காந்தமுகம் பாய்ந்து வந்து அமர்ந்தது மனக் கட்டில்.
ஞானியரின் கைகளிலே மூன்று வகைப் பரிசு
மூவொரு தேவனவர் பிறப்பே மிகப் பெரிசு.


கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்தவர்களோடு -நீண்ட விடுமுறை, கிறிஸ்மஸ் மரம் அலங்கரிப்பது,.
பரிசுகள் பரிமாறிக் கொள்வது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசுகளை வாங்குவது என அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றது.. ..
கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். . இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம் டிசம்பர் 25. தினத்தை கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்று கொண்டாடுகின்றார்கள்
உலகில் வாழும் மக்கள் தங்கள் சமயத்தையும், சமூக சிந்தனைகளையும் கடந்து கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை கிறிஸ்மஸ் ஆகும்.
இதற்கு காரணம் இறைவன் மனுக்குலத்தின் வரலாற்றில் குறுக்கிட்டார். இதனால் தான் வரலாற்று ஆசிரியர்கள் கி. மு., கி. பி. என உலக வரலாற்றையே இரண்டாக பிரிக்கின்றார்கள்.
ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை முறையை தன்னுடைய போதனை மூலம் மக்களுக்கு எடுத்துரைத்து அதை தன் வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். மண்ணில் சமாதானமும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ பாடுபட்டவர். மனிதர்களின் பாவங்களுக்காக தன்னையே அற்பனித்தார் இயேசு.
இயேசு கிறிஸ்து அவதரித்ததும் உலகிற்கு அதை உணர்த்த
ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றியது-

கிறிஸ்துமஸ் தாத்தா" எனப்படும் சாண்டா கிளாஸ்
குழந்தைகளுக்கு குதூகுலம் தருபவர்..

கிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி
தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார்.

விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு பறக்கும் மான்.வாகனமாக குதூகலப்படுத்துகிறது..
கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், ??!. கடும் குளிர் நிறைந்த துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.





வணக்கம்
ReplyDeleteஅம்மா
காலம் உணர்ந்து பதிவாக மலர்ந்த விதம் சிறப்பாகஉள்ளது பகிர்வுக்கு நன்றி
இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய பதிவு.. வாழ்க.. வளர்க!..
ReplyDeleteகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பும் கருணையும் இந்த மண்ணில் தழைக்கட்டும்.
படங்கள் மிக அருமை.
வாழ்த்துக்கள்.
பதிவும், புகைப்படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய திருநாள் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்றும் அழகிய படங்களும் அருமையான செய்திகளும்!
வாழ்த்துக்கள் சகோதரி!
கிறிஸ்துமஸ் தகவல்களும் படங்களும் சிறப்பு! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
ReplyDeleteHappy Happy christmas !
ReplyDeleteMerry Merry Christmas!
படங்கள் அருமை.
ReplyDeleteஇனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அம்மா.
Merry Christmas to you too.
ReplyDeleteplease visit ஜிங்கிள் பெல்! ஜிங்கிள் பெல்!!
KO
Advanced Happy New Year
ReplyDelete