![[Hindu+Monastery+001.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5QrbKY8Ezv5h2BVC5KoK14GsL56tAKU7a5RFVsFI7zzVbcoHMJwBtoQcN_uclaGEemyhKNTrrC88nNuA1uG7yWxeX3e3Z21EaQSdbpcnDpW7UPcVuCrOQmw_X6UBGf6d3KXmlBKigXZpB/s400/Hindu+Monastery+001.jpg)


பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ஹவாய் 8 தீவுகள் அடங்கிய தீவு கூட்டத்தின் கடைசியில் இருக்கும் குட்டி தீவு குவாய் (KUHAI). ஓரு மிதக்கும் இலையின் வடிவில் இருக்கும் இந்த அழகானதீவு முழுவதும் பரவியிருப்பது பலவிதமான மலர்கள்.மலர்ந்து மணம் வீசுவதால் மலர் தோட்ட தீவு அழைக்கப்படும் எழில் கொஞ்சும் இடத்தில் நடராஜருக்கு கோவில் அமைந்திருக்கிறது..
அங்கு வழிபடப்படும் ஸபடிகலிங்கத்திற்காக மற்றொரு பிரமாண்டமான கோவிலும் அருகில் எழுந்து கொண்டிருகிறது.


சிவ யோகஸ்வாமி என்ற சிவாச்சாரியர். உபதேசித்து தீட்சை பெற்ற அருளாசியால் ஞானம் பெற்று இந்து மதத்தின் மீதும் ஈர்ப்பு கொண்ட அமெரிக்கர் - உலகின் பலநாடுகளில் பயணித்து இறுதியில் ஹவாய் தீவுக்கு வந்த போது இங்கு சிவபெருமான் வாழ்ந்ததை உணர்ந்திருக்கிறார். .
தான் சிவனை கண்ட இந்த இடத்தில் வழிபட ஒரு கோவிலையும், அதை முறைப்படி நிர்வகிக்க ஒரு ஆதினத்தையும் உருவக்கினார்.

31 ஆண்டுகள் சிவாய சுப்ரமணி ஸ்வாமியாக அவர் வாழ்ந்த இந்த இடம் படிப்படியாக வளர்ந்து இன்று 363 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது.

இவர் கலிபோர்னியாவில் பிறந்த அமெரிக்கர். பள்ளி மாணவனாக இருந்த போதே குருவால் அடையாளம் காணப்பட்டு வளர்க்கபட்டவர்.
அமெரிக்கர், ஐரோப்பியர் போன்ற பலநாட்டினர் இந்த ஆதினத்தின் மரபுகளுக்கேற்ப இந்துவாகி இங்கு வருகின்றனர், வழிபடுகின்றனர்.. உலகின் பல நாடுகளில் இவரை குருவாக ஏற்ற இந்துக்கள் இருக்கின்றனர். வழிபாட்டு மன்றங்களும் இருக்கின்றன. மொரிஷிசியஸ் நாட்டில் ஒரு கோவிலையும் நிறுவயிருக்கிறார்கள்.
கேரளகோவில் பாணியில் சரிவான கூரையிட்ட உயரமான கட்டிடத்தில் கோவில். சன்னதியில் கம்பீரமாக நடராஜர். அதன் முன்னே நுழைவாயிலில் தனி மண்டபத்தில் பெரிய நந்தி. அருகே தாமரை பூத்த தாடகம். நுழையும் முன் தடாகத்தில் கால் அலம்பிகொண்டபின் நந்தியாரை வலம் வந்த பின்னர் சன்னதிக்கு போக வேண்டும்,

வாசல் கதவு அருகிலேயே சந்தனமரத்தில் வடித்த வினயாகர். சன்னதிக்கு போகும் முன் கடக்கும் நீண்ட கூடத்தின் இருபுறமும் நாட்டியத்தின் 108 கர்ணங்களை காட்டும் நடராஜரின் பிரபஞ்சநாட்டியவடிவங்களில் சிறிய சிலைகள். தங்கத்தில் மின்னுகின்றன. இந்த கோவிலை நடராஜர் கோவில் என சொல்லுவதில்லை. ”கடவுள் கோவில்” என அழைக்கிறார்கள்



சன்னதியில் நடராஜர் முன்னே ஸ்படிக லிங்கம் தினசரி காலயில் அபிஷகம் பூஜை... சன்னதிக்கு இருபுறமும் பெரிய அளவில் பிள்ளையார், முருகன் சன்னதிகள் தினசரி காலையில் 9 மணிக்கு வரும் பக்தர்களுக்காக பூஜை . சமஸ்கிருத மந்திரங்களை ஸ்பஷ்ட்டமாக சொல்லும் அமெரிக்க ஐரோப்பிய அர்ச்சகர்கள். தமிழக சிவன் கோவில் சம்பிராதயங்கள் கடைப்பிடிக்கபடுகின்றன,

.மூன்று மணி நேர காலத்திற்கு ஒருவர் என தொடர்ந்து இவர்கள் சிவபூஜை செய்துவருகிறார்கள். 1973ல் இந்த கடவுள் கோவிலில் பூஜைதுவங்கிய காலத்திலிருந்து விடாமல் தொடர்ந்து செய்யபட்டுவருகிறதாம்.

நடராஜரின் பாதங்களுக்கு அருகில் வைத்து ஆராதிக்கப்படும் 3 அடி உயர ஸ்படிக லிங்கம் தான் உலகிலேயே உயரமான ஸ்படிகலிங்கமாம். இதற்கான ஒரு தனிக்கோவிலைத்தான் இப்போது கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ”இறைவன் கோவில்” என பெயரிட்டிருக்கிறார்கள். இறைவன், அல்லது கடவுள் என்பது தான் நம்மை காக்கும், உயர்ந்த சக்தி. கோவில் என்பது அந்த சக்தியின் பல வடிவங்களின் இருப்பிடம் அந்த வடிவங்கள்தான் தெய்வங்கள் என்கிறார்கள்..
பசுஞ்சோலையாக இருக்கும் இந்த வளாகத்தின் ஒரு புறத்தில் இறைவனுக்கு கோவில் எழுந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பணி முடிந்தநிலையில் இருக்கும் இந்த கோவில் கணபதி ஸ்தபதியால் வடிவமைக்கபட்டது, இப்போது அவரது உதவியாளார்களால் தொடரப்படுகிறது.
முக்கிய பகுதிகள் பங்களூர் அருகே இந்தகோவிலுக்கென்றே ஏற்படுத்தபட்டிருக்கும் சிற்பசாலையில் உருவாக்க பட்டு இங்கே அனுப்படுகிறது. அவைகளை இணைத்து கோவிலை உருவாக்கும் பணியில் தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கோவிலின் தூண்கள், படிகட்டுக்கள் என ஒவ்வொரு பகுதியும் மிக நேர்த்தியுடனும், கலைநுணுக்கத்துடனும் வடிக்கபட்டுகொண்டிருக்கிறது


கோவில் கட்டுமானத்தில் கற்கள் மட்டுமே-. கான்கீரிட், சிமிண்ட் கிடையாது. சன்னதிக்கு தங்க விதானம், சுற்றுபுற நடைபாத தளகற்கள் கூட பங்களுரிலிருந்து இறக்குமதி செய்யபடும் கற்கள்தான்.
கோவில்கள் ஹாவாய்தீவிலிருப்பதால் பக்தர்களைத்தவிர நிறைய டூரிஸ்ட்கள் வருகிறார்கள். ஒரு சுற்றுலா சொகுசு கப்பல் இந்த கோவிலைக்காண்பிபதற்காகவே இந்த தீவில் நிற்கிறது.
கோவிலில் உணவோ, தங்க அனுமதியோ கிடையாது. அதனால் இந்த இறைவன் அருளால் அருகில் நிறைய ஹோட்டல்கள். ரிசார்ட்கள். இயற்கையாகவே வனப்பு மிகுந்த இந்த வனப் பகுதியை மேலும் அழகாக்கியிருக்கிறார்கள் செயற்கை அருவி, நீர்தேக்கம் எல்லாமிருக்கும் தோட்ட பகுதியை புனித காடு என அழைக்கிறார்கள்.

ஆங்காங்கே பெரிய அளவில் கருங்கலில் தக்ஷணாமூர்த்தி, ஆஞ்னேயர், ஆறுமுகன் சிலைகள். ஹவாய் தீவுகளுக்ககே உரிய அழகிய மலர்கள் அனைத்தும் இங்கே இருக்கிறது. சில, உலகில் இந்த தீவில் மட்டுமே மலரும் அபுர்வமான வகைகள். இந்த தோட்டதின் மலர்கள்தான் பூஜைக்கு பயன்படுத்தபடுகிறது.





ஒரு பகுதியில் காய்கறி கீரைகள் தோட்டம், இங்கு வசிக்கும் ஸ்வாமிகளுக்கு தேவையான உணவு பொருட்களை இங்கேயே விளைவித்து கொள்கிறார்கள். இமய மலைப்பகுதியில் வளரும் உருத்திராட்ச மரம் இங்கே வளர்வது ஒரு ஆச்சரியம். ரூத்திராட்ச மரத்தின் பழங்கள் நீல வண்ணத்திலிருக்கிறது
.
வெறும் வழிபாட்டு தலமாக மட்டும் இல்லாமல் ஆதினம் இந்து மதம், சைவசித்தாந்தம் குறித்து ஆராய்பவர்களுக்கு உதவியாக ஹிமாலயன் அகெடமி என்று ஒரு கல்வி நிறுவனத்தையும். ஹிந்துயிஸம் டுடே என்ற காலாண்டு பத்திரிகையும் நடத்துகிறது
ஆதின தலைவர் ,ஸ்வாமிகள் எல்லாம் ஆப்பிள் மெக்கிண்டாஷ் கம்ப்யூட்டர்கள், ஐபோன் சாட்லைட் போன் எல்லாம் பயன்படுத்தும் ஹை டெக் பயன்பாடு கொண்டு இருக்கிறார்கள்,
இவர்களின் இணைய தளத்தின் மூலம் தலைவரின் அருளுரைகளும் தினசரி ஒலிபரப்பபடுகிறது
உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அங்கு தங்கள் கோவில்களை நிறுவி வழிபடுவது இந்தியர்களின்-தமிழர்களின் மரபு. ஆனால் இந்தியர்கள் மிக குறைந்த அளவிலியே இருக்கும் ஹவாய் தீவில் ”அமெரிக்க இந்துக்கள்” அழகான கோவிலை நிறுவியிருப்பது ஆச்சரியம்




என்னவொரு அழகான இடம்...!
ReplyDeleteபல தகவல்களுக்கு நன்றி அம்மா....
தகவல்களைக் படிக்கப் படிக்க உள்ளம் சிலிக்கின்றது!
ReplyDeleteஅற்புதம்! ஆச்சரியம்!.. அழகினைக் கூற வார்த்தை இல்லை!
அருமை! பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!
ஆஹா..கண்கள் கொள்ளை போகுதே...என்மாய் இருக்கிறது இடம். படிக்க படிக்க...அங்கே போக வேண்டும் என்கிற ஆவல் அதிகரிக்கிறது. நன்றி அம்மா.
ReplyDeleteஹவாய் தீவில் இப்படியொரு இடமா. ஆச்சரியமாக இருக்கு.இப்போதான் கேள்விப்படுகிறேன். மிக அழகாக இருக்கு. தகவல்களை ஆச்சரியத்துடன் படித்தேன்.
ReplyDeleteஅழகிய திருக்கோயிலை அரிய விவரங்களுடன் - இன்றைய பதிவில் கண்டு மகிழ்ச்சி..
ReplyDeleteஹவாய் தீவு சிவன் கோவில் அழகு.
ReplyDeleteபடங்கள் அற்புதம்.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
அழகிய இடம் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காண கண்கோடி வேண்டும்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ஹை! ஹவாய் தீவிலும் சிவன் கோயிலா!!! வியப்பாக இருக்கின்றது! அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஹவாய் தீவிலும் எம்பெருமான் கோவில் தகவல் தெரிந்து கொண்டேன். விளக்கங்கள் மிக அருமை.
ReplyDeleteஹவாய்த் தீவில் இறைவனின் இடம் பற்றிய அரிய தகவல்கள். 108 கரண நடனச் சிலைகள் உலோகத்தில் இருப்பது இங்குதான் இருக்கிறது என்று எண்ணுகிறேன் வாழ்த்துக்கள்.
ReplyDelete"குவலயம் காக்கும் சிவனுக்கு குவாய் தீவில் ஆலயம்" பதிவினை படித்தபோது மனம் பக்தி பரவச மழையில் நனைந்தது.
ReplyDeleteஅம்மா! முனைந்து இது போன்ற பதிவுகளை தாங்கள் தந்தமைக்காக நினைந்து, நினைந்து போற்றுகிறோம் . இருளை போக்கும் இறை ஒளியை தந்தமைக்காக!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr