Thursday, February 23, 2012

ஓம் நமோ பகவதே வாசுதேவாய



ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ

அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

பெருமாள் ஆலயங்களில் பரிவார மூர்த்தியாக எழுந் தருளியிருக்கும் தன்வந்திரி பகவான் தனிக் கோவில் கொண்டு பிரதான மூர்த்தியாக விளங்கி மக்களின் உடற்பிணியை நீக்கி, உள்ளப் பிணியையும் போக்கி, உலக நன்மைக்காக வழிபாடு செய்யும் தனித்துவம் மிக்க ஆலயமாக அமைந்துள்ளது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம். 


இதற்காக இங்கு நடத்தப் படும் பல்வேறு யாக பூஜைகளில் திரளான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு நலம் பெற்றுச் செல்கின்றனர்.

இந்த ஆரோக்கிய பீடத்தின் முதன்மை தெய்வமாக எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீதன் வந்திரி பகவான். 
 
சற்று தொலைவிலிருந்து பார்த்தால் ஒப்பிலியப்பனாகவும் 
அருகில் சென்று பார்த்தால் குருவாயூரப்பனாகவும் 
வலப்பக்க மிருந்து பார்த்தால் ராதாகிருஷ்ணனாகவும் 
இடப்பக்கமிருந்து பார்த்தால் பாண்டுரங்க னாகவும் 
மொத்தமாகப் பார்த்தால் ஸ்ரீமகா விஷ்ணுவாகவும் காட்சி தரும் 
தன்வந்திரி பகவான், பக்தர்கள் எழுதி வழங்கிய ஸ்ரீதன்வந்திரி பகவானே அருளிச் செய்த மூல மந்திரங்கள் 50 கோடி மந்திரங்களை யந்திரமாக்கி ஸ்தாபிக்கப்பட்ட மேடையில் அற்புதமாக எழுந்தருளியுள்ளார். 


சகல நோய்களையும் தீர்க்கும் மருத்துவராக கையில் அமிர்த கலசத்துடன் அருள்பாலிக்கும் இவரைக் கண்டாலே நோய்கள் பறந்தோடிவிடும்.

சஞ்சலம் தீர்க்கும் சஞ்சீவி ஆஞ்சனேயர், 
முக்தி தரும் முனீஸ்வரர், மேன்மை தரும் மேதா தட்சிணாமூர்த்தி, 
ஒரே கல்லில் அமைக்கப்பட்ட பிணி தீர்க்கும் தன்வந்திரி மற்றும் வினை தீர்க்கும் விநாயகர், 
ஞானம் தரும் லட்சுமி ஹயக்ரீவர், 
மங்கள வாழ்வு தரும் மகிஷாசுரமர்த்தினி, 
வாக்கு மேன்மை தரும் வாணி சரஸ்வதி, செல்வம் தரும் சொர்ண ஆகர்ஷண பைரவர், 
அன்னத் துடன் சொர்ணம் அளிக்கும் சுவர்ண அன்னபூரணி, 
காலமெல்லாம் காக்கும் காயத்ரிதேவி, 
நலம் தரும் நவகன்னிகைகள், 
களவு போனவற்றை மீட்டுத் தரும் கார்த்தவீர்யாஜுனர், 
சுகம் பல தரும் சுதர்சன ஆழ்வார், 
ஒரே கல்லில் வடிக்கப்பட்ட சங்கடம் போக்கும் ராகு- கேது, 
கஷ்டங்கள் களையும் அஷ்டநாக கருடன், 
பித்ரு தோஷம் நீக்கும் ஸ்ரீபாதம், 
ரட்சித்து அருளும் ஸ்ரீராகவேந்திரர், 
தங்கமயமான தங்கபாபா, 
சூட்சுமமான சூரியபாபா, 
அல்லல் போக்கும் அத்ரிபாதம், 
தூய்மை வழங்கும் துளசி மாடம், 
கவலைகள் போக்கும் காலச் சக்கரம் மற்றும் நட்சத்திர விருட்சங்கள், ரோகம் தீர்த்து யோகம் அளிக்கும் யாகசாலை, 
சொர்க்கம் தரும் சுவாஹா பீடம், 
பஞ்சபூத தோஷம் நீக்கும் பஞ்சதீபம், 
ஆறு ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் யாக குண்டம், 
மூலிகை வனம் 
என ஆலய வளாகத்தில் கோவில் கொண்டுள்ள இறை வடிவங்களும் யந்திரங்களும் இன்னபிற வழிபாட்டு அம்சங்களும் ஏராளம்.


மகிஷாசுர மர்த்தினி
 
 கருணைக்கடல் வள்ளலார் மற்றும் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் திருவுருவங்களும், புகழ் பெற்ற 488 சித்தர்கள் லிங்க வடிவிலும் அருள்பாலிக்கின்றனர்.

இத்தகைய சிறப்போடு விளங்கும் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் மற்றொரு சிறப்பு- இந்த சந்நிதிகளில் அர்ச்சனை, ஆரத்தி, தேங்காய் உடைத்தல், கற்பூரம் ஏற்றல், பூமாலை சாற்றுதல் போன்றவை பக்தர்கள் சார்பாகச் செய்யப்படுவதில்லை. 

பக்தர்கள் எண்ணெய் அபிஷேகம் செய்யும் வகையிலும், இறை சந்நிதியில் அமர்ந்து அமைதியாகத் தியானம் செய்யும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

உண்டியல் வசூல் கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் இருந்து சுமார் 125 kmதொலைவில் பெங்களுரு / கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தன்வந்திரி பெருமாள் கோயில் திருத்தலம் உள்ளது.

தன்வந்திரி பெருமாள் கோயில் செல்லும் வழி வாலாஜா பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் 2 KM தொலைவில்  உள்ளது .





31 comments:

  1. Last but one படத்தில், அகல்விளக்குகளால் காட்டியுள்ள கோலம் நல்ல அழகாக கண்ணைக்கவர்வதாக உள்ளது, மிகச்சிறப்பு.

    ReplyDelete
  2. ”ஓம் நமோ பகவதே வாசுதேவாயா” என்ற தலைப்பில் “தன்வந்தரி” பற்றி வெகு அழகான பதிவு தந்துள்ளீர்கள்.

    நான்கு வேதங்களுக்கு நிகராக உள்ள
    “ஆயுர்வேதம்” என்ற மருத்துவத்தில்
    இந்த தன்வந்தரிக்கு மிகச்சிறப்பானதோர் இடமளித்துள்ளார்கள்.

    ReplyDelete
  3. உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்யம் தரும் அமிர்த கலசமாக உள்ளது இந்தத் தங்களின் பதிவு.

    ReplyDelete
  4. சஞ்சலம் தீர்க்கும் சஞ்சீவி அஞ்ஜநேயர் இல் ஆரம்பித்து, மூலிகை வனம் வரை, வரிசையாக அனைத்து தெய்வங்களையும் அவற்றின் பெருமைகளுடன் [நடுவில் நீலக்கலரில் பட்டியலிட்டுள்ளதைப் பார்த்து] அசந்து போனேன்.

    படிக்கும் போதே மனதுக்கு மகிழ்ச்சியும், பரவஸமும் ஏற்படுத்துவதாக உள்ளன.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
  5. தன்வந்திரி பகவானைப்பற்றிய படங்களும் செய்திகளும் அருமை..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  6. அன்பின் இராஜராஜேஸ்வரி - தன்வந்திரி பகவான் பற்றிய பதிவு அருமை - அவரை ஒவ்வொரு திசையில் இருந்தும் பார்க்கும் போது ஒவ்வொரு விதமாகக் காட்சி அளிப்பது பற்றி குறிப்பிட்டமை நன்று. அர்ச்சனை - ஆர்த்தி - தேங்காய் உடைத்தல் - சூடம் ஏற்றுதல் - பூமாலை சாத்துதல் - இவை எல்லாம் கிடையாதென்பதும் தியானம் செய்யலாம் என்பதும் புதிய தகவல்கள். படங்கள் அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  7. புது தகவல்கள் பல்வற்றை தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. ”களவு போனவற்றை மீட்டுத்தரும் கார்த்தவீர்யாஜுனர்” பற்றிய ஒரு ஸ்லோகமும், அதைப்பற்றிய ஒரு சிறுகதையும் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவர்கள் திருவாயால் சொல்லக் கேட்டுள்ளேன். அது ஞாபகம் வந்தது.

    ”கார்த்தவீர்யார்ஜுனோ நாம
    ராஜா பாஹூ ஸஹஸ்ரவாத்,
    யஸ்யஸ்மரண மாத்ரேன
    க்ருதம் நஷ்டம் ச லப்யதே”

    என்று ஞாபகம். சுமார் 30 வருஷக்களுக்கும் முன்பு கேட்டது.

    அந்தக்காலத்தில் கால்நடைகளின் கழுத்துக்களில் கூட இந்த ஸ்லோகத்தை எழுதி தொங்க விட்டிருப்பார்களாம்.

    மேய்ச்சலுக்குப்போகும் அவை எங்கும் தொலையாமல், மேய்ந்து விட்டு பத்திரமாக வீடு திரும்பிவிடுமாம்.

    ReplyDelete
  9. பிணி போக்கும் தன்வந்திரி மகான் பற்றிய பதிவு அருமை. அம்மனின் படம் வெகு அருமை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. ஸ்ரீ தன்வந்திரி பகவானின் மூல மந்திரத்தினை நாங்களும் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யும் போது எழுதி அனுப்பினோம். தாமிரத்தால் ஆன ஸ்ரீ தன்வந்திரி பகவானை எங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

    ReplyDelete
  11. என் தளத்திற்கு வந்தமைக்கும் படித்தமைக்கும் நன்றி...
    உங்கள் பதிவு அருமை..தொடரட்டும் உங்கள் பணி..

    ReplyDelete
  12. ஸ்ரீதன்வந்திரி பகவான் பற்றிய அறிய தகவல்கள்,அழகிய படங்கள்.அருமையான பதிவு.

    ReplyDelete
  13. சந்திர வம்சம் said...
    ஸ்ரீ தன்வந்திரி பகவானின் மூல மந்திரத்தினை நாங்களும் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யும் போது எழுதி அனுப்பினோம். தாமிரத்தால் ஆன ஸ்ரீ தன்வந்திரி பகவானை எங்களுக்கு அனுப்பிவைத்தனர்./

    நாங்கள் இல்லத்தில் அனைவரும் எழுதியதோடு , பாகவதம், நாராயணீயம், திருப்புகழ் குழுவினர் அனைவருக்கும் அச்சிட்ட படிவம் வழங்கி எழுதி பெரிய பார்சலாக அனுப்பினோம்...

    யாக யக்ஞங்களிலும் கலந்து கொண்டோம்.. மந்திர உச்சாடனம் செய்தோம்..

    ReplyDelete
  14. அமிர்தம் கொஞ்சம் கொடுப்பாரா? தன்வந்திரி பகவானை தரிசித்தேன்.

    ReplyDelete
  15. தன்வந்தரி பகவான் குறித்த தனித்துவப் பதிவு.

    ReplyDelete
  16. படங்களும், பதிவும் மிக அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. எப்போதும் ஏதோ ஒரு புதிய செய்தி அறிந்துகொண்டே போகிறேன் !

    ReplyDelete
  18. வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    அன்புடன் vgk 24.02.2012

    ReplyDelete
  19. Aha very nice post Rajeswari.
    From this PC itself, i preyed the God for both of us Good health.
    Leaving son and daughter outside, sitting we both are alone.
    God has to bless us for our health.
    Thanks for the post dear.
    viji

    ReplyDelete
  20. சென்னையில் உள்ள இந்த தன்வந்திரி பகவனை தரிசனம் செய்ய வேண்டும் என்பது என நீண்ட நாள் ஆவல்.அந்த ஆவல் நிறைவேறி விட்டது உங்கள் பதிவின் மூலம்.

    நன்றி.

    ReplyDelete
  21. தன்வந்திரி பற்றி அருமையான பதிவு.
    தினமும் தன்வந்திரி ஸ்லோகம் சொல்லி வருகிறேன்.
    நன்றி அம்மா.

    ReplyDelete
  22. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  23. ஓம் நமோ வாசுதேவாய நமஹ:

    தன்வந்திரி பகவானைக்குறித்த படங்களும் மிக அருமையான ஸ்லோகங்களும் கருத்துகளும் அற்புதம்பா...

    சஞ்சலங்கள் தீர்க்கும் ஆஞ்சநேயர் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர்ந்த யோகாஞ்சனேயர் நினைவுக்கு வருகிறார்.... லக்‌ஷ்மணன் மயக்கமடைந்தபோது சஞ்சீவி மலையை பெயர்த்துக்கொண்டு வந்த ஆஞ்சநேயர்....

    முனீஸ்வரர், குருஸ்தானத்துக்குரிய தட்சிணாமூர்த்தி, வினை தீர்க்கும் வினாயகர், லக்‌ஷ்மி ஹயக்ரீவர் கல்விக்கு வணங்குவது இவரைத்தான்....

    குங்குமம் நிலைக்க மஹிசாஷுரமர்த்தினி, ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆகர்ஷ்ண பைரவர் இவரை வழிபட்டு வந்தால் வீட்டில் ஐஸ்வர்யங்கள் பெருகுமாம்....

    அன்னப்பூரணி கேள்விப்பட்டதுண்டு இப்ப தான் பார்க்கிறேன் சுவர்ண அன்னப்பூரணி கூட இருப்பதை...

    காக்கும் கவசமாக காயத்ரி தேவி. நலம் தரும் நவகன்னிகைகளும் இப்போது தான் அறிகிறேன். ஏழு கன்னியர் சிலைகளை சில கோயில்களில் கண்டுதுண்டு... களவு போனதை திரும்பக்கிடைக்க செய்யும் கார்த்தவீர்யாஜுனர், சக்கரத்தாழ்வார் தானேப்பா சுதர்சன ஆழ்வார்? சங்கடம் போக்கும் ராகு கேது அஷ்ட நாக கருடன்.. ஹப்பப்பா பித்ரு தோஷம் நிவர்த்தி செய்யும் ஸ்ரீபாதம் இதெல்லாம் இப்ப தான்பா கேள்வி படுகிறேன்....

    அனைத்தும் நான் அறியாத பொக்கிஷப்பகிர்வுப்பா...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ராஜேஸ்வரி சிரத்தை எடுத்து ஒவ்வொன்றாய் இங்கே அழகாய் பகிர்ந்தமைக்கு....

    ReplyDelete
  24. @@ மஞ்சுபாஷிணி said.../

    களவு போனதை திரும்பக்கிடைக்க செய்யும் கார்த்தவீர்யாஜுனர், சக்கரத்தாழ்வார் தானேப்பா சுதர்சன ஆழ்வார்?

    களவு போனதை திரும்பக்கிடைக்க செய்யும் கார்த்தவீர்யாஜுனர், வேறு ..
    பதிவாகவே தயாரித்திருக்கிறேன் ..

    சுதர்சன ஆழ்வார் என்னும் சக்கரத்தாழ்வார் வேறு ...

    கருத்துரைக்கு இனிய நன்றிகள் ..



    ReplyDelete
  25. கார்த்தவீரயாஜுனர் பற்றி இப்போது தான்பா கேள்விப்பட்டேன் தங்கள் பதிவினில்.... இது வேற... நான் ஃபுல்ஸ்டாப் வைக்காம அப்டியே போட்டுட்டேன்பா...

    சுதர்சன ஆழ்வார் சக்கரத்தாழ்வார் ரெண்டு பேருமே ஒன்னு தானேப்பா??

    ஏன்னா அம்மா ஒருமுறை ஊருக்கு போனப்ப எனக்காக 48 நாட்கள் சக்கரத்தாழ்வார் என்ற சுதர்சன சக்கரத்தாழ்வாரை போய் பிரதட்சணம் செய்துட்டு வந்ததா சொன்னாங்க... 27 நெய் விளக்கு ஏற்றி வணங்குவதும் நலமாம்.... அதான்பா கேட்டேன்...

    ப்ளீஸ் கார்த்தவீரயாஜுனர் பதிவு லிங்க் தாங்களேன்....இன்னும் அறிய வேண்டும்...

    ReplyDelete
  26. மஞ்சுபாஷிணி said...
    கார்த்தவீரயாஜுனர் பற்றி இப்போது தான்பா கேள்விப்பட்டேன் தங்கள் பதிவினில்.... இது வேற... நான் ஃபுல்ஸ்டாப் வைக்காம அப்டியே போட்டுட்டேன்பா...

    சுதர்சன ஆழ்வார் சக்கரத்தாழ்வார் ரெண்டு பேருமே ஒன்னு தானேப்பா??

    இருவ்ரும் ஒருவ்ரே ..

    திருவரங்கம் , திருமோகூர் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் அருட்கடாட்சம் நிரம்பியவை ..

    ReplyDelete
  27. மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா இராஜேஸ்வரி...

    ReplyDelete