Sunday, December 29, 2013

பயணங்கள் முடிவதில்லை..........






80/20 விதி

கோவை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் சோதனை நடந்துகொண்டிருந்தது...

அப்போதுதான் பியூட்டிபார்லரிலிருந்து அலங்காரம் செய்துவந்த ஃபுல் மேக் அப்பில்  பெண்கள் தகதகக்கும் உடையுடன் அனைவர் கருத்தையும் கவரும் விதமாக கூட்டமாக டிக்கெட் பரிசோதனை பெண் அதிகாரியிடம் மாட்டி கண்கலங்க நின்றுகொண்டிருந்தனர்..

திருமண விழாவில் கலந்துகொண்டு அப்படியே வழியனுப்பவந்த கொண்டாட்டம் போலும் ..!

அதிகாரியோ அத்தனை பேருக்கும் அபராதம் தீட்டிக்கொண்டிருந்தார் .. அவர்களிடம் அத்தனை பணம் இல்லையோ என்னவோ யாரையோ செல்போனில் பதட்டத்துடன் தொடர்புகொண்டு பணம் கேட்டுக்கொண்டிருந்தனர்..

தீபாவளி கூட்டத்தில் 80 சதவிதத்தினர் பிளாட்பார்ம் 
நுழைவுச்சீட்டு வாங்குவதே இல்லையாம் ..
80/20 விதி இங்கும் பொருந்திப்போவது ஆச்சரியம் தான் ...
ஐந்து ரூபாய் டிக்கெட் வாங்காத தவறுக்கு 
ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது..

பிளாட்பாரம் டிக்கெட் வாங்குமிடத்திலும் ஒரே கூட்டம் ..

டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தால் ரயிலைத் தவறவிடும் அபாயமும் இருப்பதை மறுப்பதற்கில்லை..எனது மகன் பிளாட்பாம் டிக்கெட் எடுக்கச்சென்று ரயில் புறப்பட  சில நிமிடங்கள் இருக்கும் நேரத்திலேயே திரும்ப வரமுடிந்தது..

அத்தனை படிகளையும் ஏறி லக்கேஜ்களை ரயிலில் ஏற்ற மிகவும் சிரமப்பட் நேர்ந்தது .. உதவ முடியாததில் மகனுக்கும் வருத்தம் ..

உடன் வந்தும் டிக்கெட் எடுக்கச்சென்று தாமதமானதால் அவதிகள்..!



போக்குவரத்து நெரிசல் , சரியான நேரத்தை கடைப்பிடிக்காமல் கடைசி நேர சாகசத்தை , அபாயகரமான துணிச்சலுடன் செய்யநேரிடுகிறது..

ரயில் பணங்கள் மிகவும் தொல்லை பயணங்களாக மாறிவருகிறது .. 

ரயில் பயணங்கள் என்றாலே கொண்டாட்டமான மனநிலை 
மாறி வெறுக்கவைக்கவைக்கும் காட்சிகளே தென்படுகின்றன...

திருநங்கைகள் சிலர் கைதட்டியும் , மிரட்டியும் பணம் வாங்கி ஏதோ பஸ்டிக்கெட்டுகள் மாதிரி ஐம்பது  ரூபாய்  ,பத்து ரூபாய் நோட்டுகளை கைவிரல் இடுக்குகளில் நீளமாக மடித்து வைத்து காண்போர்களை அச்சப்பட வைத்தனர்..

ஒருவர் பாக்கெட்டிலிருந்து சில்லறைகளையும் நோட்டுகளையும் எடுத்து உள்ளங்கையில் கொட்டி  அவருக்குத் தர எண்ணிக்கொண்டிருந்தபோது ,
அந்த திருநங்கை ஏமாற்றுச்சிரிப்புடன் அத்தனை தொகையையும்
வழித்து எடுத்துக்கொண்டார் ..! தன் நிரம்பி வழியும் பெரிய கைப்பைக்குள் அழுத்தி பணத்தை அடைத்துக்கொண்டார்..

மாதம் பூராவும் கஷ்டப்பட்டுச்சமபாதித்தாலும் இத்தனை பணத்தை கண்ணால் கூட முதல் தேதியில் கூட பார்க்கமுடிந்ததில்லையே என ஏங்கினார் ஒருவர்..!

ஒரு குழந்தையிடம் முதலில் வந்த பொம்மைக்காரரிடம் வாங்கிய பொம்மையைப் பார்த்த மற்றொரு பொம்மைக்காரர் அது சீனாவில் தயாரான பொம்மை ..இதை வாங்கினால் நம்  பிரதமர் மன்மோகன் சிங்குக்கு - ஆட்சி நடத்த பணம் எப்படி கிடைக்கும் ?? எப்படி அவர் ஆட்சி நடத்தமுடியும் ..??! நீங்கள் இந்த பொம்மைதான் வாங்கவேண்டும் ..இந்திய தயாரிப்பு ..என்று ஒரு பொம்மை கொடுத்து ஆட்சியின் மாட்சிமையை காட்சியாக்கி பாடம் நடத்திவிட்டுச்சென்றார்..

கடலைப்பொட்டலம் ஒன்று உருண்டு வந்துகொண்டிருந்தது ..
பலபேர் எடுக்க போட்டியிட்டு ஒருவர் கையில் அது கிடைக்க அது யாரோ கடலை கடலை சாப்பிட்ட பின் காலியானதை அதேமாதிரி மடித்துப்போட்ட காலியான காகிதம் ...!! 

நுழைவாயிலிலும் , லிப்டுக்ளிலும் CCTV  காமிரா கண்காணிப்பு , 
இரண்டு காவலாளிகள் , 24 மணிநேர பாதுகாப்பு , நூற்றுகணக்கான இல்லங்கள் கொண்ட அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட் ஒன்றில் , 
காய்கறி ,கீரை விற்பவர் , பேப்பர் போடுவர் என்று யார் வந்தாலும் சோதனை , அவர்கள் வெளியே சென்றாலும் பொருட்களை பார்வையிட்டுத்தான் அனுப்புகிறார்கள்.. 

ஏதேனும் உணவுப்பொருள்களோ உடையோ அவர்களிடமிருந்தாலும் வீட்டு எண் எழுதி நாங்கள் தான் கொடுத்திருக்கிறோம் என்று கையொப்பமிட்டிருந்தால்தான்  அனுமதிக்கிறார்கள்..

இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் அனைவரும் தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும் மாலை வேளையில்  வந்து ஒரு பெண்ணை தாக்கி இருக்கிறார்கள்..
அந்தப்பெண்ணின் முகத்தில் கைவைத்து அழுத்தும் போது அந்தப்பெண்மணி அவன் கையை பலமாக கடித்துவிட்டு அலறி இருக்கிறார் ..
அவன் பய்ந்து லிப்டில் ஏறி தப்பித்துவிட்டானாம் .. 

பெண்மணி புகார் செய்தபின் காமிரா மூலம் நேரத்தை வைத்து ஆளைக்கண்டுபிடித்துவிட்டார்களாம் .. 
அந்த ஆள் அவர்கள் வீட்டில் டிரைவராக இருந்தவராம் ..

அந்தப்பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேறி வருகிறார் ..!
அவரின் மகள் ஒரு மருத்துவர் ..!
அவர்கள் இல்லத்தில் வளர்ந்த அருமையான நாய் ஒன்றை சமீபத்தில் இழந்திருக்கிறார்கள்.. மர்மம் இன்னும் விலகவில்லை..!

அபார்ட்மெண்ட் மீட்டிங் போட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படியும் பாதுகாப்புகள் பலப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தாலும் ,   
அது நான் சென்ற இல்லத்திற்கு அடுத்தவீடு என்னும் போது திகில் பரவுவதை தவிர்க்கமுடியவில்லை..!

ஒரு முறை கோயமுத்தூர் என்கிற பெயர்ப்பலகையைப் பார்த்ததும் வருடக்கணக்கில் கோவையைப் பிரிந்திருந்த மாதிரி சட் என  பெட்டியுடன் இறங்கி பார்த்தால் கோயமுத்தூர் வடக்கு என்று இருந்தது..உடனே இல்லத்திற்கு கைபேசியின் வழியே தொடர்புகொண்டு வட கோவையில் இறங்கிவிட்டதாக தகவல் தெரிவித்தேன் ...

அப்போதுதான் ரயில் நிலயத்திற்கு என்னை வரவேற்க கிளம்பிக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக வாகனத்தை வட கோவை நோக்கி திருப்பிவந்தார்கள்..

ரயில் கிளம்பியபிறகு பார்த்தால் விளக்கு வெளிச்சமே இல்லை ..அமாவாசை இருட்டு..ஆளரவமே இல்லை.. சுற்றிலும் நாய்களின் குரைப்பொலி.அவற்றின் கண்கள் ம்ட்டுமே மினுங்கி பயத்தை வரவழைத்தன ..
காலபைரவரைப்பற்றி இன்றுதானே பதிவு எழுதினோம்  .. இப்போது இத்தனை பைரவர்கள் தரிசனமா .. என்று நினைத்து சட் என கையில் இருந்த சிறிய டார்ச்விளக்கை   உயிர்ப்பித்தேன்.. குரைப்பொலி அடங்கியது .. வாலாட்ட ஆரம்பித்தன்..!

அந்த டார்ச் சேலத்தில் ஒரு கண்பார்வை   குறைந்த பொம்மை விற்கும் பெண்மணியிடம் அவர்கள் குழந்தைகளின் படிப்புச்செலவுக்கு வைத்துக்கொள்ளும் படி கொஞ்சம் பணம்  கொடுத்தேன் .. 

அவர் ஏதாவது பொம்மை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார் .. 

நம் வீட்டில் விலை உயர்ந்த பொம்மைகள் ஏராளமாக வைத்து விளையாடும் வாரிசுகள் இந்த பொம்மையை கொடுத்தால் ஏளனமாக நினைப்பார்களே  என நினைத்து மறுத்துவிட்டேன் .. 

அவர் இறங்கும் சமயம் வைத்துக்கொள்ளுங்கள் அம்மா . இன்று என் வீட்டில் கல்வி விளக்கு ஏற்றியதற்கு  என்று கையில் கொடுத்துவிட்டார்..

அந்த சின்னஞ்சிறு பொருள் இப்போது எனக்கு பேருதவி செய்தது .. 
அதே சமயம் காரின் விளக்கொளியில் குடும்பத்தினர் வருகை பார்த்ததும் நிம்மதி வந்தது..

நடு இரவில் இந்த மாதிரி எல்லாம் ஸ்டேஷனில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்கள்.. 

அது கொஞ்சம் அதிகமான உபதேசமாகப்போய் அடுத்தமுறை கோவை ரயில் நிலையத்தில் இறங்காமல்  ரயில் கிளம்பியதும்தான் கோவை ஜங்ஷன் தாண்டியது தெரியவந்தது..நடை மேடை பராமரிப்புப் பணியால் இரு தடுப்புகளுக்கு நடுவில் ரயில் நின்றதால் ரயில் நிலையம் போலவே இல்லாததால் இறங்க்வில்லை..1 
டிக்கெட் பரிசோதகரிடம் சொல்லலாம் என எழுந்தபோது அருகில் இருந்த் குடும்பத்தினர் அடுத்த ஸ்டேஷன் போத்தனூரில் இறங்கிக்கொள்ளுங்கள்.. 
காட்டுப்பகுதியாக இருப்பதால் பிளாட்பார்ம் இல்லாமல் ரயிலில் இருந்து இறங்க முடியாது என்றும் அறிவுறுத்தினார்கள்..!

அவர்கள் கோவாவுக்கு கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டத்திற்கு கலந்து கொள்ளச்செல்வதாகவும் , அங்கே சர்ச்சில் பாதிரியாரின் உடலை வருடம் ஒருமுறையே தரிசிக்க கிடைக்கும் என்றும் தெரிவித்தார்கள்..!     
 கோவை ரயில் நிலையம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டுமானத்தில் இருந்தபோது  போத்தனூர் ரயில் நிலையம் வந்துதான் பயணம் செய்யவேண்டி இருந்தது..
அப்போது உறவினர் மகனும் , நண்பரின் மகனும் படிக்க வெளிநாடு செல்ல போத்தனூர் வந்துதான் வழியனுப்பி வைத்தோம்.. 
சரியான  நடைமேடை வசதியோ அடிப்படை வசதிகளோ இல்லாமல் சிரமப்பட்டு ரயில் ஏறி பயணம் செய்து சென்னை சென்று விமானப்பயணம் செய்து சென்ற அவர்கள் இருவரும் அந்த நாட்டின் கலாச்சாரம் சரியில்லை என்ற காரணத்தோடு இந்தியா திரும்பிவிட்டனர்..!

கோவை  இல்லத்திற்கு  கைபேசியில் தொடர்புகொண்டு 
போத்தனூருக்கு வரச்சொல்லி தகவல் தெரிவித்தோம் ...

சில ஆண்டுகளில் போத்தனூர் ரயில் நிலையம் சிறப்பான அடிப்படை வசதிகளுடன் அருமையாக மாறி புது பொலிவுடன் காட்சியளித்தது மகிழ்வளித்தது..!

சென்ற வாரம் பெங்களூரில் மற்ற மாநில  பதிவுஎண் கொண்ட வாகனங்களிடம் அபராதம் விதித்தார்கள்..டாக்டர்களின் வாகனங்களுக்கு விதிவிலக்கு  ..பிடித்தவுடன் விட்டுவிட்டார்கள்..!

இந்த வருடத்தில் நிறைய அலைச்சல் , மன உளைச்சல் மருத்துவமனையில் காத்திருப்பு ,சிகிச்சை என கடந்துவிட்டது....வரும் புத்தாண்டாவது மலர்ச்சியாக மலர பிரார்த்திக்கிறோம்..!


  

38 comments:

  1. அருமையான படங்களுடன் சுவாரஸ்யமான பகிர்வு அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. முதல் படத்திலிருக்கும் அந்த ரயிலிலிருந்து வரும் புகையை யாராவது நிறுத்துங்களேன்...ஒரே புகை மயம்!!!

    ரயில் பயண அனுபவங்களை மிக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன்.

    ReplyDelete
  3. ”பயணங்கள் முடிவதில்லை ...... ”

    மாறுபட்ட வித்யாசமான அழகிய கட்டுரையாக தங்களின் அனுபவங்களைச்சொல்லியுள்ளது படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  4. அனிமேஷன் படங்கள் எல்லாமே வழக்கம்போல அழகோ அழகு.

    முதல் 2 வரிசை 3 படங்கள் மட்டும் ஏனோ இதுவரை திறக்காமல் காட்சியளிக்காமல் உள்ளன. 3வது வரிசை [4வது படம்] புகை கக்கிடும் நீராவி எஞ்சினுடன் கூடிய ரயில் வண்டிப்படம் சூப்பராக உள்ளது.

    ’உடன் வந்தும்............... அவதிகள்’ என்ற வரிகளுக்குக்கீழேயுள்ள 2+1 = 3 படங்களும்கூட இதுவரை திறக்கப்படவே இல்லை.

    >>>>>

    ReplyDelete
  5. தங்களின் புனிதப்பயணங்களும் பதிவுகளும் என்றுமே முடியப்போவது இல்லைதான்.

    இருப்பினும் எங்கு சென்றாலும் ஜாக்கிரதையாக தகுந்த ஆண் துணையுடன் செல்லவும்.

    தெய்வம் எப்போதும் தங்களுடன் துணை வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    எனினும் தனியாக எங்கும் பயணம் மேற்கொள்ளாதீர்கள் என்பது என் அன்பான வேண்டுகோள்.

    >>>>>

    ReplyDelete
  6. ரயில் பயணங்கள் மிகவும் தொல்லைதரும் பயணங்களாக மாறி வருகின்றன என்பது உண்மை தான்.

    எங்கும் எதிலும் கூட்டம், ஒழுங்கிண்மை, அவசரம், அவசியம், பொறுமையின்மை, தாமதங்கள், பாதுகாப்பு இன்மை, திருநங்கைகள் தொல்லை என எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்கத்தான் வேண்டியுள்ளது.

    நேற்று ஓர் ரயிலில் நிகழ்ந்த தீ விபத்து பற்றிய செய்திகள் மனதை மேலும் கலங்கடிக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  7. அபார்ட்மெண்ட் சம்பவம் பற்றிக்கூறியுள்ளீர்கள்.

    கூட்டுக்குடும்பங்களின் தொகுப்பாக வாழ்ந்தும், காவல் ஏற்பாடுகள் பல செய்திருந்தும், சில இடங்களில் இதுபோல அவ்வப்போது நிகழ்வதும், அச்சம் தரக்கூடியதாகவும், வருத்தமாகவும் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  8. கோவை [வடக்கு] ஸ்டேஷனில் தவறுதலாக இறங்கியது. இருட்டு வேளை. நாய்களின் குரைப்பொலி, அவைகளின் பார்வை .... என திகில் ஸ்டோரியொன்றை சொல்லி, இன்று தான் காலபைரவரைப்பற்றி எழுதியிருந்தோம், இவ்வளவு பைரவர்களின் தரிஸனமா ! என நகைச்சுவை கலந்து, சொல்லியுள்ளது ரஸிக்க வைத்தது.

    >>>>>

    ReplyDelete
  9. கண்பார்வையற்ற ஏழை பொம்மை வியாபாரி ஒருத்தியின் குழந்தைக்கு படிப்புச்செலவுக்குப் பணம் அளித்தது பாராட்டத்தக்கது.

    வேண்டாவிட்டாலும் அவள் வலியுறுத்திக் கொடுத்த அன்பின் அடையாளமான பொம்மையினை பெற்றுக்கொண்டது நல்லதே.

    >>>>>

    ReplyDelete
  10. அடுத்தமுறை மிகவும் கவனமாக இருந்தும் கோவையில் இறங்க முடியாமல்போய் போத்தனூரில் இறங்கியதும் நல்ல நகைச்சுவைதான்.

    கோவாவில் அந்த சர்ச்சில் உள்ள பாதிரியாரின் உடலை நான் 1975 கிறிஸ்துமஸ் சமயத்தில் நேரில் போய் பார்த்து வரும் சந்தர்ப்பம் எனக்கு அகஸ்மாத்தாக அமைந்தது. இன்றும் அது எனக்கு பசுமையான நினைவலைகளில் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..

      கருத்துரைகளுக்கு நிறைந்த நன்றிகள்..

      ஆனால் பதிவு தேற்றத்தான் வடகோவையில் இறங்கிய சாகசம் - போத்தனூர் வரை பயணம் .. சோழியன் குடுமி சும்மாவா ஆடும்??என்றெல்லாம் இல்லத்தில் கலாய்க்கிறார்கள்..!

      கோவா பயணமும் குடும்பத்தோடு சென்ற மறக்கமுடியாத இனிய பயணங்கள் தான்..!

      Delete
    2. இராஜராஜேஸ்வரி has left a new comment on the post "பயணங்கள் முடிவதில்லை..........":

      //ஆனால் பதிவு தேற்றத்தான் வடகோவையில் இறங்கிய சாகசம் - போத்தனூர் வரை பயணம் .. சோழியன் குடுமி சும்மாவா ஆடும்??என்றெல்லாம் இல்லத்தில் கலாய்க்கிறார்கள்..!//

      ;))))) பதிவர்களின் இல்லத்தார்கள் எல்லோருமே ஒரே கட்சி தான் போலிருக்கிறது. தராசில் நிறுத்தால் சம எடையுடன் தான் இருப்பார்கள் போலும் தோன்றுகிறது. இருப்பினும் இவையெல்லாம் பதிவர்களாகிய நமக்கு ஓர் சவால் தான்.

      2-3 நாட்கள் முன்பு திருச்சியில் உள்ள ஓர் மிகச்சிறந்த கண் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். நீண்ட நேரக் காத்திருப்புக்குப்பின், பல்வேறு சோதனைகளுக்குப்பின், அந்தப் பிரபல கண்/பெண் டாக்டரை சந்திக்க முடிந்தது. என் கூடவே என் மனைவியும் ஓர் மகனும்.

      கடவுள் புண்ணியத்தில், பொதுவாக இதுநாள் வரை என் கண் பார்வையில் எந்த ஒரு கோளாறுகளும் இருந்ததே இல்லை. மிகவும் பொடிப்பொடியான எழுத்துக்களைக்கூட கண்ணாடி ஏதும் அணியாமல் என்னால் மிகத்தெளிவாகப் படிக்க முடியும் என்பதையும் இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

      நான் பணியாற்றிய தொழிலக மருத்துவமனையில் எனக்கு இன்றும் இலவச சிகிச்சைகள் உண்டுதான். ஸ்பெஷல் வார்டும் உண்டுதான். காலணா செலவும் இருக்காது தான். இருப்பினும் கண் சோதனைகளுக்கு மட்டும் நான் அங்கு செல்வது கிடையாது.

      கடந்த 10-15 நாட்களாக மட்டும், எனக்கு இடது கண் பார்வை மங்கலாகத் தெரிகிறது. அந்தக்கண்ணுக்கு மட்டும் கண் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்லியுள்ளார்கள், அந்த பிரபல Private மருத்துவமனை டாக்டர். நானும் செய்துகொள்ள இருக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த, இருப்பதற்குள் மிகவும் Costly யான ஓர் ஆபரேஷன் செய்துகொள்ளச்சொல்லி பரிந்துரை செய்துள்ளார்கள். நானும் அதையே தான் செய்து கொள்வதாக இருக்கிறேன்.

      அதற்கு முன்பு டாக்டர் என்னை பேட்டி கண்டு நிறைய விஷயங்கள் பேசினார்கள். சுமார் அரைமணி நேரம் என்னுடன் கலகலப்பாகப் பேசினார்கள். ஏற்கனவே நன்கு பழக்கமுள்ள மிகவும் தெரிந்த கைராசியான நல்ல டாக்டர் தான். என் குடும்பத்தாருக்கும் இது தெரியும். நாங்கள் Periodical check-up செய்துகொள்வதும் அந்த கண்/பெண் டாக்டர் அவர்களிடம் மட்டுமேதான்.

      என் Hobby பற்றி டாக்டர் அவர்கள் கேட்டபோது, என் மனைவி சொன்னாள்: ”தூங்கும் நேரம், சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கம்ப்யூட்டரில் இருப்பது மட்டும் தான் இவரின் ஒரே ஹாபி - அதுவும் கடந்த 2-3 வருடங்களாக மட்டுமே” என்று.

      நான் ப்ளாக்கில் எழுதும் எழுத்தாளர் என தெரிந்துகொண்டதும் மிகவும் பாராட்டினார்கள். ”இவ்வாறு ஆர்வமாக எழுத நினைக்கும் அவரை தடுக்காவே தடுக்காதீர்கள்” என என் மனைவியிடமும் அறிவுருத்தினார்கள்.

      10 வயது அல்லது 20 வயது இளைஞரைப்போன்ற மிகத்தெளிவான பார்வையை மீண்டும் மீட்டுத் தருவதாக Guarantee கொடுத்துள்ளார்கள். கடைசிவரை கண்ணாடி ஏதும் அணிய தேவையே இருக்காது என்றும் மிகுந்த நம்பிக்கையுடன் சொல்லியுள்ளார்கள்.

      சர்க்கரை நோயினால் இதுவரை கண்ணில் உள்ள பொடிப்பொடி நரம்புகள் ஏதும் எனக்கு பாதிக்கப்படாமல் Clean ஆக இருப்பதே மிகப்பெரிய விஷயம் என்றும் டாக்டர் அவர்கள் என்னைப் பாராட்டினார்கள்.

      பொதுவாக சிகிச்சைக்குப்போகும் போது நான் பிறருக்கு ஆறுதல் கூறுவேன். நம்பிக்கை அளிப்பேன்.

      இருப்பினும் இன்று எனக்கே எனக்கு கண் ஆபரேஷன் என்பதால் எனக்கும் மிகவும் நடுக்கமாகவே உள்ளது. எல்லாம் இறையருளால் நல்லபடியாக நடக்க வேண்டும். தாங்களும் எனக்காக பிரார்த்தித்துக் கொள்ளவும்.

      நானும் ஞாயிறு தோறும் சங்கல்ப்பத்துடன் மூன்று முறை ஆதித்யஹிருதய பாராயணம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

      30.12.2013 ஆகிய இன்றைய தங்களின் பதிவு, குழப்பமான என் மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளிப்பதாக உள்ளது. பிறகு அங்கும் பின்னூட்டம் இட வருவேன். அன்புடன் VGK

      Delete
    3. உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள் சார்... நாங்களும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்...

      Delete
    4. ADHI VENKAT has left a new comment on the post "பயணங்கள் முடிவதில்லை..........":

      //உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள் சார்... நாங்களும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்... //

      மிக்க நன்றி, திருமதி ஆதி வெங்கட் மேடம் அவர்களே.

      என்றும் அன்புடன் VGK

      Delete
  11. வரும் புத்தாண்டாவது அலைச்சல், மன உளைச்சல், மருத்துவமனைக் காத்திருப்புகள், சிகிச்சைகள் என இல்லாமல் மலர்ச்சியாக மலர பிரார்த்திப்போம்.

    மிகச்சரியாகச் சொன்னீர்கள். எனக்கும் இது மிகவும் பொருந்துவதாகவே உள்ளது. மேலும் 2-3 மாதங்கள் எனக்கும் நீங்கள் சொல்லும் எல்லாக் கூத்துக்களுமே நிகழ உள்ளன.

    ஈஸ்வரோ ரக்ஷது ! எனக்காகவும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கோ. எங்கிருந்தாலும் தாங்கள் வாழ்க !

    >>>>>

    ReplyDelete
  12. மிகச்சிறப்பானதொரு அனுபவப்பதிவுக்கும் பகிர்வுக்கும் என் நன்றியோ நன்றிகள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    இனிய புத்தாண்டு [2014] நல்வாழ்த்துகளும்.

    oo oo oo oo oo

    ReplyDelete
  13. பயணங்கள் பல்வேறு அனுபவங்களைத்தருகின்றன.

    பிறக்கும் ஆண்டு அனைவருக்கும் சகல நலன்களையும் நல்கும் இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துகள்!.

    ReplyDelete
  14. வணக்கம்
    அம்மா.

    சிறப்பாக உள்ளது பதிவு படங்களும் அருமை வாழ்த்துக்கள். எவ்வளவு வருடமாக பார்க்கிறேன் தங்களின் பதிவு ஆண்மிகம் சார்ந்ததாக உள்ளது இன்று ஒரு வித்தியாசமாக உள்ளது மேலும் தொடர வாழ்த்துக்கள் அம்மா....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. ரயில்பயணம் இப்போதெல்லாம் பாதுகாப்பானதா இல்லை. ரயில் நிலையக் காட்சிகளை உள்ளது உள்ளபடி வர்ணித்து விட்டீர்கள் .ரஜெஸ்வரியிடம் இருந்து வித்தியாசமான பதிவு நன்றாகவே உள்ளது. படங்கள் அருமை

    ReplyDelete
  16. பதிவைப் படித்ததில் உங்குக்கு எந்த அளவு கோவை மேல் அபிமாணமி அதற்கு மேல் ரயில் பயணம் மேல் அபிமானம் இருப்பது புரிந்தது.
    வரும் வருடம்2014 கண்டிப்பாக இனிய வருடமாக மலரும் என்பதில் துளியும் ஐயமில்லை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. இதை படிப்பதற்கு ஒரு இரண்டு நிமிஷங்கள் முன்பு

    மாணவ சேவை கேந்திரா பங்களூர் அவர்கள் வலையிலே எழுதியிருப்பதை

    பார்த்தேன்.
    Whatever happens in the environment outside you is NOT important. (That happens in spite of you ). What happens inside you in respect to what happens outside is most important.
    If only one could maintain inner peace at all times, it will pave the way.

    subbu thatha.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன்..

      நம்மைப் பாதிக்காதவரையில் சுற்றுச்சூழல் கவனம் பெறுவதில்லைதான்..!

      Delete
  18. நல்ல பகிர்வு.....

    பயணங்கள் முடிவதில்லை.... உண்மை தான்.

    ReplyDelete
  19. இப்போது எல்லாப்படங்களுமே அழகாகத் தெளிவாகக் காட்சியளிக்கின்றன என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். VGK

    ReplyDelete
  20. வித்தியாசமான ஒரு பதிவை பார்க்க முடிந்தது. தங்களின் இந்த ரயில் பயண அனுபவத்தை சொன்ன விதம் அருமை. எனக்கு நாய்களை பார்த்தால், நாய்களாக தான் தோன்றும். ஆனா தங்களுக்கு அவைகள் காலபையிரவராக தோன்றியிருக்கிறது.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. அனுபவங்களே ஒரு பாடமாக அமைந்த ஒரு பயணக்கட்டுரை. அருமையாக எழுதியிருக்கிறீங்க.
    வரும் 2014 ஆண்டு உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. இப்போது மீண்டும் சில Repeated படங்கள் மேலேயும் நடுவில் நீக்கப்பட்டுள்ளன. OK OK

    கடைசியில் காட்டியுள்ள சுழலும் படம் சூப்பர் !

    ReplyDelete
  23. நல்லதொரு அனுபவக் கட்டுரை!
    இப்படியொன்றை உங்களிடமிருந்து சற்றும் நினைத்தே பார்க்கவில்லை.

    உங்கள் எண்ணங்களையும் எழுத்துக்களையும் மிகவே ரசித்தேன்! அருமை!

    மலரும் புத்தாண்டு நிறைவான நல்ல ஆண்டாக யாவும் நலமாக அமையப்பெற இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. பயணங்கள் என்றும் சுகமான அனுபவத்தைத் தருகின்றன...

    கடைசி வரி.... நாங்களும் பிரார்த்திக்கிறோம் அம்மா...

    ReplyDelete
  25. உங்கள் ரயில் பயண அனுபவம் படிக்க சுவாரசியமா இருக்கு.

    ReplyDelete
  26. நினைவுகள் அருமை. நானும் கோவைவாசியாக இருப்பதால் அதிகமாக ரசிக்க முடிந்தது. நான் சிறுவனாக இருந்தபோது மீட்டர் கேஜ் ரயில் போத்தனூர் வரை மட்டும்தான் உண்டு. பொள்ளாச்சி போக கோவை ஜங்ஷனிலிருந்து போத்தனூர் வரை பிராட் கேஜ் ரயிலில் சென்று அங்கு மீட்டர் கேஜ் ரயிலுக்கு மாறி செல்லவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .வாழ்க வளமுடன் ..

      அதுமட்டுமா ஐயா

      அப்போதெல்லாம் இருகூரில் நீண்ட நேரம் ரயிலை நிறுத்திவைப்பார்கள்..
      வெளியூர் பயணம் நிறைவடைந்து கோவை வருதற்குள் இருப்புக்கொள்ளாமல் தவிக்க நேரிடும் இடம்..
      ஒருமுறை என்னைக்காண அம்மா வந்திருந்த நேரம் நான் கும்பகோண பயணம் முடித்து ரயிலில் கோவை வந்துகொண்டிருக்கிறேன் அம்மாவை காத்திருக்கச்சொல்லுங்கள் என்று என் கணவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போதே இருகூர் வந்து ரயில் நின்றுவிட்டது..

      இனியும் தாமதித்தால் அகால நேர பயணமாகிவிடும் என்று அம்மா என்னிடம் செல்போனிலேயே தகவல் சொல்லிவிட்டு சேலத்துக்கு காரில் கிளம்பிவிட்டார்கள்..

      மிகவும் ஏமாற்றமடைந்த தருணம் அது..!

      Delete
  27. Kankal munnaal kaatchikal vanthathu...

    ReplyDelete
  28. பயணங்கள் பற்றிய தங்கள் அனுபவங்கள் அருமை.... புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. புகைவண்டி பயணங்களில் பாதுகாப்பு குறைபாடு சீரமைக்கப்பட வேண்டிய ஓன்று.பழைய நிலையங்கள் புது பொலிவுடன் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது .

    ReplyDelete
  30. கல்வி ஒளி ஏற்ற உதவி செய்தீர்கள், அவர்கள் கொடுத்த டார்ஜ் உங்களின் பயத்தைப்போக்க கிடைத்த ஒளி . செய்லுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் .வழி துணையாக் வந்து விட்டார்.,உங்களுக்கு வடகோவை ரயில் நிலையத்தில் இருளைப்போக்க.
    நாங்களும் அங்கு இறங்குவதில்லை ஒருமுறை இறங்கி விட்டு பட்ட அவஸ்தை சொல்லி முடியாது. அந்த இருள் நம்மை பய முறுத்தும்.

    பயணங்கள் அனுபவம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாழ்க வளமுடன் ..

      கருத்துரைக்கு நிறைந்த நன்றிகள்..

      ஒவ்வொருமுறை வடகோவை கடக்கும்போதும் இங்கேயே இறங்கினால் நடந்தே வீட்டுக்குச்சென்றுவிடலாம் போல ரொம்ப பக்கமாக இருக்கிறது ..ஜங்ஷன் போனால் நிறைய படிகள் கடக்கவேண்டியுள்ளது என்று சொல்லிக்கொண்டே இருப்பேன்.
      தடுத்துவிடுவார்கள்..ரயிலும் சில நிமிடங்களே நிற்பதால் பொதிகளை சுமந்து இறங்குவதும் கடினம்தான்..!

      Delete
  31. ரயில் பயண அனுபவம் பல விஷயங்களைச் சொல்லிற்று. ஒவ்வொருமுறை ஒவ்வொரு அனுபவம். வித்தியாசமான பதிவு உங்களிடமிருந்து!

    ReplyDelete