பவழமல்லிப்பூ மரத்தடியில் அமர்ந்து இருந்த
சீதாதேவியை தரிசிக்க வந்தார் அனுமன்.

மரத்தில் இருந்து தரையில் உதிர்ந்திருந்த பூக்களெல்லாம்
கொண்டு ஸ்ரீராமா என்று எழுதுகிறாள் அதனைக் காண
முடியாத அளவிற்கு கண்ணில் நீர் நிரம்பி அன்னையின்
மென்மையான கன்னங்களில் ஆறாகப் பெருகி ஓடுகிறது.

இதனைக் கண்ட அனுமனுக்கு ஆச்சரியம்.
இதுவல்லவோ ராம பக்தி. இப்படி பக்தி பண்ண
சொல்லித் தாருங்கள் அன்னையே எனக் கேட்கிறார்.

‘பாஷ்பவாரி பரிபூரணலோசனம் மாருதிம் நமதா ராட்ஷசாந்தகம்’
என்று அனுமன் சுலோகம் செல்கிறது. பக்திக்கு அடையாளம்
இந்த ஆனந்தக் கண்ணீர்தான்.
என்று அனுமன் சுலோகம் செல்கிறது. பக்திக்கு அடையாளம்
இந்த ஆனந்தக் கண்ணீர்தான்.

இதே அனுமன்தான் தனது பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து
விடுபட மேல் வெண்பாக்கம் பெருமாளையும் தாயாரையும்
பூஜித்துப் பலன் பெற்ற பாக்கிசாலியாகத்திகழ்கிறார்..
விடுபட மேல் வெண்பாக்கம் பெருமாளையும் தாயாரையும்
பூஜித்துப் பலன் பெற்ற பாக்கிசாலியாகத்திகழ்கிறார்..

இலங்கையில் அசுரர்களை வதம்செய்ததால் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட அனுமன், மேல்வெண்பாக்கம் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு,
அந்த தோஷத்திலிருந்து விடுபட்டதாக ஐதீகம்

பிரம்மஹத்தி தோஷத்தைக்கூட நீக்கிய சக்தி வாய்ந்த
பெருமாளாக மஹத்தான பெருமைமிக்கவராக இருப்பதால்,
பக்தர்களின் தெரிந்த, தெரியாத அனைத்துத்
தோஷத்தையும் நீக்கி விடுவார் என்பது ஐதீகம்.

மஹாலஷ்மி சமேதராக ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள்
மூலவராக சாளக்கிராமத்தில் சுயம்பு திருமேனியாக
காட்சியளிக்கிறார்.
மூலவராக சாளக்கிராமத்தில் சுயம்பு திருமேனியாக
காட்சியளிக்கிறார்.
பெருமாளின் இடது மடியில் தாயார் அமர்ந்து இருக்க,
பெருமாளின் திருமுக மண்டலத்திற்கு அருகில்
தாயாரின் அழகிய திருமுகம் இருப்பது ஆபூர்வமான காட்சி.
பெருமாளின் திருமுக மண்டலத்திற்கு அருகில்
தாயாரின் அழகிய திருமுகம் இருப்பது ஆபூர்வமான காட்சி.
பெருமாள் திருமார்பில் ஆதி சேஷனே வைஜயந்தி
மாலையாய்ப் படர்ந்து, ஐந்துதலை நாகமாய்
சேவை சாதிக்கும் அதிசயத்தை காணலாம்.

இத்திருச் சேவையினால், இப்பெருமாளை பக்தியுடன்
வழிபடுவோருக்கு ராகு- கேது தோஷம் உள்ளிட்ட
எல்லாவித சர்ப்ப தோஷங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

காளிங்கன் என்னும் ராஜசர்ப்பம் வழிபட்ட திருத்தலம் இது
பெருமாளின் கழுத்தில் மாலையாகக் காட்சி அளிக்கும் பாம்பின்
ஐந்து தலைகளும் கழுத்தணியின் பதக்கம் போல் மார்பில்
காணக் கிடக்கும் கோலம் அற்புதம்.

இந்தப் பெருமாளும் திருப்பதி பெருமாளும்
சம காலத்தினர் என்பது வரலாறு.
சம காலத்தினர் என்பது வரலாறு.

பெருமாள் சன்னதி சுற்றுச் சுவர் முழுவதும் ராமாயண
நிகழ்ச்சிகளின் காட்சிகள் படங்களாக அலங்கரிக்கின்றன.
நிகழ்ச்சிகளின் காட்சிகள் படங்களாக அலங்கரிக்கின்றன.
ஸ்ரீராமானுஜர் தனது காலத்தில் இங்கு விஜயம் செய்துள்ளார்.
கோயிலுக்கு 1957-ம் ஆண்டு விஜயம் செய்த காஞ்சி
மகா பெரியவர் இங்கேயே மூன்று நாட்களுக்குத் தங்கியிருந்தார்
கோவிலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள
ஸ்ரீலஷ்மி நாராயாண பெருமாள் சேரிடபிள் டிரஸ்ட்
சிறப்பான பணிகளைச் செய்துவருகிறது..
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பதினோரு நிலைகள்
கொண்ட ராஜ கோபுரத்துடன் திகழ்ந்திருக்கிறது.
கொண்ட ராஜ கோபுரத்துடன் திகழ்ந்திருக்கிறது.
அஷ்ட லஷ்மிகளுக்கும் தனிச் சன்னதிகள் அமைக்கப்பட்டுப்
பூஜைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
ஆனால் அந்நியர் படையெடுப்பு காரணமாக
சிதிலமடைந்த இத்திருக்கோவிலில் காட்சி அளித்த
அஷ்ட லஷ்மிகளின் சக்தியும் இங்கு
ஒரே லஷ்மியிடம் இணைந்துள்ளதாக ஐதீகம்
சிதிலமடைந்த இத்திருக்கோவிலில் காட்சி அளித்த
அஷ்ட லஷ்மிகளின் சக்தியும் இங்கு
ஒரே லஷ்மியிடம் இணைந்துள்ளதாக ஐதீகம்

திருக்கோவிலில், தேவர்களும், முனிவர்களும்
சூட்சும ரூபமாக பெருமாளுக்கு நித்ய ஆராதனை
செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது.
சூட்சும ரூபமாக பெருமாளுக்கு நித்ய ஆராதனை
செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது.
ஆண்டாளின் அருளிச் செயலில் நன்மக்களைப்
பெற்று வாழ்வரே, என்பதை நிரூபிப்பவர்
இப்பெருமாள். அதனால் இப்பெருமாளுக்கு
பிள்ளைக்காரன் சுவாமி என்பது காரணத் திருநாமம்.
குழந்தை வரம் வேண்டும் தம்பதியர்
வெள்ளிக்கிழமைகளில் பெருமாளுக்கு
துளசிமாலை சாற்றி பால்பாயச
நைவேத்தியத்தை உட்கொண்டால்,
பெருமாள்- தாயாரின் திருவருளால்
தெய்வீகமான குழந்தை பாக்கியம் கிடைக்குமென்பது ஐதீகம்.

பெருமாளும் தாயாரும் ஐக்கிய பாவத்தில்
காட்சியளிக்கும் திருக்கோயிலுக்கு வந்தால்
தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.
பெருமாளும் தாயாரும் ஐக்கிய பாவத்தில்
சேவை சாதிப்பதால், மன ஒற்றுமையில்லாத
தம்பதியர் இப்பெருமாளை வழிபட்டால்,
தம்பதியரிடையே ஒற்றுமை மலர்ந்து வாழ்க்கை ஒளிபெறும்

புது மணத் தம்பதிகள் இந்தப் பெருமாளைப் தரிசித்து
அந்நியோன்னிய பலனைப் பெறலாம்.
குழந்தை வரமும் கேட்டுப் பெறலாம்.
அந்நியோன்னிய பலனைப் பெறலாம்.
குழந்தை வரமும் கேட்டுப் பெறலாம்.
நெய் தீபம் ஏற்றுதல் இங்கு விசேஷம்.
வெள்ளிக் கிழமைகளில் நிவேதனம் செய்யப்படும்
பால் பாயசம் உடனடியாகப் பலனளிக்கும்..!
வெள்ளிக் கிழமைகளில் நிவேதனம் செய்யப்படும்
பால் பாயசம் உடனடியாகப் பலனளிக்கும்..!
ஆறு கால பூஜை நடை பெறும் இக்கோவிலில்
காலையில் மிளகுப் பொங்கல் பிரசாதமும், ஹோமம்
பூஜை முடிந்த பின் மதிய உணவாக புளியோதரைப்
பிரசாதமும் அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் உத்திராட திருநட்சத்திர நாளன்று
காலையில் ஸ்ரீலட்சுமி நாராயண நவகலச ஹோமமும்,
ஸ்ரீலட்சுமி நாராயண ஹ்ருதய பாராயண ஹோமமும் நடைபெறும்.
இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால் பல்வேறு நன்மைகள் கிட்டும்
இங்கு நடந்த ஹோமத்து அக்னி வலம் சுழித்து எழுந்தது
கோவிலின் புனிதத்திற்கு சான்று என்று சொல்லப்படுகிறது.

குழந்தைவரம் வேண்டுவோர், திருமணம் நடைபெற வேண்டுவோர்
இந்த மாதாந்திர ஹோமத்தில் தவறாமல் கலந்துகொண்டால் எண்ணங்கள் ஈடேறும்.
ஒவ்வொரு மாதமும் உத்திராட நட்சத்திரதன்று சிறப்புக் கலச
பூஜை, ஹோமம், பெருமாளுக்கு கலசாபிஷேகம் ஆகியவை
சிறப்புற நடைபெறுகின்றன.
ராகு, கேது தோஷ பரிகாரமாகவும் இத்தலம் விளங்குகிறது.
தனுசு ராசிக்காரர் களுக்கு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது

காஞ்சிபுரத்திற்கு வடக்கே தொன்மை வாய்ந்த
மேல்வெண்பாக்கம் எனும் அழகிய சிறு கிராமம் .
பெற்ற பேறோ பெரியது.
மேல்வெண்பாக்கம் எனும் அழகிய சிறு கிராமம் .
பெற்ற பேறோ பெரியது.
தாயாரின் அழகைக் காண ஒரு பிறவி போதாது. உற்சவர்
கல்யாண கோவிந்தராஜப் பெருமாளும் கொள்ளை அழகு.
பெரிய திருவடி கருடாழ்வாரும், சிறிய திருவடி அனுமனும்
பக்தர்களிடம் காட்டும் கருணை ஈடிணையற்றது.
கல்யாண கோவிந்தராஜப் பெருமாளும் கொள்ளை அழகு.
பெரிய திருவடி கருடாழ்வாரும், சிறிய திருவடி அனுமனும்
பக்தர்களிடம் காட்டும் கருணை ஈடிணையற்றது.
.பிரம்மஹத்தி தோஷத்தையே நீக்குபவர் என்பதால்,
இத்தலப் பெருமாளை வழிபட்டால் எந்தக் கொடிய
தோஷத்திலிருந்தும் பக்தர்களைக் காத்தருள்வார் என்பது உறுதி.
இத்தலப் பெருமாளை வழிபட்டால் எந்தக் கொடிய
தோஷத்திலிருந்தும் பக்தர்களைக் காத்தருள்வார் என்பது உறுதி.
எல்லா மங்களங்களும் கிடைக்கச் செய்வதும்,
சகல தோஷங்களையும் போக்கக்கூடியதுமான
இத்திருத்தலம் சென்னை- வேலூர் தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள பனப்பாக்கத்திலிருந்து
ஒன்பது மைல் தொலைவிலுள்ளது.
பஸ் வசதி உண்டு.அழகிய சிறிய கிராமம் அது.
காஞ்சீபுரம் செல்லும் வழியில் திருப்புட்குழி
என்று பதாகையில் எழுதி வைக்கப்பட்டுள்ள
இடத்தைத் தாண்டி வலதுபுறம் திரும்பினால்
ஸ்ரீலஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோவில்
மேல்வெண்பாக்கம் என்று மற்றொரு பதாகை வழிகாட்டுகிறது.
அந்தத் தெருவில் இறங்கினால் இருபுறமும்
திண்ணைகள் கொண்ட பழைய கால வீடுகள்.
மேல்வெண்பாக்கம் மஹாலஷ்மி சமேத ஸ்ரீலஷ்மி நாராயணப்
பெருமாள் நான்கு யுகங்களாகப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.