Saturday, April 30, 2011

இன்பவாழ்வளிக்கும் ஈச்சனாரி விநாயகர்

இன்பவாழ்வளிக்கும் ஈச்சனாரி விநாயகர்
பாலக்காட்டு கணவாயின் பயனால் மலையாள மாருதம் 
கொஞ்சி தவழ்ந்து விளையாடும் நகரம் தான் கோவை.
தென்னாட்டு மான்செஸ்டர் என்று புகழ் பெற்ற , கோவை என்றவுடன் நினைiவுக்கு வரும் வினாயகரின் கோவில் ஈச்சனாரி ஆகும்.
ஈச்சனாரியில் விநாயகப்பெருமான் எழுந்தருளிய 
வரலாறு மிகவும் வேடிக்கையானது.

கொங்கு மண்டலத்தின் தொன்மை வாய்ந்த கோயில்களில் ஒன்றானதும், முக்தித் தலமானதும் ஆடல்வல்லானின் அற்புதமான சிற்பங்கள் நிறைந்த ஆதி அம்பலத்தை உடையதும் ஆன பேரூர் பட்டீஸ்வரப்பெருமான் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து செல்லப்பட்ட இந்த விநாயகர் விக்கிரகம், மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் கொண்டு வரப்பட்ட போது , வினாயகப் பெருமானின் திருவிளையாடலால் வண்டியின் அச்சு முறிந்து வினாயகர் விக்ரகம் கீழே சாய்ந்தது.

கீழே சாய்ந்த வினாயகரை மீண்டும் வண்டியில் ஏற்ற 
எவ்வளவோ முயன்றும் அது முடியவில்லை. 

அவரே அங்கேயே கோவில் கொள்ள நினைத்தபின் மானிடர்களால் என்ன செய்ய முடியும். பின்னர் அவரே தானே வந்து நமக்கெல்லாம் அருள்பாலிக்க தேர்ந்தெடுத்த அதே இடத்தில் திருக்கோவில் உருவானது. 

அன்று முதல் இன்று வரை அவ்வழி செல்லும் அனைவருக்கும் அருட்காட்சி அளித்து நன்மை பல புரிந்து வருகின்றார் ஈச்சனாரி வினாயகர். 

இவ்வழியில் செல்லும் எல்லா வாகனங்களும் இவர் திருக்கோவிலில் நின்று இவர் அருளைப் பெற்ற பின்னரே செல்கின்றன


இவ்வாறு தானே உவந்து வந்து இங்கு கோவில் கொண்ட மூலவர் 5 அடி உயரமும், 3 அடி பருமனும் உடையவர். 

பாதையில் இருந்து பார்த்தால் அமர்ந்த கோலத்தில் அங்குச பாசம் ஏந்தி துதிக்கை இடது புறம் வளைந்திருக்க உயரத்தில் சன்னதி அமைக்கப்பட்டிருப்பதால் கம்பீரமாகவும் எழிலாகவும் அருட்காட்சி தருகின்றார் விக்னராஜா.

இக்கோவிலில் செய்யப்படும் , 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர்விதமான அலங்காரம் செய்யும் 
நட்சத்திர அலங்கார பூஜை" மிகவும் விஷேஷமானது ஆகும். 

தமிழ் வருடப்பிறப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தியன்று 
ஈச்சனாரி கோவிலில் லட்சக் கணக்கான மக்கள் கூடுகின்றனர்

கோவில் நவீன கட்டிட அமைப்புடுடன், மகா மண்டபம், அதனை சுற்றிலும் ஜன்னல் அமைப்பு, ஆலயத்தை சுற்றிலும் பசும் புல் தரை அமைப்பு, பூந்தோட்டத்துடன், எழிலுற விளங்குகின்றது. 

கோவிலின் உட்புறம் வினாயகப் பெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை விளக்கும் ஓவியங்கள் அழகாக கண்ணாடி சட்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.

அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. 
யாகசாலை அற்புதமாக அமைந்துள்ளது.
திருமண மண்டபம் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது

 கிழக்குப் பார்த்த கோபுரம் உடையது. மூன்று நிலைகளை கொண்டது. கோபுரத்தின் இரு பக்கங்களிலும் இரு யானை உருவங்கள் கலசங்களை தாங்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆலயத்தினுள் நீண்ட சதுர வடிவில் உள்ள மண்டபம், நான்கு தூண்களை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. 

பீடத்தில் கஜலட்சுமியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. 
அதன் மேல் ராசி சக்கரம் உள்ளது.

வினாயகப் பெருமானை தரிசிக்க சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகின்றது. 

சங்கடஹர சதுர்த்தியன்று வினாயகப்பெருமானை தரிசித்தால், சங்கடங்கள் தீரும் என்பதி ஐதீகம். 

அருள்மிகு வினயகப் பெருமான் திருவீதி உலா வர ரூ. 36 லட்சம் செலவில் தங்கத்தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் நாட்டிலேயே வினாயகப் பெருமான் திருவீதி உலா வர தங்கத்தேர் திருப்பணி செய்து அளித்து இருப்பது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
[Gal1]
[Gal1][Gal1]
[Gal1]
[Gal1]

23 comments:

  1. ஈச்சனாரி வினாயகர் அங்கு தோன்றிய வரலாறு..
    அந்த கோயிலின் அமைவிடம், அமைப்பு பற்றியும் மிக விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்....

    கண்டிப்பாக கோவை வரும் போது ஈச்சனாரி வினாயகர் தரிப்பபேன்...


    படங்களின் தொகுப்பு அருமை...
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. தங்கத்தேரில் நம் விகனராஜா, வினாயகப்பெருமான்.

    ஈச்சனாரி வினாயகர் கோவிலும், சுற்றுபுற அழகுகளும் நல்லதொரு வர்ணனை. நல்ல தகவல்கள். நல்ல அருமையான படங்கள்.

    சங்கடஹர சதுர்த்திக்குத் தாங்கள் செல்லும்போது, எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கோ!

    அன்புடன் vgk

    ReplyDelete
  3. Dear Rajeswari,
    I dontfind wards to express because being a Kovai native person how much happy i would have been had on seeing our Pillayar...
    Thanks for the write up dear.
    This day starts with Pillayar darshinam to me.
    viji

    ReplyDelete
  4. ஆகா அருமை அருமை

    ReplyDelete
  5. இந்த இடுகையில் இருக்கும் ஈச்சனாரி கோவில் புகைப்படங்களை நான் ஒரு முறை பார்த்து விட்டு என் மனைவியிடம், கோவில் பற்றிய உங்களின் விளக்கத்தை வாசிக்க சொல்லி விட்டு கண்கள் மூடி மனக்கண்ணில் கோவிலை தரிசித்தேன்.கோவை வருகையில் அவசியம் இந்த கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தின உங்கள் எழுத்துகள். நன்றி !!!

    ReplyDelete
  6. நான் நான்கு மாதங்களுக்கு முன்பு
    கோவை செல்லுபோது நான்
    ஈச்சனாரி வி நாயகரை தரிசித்துதான் போனேன்
    ஆனால் ஸ்தல் வரலாறு தெரியாது
    தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்
    நன்றி மகிழ்ச்சி
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்கள் பதிவை பார்த்து, இன்று பிள்ளையார் பதிவு கூடிவிட்டது.

    ReplyDelete
  8. விநாயக பெருமானின் தரிசனம் எனக்கு நான் இருக்கும் இடத்திலேயே கிடைக்க செய்தமைக்கு மிக்க நன்றி...

    பதிவு உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தந்தது...

    ReplyDelete
  9. நல்ல பதிவு. நிறைய படங்களுடன் நல்ல விளக்கம்.
    நாங்கள் கோயம்புத்தூர் வரும்போது ஒரு தடவை ஈச்சனாரி விநாயகர்கோவில் தரிசித்திருக்கிரோம்.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  10. Dear thozi,
    Thanks a lot for bringing out
    vinayagar darshan on this auspicious day.

    ReplyDelete
  11. Nisha SubramanianMay 2, 2011 at 7:45 PM

    Beautiful portrayal of one of my Favourite temple in Coimbatore. The Ambience in this Temple is so Lovely and peaceful.

    Wish and pray that Our Eechanari vinayagar always keeps us all in good Health and happiness :)

    Regards,
    Nisha Subramanian

    ReplyDelete
  12. @ Nisha Subramanian said...//சந்தோஷம் அம்மா.ஈச்சனாரி விநாயகர் என்றும் துணையிருக்கப் பிரார்த்திக்கிறேன்.முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன். வளர்க நலமுடன்.

    ReplyDelete
  13. good photographs. very nice.
    best wishes

    ReplyDelete
  14. @ ksmnest said...//

    பிள்ளையார் சுழியிட்டு முதல் பின்னூட்டம் அளித்த தங்கள் குடும்பத்திற்கு நன்றி, தொடரப்பிரார்த்திக்கிறேன் ஈச்சனாரி விநாயகரை,
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  15. @ வை.கோபாலகிருஷ்ணன் s//
    தங்கமான பின்னூடங்களைத் தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் தங்கள் வாழ்வில் நலம் பெற விநாயகனை வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  16. @# கவிதை வீதி # சௌந்தர் s//
    தங்கள் தரிசனம் பெற பிரார்த்திக்கிறேன் ஈச்சனாரி விநாயகரை,
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  17. கோவையில் இருந்த போது கண்ட தரிசனம். பிள்ளையாரை இன்று மீண்டும் காணப் பாக்கியம் செய்திருக்கிறேன். படங்களும் ஸ்த வரலாறும் அற்புதம்.

    ReplyDelete
  18. Good news and information . Thanks

    ReplyDelete
  19. ஆவணியில் பிள்ளையார் சதுர்த்தியில் அவதரித்த பிள்ளையாரப்பாவுக்கு முதலில் என் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete