Friday, February 21, 2014

ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் அன்னை ஸ்ரீமகாலஷ்மி..!









ஹிரன்யவர்ணம் ஹரிணீம் ஸ்வர்ண  ரஜதஸ்ரஜாம் !
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹா !!

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அநபகாமிநீம் !
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோஸ்வான் 
விந்தேயம் புருஷா நஹம் !! ”

 “ தங்க நிறமுள்ளவளும், பாபங்களை போக்குபவளும், பொன்னாலும் வெள்ளியாலும் ஆன மாலைகளை அணிந்திருப்பவளும், நிலவை போன்ற குளிர்ச்சியை உடையவளும், பொன்மயமானவளும் ஆன ஹே !  
ஸ்ரீ  மகாலக்ஷ்மியே !  எனக்கு தரிசனம் தந்து அருள வேண்டும்.

ஸ்ரீ நாராயண மூர்த்தியே ! பொன், பொருள், கால்நடைச் செல்வம், சேவகர், வம்ச விர்த்தி முதலிய யாவற்றையும் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி எப்போதும் எனக்கு அருள் பாலிக்க வேண்டும் ”

""திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து 
வருக வருகவென்றே கிளியே. மகிழ்வுற்றிருப்போமடி'' 
என்று மகாகவி பாரதி பாடினார்.

பதினாறு செல்வங்களான சௌந்தர்யம், சௌபாக்கியம், கீர்த்தி, வீரம், 
வெற்றி, சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, புஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்கியம், மோட்சம் ஆகியவற்றிற்கு அதிபதியானவள் 
ஸ்ரீ மகாலஷ்மி ஆவாள். 

எப்போதும் சரியாகவும் கவனமாகவும்  இருக்க வேண்டிய 
வழிபாடு “பாற்கடலில் தோன்றிய ஸ்ரீமகாலஷ்மி  வழிபாடு ஆகும்..!

 கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் லஷ்மிதேவிக்கு அலைமகள் என்கிற பெயரும் உண்டு.அலையை போன்று ஒரு இடத்தில் நிலையாக லஷ்மி கடாக்ஷம் இருக்காது. 

லஷ்மி என்றால் கருணையோடு பார்ப்பவர் என்று அர்த்தம். 

இதனால் அன்னை “லஷ்மி” என்ற நாமத்தில் வைகுண்டத்தில் இருந்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் தந்து கொண்டு இருக்கிறாள்.

 ராஜ்யங்களில் ராஜ்ய லஷ்மியாகவும், 

நாம் வசிக்கும் வீடுகளையும் “கிருகம்” என்று அழைக்கப்படுவதால், இல்லறவாசிகளுக்கு அருள் தந்திட கிருக லஷ்மியாகவும், 

எல்லாப் பிராணிகளிடத்தில் சோப லஷ்மியாகவும், 

புண்ணியவான்களிடத்தில் ப்ரீதி லஷ்மியாகவும், 

சத்திரியர்களிடத்தில் கீர்த்தி லஷ்மியாகவும், 

வைசியர்களிடத்தில் வர்த்தக லஷ்மியாகவும், 

பாவிகளிடத்தில் கலக லஷ்மியாகவும், 

வேதாந்திகளிடத்தில் தயா லஷ்மியாகவும் இருக்கிறாள் ஸ்ரீமகாலஷ்மி. 

இப்படி எல்லா ஜீவராசிகளிடத்திலும் லஷ்மி வாசம் செய்கிறாள். 

பாற்கடலில் தோன்றிய அன்னை லஷ்மியை  சித்திரை, தை, 
புரட்டாசி மாதத்திலும், செவ்வாய் கிழமைகளிலும் வணங்கி 
லஷ்மியின் அன்பை பெறலாம்..!

பிரம்மன், புரட்டாசி மாத சுக்கிலாஷ்டமியிலும், 
தைமாத சங்கராந்தியிலும், மாசி மாதம் சங்கராந்தியிலும் 
பூஜித்து நலங்களை பெற்றார். 
இப்படி தெய்வங்களும், முனிவர்களும், மகரிஷிகளும் 
ஸ்ரீமகாலஷ்மியை பூஜித்து பயன் பெறுகிறார்கள்..! 
ஸ்ரீமகாலஷ்மிதேவியை தன் மகளாக வளர்த்தால், விலகி போன தன் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் திரும்ப கிடைக்கும் என்று உணர்ந்து, சந்தான லஷ்மியை நினைத்து தவமிருந்து ஸ்ரீமகாலஷ்மியை மகளாக பெற்று பாசத்துடன்  வளர்த்தார் பிருகு மக்ரிஷி..!

 சந்தான பாக்கியம் இல்லாமல் வருந்திய நீதிமான் என்ற அரசர், சந்தான லஷ்மியை வணங்கி லஷ்மி தேவியை மகளாக பெற்றார். 

இப்படி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லஷ்மியை வணங்கினால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தைரிய லஷ்மி இருந்தாலே அஷ்டலஷ்மிகள் வாசம் செய்யும் 

மன்னர் போஜ ராஜன், தினமும் ஸ்ரீகஜலஷ்மியை பூஜித்து வந்தார். 

அவரின் வழிபாடுக்கு மகிழ்ந்த அஷ்டலஷ்மிகளும் காட்சி கொடுத்தார்கள். 

மன்னர் போஜராஜன் ஸ்ரீகஜலஷ்மியை பார்த்து, “தாயே நீங்கள் என் நாட்டிலேயே எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார். 

“அது இயலாது. நான் ஒர் இடதில் மற்ற லஷ்மிகளை விட்டு தனியாக நிலைத்து இருக்கமாட்டேன்.” என்றாள் கஜலஷ்மி. 

சற்று யோசித்தார் அரசர். தன் புத்திசாலிதனத்தை கொண்டு, ஒவ்வொரு லஷ்மிக்கும் வெற்றிலை-பாக்கு, மஞ்சள் குங்குமத்தை கொடுத்து கொண்டே வந்தார். 

அதனை பெற்று கொண்ட ஒவ்வொரு லஷ்மிகளும் 
ஒருவர் பின் ஒருவராக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். 

கடைசியாக மன்னர் போஜ ராஜன் தைரியலஷ்மியின் காலில் விழுந்து, “தாயே உங்கள் பிள்ளை போல அல்லவா நான். எனக்கு நீங்கள் ஒரு வரத்துடன் சத்தியமும் செய்து தர வேண்டும். செய்வீர்களா?“ என்றார். 

சரி என்ன பெரியதாக கேட்டு விட போகிறான் என்ற தைரியத்தில், “தாராளமாக வரம் கேள். தருகிறேன்.” என்றார் தைரியலஷ்மி..!

“தாயே நீங்களாவது என்னுடனே நிலைத்திருக்க வேண்டும். இதுதான் நான் கேட்கும் வரம். கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். சத்தியத்தை மறவாதீர்கள்.” என்றார் ..!

“அப்படியே ஆகட்டும்.” என்றாள் தைரியலஷ்மி. 

தாம்பூலம் வாங்கி வரவேண்டிய தைரியலஷ்மி,  இன்னும் வராததால் மீண்டும் போஜ ராஜனின் அரண்மனைக்கு திரும்பிய மற்ற லஷ்மிகள், நடந்த விபரத்தை அறிந்து, “என்ன போஜராஜனே உன் புத்திசாலித்தனத்தை எங்களிடமே காட்டிவிட்டாயே.” என்றார்கள். 

காரணம் தைரிய லஷ்மி எங்கு வாசம் செய்கிறாளோ அங்குதான் மற்ற எல்லா லஷ்மிகளும் வாசம் செய்வார்கள் என்கிற ரகசியத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தார் மன்னர் போஜராஜன். 

நவராத்திரி திருநாளில் மட்டுமல்லாமல் எந்த நாளிலும் 
தைரிய லஷ்மியை வணங்கினால் அஷ்டலஷ்மிகளின் அருளும் 
ஆசியும் நிச்சயம் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்வார்கள்.

14 comments:

  1. மகாலட்சுமி மகிமை உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அருமையான படங்களுடன் + தகவல்களுடன் சிறப்பான பகிர்வு அம்மா...

    இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே தைரியலஷ்மி துணை வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம்
    அம்மா
    புலர்ந்த காலைப்பொழுதில் பக்தி மகிழ்வூட்டும் பதிவு.... நல்ல கருத்துக்களையும் சொல்லியுள்ளிர்கள் படங்கள் அழகு வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் அன்னை மஹாலக்ஷ்மிக்கு என் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  5. மிகவும் அழகான அற்புதமான பதிவு.

    பாற்கடலிலிருந்து தோன்றியுள்ள லக்ஷ்மி போல, லக்ஷ்மிகரமான பதிவு.

    இன்று வெள்ளிக்கிழமைக்கு ஏற்றவாறு ஜொலிக்கும் பதிவு.

    >>>>>

    ReplyDelete
  6. படங்கள் எல்லாமே அழகோ அழகு !

    கடைசியில் காட்டியுள்ள ஸ்ரீயந்த்ரம் + மாம் மஹிமா ஸித்தி பூர்வ மந்திரங்கள், ஸ்லோகங்கள் + அஷ்ட லக்ஷ்மி படங்கள் என அனைத்து மிகவும் ஜோராகவே உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  7. முதல் படமும், கடைசிக்கு முந்திய குங்குமப்பொட்டு வைத்த மஞ்சள் சங்குப்படமும் மிகவும் வஸீகரிப்பதாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  8. வழக்கம் போல தங்கள் பாணியில், குழந்தையைத் தொட்டிலில் இட்டு தாலாட்டும் விதமாக கதை சொல்லியுள்ளது சூப்பர்.

    தைர்யலக்ஷ்மி இருக்குமிடத்திலேயே அனைத்து லக்ஷ்மிகளும் சேர்ந்து வாசம் செய்வார்கள் என நன்கு புரிந்து கொண்டேன்.

    மனதுக்கு தைர்யமும், இதமும், ஆறுதலும், ஸாந்தியும், நிம்மதியும் அன்றாடம் கொடுத்துவரும் அன்பான தைர்யலக்ஷ்மியின் பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    o o o o o

    ReplyDelete
  9. லஷ்மியின் மகிமையை மிக அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்...
    முதலில் தைரிய லஷ்மியைப் பிடிப்போம்...
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  10. ஆஹா அருமை தோழி! மகலக்ஷ்மியின் மகிமைகள் அறிந்தேன். தைரிய லக்ஷ்மியை வரவழைத்தாலே போதும் எல்லாம் கிடைக்கும் அல்லவா. அவரை வணங்கி அனைத்தையும் பெறுவோம்.
    நல்ல பதிவு நன்றி பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. DUPLICATE 3rd Comment:

    படங்கள் எல்லாமே அழகோ அழகு !

    கடைசியில் காட்டியுள்ள ஸ்ரீயந்த்ரம் + மாம் மஹிமா ஸித்தி பூர்வ மந்திரங்கள், ஸ்லோகங்கள் + அஷ்ட லக்ஷ்மி படங்கள் என அனைத்து மிகவும் ஜோராகவே உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  12. DUPLICATE 4th Comment:

    முதல் படமும், கடைசிக்கு முந்திய குங்குமப்பொட்டு வைத்த மஞ்சள் சங்குப்படமும் மிகவும் வஸீகரிப்பதாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  13. தைரிய லஷ்மியை வணங்கினால் மற்ற லஷ்மிகளின் கடாட்சமும் கிடைக்கும் என்ற தகவலோடு விரிவான பல தகவல்கள்! படங்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  14. சிறப்பான தகவல்கள்......

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete