Monday, September 15, 2014

திருக்களம்பூர் ஸ்ரீகதளிவனேஸ்வரர்









நல்ல கேள்வி ஞானசம்பந்தன் 
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச் 
சொல்லப் பாடல் வல்லார் தமக்கு என்னும் 
அல்லல் தீரும்

பெருமை மிக்க திருப்புத்தூர் திருத்தலத்தில் சிவாலயப் பிரகாரம் முழுவதும் வாழை மரங்கள் நிறைந்திருப்பதும், தல விருட்சமாக அபூர்வ குணம் கொண்ட வாழை மரங்கள் இருப்பதும், திருக்களம்பூர் கதளிவனேஸ்வரர் கோயிலின் தனித்துவமாகத் திகழ்கிறது..!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள திருக்களம்பூர் பகுதி, முன்பு கதளி வனமாக இருந்துள்ளது. இதனால், இக்கோயிலின் மூலவர் "கதளிவனேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். 

 ஸ்ரீகதளிவனேஸ்வரர்! காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, மதுரை சொக்கநாதர்- மீனாட்சி, காஞ்சி காமக்கோடீஸ்வரி ஆகியோரை ஒரே இடத்தில் தரிசிக்கும் பேறு தரும் திருத்தலம்...!

கோயில் பிரகாரம் முழுவதும் வாழை மரங்கள் வாழையடி, 
வாழையாக வளர்ந்து வருகின்றன.


யாரும் இம்மரங்களுக்கு தண்ணீர் விடுவது இல்லை. 

Kal Vaazhai @ ThevaGuru Nathar Aalayam, Thevur
வாழை மரங்களுக்கு இடையே சென்று பிரகாரத்தை வலம் வருகிறோம்..! 

இந்த மரங்களின் தண்டுப்பகுதியை வெட்டினால், 

சிவப்பு நிற நீர் வருகிறது. 

பழங்கள் பூவன்பழம் போலவும்,உரித்தால் ரஸ்தாளிபழம் போலவும் உள்ளது. இப்பழங்களை யாரும் சாப்பிடுவதில்லை.சாப்பிட்டால், தோல் நோய் வரும் என்ற அச்சம் உள்ளது.


 இம்மரங்களில் கிடைக்கும் வாழைப்பழங்கள் பஞ்சாமிர்தம் 
செய்ய மட்டுமே பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இப்பழங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் 
மூலவருக்கு படைக்கப்படுகிறது. 

பக்தர்களும் எடுத்துக் கொள்கின்றனர்.இப்பஞ்சாமிர்தம் 
விரைவில் தண்ணீராக உருகி விடுகிறது. 

 இங்குள்ள சிவலிங்கம் வேறு எந்த கோயிலிலும் காணமுடியாத அமைப்பில் மேற்புறம் 3 பிளவுகளாக இருப்பது சிறப்பு அம்சம் ... 

குதிரையின் குளம்புபட்டதால் லிங்கத்தில் இப்பிளவு 

ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது

 இப்பகுதியில் தான் ராமாயண காலத்தில் வால்மீகி, வாமதேவர், வசிஷ்டர் ஆகியோர் அசுவமேதயாகம் நடத்தி,செங்கதளியை (செவ்வாழை) யாகத்தில் இட்டதாகவும், ராமருடைய பட்டத்துக் குதிரையை அவரது மகன்கள் லவ, குசர்கள் இங்கு பிடித்துக் கட்டியதாகவும், இந்தக் குதிரையின் கால் குளம்பு பட்டதால், லிங்கத்தில் இப்பிளவு ஏற்பட்டதாகவும், இந்தப் பகுதி "குளம்பூர்' என்றழைக்கப்பட்டு, பின்னர் 'திருக்களம்பூர்' என மருவியதாகவும் புராணச் செய்திகள் கூறுகின்றன. 

கோயிலின் மூலவரான கதளிவனேஸ்வரர், வைத்தியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

முன்னர் பாண்டிய மன்னர் ஒருவர் இப்பகுதியில் வேட்டையாடுகையில், அவரது குதிரையின் கால் குளம்புகள் மண்ணில் புதைந்திருந்த சிவலிங்கத்தின் மேல் பட்டு, ரத்தம் வடிந்ததாகவும், இதனால், மன்னருக்கு கண் பார்வை போய், பின்னர் இறைவன் " முதியவராக ' வந்து வைத்தியம் செய்து, கண்ணொளியை வழங்கியதால் "வைத்தியநாதன்' என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றன. 


 ரிஷபவாகனத்தில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வருக்கு வியாழக்கிழமை பாயாசம் வைத்து வழிபட்டால், திருமணம் கை கூடும் என்றும், குழந்தை இல்லாதவர்கள்,இங்குள்ள கொடிமரத்திற்கு வாழைக்காயை பலி கொடுத்தால், மகப்பேறு கிட்டும் என்றும் நம்புகின்றனர்.


புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர், சிங்கம்புணரி, பொன்னமராவதி யிலிருந்து 10 கி.மீ.,தொலைவிலும், திருப்புத்தூரிலிருந்து 10 கி.மீ.,தொலைவிலும் உள்ளது.


கோவிலின் அர்ச்சகர் திரு.கணேசன் அவர்கள் 

இந்த வரலாறுகளை சுவைப்பட எடுத்துகூறினார்..!

9 comments:

  1. காயாகிய மாயை விடுத்து, கனியாகிய ஞானம் பெற்றிட, ஐம்புலணுணர்வுகளை ஒடுக்கி, பஞ்சாமிர்தமாகிய இறைவனிடம் ஒன்றிட, பெற்ற வாழ்க்கையின் பலனிதுவே ( இறைவனிடம் ஒன்றுவதே) என்பதனை வாழ்வியல் தத்துவமாக உணர்த்திடும் அற்புதமானாதொரு சிவத் தலத்தினை - அழகான படங்களுடன் - சுவையான வரலாறுடன் - பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா! வாழ் நாளில் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் இதுவும் ஒன்று. பலர் அறியச் செய்த சிறப்புத் தங்களையே சாரும்! உன்னதமான தங்களின் தொண்டு சிறக்க, பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  2. தல புராணம்
    வியக்க வைக்கிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. சிறப்பானதோர் கோவில் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வாழைப்பற்றி வியப்பான தகவல்கள், அழகான படங்களுடன் ஸ்ரீகதளிவனேஸ்வரர் பற்றிய சிறப்பான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  5. புதிய கோவில் பற்றிய வரலாறு தெரிந்து கொண்டேன்.
    அருமையான படங்கள். கோவில் கோபுரத்திற்கு மேலேயேயும் வாழை வளர்ந்து இருக்கிறதா?

    ReplyDelete
  6. புதிய தகவல்களாக உள்ளது.
    தோல் நோய் வருவது, இராம தொடர்பு .....
    நன்றி நன்றி..
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  7. மிகவும் அதிசயங்கள் நிறைந்த ஓர் ஆலயமாக இருக்கிறது! அழகிய படங்களுடன் தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாழைப்பற்றி வியப்பான தகவல்கள், அழகான படங்களுடன் ஸ்ரீகதளிவனேஸ்வரர் பற்றிய சிறப்பான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  9. பழமாக சாப்பிட்டால் தோல் நோய் வரலாம். பஞ்சா மிருதமாகச் சாப்பிட்டால் பரவாயில்லையா..பல தகவல்களுடன் பதிவின் சுவை கூடுகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete