கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல்வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே.
சரணம் சரணம் ஜெகதம்பா சரணம் தருவாள் ஓம்காரி
மா மதுரை நகரில் ஆட்சி கொண்டாள் - அன்னை
அழகே உருவாய் காட்சி தந்தாள்
அத்தனை குறைகளும் கலைந்திடுவாள்
மதுரையில் வாழ்ந்திடும் மீனாக்ஷீ - அவள்
மதியினில் நிறைந்திடும் சிவசக்தி
மாதவன் சோதரி என்பவளாம் - அவள்
மனக்குறை எல்லாம் தீர்த்திடுவாள்
அழியா சக்தியை கொண்டவளாம் - அவள்
அழகின் வடிவாய் இருப்பவளாம்
அங்கையற்கண்ணி என்பவளாம் - அவள்
அழைத்ததும் இரங்கி வந்திடுவாள்
குங்குமம் மகிமையை தந்தவளாம் - அவள்
கங்கண பூக்ஷித ரஞ்சினியாம்
மங்கள கௌரி என்பவளாம் - அவள்
மங்காத ஒளியாய் இருந்திடுவாள்
சரியான சீதோஷ்ண நிலை அமைய வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திப்பதற்கென்றே, தனித் திருவிழா, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலம் நட்சத்திரத்திரத்தன்று நடத்தப்படுகிறது..
முதன்முதலாக ஆணுக்கு நிகராக, பெண்ணுக்கு சமஉரிமை கொடுக்கப்பட்டது மதுரை நகரில் தான்.
மதுரையில் மாசி மாதம் மீனாட்சியம்மனுக்கும், ஆவணி மாதம் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடத்தி, தலா ஆறு மாதம் ஆட்சி நடத்துவார்கள்...
அதனால் தான், மாசித் திருவிழாவின் போது, சுவாமி வலம் வரும் வீதிகளுக்கு, "மாசி வீதி’ என்ற பெயர் வந்தது.
மாசி முதல் ஆடி வரை, ஆறு மாதம் அம்பாளின் கையில் ஆட்சி இருந்தது. ஆவணியில் பொறுப்பேற்கும் சொக்கநாதர், ஆடி வரை ஆட்சி நடத்துவார்.
இந்த சமமான மாதங்கள், திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாறியது.
மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது.
அதனால் தான், மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது. நான்கு மாதங்கள், அம்பாள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறாள்.
சித்திரை வீதி, ஆடி வீதி, மாசி வீதி என்று மதுரை நகர தெருக்களுக்கு பெயர் இருக்க, ஆவணி வீதியை மட்டும் மூல நட்சத்திரத்துடன் இணைத்து, "ஆவணி மூல வீதி’ என்கின்றனர். !
ஆவணி மூலம், இந்த உலகத்திற்கு நலம் விளைவிக்கும்ஒரு
நாள். இந்த நாளில் இருக்கும் சீதோஷ்ணத்தை பொறுத்தே, உலகத்தின் சீதோஷ்ண நிலை ஓராண்டுக்கு அமையும்.
அன்று சூரியன் உதயமாகும் போது, மேகம் மறைத்திருந்தால், அந்த ஆண்டில் மழை கொட்டி, வெள்ளச் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
சுட்டெரிக்கும் வகையில் வெளிப்பட்டால், மழை குறைந்து பஞ்சம் கூட வந்து விடலாம்.
இதில், எது நடந்தாலும் துனபம் வரும் நிலையில் இருந்து பாதுகாப்பது இறைவன் மட்டுமே.
அதனால் தான் ஆவணி மூலத்தை ஒட்டி, சுந்தரேஸ்வரரின் கையில், உலகத்தின் ஆட்சியை ஒப்படைத்து அவர், ஆட்டுவிக்க வரும் சீதோஷ்ண நிலையை சீராக்கி அருள் புரிவார் என நம்புகிறோம்.
எந்தக் காலத்திலும் இறைவன் நம்மை கைவிடுவதில்லை.
ஆவணி மூல நன்னாளில், ஊர்களிலுள்ள எல்லாக் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து, சிறந்த சீதோஷ்ண நிலை அமைய, வேண்டுதல் வைக்கும் கூட்டுப் பிரார்த்தனை, இறைவனின் மனதைக் கனிய வைக்கும். உலகிற்குத் தேவையான நல்ல சீதோஷ்ணமும் கிடைக்கும்.
ஆவணி மூலத் திருவிழா நிகழ்வுகளில் ஒன்றான அருள்மிகு சுந்தரேசுவரர் நரியைப் பரியாக்கிய லீலை
ஆவணி மூலத் திரு நாளின் சிறப்புக்களையும், அத்திரு விழாவையும் சிறப்பு வண்ணப்படங்களுடன்.....ஆஹா! அம்மையப்பரின் கருணையால் நாடு நலம் பெற செய்யப்படும் பூசை விவரங்களுடன்....சிறப்பு! சிறப்பானதொரு பகிர்வு! நன்றி அம்மா!
ReplyDeleteநாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
ReplyDeleteமிகவும் சிறப்பான தகவல்கள்.....படங்கள் அனைத்தும் அருமை..
ReplyDeleteஆவணி மூலத் திரு நாளின் அனைத்து சிறப்பையும் அறியத் தந்தீர்கள், நன்றி!
ReplyDeleteஇந்த வருட ஆவணிமூல சீதோஷ்ணம் எப்படி இருந்தது.?
ReplyDeleteஅருமையான பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
ஆவணி மூல திருநாளின் சிறப்புகள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete