Tuesday, September 9, 2014

மஹத்தான மஹாளயம்




பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். 

 புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும்..

மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். 

எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.


அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். 

நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.


"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'

பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்தினற்கும், இனத்திற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம். என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார் தெய்வப்புலவர் திருவ்ள்ளுவர் ..

பித்ருக்களின் ஆராதனைக்கு ”மஹாளயம்” என்று பெயர்.

நம் தாய்- தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப்படுகிறார்கள். 


தர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம். 

[bhugnam-on-plate.jpg]
இங்கே கொடுக்கின்ற எள், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது. - 

மஹாளய அமாவசை தினத்தில் மறைந்த முன்னோர்களை 
நினைத்து வணங்கிபடையலிடுவது வழக்கம்.
அமாவாசை தினங்களை  மிகவும் புனிதமாக கருதுவtதால் நிறைந்த நாள்’ என்ற பெயரும் உண்டு. - இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. 

செய்யும் சிரார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் மற்றும் அவரவர் வழக்கப்படியிலான சம்பிரதாயங்கள் மூலம் தான் தெய்வமான பிதிர்களுக்கு மேல் உலகத்தில் கிடைக்கவேண்டிய உணவும், நீரும் கிடைக்கும். 
சிரார்த்த கடன்களை செய்யாது தவிர்க்கும்போது பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும். 
பல வீடுகளில் வசதியிருந்தும், தகுதியிருந்தும் சுபகாரியத் தடைகள் ஏற்பட காரணமாகிவிடுகிறது..!

முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீய சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நல்ல நல்ல நிலைக்கு உயர்ந்ததர்க்கு நன்றி சொல்வதற்கும் ஒவ்வொரு அமாவாசை அன்று முன்னோர்களான பித்ருக்களுக்கு வழிபாடு செய்யவேண்டியது அவசியம்..!
பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் போது அமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் பூமியின் தென்பாகமும் ,
சந்திரனின் தென்பாகமும்  சூரியனுக்கு  நேராக நிற்கிறது. 
விஞ்ஞான ரீதியாக பித்ருக்கள் லோகம் பூமியை சமீபிக்கும் 
காலம் கணிக்கப்பட்டு மஹாளய பக்ஷமாக வழங்கப்படுகிறது
தங்கள் தலைமுறைகளுக்கு மரபணுக்கள் மூலம் அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள். 

இதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும்
ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது. 
 
நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். 
சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். 
அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.
வேறொரு நாட்டில் இருக்கும் நண்பர் அல்லது உறவினருக்கு நாம் அனுப்பும் பணமானது, எப்படி அந்த நாட்டில் உள்ள மதிப்பின்படி அவருக்குப் போய்ச் சேருகிறதோ, அதேபோல் நாம் இங்கே செய்யும் பித்ரு கடன் அதாவது கடமை, அவர்கள் எந்த உருவில் இருக்கிறார்களோ அவர்களுக்குரிய முறையில் போய்ச் சேரும்
பித்ருலோகத்தில் வாழும் முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது  சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சாஸ்திரம். 
இதுதான் இந்து மதத்தின் மகோன்னதம்!
திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். ""மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது'' என்பது பழமொழி.
தலைமுறையைக் கடந்த முன்னோர்களுக்குக் கடமையைச் செய்வதும் நமக்கான கடன்தான்.
மஹாளய பட்ச தினம் பித்ருகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி வாழ்க்கையில் உயரலாம். 
வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.

11 comments:

  1. மகத்தான் மகாளயம் அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. பிதுர்க்கடமை முடித்து, அடுத்து வரும் நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்புடன் வழிபடுபவர்களுக்கு அன்னையின் அருளால், மன நிம்மதி கிட்டும். நிம்மதி எங்கே? என்பவர்களுக்காக, இப்பதிவு மிகுந்த நன்மை பயக்கும் குறிப்புகளுடன்.... பயன்பெறுங்கள் நிம்மதியான வாழ்விற்கு அச்சாரமிடுங்கள்! வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  3. வரவிருக்கும் நவராத்திரி நாட்களுக்குக் கட்டியம் கூறும் மகத்தான மஹாளயம்!.. நலம் வாழ்க..

    ReplyDelete
  4. அருமையான விளக்கமுடன் நல்ல பதிவு சகோதரி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. புதிய தகவல்கள்! மிக்க நன்றி! அதுவும் ஜாதி மதம் பாராமல் எள்ளும் நீரும்......புதியது.....

    ReplyDelete
  6. மஹாளயம் பற்றி அறிந்தேன் நன்றி.

    ReplyDelete
  7. மஹாளயம் என்பதன் பொருள் உணர்த்திய சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  8. விளக்கங்கள் அருமை.

    ReplyDelete
  9. நம் எல்லோருக்கம் தெரிய வேண்டிய விஷயங்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. நல்ல விளக்கம். வடக்கிலும் இந்த மஹாளய பக்ஷம் பிரபலம்.

    ReplyDelete
  11. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete