


அகணித தாரா கணங்களின் நடுவே ஆதிபராசக்தி ஆடுகின்றாள்
சகலசரா சரத்தும் தங்க சிலம்பொலிக்க ஜெகதீஸ்வரியவள் ஆடுகின்றாள்

அயன் என வருவாள் அனைத்தையும் படைப்பாள்
ஹரிஎன அழைப்பாள் அரண்என அழிப்பாள்
அழிவில் இருந்தும் ஜீவன் பிறந்திடச் செய்பவளாம்
அகிலாண்டேஸ்வரி ஆடுகின்றாள்
அகிலம் முழுவதும் உள்ள ஆருயிரினங்களும்
ஆழப் பெருங்கடலில் வாழுயிரினங்களும்
அன்றன்றுணவு கொள்ள அத்தனைக்கும் தந்தருளி
அன்னபூர்ணேஸ்வரி ஆடுகின்றாள்
கனக கமலம் தன்னில் கனிந்த சிவப் பொருளைக்
கலந்து பேரின்பம் காட்டும் கனல் வடிவானவளாம்
நானற்ற நல்லோர்க்கெல்லாம் நானிதோ என்று தோன்றும்
ஞான பரமேஸ்வரி ஆடுகின்றாள்
இதயவீணை எழும் இன்னிசை அவளே
இருளை அகற்றும் தீப ஜோதியும் அவளே
நாற்பத்து மூன்று கோண நாகமணி மண்டபத்தில்
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ஆடுகின்றாள்
அழைக்கும்முன் வருவாள் அடைக்கலம் அளிப்பாள்
அன்பினுக் காட்படுவாள் ஆனந்த கல்யாணிஅவள்
அருட்கவி மாலைபாடும் அகத்தியன் அகத்திலே
அமுத சுந்தரேஸ்வரி ஆடுகின்றாள் ஆனந்த நாடகம் ஆடுகின்றாள்
அகஸ்திய ஸித்தேஸ்வரி ஆடுகின்றாள்

. ""திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில்
புரிந்து வருக வருகவென்றே கிளியே. மகிழ்வுற்றிருப்போம் என்று
மகாகவி பாரதி போற்றிய மஹாலட்சுமி : மலரின் அழகு பொலிய அருள் பார்வையுடன் அழகாக விளங்கும் செல்வத்தின் தெய்வம். செல்வ வளம் தந்து அருள் புரிகிறாள்..
விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருந்து நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுவதில் திளைகிறாள்..
நவராத்திரி பூஜையில் லஷ்மி பூஜை மிகவும் சிறப்பானது..
. "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க " என்று பெரியோர் வாழ்த்தும் பதினாறு செல்வங்களான சௌந்தர்யம், சௌபாக்கியம், கீர்த்தி, வீரம், வெற்றி, சந்தானம், மேதை, கல்வி, துஷ்டி, புஷ்டி, ஞானம், சக்தி, சாந்தி, சாம்ராஜ்யம், ஆரோக்கியம், மோட்சம் ஆகியவற்றிற்கு அதிபதியானவள்
ஸ்ரீ மகாலஷ்மி


அருமையான பதிவு
ReplyDeleteகாளமேகத்துக்கு அபிராமி
கற்போருக்கு சகலகலாவல்லியே!
படங்க:ள் அத்தனையும் மிக அருமை! தகவல்களும், தமிழில் அந்தப் பாடலும் அருமை! மெட்டிசைக்கலாம் போல....
ReplyDeleteமகாலஷ்மி பூஜையின் சிறப்பு இந்நன்நாளில் அழகான மகாலஷ்மியின் படங்களுடன் சிறப்பானதொரு பகிர்வு. நன்றிகள்.
ReplyDeleteஇனிய இலட்சுமி பூசை.
ReplyDeleteஅழகிய படங்கள்.
நவராத்திரி வாழ்த்துகள்.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.