

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா அரசு விழாவாக பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு உற்சாக உற்சவ நிகழ்ச்சிகளாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது..!
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனை வதம் செய்தது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி (வெற்றி தசமி) என்றும் கொண்டாடப்படுகிறது...
துர்கா தேவி வதம் செய்த எருமைத்தலை அசுரன் மகிஷாசுரனின் பெயராலேயே மைசூர் நகரம் 'மஹிஷுர்' என்று பெயர்பெற்று பின்பு மைசூர் என்றாகிவிட்டது. எனவே இங்கு நவராத்திரியின் 9 நாட்களும்,
10-ஆம் நாளான விஜயதசமியும் 'தசரா' என்ற பெயரில் வெகு விமரிசையாகவும்,. உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது

தசரா திருவிழா மைசூர் அரண்மனை, ஜகன்மோகன் அரண்மனை, கலாமந்திர், கானபாரதி, சிக்க கடியாரா, குப்பண்ணா பார்க், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
உணவுத்திருவிழா, தசரா திரைப்பட விழா, மல்யுத்தப்போட்டி, மலர் கண்காட்சி, தசரா பட்டம் விடும் திருவிழா போன்ற கொண்டாட்டங்களை பார்த்து ரசிக்க முடியும்.
மாலையில் பண்ணிமண்டபத்தில் 'பஞ்சின கவாயத்து' என்று கன்னடத்தில் அழைக்கப்படும் தீப ஒளி அணிவகுப்பு நடத்தப்படும்.மக்கள் வெள்ளத்தின் நடுவே வானவேடிக்கை, நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் ஆரவாரத்துடனும், வெகு உற்சாகத்துடனும் நடைபெறும்.
தசரா திருவிழாவின் முக்கிய அம்சமாக 10-ஆம் நாளான விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி என்று பிரபலமாக அழைக்கப்படும் தசரா ஊர்வலம் நன்றாக அலங்கரிக்கப்பட்ட யானையின் தங்க அம்பாரியில் சாமுண்டேஸ்வரி அம்மனின் சிலை வைக்கப்பட்டு மைசூர் நகர வீதிகளில் ஊர்வலம் மைசூர் அரண்மனையிலிருந்து தொடங்கி பண்ணிமண்டபத்தில் சென்று முடியும்
அரச வம்சத்தின் தற்போதைய பிரதிநிதிகளை வரவேற்று பல ஆண்டுகளாக தசராவின் போது நடந்து வரும் அரச தர்பார் நடந்தேறும்.
அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து நின்றிருந்த அர்ஜுனா யானையின் தலைமையிலான யானைகள் ஊர்வலத்தை பலராமா வாயிலில் நந்தி பூஜை செய்துமலர்தூவி பூஜை செய்து மைசூர் அரண்மனையின் யானைகள் ஊர்வலம்: தொடங்கப்படும் ..
14 யானைகள் முன்னால் செல்ல, அதைத் தொடர்ந்து யானைப் படைகள், 116 கலைக்குழுக்கள், 36 அணிவகுப்பு வாகனங்கள் அணிவகுக்க.
தசரா கொண்டாடப்படும் 9

தசரா கொண்டாட்டத்தில் மைசூர் அரண்மனை லட்சக்கணக்கான விளக்குகளால் ஒளியூட்டப்பட்டு வானிலிருந்து இறங்கி வந்த நட்சத்திர கூட்டத்திற்குப் போட்டியாக ஜொலிஜொலிக்கும் ..!







வணக்கம்
ReplyDeleteஅம்மா.
விளக்கமும் படங்களும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகிய வண்ணப்படங்களுடன், நேரில் கண்டு ரசிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் தசரா கொண்டாட்டத்தினை கண்டுகளிக்கச் செய்த தங்களுக்கு நன்றி.
ReplyDeleteதசரா கொண்டாட்டங்கள் அறிந்தேன் சகோதரியாரே
ReplyDeleteநன்றி
படங்கள் அனைத்தும் அருமை
இத்தனை அழகாகவும் விசேஷமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை இருந்தும் சிறப்பாக கொண்டடுவார்கள் என்று அறிவேன்.தேவலோகம் போலல்லவா காட்சியளிக்கிறது முழு விபரமும் கூட இப்போது தான் தெரிகிறது. மிக்க நன்றி தோழி அழகான படங்கள் ரசித்தேன்.
ReplyDeleteஅழகான தசரா படங்கள், செய்திகள்.
ReplyDeleteஅருமை. நன்றி, வாழ்த்துக்கள்.
மைசூர் தசரா விழா தகவல்கள் மிக அருமை! படங்கள் மிகவும் அழகு! நன்றி!
ReplyDeleteதசராப் பண்டிகை பற்றிக் கோலாகலப் பதிவும் படங்களும்
ReplyDeleteமிகச் சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோதரி!
தசரா கொண்டாட்டத்தின் மகிமைகள், சிறப்பான தகவல்கள் பற்றிய பகிர்வு அருமை. மைசூர் அரண்மனை மின்விளக்கு அலங்காரத்தில் மிக அழகாக இருக்கு. இக்காட்சியினை பகிர்வாக தந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteசிறந்த பதிவு
ReplyDeleteதொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.
படங்களும் பதிவும் கண்ணையும் கருத்தையும் கவ்ர்ந்தன. தசரா வாழ்த்துக்கள்!
ReplyDeleteதசரா என்ன கொள்ளை அழகு அந்த அரண்மனை!
ReplyDeleteமைசூர், தசாரா விளக்கங்கள் சுவை.
ReplyDeleteசிறு வயதில் சித்தப்பா இந்தியா சுற்றுலாவால் வந்தபோது மைசூர்அரண்மனை விளக்கொளிக் காட்சி பார்த்த நினைவு வருகிறது.
மிக்கநன்றி.
வேதா. இலங்காதிலகம்.
ஆஹா... தசரா போட்டோக்களில் மின்னொளியில் ஜொலிக்கும் அரண்மனை மிக அழகு என்றால் அனைத்துப் போட்டாக்களும் கலக்கல் அம்மா...
ReplyDeleteதசரா கொண்டாட்டங்கள் - நேரில் கண்ட உணர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete